ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)

This entry is part 9 of 22 in the series 15 செப்டம்பர் 2013

இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன்  சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் […]

மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 14 of 22 in the series 15 செப்டம்பர் 2013

    -ஸ்ரீரங்கம் சௌரிராஜன்.   மனுஷ்ய புத்திரனின்  பத்தாவது  கவிதைத் தொகுப்பு ‘அருந்தப்  படாத கோப்பை’. இதில்      60 கவிதைகள்   உள்ளன.  இவரது கவிதைகளின்  சிறப்பம்சம்   பாடுபொருள் ஆகும்.  அதைத்  தேர்வு செய்வதில் காணப்படும்   கூர்மை        நிச்சயம்    வாசகர்கள்  கவனத்தை ஈர்க்கும். இவர் எழுதிய கவிதைகளின்    எண்ணிக்கையால் பல கவிதைகள் உரைநடையாய் நீர்;த்துப் போகின்றன. கவிதைகளின்  எண்ணிக்கை  அதிகமானால் தரம் குறைவது இயல்பு. விக்கிரமாதித்தன் கவிதைகளும் இப்படித்தான் பாதிக்கப்பட்டன.     ‘தனிமை என்று  எதுவும் இல்லை’ […]

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்

This entry is part 8 of 24 in the series 8 செப்டம்பர் 2013

  செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் தன் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி சுய சரிதையாக, வானத்தைப் பிளந்த கதை என்று நாட்குறிப்புகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். அது பற்றி எழுத வேண்டும். எவ்வளவு நிச்சயமற்ற வாழ்க்கையிலும் தன் நகைச் சுவை உணர்வை இழக்காதவர். இன்னொருவர், இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப் […]

ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)

This entry is part 7 of 24 in the series 8 செப்டம்பர் 2013

ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். இலக்கிய சர்ச்சைகள், நகர வாழ்க்கையின் சந்தடி, இவற்றில் எதிலும்  சிக்கிக்கொள்ளாத தூரத்தில் அமைதியாக வாழ்ந்தவர். அவருக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் தன்னுடைய நோட்புக்கில் ஒரு குறு நாவல் எழுதி முடித்துவிடுவார். அதற்கு அவருக்கு ஏதோ சில நூறு ரூபாய்கள் கிடைத்துவிடும். இப்படித்தான் நாகம்மாள், சட்டி சுட்டது (1965), அறுவடை […]

திலீபன் கண்ணதாசன் கவிதைகள்

This entry is part 21 of 24 in the series 8 செப்டம்பர் 2013

-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்       ‘சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை’ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார் உசிலம்பட்டிக்குப் பக்கத்து கிராமத்துக்காரரான திலீபன் கண்ணதாசன்; தற்போது மதுரைவாசி! நா.முத்துக் குமார், முகுந்த் நாகராஜ் போன்ற யதார்த்தக் கவிஞர்கள் வரிசையில் இவருக்கும் ஓர் இடம் உண்டு. கிராமத்தின் அழகை, ஜீவா சொன்னதுபோல ‘வேரோடும் வேரடி மண்ணோடும்’ எடுத்துவந்து நம்முன் கவிதைகளாகத் தந்துள்ளார். யதார்த்தக் கவிதைகளில் உண்மையே கவித்துவமாகச் செயல்படும். பாடுபொருள் முன்நிற்க மொழி பின்னால் நிற்கும். திலீபன் கண்ணதாசன் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 23

This entry is part 15 of 24 in the series 8 செப்டம்பர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை E. Mail: Malar.sethu@gmail.com 23.இறந்தபின் புகழ் ​பெற்ற ஏ​ழை……      “மயக்கமா கலக்கமா ..மனதி​லே குழப்பமா வாழ்க்​கையில் நடுக்கமா?” அடடா….வாங்க வாங்க..என்னங்க ​சோகமான பாட்​டைப் பாடிகிட்​டே வர்ரீங்க….எதுக்கு இப்படி..?….என்ன வீட்டுல ஏதாவது பிரச்ச​னையா…? இல்​லை ​வே​றெதுவும் உடம்புக்குச் சரியில்​லையா…..?என்ன ​சொல்லுங்க… என்ன அ​மைதியா ​மொகத்த உர்ருன்னு வச்சுகிட்டு இருக்குறீங்க…. என்ன ஒண்ணுமில்​லையா…? என்ன மன​சே […]

ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – 1

This entry is part 9 of 15 in the series 1 செப்டம்பர் 2013

  (1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில மாதிரி படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று […]

சுற்றுச்சூழல் அதிர்ச்சி – “ சாயத்திரை “ சுப்ரபாரதிமணியனின் நாவல்

This entry is part 5 of 15 in the series 1 செப்டம்பர் 2013

  பிரேமா நந்தகுமார்     விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று […]

அயோத்தியின் பெருமை

This entry is part 10 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

  சிலப்பதிகாரத்தின்  கதைத்தலைவன்  கோவலன்  புகார்  நகரை  விட்டுப்  பிரிந்து  செல்கிறான்.  அதனால்  அந்நகர  மக்கள் வருந்துகின்றனர்.  இதற்கு  உவமை கூற வந்த இளங்கோ அடிகள் இராமபிரான்  அயோத்தியை  விட்டுப் பிரியும்  போது  மக்கள் எவ்வாறு துன்பம் அடைந்தனரோ அதேபோல மக்கள் பெருந்துயருற்றனர் என்கிறார்.            “அருந்திறல் பிரிந்த அயோத்தி போல                         பெரும் பெயர்  மூதூர்  பெரும் பேதுற்றதும்” என்பன இளங்கோ எழுதிய பாடல் அடிகளாகும். பகவான் நாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியெனும் பாகத்தை […]

தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்

This entry is part 17 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

ரா.பிரேம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர். முன்னுரை: ஒரு மொழியின்கண் உள்ள எழுத்தமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு போன்றவற்றை வரையறை செய்து விளக்குவது இலக்கணமாகும். இவ்விலக்கணத்தில் மொழியின் வளமை, மரபு மற்றும் கட்டமைப்பு வரையறைகளை விளக்குவதிலும் இலக்கணம் இன்றியமையாத இடம் வகிக்கிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்குமே இலக்கணக் கட்டுக்கோப்பும் வரையறையும் உண்டு. இவ்வாறு இல்லாமற் போயின் ஒருவர் பேசுவது இன்னொருவருக்குப் புரியாமல் போய்விடும். தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த […]