சமையலறை கவிதைகள் 

This entry is part 1 of 6 in the series 9 ஜூலை 2023

ஆர். வத்ஸலா 1. வடை மறைந்தும் மறையாத  மிளகுடன் வடை புரிந்தும் புரியாத  கவிதை போல 2  குக்கர் இரண்டு குக்கரும்  போட்டியிட்டன சன்னல் வெளியே  சதா கூவும் குயிலுடன் வென்று விடுமோ என அச்சத்தில் நான் 3. வடை – பாயசம் நேற்று அவர் பிறந்த தினம் வடையை மிகவும் ரசித்தார் பாசத்தில் இனிப்பு அதிகமென முகம் சுளித்தார் தவறு என்னுடையது அவருடைய கவிதையை நான் ரசித்த பின் வடையும் ஏதோ ஒரு நப்பாசையில் எனது  […]

அச்சம் 

This entry is part 9 of 13 in the series 2 ஜூலை 2023

ஆர் வத்ஸலா நெருங்கி வருகிறது இன்னொரு நட்பு உனதளவு இல்லாவிட்டாலும் நிறைய அன்புடனும் அதேயளவு மதிப்புடனும் புரிந்துணர்வுடனும் கொசுருக்கு கதை கவிதை பற்றின  கருத்து பரிமாற்ற சாத்தியத்துடன் ஆனால் அச்சம் மனமூலையிலமர்ந்து பின்னுக்கு இழுக்கிறது என்னை உன் விலகலை நினைவூட்டி எனக்கும்தான் தெம்பில்லை  இன்னொரு நட்பின் தொலைதலை தாங்க

முரண்

This entry is part 8 of 13 in the series 2 ஜூலை 2023

ஆர் வத்ஸலா நான்கு வயதில்  முதல் சுதந்திர நாள் அன்று நடுநிசியில்  அப்பாவின் தோள் மேல் அமர்ந்து  தெரு நிறைந்த கூட்டத்தோடு  குட்டிக் குரலில்  ‘ஜெய்ஹிந்த்’ சொன்னது  நினைவிருக்கிறது ஆறு வயதில் பள்ளியிலிருந்து திரும்புகையில் வாத்தியார்  எழுதிய ‘குட்’  மழையில் அழியாமலிருக்க  ‘சிலேட்’ பலகையை நெஞ்சோடணைத்து  வீட்டிற்கு நடந்தது  நினைவிருக்கிறது பதினாறில்  கல்லூரி கும்பலோடு  மெரினாவில் கும்மாளம் போட்டது  மறக்கவில்லை  பிரசவித்தவுடன் முகமெல்லாம் வாயாக அழுத மகளின் முதல் தரிசனம் மறக்கவில்லை  பின்னர் வந்து சென்ற பல […]

வாடல்

This entry is part 7 of 13 in the series 2 ஜூலை 2023

வளவ. துரையன் ஒரு முழம் கூடவிற்கவில்லையெனபூப்போல வாடும்பூக்காரியின் முகம்கூடு கட்டஎந்தக் குச்ச்சியும்சரியில்லை எனத்தேடி அலையும் காக்கைஎலிகள் கிடைக்காததால்காக்கைக்கு வைத்தசோற்றைப் பார்க்கும்நகரத்துப் பூனைதிடீரென வந்த தூறலில்ஒதுங்க இடம்தேடும் தெரு நாய்ஆட்டோவில் அடைத்துஅழைத்துச் செல்லப்படும்நர்சரியின் மாணவர்கள்

அதே பாதை

This entry is part 6 of 13 in the series 2 ஜூலை 2023

_________________ எத்தனை நாள்தான்  ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறைதான்- தலை முடியை மாற்றி, மாற்றி, தாடிமீசையை மாற்றி, மாற்றி  ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறை பார்த்தாலும்  அதே மூஞ்சி, அதே கண்ணாடிதான். எத்தனை முறை நடந்தாலும் அதேபாதை,  அதே வாழ்க்கைதான்!           ஜெயானந்தன். 

பஞ்சணை என்னசெய்யும்

This entry is part 5 of 13 in the series 2 ஜூலை 2023

      மனோந்திரா             (நொண்டிச் சிந்து) யாரெனக் கேட்டதற்கு – அவன் யாதொரு பதிலையும் சொல்லவில்லை பாரெனை என்பதுபோல் – அவன் பாவனை செய்வதாய் நானுணர்ந்தேன் கூரெனப் பார்வையினைத் – தீட்டி குறுகுறு என்றுநான் பார்த்திருக்க நீரென பூமியிலே – சரிந்து நிற்காமல் மண்ணிலே போய்மறைந்தான் மாயமாய்ப் போய்மறைந்த – அந்த மனிதனை எண்ணியே நின்றிருந்தேன் தேயமும் நடுங்கியது – சற்று சிந்தையும் தானுடன் குழம்பியது காய்ந்திட வில்லைபதம் – அவன் காயமு டன்தரை மீண்டுவந்தான் தீயதோர் சக்தியென்றே – […]

நிழற் கூத்து 

This entry is part 3 of 13 in the series 2 ஜூலை 2023

கு. அழகர்சாமி நீர் மலி தடாகத்தில் ஆம்பல்  இதழவிழ்ந்து மலர்ந்ததாய் அந்தியில்  இசை அலர்ந்து அறைக்குள்- அறை நடுவில் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியின் ஒளி மேனி சுடர்கிறது மெல்ல ஒளி இருளை வாய் மெல்ல- மின்விசிறியின் மென்காற்றின் உதடுகள் முத்தமிட ஆடும் சுடரோடு ஆடும் படமெடுத்து இசைப்போரின் அரவு நிழல்கள்- நிழல்கள் ஒன்றையொன்று நெட்டித் தள்ள எது எவரின் நிழல்? எது எவரின் நிழலில்லை? எது எவரின் நிழலில்லாத நிழல்? சுழலும் மின்விசிறிக் காற்றில் சுழலும் நிழல்களில் […]

ரோஹிணி கனகராஜ் கவிதைகள் 

This entry is part 18 of 19 in the series 25 ஜூன் 2023

ஆணவசர்ப்பம் ___________________ தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று…  அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என்  கையில்தான்….  ஒருநாள் மகுடியை உடைத்தெறிந்து வீசினேன் அது ஒரு தாழம்புக்காட்டைச் சென்றடைந்தது…  எனக்குள்ளே இருந்த சர்ப்பமும் வெளியேறி தாழம்புக்காட்டில் தஞ்சம் புகுந்தது…  நான் இப்போது பியானோ வாசிக்கக் கற்றுக் கொள்கிறேன்….  சர்ப்பத்தையும் மகுடியையும் நான்  தேடுவதேயில்லை… அவை வேறு  யாரிடத்திலாவது இருக்கக்கூடும்….  ________________________ கண்ணாமூச்சி விளையாட்டு இரவைப் போர்த்திக் கொண்டு வானம் உறங்கும் வேளையில் மரங்களிடையே  ஒளிந்து மறைந்துக் […]

நான் ஒரு மலையாதல் அல்லது என்னில் ஒரு மலை உருவாதல்

This entry is part 17 of 19 in the series 25 ஜூன் 2023

கோவிந்த் பகவான் என்னில் ஒரு மலை  மெல்ல உருவாகிக்கொண்டிருக்கிறது நெடிதுயர்ந்த மரங்களின் வேர்முனைப் பிளக்க என் மலை முழுக்க குருதி நீச்சம். வெயிலுலரும் பாறைகளின் கனத்தால் என் மலை முழுக்க தகிக்கும் வெப்பம். சலசலக்கும் சுனைநீர் பாய என் மலை முழுக்க மூலிகை வாசம். உச்சிக் கிளையில் அடைந்து கிடக்கிற தேனடை முழுக்க என் மலையின் இரகசியம். அந்திப்பொழுதில் கூடு விரையும்  பறவையின் கீச்சொலிகள் என் மலையின் அன்றைய முனகல்கள். உதிரும் இலைகளின் நிசப்தம்  எனதிந்த மலையின் […]

வாளி கசியும் வாழ்வு

This entry is part 16 of 19 in the series 25 ஜூன் 2023

கோவிந்த் பகவான் மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அடி ஆழம் வரை தொங்கும் கயிறு பல நூற்றாண்டுகளின் நீளம். மூச்சிரைக்க அவள் இறைக்கும் வாளி நீரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்து கண்டிருக்கிறது இப்பெரும் வாழ்வு.     -கோவிந்த் பகவான்