தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜூன் 2018

‘இலக்கியக்கட்டுரைகள்’ படைப்புகள்

அகஸ்தியர்-எனது பதிவுகள்

முல்லை அமுதன் மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது.வர்க்கம் சார்ந்து,சாதிய முறைமைகளை எதிர்த்த படி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர் தான் அகஸ்தியர்.29/08/1926இல் சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை [Read More]

அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்

1999-ம் வருடம். டிஸம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, தில்லியை விட்டுப் பிரிய மனமில்லாது சில வருடங்கள் கழிந்தன. இருந்தாலும் சிறு வயதில் பதிந்திருந்த தமிழ் வாழ்க்கையின் காட்சிகள், மனிதர்கள், உறவுகள் மனதில் அவ்வப்போது திரையோடும். இழந்து விட்டவை அவை. நினைவுகளாகவே ஜீவிப்பவை. [Read More]

நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்

இலக்கியச் சிந்தனை அமைப்பு பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது சென்னையில். ஆரம்ப கால கூட்டங்கள், அவர்கள் மார் தட்டிக் கொள்ளும்படியாக சிறந்த படைப்பாளிகள் பங்கு பெற்ற கூட்டங்களாக இருந்தன என்று அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். செட்டியார்களின் கொடையில் நடந்து வரும் அமைப்பு அது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று ஏ வி எம் ராஜேஸ்வரி திருமணக்கூடத்தில் [Read More]

எஸ்.வைத்தீஸ்வரனின் ‘திசைகாட்டி’

‘அறுபதுகளில் ‘எழுத்து’வில் சி.சு.செல்லப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுக்கவிதைப் பிரவேசம் என் போன்ற மரபுக்கவிதை ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. புதுக்கவிதை புரியவில்லை என்ற குறை பலருக்கும். அப்போது ‘எழுத்து’வில் வந்த ‘உரிப்பு’ என்ற ஓரு புதுக்கவிதை என்னை ஈர்த்தது. “இந்த நகரத்துச்சுவர்கள் நகராத பாம்புகள் அடிக்கடி வால்போஸ்டர் தோல் வளர்ந்து [Read More]

பழமொழிகள் குறிப்பிடும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன், குறளு, செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’’ என்று ஔவையார் மனிதப் பிறவியின் உயர்வைப் பற்றிப் பாடும்போது குறிப்பிடுகின்றார். பிறவியில் இறுதியானது மனிதப் பிறவியே என்பர். உயிர்கள் செய்யக் கூடிய நல்வினைப் பயன் [Read More]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 22

‘அ’ , ‘ ஆ’ ஒரே நாட்டைச் சேர்ந்த இரு படை வீரர்கள். இருவரும் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மரத்தைக் கடந்து போகும் போது ‘அ’ சற்று முன்னே சென்று விட்டான். அப்போது ‘ஆ’ அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு கேடயம் தொங்குவதைப் பார்த்தான். அது பச்சை நிற வண்ணம் பூசப் பட்டிருந்தது. முன் சென்று விட்ட ‘அ’ வை ‘ஆ’ அழைத்து ” பாரப்பா ஆச்சரியத்தை! [Read More]

குரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்

பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி தாவணகெரெ என்னும் இடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அந்த மாவட்டத்தின் ஆட்சியர் எங்கள் துறைக்கு நுண்ணலை கோபுரமொன்றைக் கட்டுவதற்காக அரசு இடத்தை ஒதுக்கித் தருவதாக வாக்களித்திருந்தார். ஆனால் எழுத்துமூலமாக அதற்குரிய ஆணையை அவர் இன்னும் வழங்காமலிருந்தார். எத்தனை நாட்களானாலும் தங்கியிருந்து [Read More]

பழமொழிகளில் தொழிற்சொற்கள்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்பர் தொல்காப்பியர். தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. காலத்திற்கேற்ப சூழல், இடத்திற்கேற்ப அச்சொற்களுக்குப் பொருள் உண்டு. ஒரே சொல் ஓரிடத்தில் ஒரு பொருளையும் பிறிதோரிடத்தில் வேறொரு பொருளையும் தரும் இது தமிழ் [Read More]

நானும் ஜெயகாந்தனும்

‘ அவன் அந்த ஊருக்குள் நுழைந்த போது அந்த ஊரே நாற்றமடித்தது ‘ ஜெயகாந்தனின் இந்த முதல் வரிகள் கதை நாயகனைப் பற்றிய முழுமையான ஒரு உருவத்தை வாசகர்களின் மனதில் தோற்றுவித்துவிடும். அதுதான் ஜெ கேயின் மொழி ஆளுமை, கதை சொல்லும் திறன். இப்படி எத்தனையோ வரிகள் வாசகனைக் கட்டிப் போட்டிருக்கின்றன. ‘ கிளாஸ்கோ மல்லுல ரவிக்கை.. அதிலயும் கலரு.. அப்பா செத்தவுடனே செறச்சா கொட்டிண்டே.. ‘ { சில [Read More]

கு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை

முனைவர் சுபாசு சந்திரபோசு தொகுத்த கு.ப.ராஜகோபாலனின் 15 சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் எனக்குத் தோன்றியது இவர் காலத்துக்கு ஏற்ற கதைகளை எழுதவில்லை. அக்காலத்தையும் தாண்டி எழுதி இருக்கிறார் என்பதே. புத்தகச் சந்தையில் புதுமைப்பித்தனின் பெண்ணியச் சிறுகதைகள் எனும் நூலை வாங்கியபோது சுகன் சொன்னார்: ‘ இப்ப படிச்சா போரடிக்கும் ‘ கு.ப.ரா. கதைகளையும் [Read More]

 Page 183 of 197  « First  ... « 181  182  183  184  185 » ...  Last » 

Latest Topics

அரசனுக்காக ஆடுதல்

அரசனுக்காக ஆடுதல்

ஜானகி ஸிங்ரோ சந்தூர் கிராமத்து மக்கள் [Read More]

தொடுவானம் 226. இது கடவுளின் அழைப்பு

டாக்டர் ஜி. ஜான்சன் 226. இது கடவுளின் அழைப்பு [Read More]

Popular Topics

Archives