“மணிக்கொடி’ – எனது முன்னுரை

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

“மணிக்கொடி’ எனும் இந்நாவல் கல்கியின் பொன்விழாப் போட்டியில் பரிசு பெற்ற நாவலாகும். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் எவ்வாறு படிப்படியாகத் தங்கள் வழிகளில் நம்பிக்கையிழந்து அகிம்சைதான் நல்லது என்கிற முடிவுக்கு வந்தார்கள் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட […]

”புள்ளும் சிலம்பின காண்”

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

    “புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ, பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும், மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம், உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையில் ஆறாம் பாசுரம் இது. மார்கழி நோன்பு நோற்பதற்காக விடியற்காலையில் எழுந்து புறப்படும் ஆயர் சிறுமிகள் ஒவ்வொரு வீட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்புகிறார்கள். […]

தினம் என் பயணங்கள் – 1

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

. முகவுரை ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   சராசரி மனிதர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. அதிலும் ஓர் ஏலாத மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் ? வாழ்க்கை என்பதே சுவராசியம் கலந்த போராட்டம் தான் என்பது என் கருத்து. பயணம் எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். ஒவ்வொரு ஊராகச் சென்று அந்த ஊரின் சிறப்பை, கலாச்சாரத்தை, மனித இயல்புகளை என் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நெடுநாள் ஆசை எனக்கு இருக்கிறது.   […]

திருக்குறளும் தந்தை பெரியாரும்

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8. 19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் வெடித்துக் கிளம்புவதற்குக் கிறித்துவப் பாதிரிமார்கள், காலனிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆங்கிலக் கல்விமுறை, அக்கல்வியைக் கற்றுத் தேர்ந்த உள்நாட்டு அறிஞர்கள், பழைய ஏடுகளைப் பதிப்பித்த பெருமக்கள், அவர்கள் பதிப்பித்த நூல்கள், அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், எழுத்தாளர்கள், தனித்தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட அரசியல் கருத்தாக்கம், இந்திய தேசிய இயக்கம், காந்தியம், புதிதாக வந்து சேர்ந்த பத்திரிக்கை ஊடகம், அச்சகத் தொழில், சாதிய எழுச்சிகள் […]

படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி ஆசிரியர்:      என் . மணி   ” விசன் 2023 “ திட்டம் பற்றி இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது. கறும்பலகை பாடம் போய் எட்டாக்கனியாக இருந்ததெல்லாம் மடிக்கணியாக வந்து விட்டது. கிராமப்பள்ளிகளுக்கு மாணவர்கள் போகும் சிரமம் நீங்க மிதிவண்டிகள் வந்து விட்டன.முன்பு வகுப்பில் பத்துப் பேர் இருந்தால் ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் அபூர்வம். இப்போது புத்தகம், சீருடை இலவசம். மடிக்கணிணியில் உலகத்தையே பார்க்கும் லாவகம். 2023 தனி நபர் […]

தூதும், தூதுவிடும் பொருள்களும்

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

சு. முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி (தன்னாட்சி) திருச்சி.01 முன்னுரை தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்திற்கு பிறகு தோன்றியவை சிற்றிலக்கியங்கள் ஆகும். இவை சங்க காலத்திலேயே முளைவிட்டு, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் மெல்ல மெல்லத் தழைத்து வளர்ச்சியுற்றன. “குழுவி மருங்கினும் கிழவ தாகும்” –     தொல் – பொருள் – புறத் – 1030 “ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப” –         தொல் – பொருள் […]

இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்

This entry is part 15 of 29 in the series 12 ஜனவரி 2014

க.பஞ்சாங்கம் புதுச்சேரி-8 1947-க்கு முந்தைய காலனித்துவத்தின் ஆதிக்கம் என்பது அரசியல், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இன்றைய புதிய காலனித்துவச் சூழலில்  காலனித்துவ ஆதிக்கம் அதேபோல் ஒவ்வொரு துறையிலும் ஒரு சிறிதும் குறையாமல் மேலும் வலுவாகி இருக்கிறது என்றாலும் அன்றுபோல் இந்த ஆதிக்கம் வெளிப்படையாக பெருவாரி மக்களுக்கும் புலப்படும்படியாக இல்லை. இது மிகப்பெரிய சூழ்ச்சி வலையாகப் பின்னப்பட்டுள்ளது. தனது ஆதிக்க வலைக்குள் வெளியே எந்தவொரு நாடும், எந்தவொரு […]

வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை”

This entry is part 14 of 29 in the series 12 ஜனவரி 2014

  மதிப்புரை:கவிமுகில் திருவானைக்காவல்தாமரைச்செல்வன் பொய் சொல்ல விரும்பாத ஒரு புலவரின் –வளவ.துரையனின் புதிய புதினம் ‘சின்னசாமியின் கதை’. இக்கதையின் நாயகனைத் தேடவேண்டிய அவசியமே இல்லை. மாதவனா? முருகனா? சின்னசாமியா? மதியழகனா? என்னும் கேள்விகளுக்கு இடமே இல்லை. ஆம்! அத்துணை பேரும் இப்புதினத்தில் சம பங்கு வகித்து நம்முள்ளத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்கின்றனர். இப்புதினத்தில் யதார்த்தம், எளிமை, எதையும் தேடி அலைந்து இதில் இடம் பெறச் செய்யா முழுமைப் பொதிப்பு, தெளிந்த நீரோடை போன்று விளங்கும் தெளிவு  யாவும் […]

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2

This entry is part 21 of 29 in the series 12 ஜனவரி 2014

க்ருஷ்ணகுமார்   வன்தாளி னிணைவணங்கி வளநகரம்  தொழுதேத்த மன்ன னாவான் நின்றாயை* அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு என்றாள்*எம் இராமாவோ! உனைப்பயந்த கைகேசி தன்சொற் கேட்டு* நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே! உன்னை நானே.     …….. இந்தியவியலாளர்களின் ஆக்ஷேபங்களும் அதற்கெதிரான சமாதானங்களும்   5. மதம் மற்றும் புராணக் கட்டமைப்பு சார்ந்த விஷயங்கள் பால மற்றும் உத்தரகாண்டங்களில் மற்றும் ராமாயணத்தின் மற்ற காண்டங்களிலிருந்து வேறுபடுதல்   டாக்டர் எம்.விண்டர்னிட்ஸ் (Dr.M.Winternitz) மற்றும் டாக்டர் […]

ஒன்றுகூடல் ( தொடர்ச்சி )

This entry is part 19 of 29 in the series 12 ஜனவரி 2014

                               முன்பெல்லாம் நாங்கள் ஒன்றுகூடியபோது ஒரு சிலர் மருத்துவ அனுபவங்களைப் பற்றி பேசுவதுண்டு. ஆனால் இந்த முறை மருத்துவம் அல்லாத வேறு வித்தியாசமான பொருள் பற்றி பேசவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். மருத்துவத்திலேயே அனுதினமும் உழன்றுகொண்டிருக்கும் நாங்கள் இந்த மூன்று நாட்களும் அதிலிருந்து விலகி இருக்க எண்ணினோம். முதல் பேச்சாளர் ஏபெல் ஆறுமுகம். இவன் கோலாலம்பூரில் சுபாங் ஜெயா மருத்துவ மையத்தில் ( Subang Jaya Medical Centre ) இரு துறைகளில் அறுவை சிகிச்சை நிபுணராக […]