வெறுமன்

This entry is part 2 of 30 in the series 15 ஜனவரி 2012

பூனைகளைப் பற்றி கவிதை எழுதுபவன் நிறையாத அரங்கத்தின் காலி இருக்கையில் அனந்த சயனத்தில் மனப்பால் புசிக்கிறான் அதீத ஞானம்பெற்றவன் போல் போதியின் நிழலில் நின்று எதேதோ பிதற்றுகிறான் இலையுதிர்த்த விருட்சத்தின் கடைசி இலையை கையிலெடுப்பவன் இயற்கையின் வெறுமையை ரசிக்கிறான் போலப் பொழிதலும் ஆகச் சிறப்பதுமாய் பயணத் தொடர்கையில் மௌனமாய் பொருளுணர கிரகிக்கிறான் கவலையால் நிரம்பியவனின் ஓலம் கவிதையாயின் அவன் கவிஞன் பேத்தலெனின் புத்தி சுவாதீனமற்றவன் தத்துவமெனில் ஞானியாகிறான் ஏதுமற்று போனால்… வெற்றுவெளியில் உலவும் ’வெறுமனா’ய் போவான் அவன்!? […]

பூபாளம்

This entry is part 34 of 40 in the series 8 ஜனவரி 2012

செங்காளி பொழுது புலரும் நேரத்தில் ஒரு சிற்றூரில் எழும் ஓசைகளெல்லாம் ஒன்றாய்ச்  சேர்ந்து எப்படி பூபாளம் என்னும் பண்ணில்  பாடுவதைப்போல் இருக்கின்றது  என்பதைச் சொல்லும் பாடல்கள் —————————————————————————————————–   பொழுதும் புள்ளினமும் கொக்கரக் கோவெனக் கோழிகள் கூவிட காக்கைகள் ஒருசில காவெனக் கரைந்திட குருவிகள் கூட்டம் கீச்செனக் கத்திட இருள்தான்  மெதுவாய் இளகிடும் நேரம் வெள்ளி முளைக்குமிவ்  விடியற் காலையில் மெல்லென  கிராமம் முழித்திடும் வேளையில் பண்ணை வீட்டில் பட்டியில் தொட்டியில் என்னதான்  நடக்குதென எட்டிப் பார்ப்போம் அவளும் குடும்பமும் கிழவன் எழுமுன் கிழத்தி எழுந்து நழுவின சேலையை நன்றாய்க் கட்டி அவிழ்ந்த கூந்தலை அள்ளி   முடிந்து தொழுதபின்  கண்களில் தாலியை ஒற்றி […]

சிலை

This entry is part 31 of 40 in the series 8 ஜனவரி 2012

  அக் கிராமத்தின் சிற்றோடைக் கரையோரம் கால் முட்டிப் பாகம்வரை செஞ்சேற்றினுள் அமிழ்ந்து.. தேகமெங்கும் சகதித் தீற்றுடன் மல்லாக்கக் கிடந்தது அச்சிலை… கண்களிலும் உதட்டிலும் புன்னகைப் பூவிரிக்க கச்சை கட்டிய கூர் முலையும், வடிவேயான இடையுடனும் .. யாரையோ எதிர் நோக்கிக் காத்திருக்கும் பாவனையில் … இடக்கை  நாடி தாங்க வலக்கை இடையில் வைத்து காத்திருக்கும் அச்சிலையின் கை விரல்கள் சிலவற்றை காணவில்லை.. உடைந்தவை உதிர்ந்திருக்கலாம்….   அற்புதமான அச்சிலை எக்காலம் செய்ததென்றோ எப்படியங்கு வந்ததென்றோ யாருக்கும் தெரியவில்லை… வயதான ஒருவர் சொன்னார் … தன் சிறு பிராயத்தில் கரையோரம் நின்றிருந்து.. காலப் போக்கிலது நிற்க முடியாமல்ப் படுத்ததென்று… யாரோ துப்பிய வெற்றிலை எச்சில் உறை ரத்தம் போல்  தலைக் கிரீடத்தில்…   சிதைந்துக் கொண்டிருப்பது வெறுமொரு கற்சிலயல்ல… சிந்தையுள் காதலுடன் .. யாரையோ நினைவிலேற்றி மனமுழுக்க வடிவமைத்து விரல்கள் வழி மனமிறக்கி உளிகளில் உயிர் கொடுத்து பலநாட்கள் பாடுபட்டுச் செய்தெடுத்த … எக்காலமோ வாழ்ந்திருந்த ஓர் அற்புத சிற்பியின் காதலுடன் கூடிய கலையும், உழைப்பும் கூடத்தான் …   – பத்மநாபபுரம் அரவிந்தன்-

ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 1) எழில் இனப் பெருக்கம்

This entry is part 30 of 40 in the series 8 ஜனவரி 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உனக்குப் பகை நீதான் ! முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 144 ஈரேழு வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஏரேழு வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டன. ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் வாலிபக் காதலருக்கு […]

ஏதோ ஒன்று (கடவுள்? நேரம்? வினை)

This entry is part 29 of 40 in the series 8 ஜனவரி 2012

ப.பார்த்தசாரதி படுபயங்கரமான சாலை விபத்தொன்றில் காலும் கையும் துண்டாய் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பாதி மயங்கிய நிலையில் நசுங்கிய உடல் பிரிந்த கைகளை வேறொருவன் சாக்குப் பையில் போட அனைத்திலும் அவன் பார்வை பட காலன் வரும் ஒலியாய் ஆம்புலென்ஸ் ஒலியெழுப்ப காலத்தாமதமில்லா சிகிச்சையில் உயிர் பிழைத்த ஒருவனின் வாழ்க்கை பாதையை ஏதோ ஒன்று விளிம்பிலிருந்து நெடுந்தூரமாய் நீட்டிக்கிறது தள்ளாடியபடி பயணிக்க.

துளிதுளியாய்….

This entry is part 27 of 40 in the series 8 ஜனவரி 2012

கோவை புதியவன் ஏர் பஸ் வெளிச்சத்தில் இருட்டாகிப் போனது ஏழையின் பயணம் அப்பாவின் புகையில் மூச்சுத் திணறியது பீடி சுற்றும் மகளின் வாழ்க்கை கதாநாயகன் கட்-அவுட்டுக்கு ஊற்றிய பாலில் வழிந்தோடியது ரசிகனின் முட்டாள்தனம் வாசலில் பிச்சைக்காரன் வயிறு நிரம்பியது கோவில் உண்டியலுக்கு சாதிக்க மலையேறியபின் சறுக்கி விழுந்தது பயம் மட்டுமே. thendral_venkatguru@yahoo.co.in

மார்கழி காதலி

This entry is part 26 of 40 in the series 8 ஜனவரி 2012

மார்கழி பனி நீ வெளியே வரும்வரை உன் வீட்டு வாசலில் காத்திருந்து உன்னை தொட்டு குளிர் காய்ந்து கொள்ளும் வெட்டைஇல்லாமல் வாசல் தெளித்தை கண்டு மார்கழி பனி வெட்கி தலை கவிழும் நீ உன்வீட்டு வாசலில் போடும் மாக்கோலத்தை கண்டு கதிரவன் கிழக்கு வாசலில் போட்ட கோலங்களை கலைத்து விடுவான் நீ உன் வாசலில் இட்ட கோலம் பூமாதேவிக்கு வைக்கப்பட்ட திலகமாகும் நீ வைக்கும் செம்பருத்தி பூவுக்காக சாணி பிள்ளையார் கோலத்தின் நடுவில் அழகாக அமர்ந்து அருள் […]

பாசாங்குப் பசி

This entry is part 23 of 40 in the series 8 ஜனவரி 2012

மண்டப முகப்பில் கும்பிடுகளை உதிர்த்து மணமேடை நிழற்பட பதிவு வரிசையைத் தவிர்த்து பசியாத வயிற்றுக்கு பந்தியில் இடம் பிடித்தேன் சூழலுக்கு பொருந்தா வேடம்பூண்ட இடது பக்கயிருக்கைக் கிழவியின் இலை இளைத்துக்கிடந்தது அவர் தேகம் போலவே வலதுகையால் பிட்டதை பாசாங்காய் வாய் கொறிக்க எவரும் அறியா சூட்சுமத்துடன் இடது கை இழுத்து புதைத்துக்கொண்டிருந்தது மடியில் பசிக்காத வயிற்றுக்கு பாசாங்காய் புசித்துண்ணும் எனக்கு பரிமாறியவர் பாட்டியின் இளைத்துக்கிடந்த இலையையும் இட்டு நிரப்பிப்போனார் முதுமை முடக்கிய கணவனோ புத்திசுவாதீனமில்லா மகனோ தீரா […]

………..மீண்டும் …………..

This entry is part 22 of 40 in the series 8 ஜனவரி 2012

எண்ணற்ற நட்சத்திரக் கோள்களில் தேடி த் தேடி களைத்துபோய் இருக்கையில் எங்கோ ஒரு மூலையின் ஓரமாய் கண்சிமிட்டி அழைக்கிறாய் இறகுகளின் சுமைகளை அப்போது தான் உதிர்த்து பரவலாய் வைத்திருந்தேன் … அவைகளை எடுத்து பிணைத்து கொண்டு இருக்கையில் … சப்தப்படாமல் விடிந்து விடுகின்றது ஒரு காலைப்பொழுது …. இரவிற்கான காத்திருத்தல் தொடங்குகிறது ….. ஷம்மி முத்துவேல்

கவிஞானி ரூமியின் கவிதைகள் – எனக்கொரு குருநாதர் (கவிதை -56)

This entry is part 19 of 40 in the series 8 ஜனவரி 2012

(1207 -1273) ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றிரவு என் குருநாதர் போதித்த அறிவுரை இது : வறுமைப் பாடத்தைப் பற்றியது எதுவுமே ஒருவருக் கில்லாமை ! எதன் மீதும் இச்சை கொள்ளாமை ! நான் அமணமாய் நிற்கிறேன் ரூபிக் கற்கள் நிரம்பிய சுரங்கத்தின் உள்ளே செந்திறப் பட்டு உடுத்தி ! மினு மினுப்பு மழுங்கிப் போனது கடலைக் காண்கிறேன் இப்போது ! ஓரே கணத்தில் நேரும் நகர்ச்சிகள் […]