மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்

This entry is part 23 of 30 in the series 28 ஜூலை 2013

ப.லெட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை ஈ.வெ.ரா பெரியார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி படைப்பாளர்கள் தற்கால நிகழ்வுகளோடு ஒட்டித் தம் பதிவுகளைப் படைப்புக்களில் பதிய வைக்கின்றனர். இதன் காரணமாக படைப்புகள் உயிர்த்தன்மையுடன் திகழ்கின்றன. கவிஞர் மேத்தா வானம்பாடி இயக்க காலக் கவிஞராவார். தொடர்ந்து புதுக்கவிதைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தமிழ்ச்சமுதாயம் பற்றிய பல விமர்சனங்களைத் தந்து தமிழ்ச்சமுதாயத்தின் இக்கட்டுக்களை, ஏற்ற இறக்கங்களை மதிப்பிட்டு அது சரியான வழியில் நடைபோட ஆக்கமும் ஊக்கமும் மிக்கக் கவிதைகளை படைத்தளித்து வருகின்றார். […]

அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]

This entry is part 3 of 30 in the series 28 ஜூலை 2013

———-வளவ.துரையன்———- ம. ராஜேந்திரன்  தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் துணை  வேந்தராகப் பணியாற்றி ஓய்விற்குப்பின் இலக்கியத் தாகத்தால் கணையாழிக்குப் புத்துயிர் ஊட்டி வருபவர். எட்டுக் கதைகள் கொண்ட தொகுப்பாக “சிற்பியின் விதி” வெளிவந்துள்ளது. மனிதனையும் நாயையும் வைத்து முதல் கதை “கடவுளும் டைகர்சாமியும்” பின்னப்பட்டுள்ளது. கடவுள் ஒருநாள் மனிதனை நாயாகவும் அம்மனிதனின் நாயை அவனாகாவும் மாற்றுகிறார். ஆனால் நாய் மனிதனாக இருக்க விரும்பவில்லை. மீண்டும் நாயாகவே விரும்புகிறது. மனித வாழ்வும் நாயின் வாழ்வும் ஒன்றாக இருக்கிறது என்றே நாய் […]

கடவுள்களும் மரிக்கும் தேசம்

This entry is part 2 of 30 in the series 28 ஜூலை 2013

முதலைக்கு நீரில் தான் அத்தனை பலமும் , வெளியே எடுத்துப்போட்டால் என்ன செய்வதெனத்தெரியாது அலைந்துகொண்டிருக்கும், சொறிநாய்கள் கூடச்சீண்டிப்பார்க்கும். கடல் கடந்து போய் வணிகம் செய்தது போய் இப்போது கடல் கடந்து போய் பணி செய்யவேண்டியிருக்கிறது. ஒட்டுப்பொறுக்கி சமுகத்திலிருந்து எப்போது தான் விடுதலை கிடைக்கும் தமிழனுக்கு ? ஆர்ப்பரிக்கும் கடல் , வலையைத்தொட்டாலே கொன்று போடும் சிங்களவன். தமிழ்நாடு இலங்கைக்கு அருகில் இருப்பதால் தான் இத்தனை பிரச்னைகளும்.கொஞ்சம் நகர்த்தி ஆந்திரா பக்கம் தள்ளிக்கொண்டு போய்விட்டால் சூடுபடுவதாவது குறையும்.   […]

எளிய மனிதர்களின் தன் முனைப்பு – நடவடிக்கைகள் ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து …..

This entry is part 16 of 20 in the series 21 ஜூலை 2013

பச்சைப் பசுங்கோயில் –இன்பப் பண்ணை மலைநாடு இச்சைக்குகந்த நிலம்- என் இதயம் போன்ற நிலம் – ( சுத்தானந்த பாரதியார் ) அய்ந்து நாவல்கள் கொண்ட ரெ.கார்த்திகேசு அவர்களின் இத் தொகுப்பை படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும், கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும், முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும் மனதில் வெகுவாக நிற்கின்றனர். ரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொள்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன் கொஞ்ச காலம் […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’

This entry is part 13 of 20 in the series 21 ஜூலை 2013

கடற்கரையில ஒரு இலக்கிய உரையாடலின்போது, ‘புதிய அலைகள்’ என்று இலக்கியத்தில் இப்பொழுது ஒரு சொல் அடிபடுவது பற்றி சர்ச்சை எழுந்தது ‘அலைகளில் புதிசு உண்டா?’ என்று கேட்டேன் நான். ‘’அலைகளில் ஏது புதிது, கரைகள் வேண்டுமானால் புதிது புதிதாகத் தோன்றலாம்” என்றார் நண்பர். .அலையா, கரையா? என்ற சர்ச்சையை ஒதுக்கிவிட்டு, பொதுவாக இன்று பெரிய பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் கதைகளைப் பார்த்தோமானால் இலக்கியத் தரம் என்ற ரசமட்டத்தில் துல்லியமாக அடங்குவது மிக அரிது. ஆனால் இன்று சிறுகதைகளில் […]

நீங்காத நினைவுகள் – 11

This entry is part 7 of 20 in the series 21 ஜூலை 2013

காமராஜ்! ‘காலா காந்தி’ – கறுப்பு காந்தி –  என்று அழைக்கப்பட்டவர். காந்திக்கு இணையானவர் என்கிற மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர். அதனாலேயே இந்த ஆகுபெயர். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர். தகுதியுள்ளவர். இன்னும் சரியாகச் சொல்ல வேனண்டுமானால் காமராஜ் காந்தியை விடவும் உயர்ந்தவர் என்று கூடச் சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. காந்திஜியாவது தம் இள வயதில் ‘அப்படி, இப்படி’ இருந்தவர். தம் தப்புகள், தவறுகள், சறுக்கல்கள் ஆகியவற்றை யெல்லாம் தமது தன்வரலாற்றில் மக்களுக்குத் தெரிவித்தவர். ஆனால் காமராஜ் […]

உமா மகேஸ்வரி கவிதைகள்: ‘இறுதிப் பூ’ தொகுப்பு வழியாக…

This entry is part 18 of 18 in the series 14 ஜூலை 2013

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   உமா மகேஸ்வரி (1971) மதுரையில் பிறந்தவர். சிறுகதை வடிவத்தைச் செம்மையாகக் கையாண்டு வருபவர். இவருடைய நான்காவது கவிதைத் தொகுப்புதான் ‘இறுதிப் பூ’! வீடு, வீட்டின் உறவுகள், குழந்தைகளின் உலகம் பற்றிய பதிவுகள் கொண்டவை இவரது கவிதைகள். இத்தொகுப்பில் 71 கவிதைகள் உள்ளன. புதிய பார்வை, அம்ருதா, புதிய காற்று, உன்னதம், புதுவிசை, சஞ்சாரம், அமுதசுரபி, காலச்சுவடு, தீராநதி, உயிர் எழுத்து போன்ற இதழ்களில் வெளியாகி உள்ளன. ‘நீரோடு போகும் பூ’ – […]

சாத்தானும் சிறுமியும் _ ‘யூமா வாசுகி’யின் கவிதைத் தொகுப்பு _ வாசக நோக்கில்

This entry is part 17 of 18 in the series 14 ஜூலை 2013

  முனைவர். கோ.   கண்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, அரசு கலைக் கல்லூரி, தருமபுரி. ”கவிதைக்குள் ஓவிய அனுபவமும், ஓவியம் வரைதலில் கவிதை அனு பவமும் பின்னிப் பிணைந்து கிடப்பதாக இப்பொழுது என்னுள் ஒரு புரிதல்  விளைந்துள்ளது. கவிஞரை முதல்முதலில் நான் சந்தித்தபொழுது ஓவியத்தை பார்வையற்றோரால்  அனுபவித்துப் புரிந்துகொள்ள முடிவதில்லையே என்ற என் ஏக்கத்தை வெளிப்படுத்தி னேன். ஆனால் இந்த கவிதை அனுபவம் அந்த ஏக்கத்துக்கு வடிகாலாக அமைந்துள் ளதாகத் தோன்றுகிறது. என் மனத் திரையில் […]

நீங்காத நினைவுகள் – 10

This entry is part 10 of 18 in the series 14 ஜூலை 2013

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் ஜூன் மாதம் 24 ஆம் நாளில் கடந்து சென்று விட்டது. எனினும் சில நாள்களே அதன் பின் சென்றிருப்பதால், அவரைப் பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ளுவதில் ரொம்பவும் கால தாமதம் நிகழ்ந்து விடவில்லை என்று தோன்றுகிறது. 1960 களில் என் தோழியும் சமூக சேவகியுமான அனசூயா தேவிதான் சந்திப்புக்கு நாள், நேரம் பெற்றபின், அவரைச் சந்திக்கப் போனபோது வழக்கம் போல் என்னை உடனழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். அவரது இல்லத்துள் நாங்கள் […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’

This entry is part 7 of 18 in the series 14 ஜூலை 2013

நான் காந்தி காலத்தோடு ஒட்டி வளர்ந்தவன். ஏன், செயலும் சிந்தனையும் அந்த அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பியவன், கொஞ்சம் முயற்சி செய்தவனும் கூட. நான் படைப்பாளியாக ஆன பிறகும் என் வாழ்க்கைப் பார்வை காந்தீய ஈடுபாடு கொண்டதாகவே இருந்து வருகிறது. என் இலக்கிய முயற்சிகளிலும் அந்தச் செல்வாக்கு அங்கங்கே என்னை வெளிக்காட்டி இருக்கிறது.   உலக இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தால் நெப்போலியன் காலம், பிரஞ்சுப்புரட்சி நாட்கள், ரஷ்யப் புரட்சி ஆண்டு,, ஸ்பானிய உள் நாட்டுப் போராட்ட […]