கடைச்சொல்

This entry is part 15 of 29 in the series 25 டிசம்பர் 2011

கிளையிலிருந்து தரைக்கு வீழ்கிற இலையைப்  போன்றே கணித நுட்பம் தவிப்பு மனிதர்களின் தந்திர வழி என்கிறார்கள் ? தீர வலிக்குச்செய்து கொள்ளும் நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ? காதல் ஜோடிகளின் கைகளிலிருக்கிற கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ? போதுமான தொரு வாழ்விலிருந்து மீளும் சுய விலகல் என்கிறான் ஞானி ஒரு வேளை துடித்தடங்கும் இக்கயிற்றை அறுத்து தரையிறக்குகையில் உடைந்த என் குரல்வளையில் எஞ்சியிருக்கலாம் ஒரு தற்க்கொலையின் காரணத்திற்கான கடைசிச்சொல்

கல்லா … மண்ணா

This entry is part 12 of 29 in the series 25 டிசம்பர் 2011

  என்னவோ  துரத்துகிறது எப்படியோ  தப்பிக்கிறேன்   போயிராத கோயிலிருந்து பிரசாதம் வருகிறது – கடவுள் கொடுக்க சொன்னதாக ..   ஒடி  ஒடி வருகிறேன் ரயில் கிளம்பிவிட்டது ! பகீர் என்றானது – வாழ்க்கை முடிந்து விட்டது  போல் ..   தோளில் தட்டுகிறார்கள் – திரும்புகிறேன் சிறுவயதில் உடன்  படித்த தோழி. சிரிக்கிறாள் , நானும் சந்தோஷமாக   வீடு வாங்கியதை தேவையற்று சொல்லி கொண்டிருக்கிறேன் – அவள் முகம் கோரமாக மாற தொடங்குகிறது […]

வருங்காலம்

This entry is part 10 of 29 in the series 25 டிசம்பர் 2011

இப்படியும் சிந்திக்கலாம்..! (சுனாமிஞாபகார்த்தமாக) அதோ – வெகு தூரத்தில்… யாரும் வாழ்ந்திராத தரைகளாக… முருகைக் கற்பாறைகள் ஏதோ ஜெபிக்கின்றன… கள்ளிச் செடிகள் ஏதோ கதை சொல்கின்றன… கடற்கரை மணலில் ஏதேதோ கால் தடங்கள் கண்டு பிடிக்கப் படாமல் உக்கிய என்புத் துண்டுகள்.. 8.31ல் நின்றுவிட்ட கடிகாரங்கள்… என்றோ பசுமை பேசி பாழடைந்த கிராமங்கள்… இன்னும் கண்ணீர் விடுகின்ற சுறாமீன் முட்கள்… இன்னமும் மூச்சுவிடும் கடல் நீர்த்துளிகள்… எல்லாமே என்ன மாயைகள்…? சென்ற தலைமுறையின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)

This entry is part 8 of 29 in the series 25 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கம்பளத்தில் பொறி இந்த வடிவத்தை ! ஒருவனை நேசமாய் நோக்கும் ஆயிழையை ஒத்தது ஆன்மீக அனுபவம் ! அது ஒரு நதி ஓட்டம் ! வாத்துகள் துள்ளி அங்கே வசிக்கும் ! ஆற்று நீரில் மூழ்கும் காகங்கள் ! கண்ணுக்குத் தெரியும் : கிண்ணத்தில் உள்ளது உண்டி ! உடல் வளர்ச்சியும் குடல் எரிச்சலும் உண்டாக்கும் மூலங்கள் ! நமது கண்ணுக்குத் தெரியாமல் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)

This entry is part 7 of 29 in the series 25 டிசம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “காற்றே ! எங்களைச் சூழ்ந்து செல்கிறாய்; மெதுவாய் இனிமையாய் பாடிச் செல்கிறாய்; இப்போது பெருமூச்சுடன் வருந்திச் செல்கிறாய் ! உன் நகர்ச்சியைக் கேட்கிறோம். ஆனால் உன்னை நாங்கள் காண முடியாது. நீ எம்மைத் தீண்டுவதை உணர்கிறோம். ஆயினும் உனது வடிவை யாம் அறியோம். நீ ஓர் நேசக்கடல் போல் அசைகிறாய் ! எமது ஆன்மாவைத் தழுவி அணைப்பது நீ. ஆயினும் எம்மை மூழ்க்கி […]

ஏனென்று தெரிய வில்லை

This entry is part 40 of 39 in the series 18 டிசம்பர் 2011

மூலம் : நோரா உதய ஷங்கர் ஜோன்ஸ் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா  சூரியனை நோக்கும் வரைக் நான் காத்தி ருந்தேன் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! விட்டுச் சென்றேன் உன்னை வேடிக்கை விடுதியில் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! காலை விடிவதைக் கண்ணால் கண்டேன் ! பறந்தோட விழைந்தேன் கண்ணீர்த் துளிகளைக் கையேந்தி உன் முன்னால் மண்டியிடத் […]

பொருள்

This entry is part 37 of 39 in the series 18 டிசம்பர் 2011

பொருள்  கொண்டு  மனிதம் மதிப்பீடு  செய்யப்படும்  வழிமுறையை  பழக்கப்படுத்தி கொள்வதில்  இனி சிக்கல்  இருக்கபோவதில்லை. மற்றவர்களை  உதாரணம் கொண்டு  உருவாக்கப்படவில்லை  இந்நிலை.  ஒரு நீடித்த பகலில்  கைவிடப்பட்ட நம்பிக்கையை  சுமந்து கொண்டு  சுய நீர்மம் நிறைவில்  மனதின் அழுத்தங்களை  தாங்கி கொள்ள இயலாத நிலையில்  என்னையும் ஆட்கொண்டது  நாளை உங்களையும் தான் . இனி  உயிரினம் வாழ  நிர்பந்தங்களை  பட்டியல் கொண்டு  மன குற்றங்களை  மறைத்து மறந்து வாழவே  உசித்தம் . அது மிக எளிதான இயல்பு தான் .     […]

சுனாமியில்…

This entry is part 36 of 39 in the series 18 டிசம்பர் 2011

      வாழும் மனிதர்க்கிடையில் வரப்புக்கள்தான் அதிகம்.. சுற்றிலும் சுவர்கள்- ஜாதியாய் மதமாய், இனமாய் மொழியாய்.. இன்னும் பலவாய்… இணைத்தது இயற்கை- சாவில் ஒன்றாய்.. சவக்குழி ஒன்றாய்.. சுருட்டியது ஒன்றாய்… சுனாமியில் தொலைந்துபோன சொந்தங்களுடன் டிசம்பர்26…!             -செண்பக ஜெகதீசன்…

அன்பின் அரவம்

This entry is part 35 of 39 in the series 18 டிசம்பர் 2011

குமரி எஸ். நீலகண்டன்   யாரோ ஒருவருடன் சதா பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சுற்றி யாருமில்லை. அலைபேசியில்தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.   அல்லது யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். உற்று நோக்கி ஒருமித்தப் பார்வையுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சுற்றி யாருமில்லை. அலைபேசியுமில்லை.   குமரி எஸ். நீலகண்டன்

காதல் கொடை

This entry is part 34 of 39 in the series 18 டிசம்பர் 2011

—————வே.பிச்சுமணி என் காதலை உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் ஏற்றுகொள்வதும் ஏற்றுக்கொளளாததும் உன் இதயத்தின் முடிவில் மிஞ்சினால் மிதியடியாக பயன்படுத்து பிஞ்சி போனால் உன்னை சீண்டுபவரை சாத்தும் உன்பாதத்துடன் பழகி பழகி பரதன் மதிக்கும் இராமனின் பாதஅணிகளாக மாறி உன் மனது ஆளும் நேரம் மழை வரும் சிரமேற்கொண்டால் என் காதல் (கொ) குடையாகும்