முட்டைக்கோஸ் வதக்கல்

This entry is part 2 of 9 in the series 7 அக்டோபர் 2018

நேரம் 25 நிமிடம்   தேவையான பொருட்கள் 1/4 கோப்பை துருவிய தேங்காய் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் 1 தேக்கரண்டி கடுகு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு (உளுந்தும் எடுத்துகொள்ளலாம்) 1 அல்லது 2 காய்ந்த மிளகாய் 1 சிறிய முழு முட்டைக்கோஸ் பொடிப்பொடியாக நறுக்கியது (எட்டு கோப்பை ) 3/4 தேக்கரண்டி உப்பு 2 மேஜைக்கரண்டி கொத்துமல்லி 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு செய்முறை எண்ணெயை ஒரு வாணலியில் சூடாக்கி அதில் […]

தால் தர்கா ( பருப்பு )

This entry is part 8 of 8 in the series 30 செப்டம்பர் 2018

தேவையான பொருட்கள் 1 கோப்பை பயத்தம்பருப்பு 3 கோப்பை தண்ணீர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி கொஞ்சம் உப்பு தாளிக்க 2 மேஜைக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் 1 தேக்கரண்டி ஜீரகம் 1 சின்ன வெங்காயம். பொடியாக நறுக்கியது 1 அல்லது 2 காய்ந்த சிவப்பு மிளகாய்கள் கொத்தமல்லி கொஞ்சம் எலுமிச்சை இரண்டு துண்டுகள் செய்முறை ஒரு பெரிய வாணலியில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக கழுவிவிட்டு அதனை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மேலே வரும் நுரையை […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி

This entry is part 3 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – 1988-இல் வெளிவந்த இந்த ஆஸ்திரேலியப் படம், வர்த்தக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. அத்தோடு, இந்த ஆஸ்திரேலியப்படம் எந்த விருதுகளையும் வாங்கவில்லை. இருப்பினும், ஆங்கிலத்திரைப்பட உலகத்துக்குள்ளும், ஓரினச் சேர்க்கை உலகத்துக்குள்ளும் ஒரு பெரிய எதிர்மறை அதிர்வலையை  ஏற்படுத்திய படம் என்பதால், இந்தப்படம் எனது விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. உலகத்தின் மிகப் பழமையான தொழில் எதுவென்று கேட்டால் உடனே நாம் அனைவரும் ‘விபச்சாரம்’ என்று சொல்லிவிடுவோம். விபச்சாரம் என்ற வார்த்தை, […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்

This entry is part 7 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – டேவிட் எபர்ஷப் என்ற அமெரிக்கரால்,  2000 ஆம் வருடத்தில் எழுதப்பட்ட “டேனிஷ் கேர்ள்” என்ற நாவல்தான்,  2015 ஆம் வருடத்தில் “டேனிஷ் கேர்ள்” என்ற அதே நாவலின் பெயரோடு திரைப்படமாக வெளிவந்தது. டாம் ஹூப்பர் என்பவரால் இயக்கப்பட்ட இந்தப் படம்,  உலகின் பல்வேறு பிரபல திரைப்பட விருதுகளை அள்ளிக் குவித்த படம் ஆகும். ‘டேனிஷ் கேர்ள்’  என்ற அந்த நாவலுக்கும், அந்தப் படத்துக்கும் கதைக்கருவாய் இருப்பவர், 1900-ஆம் ஆண்டில் வாழ்ந்த […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்

This entry is part 6 of 7 in the series 5 ஆகஸ்ட் 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – எத்தனையோ திரைக்கதைகளின் கதைகளை, அந்தக் கதைகளின் திரைக் கதாசிரியர்கள் பிறருக்குச் சொல்லும்போதே, “இதெல்லாம் படமா எடுத்தா சரியா ஓடாது” என்று உடனடியாக நிராகரிக்கப்படுவதுண்டு. ஆனால் அதே திரைக்கதைகளை, படமாய் எடுத்த பிறகு, அவை மிகச்சிறந்த வெற்றிப் படங்களாக சக்கைப் போடு போட்டதும் உண்டு. எத்தனையோ திரைக்கதைகள், படம் எடுக்கப் பணமில்லாமல், காட்சிகள் சுருக்கப்பட்டு, குறைந்த முதலீட்டுப் படங்களாக போய்விடுவது உண்டு. ஆனால் அப்படி குறைந்த முதலீட்டில் படமாய் எடுத்த பிறகு, […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 16 -ஓரின ஈர்ப்பு மாற்றம் குறித்த இரு படங்கள் (Conversion theraphy)

This entry is part 5 of 7 in the series 5 ஆகஸ்ட் 2018

அழகர்சாமி சக்திவேல் ‘பட் ஐ எம் எ சியர் லீடர்’ (But I am a Cheer leader) என்ற அமெரிக்க படத்தின் விமர்சனத்தையும், ‘ஃபேர் ஹவென்’(Fair Haven) என்ற இன்னொரு அமெரிக்க படத்தின் விமர்சனத்தையும் எழுதுவதற்கு முன்னர், நான் இங்கே ஒரு உண்மைக் கதையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1970-இல், ஐந்தே வயதான கிர்க் மர்பி என்ற அமெரிக்க சிறுவன் ஒருவன், வீட்டில் பார்பி டால் போன்ற பெண் பொம்மைகளை வைத்து விளையாடுகிறான் என்ற காரணத்துக்காக, […]

52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)

This entry is part 1 of 8 in the series 15 ஜூலை 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – குழந்தைப் பருவத்தில் இருந்து, விடலைப் பருவத்துக்கு வரும் இந்தியச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள், பாலியல் உறவு குறித்த தங்களது அறிவை, எப்படி வளர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆராய்ந்தோமானால், நமக்குள் ஒரு வித அச்சம் தலை தூக்கும். பல இந்தியச் சிறுவர் சிறுமிகள் பாலியல் உறவு குறித்த தங்கள் அறிவை, கல்யாணம் நடந்த பிறகே தெரிந்து கொள்கிறார்கள் என்பது ஒரு மனம் கசக்கும் உண்மை. மற்ற சிறுவர் சிறுமியரில் பலரோ செக்ஸ் […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 13 – பாம்பே டாக்கீஸ்

This entry is part 2 of 7 in the series 8 ஜூலை 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – இரண்டாயிரத்துப் பதின்மூன்றில் வெளிவந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமை கொண்ட, ‘பாம்பே டாக்கீஸ்’ என்ற இந்த இந்தியத் திரைப் படத்திற்குள், நான்கு தனித்தனிக் கதைகள் இருக்கின்றன. நான்கு கதைகளையும் இயக்கியது, நான்கு புகழ் பெற்ற இந்திய இயக்குனர்கள் ஆகும். இந்தியப் பத்திரிகை உலகம், இந்திய சினிமா உலகம் போன்ற இந்திய ஊடகங்கள் சார்ந்த நான்கு கதைகளில், ஓரினத்தொடர் சார்ந்த, இரண்டு கதைகளை மட்டுமே நாம் இங்கே விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டு […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 12- மில்க் (Milk)

This entry is part 7 of 9 in the series 1 ஜூலை 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் 2008-இல் வெளிவந்த மில்க்(Milk) என்ற அமெரிக்க ஓரினத் திரைப்படம், முழுக்க முழுக்க ஒரு அரசியல் திரைப்படம் என்பதால், எனது விமர்சனத்துக்குள்ளும், நிறைய அரசியல் பேச வேண்டியிருக்கிறது. முதலில், தற்போதைய அயர்லாந்தின் பிரதமரும், இந்திய வம்சாவளியில் வந்தவருமான உயர்திரு. லியோ வரத்கார் அவர்கள் குறித்து இங்கே பேசுவோம். லியோ வரத்கார் “நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்” என்று வெளிப்படையாக சுயப்பிரகடனம் செய்துகொண்ட ஒரு ஓர்பால் ஈர்ப்பாளர். இவரது தந்தை திரு அசோக், இந்தியாவில் பிறந்த […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ

This entry is part 3 of 8 in the series 24 ஜூன் 2018

அழகர்சாமி சக்திவேல் பொதுவாய், இலக்கியங்களை திரைப்படமாக எடுப்பது என்பது, மிகுந்த சிரமமான ஒன்றாகும். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண இலக்கியங்கள், வெற்றிகரமான திரைப்படம் ஆக எடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம், அந்த இலக்கியக்கதைகள், வழிவழியாக சொல்லப்பட்ட வாய்மொழிக்கதைகள் என்பதாலேயே. ஆனால், சாண்டில்யன் போன்றோர் எழுதிய வரலாற்று இலக்கியங்களைச் சுருக்கி, ஒரு திரைப்பட வடிவம் கொடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நான் இதுவரை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்தது இல்லை. சமீபத்தில், பொன்னியின் செல்வன் கதையை, […]