கிறுக்கல்கள்

This entry is part 12 of 40 in the series 8 ஜனவரி 2012

பூப்போலத் தூங்குமென்னை பூகம்பமாய் எழுப்பியது… இன்று போய் நாளை வாருங்களென்றே என் உறக்கத்தை உடுத்திக் கொண்டேன். தூக்கத்திலே மொட்டுவிட்ட வரிகள் அதிகாலையில் துகிலுரித்துக் கிடந்தன வெந்நீரில் விழுந்து விட்ட கிருமியாய் சொற்கள் கரைந்தே போயின வெள்ளம்போல் பொங்கி வந்த பாட்டு விடிந்ததும் வடியக் கண்டேன் வெங்காயம் போல் உரித்து வந்த கற்பனை வெந்தயம் போல் கசக்கக் கண்டேன் பசுமையிலே ஓரிரவு பறிபோனாலும் இன்பா நளினமாய் வருவதை இப்போதெல்லாம் நசுக்கிடாமல் பேனாமுட்களில் கோர்த்துக் கொள்கிறேன் பொங்கிவரும் கவிதை பொசுங்கிவிடாமல்…

ஏன்?

This entry is part 11 of 40 in the series 8 ஜனவரி 2012

ஊனத்தின் நிழல் படிந்த மங்கலான இடத்தில் எழுதப்பட்டுள்ளது, எனக்கான கேள்விகள் ஆனால்? விடைஎழுத யார்யாரோ! ஒளிபுக முடியாத ஒரு இருள் பேழைக்குள் அடைக்கப்பட்டுள்ளுது எனது பகல்கள்! வியர்க்காத ஒரு மனிதனின்ஊனில் மாட்டிக்கொண்டுள்ளது என்னது தாகத்தின் தண்ணீர்! ஏனோ? சலித்து போகாத எனது விடைத்தாள்களில் மட்டும் எப்போதும் பிழைதிருத்தம்!

காதறுந்த ஊசி

This entry is part 4 of 40 in the series 8 ஜனவரி 2012

_____ குருசு.சாக்ரடீஸ் நேற்று பெய்தது பாலைவனத்து மழை விரட்டி சேகரிக்கிறது என் பால்யம் சிரட்டையில் நிரம்புகிறது மழை ஏக்கத்தில் ததும்பும் துளிகளாய் நீ கொண்டுதந்த ஈரத்தில் வெக்கையின் உதிர்ந்த சிறகுகள் பூப்பெய்திய பெண்ணின் தொடக்க பருவத்திலிருக்கிறது பாலை நான் புரண்ட மணல்வெளிகளில் ஈரம் தருவித்த பெண்ணின் வாசம் வந்துபோன தடங்களற்ற பாலைமழையை கொண்டாட நீ அனுப்பி தந்த பைரிகள் உச்சந்தலையை கொத்துகின்றன தப்பித்தோடும் மணல்வெளியில் தனிமையின் கதவுகளை என் மரணத்தின் முன் தட்டுவேன் அது தன் முகங்களை […]

அள்ளும் பொம்மைகள்

This entry is part 1 of 40 in the series 8 ஜனவரி 2012

ஏக்கக்கண்கள் விளையாட்டுப் பொருட்களின் மீதே அம்மாவின் தோள்களில் கனவைச் சுமந்துகொண்டே ஊமையாகிறாள் ரத்தம் கசியும் தொடையின் கிள்ளலுக்கு அஞ்சியபடியே குழந்தை கோ.புண்ணியவான் Ko.punniavan@gmail.com

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)

This entry is part 35 of 42 in the series 1 ஜனவரி 2012

  மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நீ மலைகளோடு சேர்ந்து ஏறுகிறாய். பள்ளத் தாக்குகளோடு இணைந்து இறங்குகிறாய், பசுமைத் தளம் மீது பரவுகிறாய். ஏறும் போது நடக்க உனக்கு வலுவும், இறங்கும் போது உனக்குப் பரிவும் உள்ளது. உன் நடையில் ஒரு நளினம் தெரிகிறது. நசுக்கப் பட்டவர் மீது கருணை காட்டுவதாலும், கர்வம் பிடித்து மூர்க்க வலுப் பெற்றவரிடம் கடுமையாய் நடப்பதாலும் நீ அருள் கூர்ந்த வேந்தனைப் போன்றவன்,” […]

நீயும் நானும் தனிமையில் !

This entry is part 33 of 42 in the series 1 ஜனவரி 2012

நீயும் நானும் தனிமையில் ! மூலம் : நோரா ரவி ஷங்கர் ஜோன்ஸ் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. வேனிற் கால நாட்கள் விரைந்து ஓடின வெண்ணிலவை நோக்கிச் சுடு ! ஆயினும் குறி தவறிப் போகும் முற்றிலும் ! இருண்ட வாழ்வே எதிர்ப் படும் இப்போ துனக்கு ! ஒரு காலத்தில் உன் கரம் பறித்த பூக்களின் நறுமணம் பரவிய காலி அறை கண்ணில் படும் உனக்கு ! காரணம் நீ அறிவாய் தனிமையில் […]

சங்கத்தில் பாடாத கவிதை

This entry is part 32 of 42 in the series 1 ஜனவரி 2012

  எழுதிக்கொண்டிருந்த கவிதையை தென்றல் அடித்து கலைத்துக்கொண்டிருந்தது   எழுதி முடித்த சொற்களின் மேல் பல இடங்களில் அது தன் புள்ளிகளை கோலங்களை இட்டுச்சென்றது   சில வரிகளில் சந்திகளில் ஒற்று மிகுந்து அவற்றை வலுவாக்கியது   சில வரிகளில் ஒற்றுகளை சேதப்படுத்தி சொற்களைத் தனிமையில் நிற்கச்செய்தது.   இப்படி எல்லாம் செய்த தென்றல் பாதியிலேயே விட்டுச்சென்றுவிட்டது   கவிதையை முடித்து வைக்க இன்னொரு தென்றலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் யாரேனும் அதைக்கண்டால் கொஞ்சம் என்னிடம் அனுப்பி வையுங்கள். […]

கவிப்பொழுதின் அந்திமக்காலம்…

This entry is part 31 of 42 in the series 1 ஜனவரி 2012

ஒரு பறவையின் கடைசி சிறகு   இலை உதிர்த்த மரம் சப்தமின்றி மறைந்து போன செப்புக்காசு மணி அற்றுப்போன கால் கொலுசு எதுவாகவும் இருக்கக்கூடும்   விடியல் என்பது குஞ்சுப் பறவையின் பிசுபிசுத்த இறகாயும் தளிர் இலை தாங்கிய புது மரமாயும் படபடக்கும் புது பணத்தாளாயும் சிணுங்கும் மணிகளோடு சிலிர்க்க வைக்கும் நாதமாயும் பிரபஞ்சத்தையே ஆட்கொள்ள விழையும் சப்தமற்ற சில்லரைகளாகவும் பரிணமிக்கலாம்   இருக்கைகள் காலியாவதில்லை அவை மதிப்பு கூட்டுபவை என்றும் கூடுபவை வசீகரமும் வனப்புமாய் ஆகர்ச்சிப்பவை   […]

தென்றலின் போர்க்கொடி…

This entry is part 24 of 42 in the series 1 ஜனவரி 2012

பொற்கொடியாய்… நினைவில் நின்ற தென்றல்… இன்று….தானே.…புயலாய் மாறி…. உயர்த்தியது  போர்க்கொடி…! உன் ஆனந்தத் தாண்டவத்தில்….! உன்னோடு சேர்ந்து உன்னை எதிர்த்து… தலைவிரித்தாடி… கைமுறித்தது…தென்னை… முக்கி முனகி ஆடும்போதே… ஒடிந்து விழுந்தது முருங்கை… சளைக்காமல் ஆடியும்… முடிவில் பல கிளைகளைத் தவறவிட்டது அரசு..! தண்டோடு மடங்கியது வாழைக் கூட்டம்… தோற்று… வேரோடு படுத்தது வேம்பு…! வீதியெங்கும் மரங்களின் மறியல் போராட்டம்…! சூறைக் காற்றின் அகோர சுவடுகள்…! நகர்வலம் வந்து.. கடல்கடந்தது… தானே… தென்றல்….!! அல்ல…. அல்ல..புயல்…! ஆடிக் களைத்து வலியில் அழுதன மரங்கள்..! மரணத்தின் பிடிக்குள்… […]

நிழல் வலி

This entry is part 19 of 42 in the series 1 ஜனவரி 2012

சாமிசுரேஸ் என்னுள் ஓர் நிலம் உருக்கொள்கிறது ஊமையாய் முறிந்து போன புற்களை மெல்லத் தடவி வார்த்தேன் பதுங்கித்திரிந்த மரங்களுக்கு இறகுகள் பொருத்தினேன் என் மூச்சை ஆழப்படுத்தி காற்றைப் பதியஞ் செய்தேன் கண்கள் விரியத்தொடங்கின ——– இனி என்றுகாண்பேன் என் தெய்வீக தேசத்தை யாரிடம் கேட்பது வாழ்வின் சுவடுகளில்லை ஒரு சமூகத்தின் பிறப்பை மூழ்கடித்த பிரளயம் அரங்கேறி முடிந்து மௌனமும் கதறலுமே எதிரொலியானது உயிர் மட்டும் துடித்து எரிகிறது மயான தேசத்தின் துர்நாற்றம் தீர இன்னும் எத்தனை ஆண்டுகள் […]