கவிதைகள்: பயணக்குறிப்புகள்

This entry is part 4 of 37 in the series 27 நவம்பர் 2011

16 செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது சிந்தா நதி யொன்று! படகில்லை, நீந்தத் தெரியாது, சிறகில்லை, பறக்கமுடியாது…. ஆனாலுமென்ன? ஏழு கடல் ஏழு மலை தாண்டி அந்தப் பச்சைக்கிளியைக் கண்டடைவதுதானே வழிச்செலவின் வரவு என்று சுழித்தோடியவாறு அறிவுறுத்துகிறது ஆறு! 17 தெம்மாங்குப் பாட்டு தெரியாது. கர்நாடக இசை படித்ததில்லை. இந்துஸ்தானி, ஜாஸ், ராக், கஸல் என்று எத்தனையெத்தனை உலகில்! எதிலுமே பயிற்சியில்லை. ஆனபோதும், குரலெடுத்துப் பாடவேண்டுமாய் எழும் இந்தத் திருத்தினவை என்செய்ய….? மெய்யோ பொய்யோ உளதாம் குரல்வளம்; உறுதியாய் கிளம்பும்தான் […]

கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு

This entry is part 33 of 38 in the series 20 நவம்பர் 2011

காலப்போக்கில் களிமண் திரண்டு கரையை நிறைத்ததால் கடல் வணிகம் குன்றிப்போக காலாவதியாகிப்போன கஸ்டம்ஸ் கட்டிடங்களுக்கும் காரைக்குடி சென்னை கம்பன் எக்ஸ்பிரஸ் கைவிடப்பட்டதால் காற்று வாங்கும் ரயிலடிக்கும் இடையே பல ஆண்டுகளாக பசுமை மாறாமல் பரந்து நிற்கின்ற பாதாம் மரத்தடியில் பள்ளிப் பருவத்தில் பரீட்ச்சைக்குப் படிக்கச் செல்வதுண்டு குட்டிக்ககுரா பவுடரும் கொலுசுச் சப்தமுமாக உலவும் மோகினிப் பிசாசுக்குப் பயந்து கட்டிடத்துள் செல்வதில்லை எனினும் இயற்கையின் ஓர் உபாதைக்கு கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஒதுங்குகயில் ஆர்வம் எட்டிப்பார்க்க தூசு படிந்த தரையில் […]

ந‌டுநிசிகோடங்கி

This entry is part 32 of 38 in the series 20 நவம்பர் 2011

நாய்களின் நடுநிசிகள் தனதாக்கிக் கொண்ட‌ தெருவின் வழியே நாய்களைத் துரத்தும் கோடங்கிப் பயணம் எனது. நான் பேயாய்த் தெரிந்திருக்க‌க்கூடும் நிறங்களைப் பிரித்தறியாத‌ நாய்க‌ளின் க‌ண்க‌ளுக்கு. உர‌க்க‌க் குழைத்து அடையாள‌ம் காட்டின‌- பொங்கி வ‌ழியும் அவைகளின் பயத்துடனான ப‌ளிங்குக் க‌ண்களின் வழி என் பேய் பிம்ப‌த்தை. பேய் வேடம் தறித்து நாய்க‌ளைத் துர‌த்த ஆர‌ம்பித்த‌தில் நித்த‌மும் என் ப‌ய‌ண‌த்தைத் தெருக்க‌ள் விரும்பின‌. நிம்ம‌தியிழ‌ந்த‌ நாய்க‌ள் அடுத்த‌ தெருவில் த‌ஞ்ச‌ம் புகுந்து நான் செல்லும் தெருவில் பேய் நட‌மாட்ட‌ம் இருப்ப‌தை […]

மகா சந்திப்பொன்றில்

This entry is part 31 of 38 in the series 20 நவம்பர் 2011

மகா சந்திப்பொன்றில் சுய பகிர்வு உள்ளடக்கிய வாரத்தைகளை தேடி கொண்டிருக்கையில் ஊடுருவும் பார்வை விடுவித்து கொள்ளும் மவுனம் கடந்து கொண்டிருக்கிறது . உன் வெட்க நிற பிரிகையில் வண்ணங்களை தூவி கொண்டிருக்கிறாய் பொழிவின் ஒளி பிரபஞ்சத்தை மறைப்பதாக இருக்கிறது . போதும் விட்டு விடு உன் ஒவ்வொரு செய்கை நம் நிறைவின் தொடக்கமாகிறது . நொடிகளை இச்சமயம் பழித்து கொண்டிருக்கிறது நம் எண்ணங்கள் . முடிவிலி காலம் உண்டெனில் அது இதுவாக இருக்க கடவது . அதில் […]

கை மாறும் கணங்கள்

This entry is part 28 of 38 in the series 20 நவம்பர் 2011

முகராத பூ காற்றின் வாசத்தோடு பேசிவிடுகிறது இழுபறி நிலை இறுதி முடிவிற்குவருகிறது ரகசியமொன்று நெகிழ்ந்துபோய் எல்லாவற்றையும் திறந்து காட்டுகிறது உதற இயலாதவொன்று நிழலின் சாயாலாகி அச்சமூட்டுகிறது யாரும் காணதகணமொன்று சட்டென கைமாறிவிடுகிறது பிறகு சேவல் சிறகை பூனையின் காலடியில் காண நேர்ந்து விடுகிறது

கூடிக்களிக்கும் தனிமை

This entry is part 27 of 38 in the series 20 நவம்பர் 2011

கழுத்தைக் கவ்விக்கொண்டு தொட்டிலாடுகிறது மனிதர்களற்ற வீட்டில் உடனுறங்கும் தனிமை… இரவு முழுதும் எண்ணச்சேற்றுக்குள் முதுகுதூக்கி முன்னோக்கி ஊர்ந்து நெளிந்து நெளிந்து நகர்கிறது ஒரு மண்புழு போல நள்ளிரவு விழிப்பில் புத்திக்கு முன் துயிலெழுந்து இடவலமாய்த் துழாவும் கைகளில் தாவி அப்பிக்கொள்கிறது சன்னலோர மரக்கிளைகளில் சிதறும் பறவைக் கொஞ்சல்களும் வெளிச்சக் கீற்றுகளையும் தட்டியெழுப்ப அனுமதிக்கிறது நேரம் தவறிய தேநீர் சிற்றுண்டி பசிக்கு கொஞ்சம் பகல் உறக்கம் தொட்டுக்கொள்ள ஒரு முட்டை இரு ரொட்டித்துண்டுகளுமென எதையும் கலைத்துப்போட்டுக்கொள்ளும் ஏகாந்த சௌகரியத்தை […]

தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

This entry is part 26 of 38 in the series 20 நவம்பர் 2011

தோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் மௌனத்திலும் தனிமையிலும் மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில் வந்தமர்ந்து காத்திருக்கிறான் இறப்பைக் கொண்டுவரும் கடவுளின் கூற்றுவன் நிலவுருகி நிலத்தில் விழட்டுமெனச் சபித்து விருட்சத்தை எரித்துவிடுகிறேன் மழை நனைத்த எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும் இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது ஈரத்தில் தோய்ந்த ஏதோவொரு அழைப்பின் குரல் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

வாப்பாவின் மடி

This entry is part 24 of 38 in the series 20 நவம்பர் 2011

ஹெச்.ஜி.ரசூல் எனக்கு தொப்புள் கொடியறுத்த அம்மச்சியைப் பார்த்ததில்லை … கர்ப்பப் பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு பூமியின் முதற்காற்றை சுவாசித்தபோது என்காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன எலப்பையின் குரல் ஓர்மையில் இல்லை… சுட்டுவிரலால் சேனைதண்ணி தொட்டுவைத்தபோது அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்… நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில் பாதுகாப்போடு வைத்திருந்த மயிலிறகு இன்னமும் குட்டிப் போடவில்லை நாலெழுத்து படிக்கவும் நாலணாசம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா ஒரு துறவி போல உறவுகடந்து கடல்கடந்து கண்ணுக்கெட்டாத தூரத்தில் என்றேனும் ஒருநாள் வாப்பாவின் மடியில் தலைவைத்து ஓர் […]

தலைமை தகிக்கும்…

This entry is part 8 of 38 in the series 20 நவம்பர் 2011

_____________ சூரியனை சூழ்ந்த கோளங்கள் சுற்றி திரிகின்றன தனி சுதந்திரத்தோடு தன்னை வட்டமடிக்கிற நிலா பெண்களோடு.. தலைமை பதவியின் தனிமையால் கலகலப்பாய் பழக ஆளில்லாமல் தனித்த தலைமை தகிக்க சூரியனின் பெருமூச்சும் உஷ்ணமாய் பூமியை நேருக்கு நேர் நிறுத்தி கேள்வி கேட்டால், நிலா வருந்தி, கறுத்து விடுகிறாள் கிரகண நோய் தாக்கி. ! பூமியை பின்னுக்கு தள்ளி நிலாவை நேரே சந்தித்து காதலை சொல்ல நினைக்கையில் – சூரியனுக்கே கிரகணம் பிடித்து விடுகிறது.. மற்ற பால் வெளியில் […]

குறுங்கவிதைகள்

This entry is part 10 of 38 in the series 20 நவம்பர் 2011

பேருந்தின் இரைச்சல் ஓசையில் பேச்சு வராத தமையனைப் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டு வந்தாள் ஒருத்தி. எனக்கென்னவோ அவளே அவனுக்கும் சேர்த்து பேசிக்கொண்டிருப்பது போல் இருந்தது. 0 ஒன்றே போல்தான் உன் குழந்தை கைகளின் ஸ்பரிசமும். O கண்கள் சொருகும் அதிகாலைப் பொழுதில் உதட்டுச் சாயத்தை ஒத்தி ஒத்தி எடுத்து உதடுகளால் சப்பிக் கொண்டிருந்த ஒருத்தியைக் காண ஒரு மாதிரி சந்தோசமாய்தான் இருந்தது. O பின்னிருக்கையில் அமர்ந்தபடி பயணம் போக நேர்ந்த வண்டியோட்டியின் ஆச்சர்யம் வழியெங்கும் காணும் இத்தனையும் […]