பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-12)

This entry is part 21 of 35 in the series 29 ஜூலை 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்களும் பறவைகளும் மனித வாழவியலில் வேரூன்றி, சமுதாயச் சூழலில் செல்வாக்குக் கொண்டு, பயனுடைய பாடல்கள் பலவற்றை மகா கவியும், மக்கள் கவியும் படைத்தார்கள். தனக்காக மட்டுமே எழுதிக் கொண்ட தன்மைக் கவிஞர்களாகாது, தம் கவிதைகள் அனைத்தையும் பிறருக்காகப் படைத்தவர்கள் இக்கவிஞர்கள். வோழும் உயிர் அனைததையும் தானாகக் கருதிய உயிரொருமைப்பாட்டு உணர்வினர் கவிஞர்கள் என்பர். இத்தகைய உணர்வால் பாரதியும் பட்டுக்கோட்டையும், மனித வாழ்வின் ஏற்றங்களைப் பற்றி சிந்தித்த […]

அருந்ததி ராயின் – The God of Small Things தமிழில்…-> சின்ன விஷயங்களின் கடவுள் <-

This entry is part 15 of 35 in the series 29 ஜூலை 2012

படிக்கிறோம் என்று எழுதுபவர் பலருண்டு… படிப்பார்கள் வேறுவழியில்லை என்று எழுதுபவரும் பலருண்டு… எழுதுவோம் , படிப்பார்கள் என்ற நிலையிலும் பலர் உண்டு. ஆனால், எழுத்தை தங்களது எண்ணங்களின் ஊற்றாய், காட்டாறாய், நதியாய், ஆறாய், வாய்க்காலாய் கொண்டு மனங்களில் பெரும் உணர்ச்சி பிரவாகத்தை ஏற்படுத்தும் என்ற ஒரு இலக்குகூட இன்றி … ஆனால் அப்பேற்பட்ட அற்புத மனநிலையை பலருக்கு தரக்கூடய எழுத்துக்களை மிக மிக சிலரே எழுதுகிறார்கள். தமிழில், கதைக்களம், கதாபாத்திரங்கள் , வர்ணனை, வசனம் தாண்டி மனோத்த்துவ, […]

கவிஞர் அருகாவூர்.ஆதிராஜின் குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’

This entry is part 13 of 35 in the series 29 ஜூலை 2012

மரபுக்கவிதைகள் 1950களில் அமோகமாக வளர்ச்சியுற்றது. பாரதியின் தாசனான பாவேந்தர் தனது விருத்தப் பாக்களால் தனது குருநாதரைவிட சொல்லாட்சி, கவிநயம் காரணமாய் அன்றைய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தார். அவரைப் பின்பற்றி ஒரு இளைஞர் பட்டாளமே அவரது பாணியில் எழுதிக் குவித்தார்கள். அவர்களை ‘பொன்னி’ இலக்கிய இதழ் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்று தலைப்பிட்டு அறிமுப்படுத்தியது. கவிஞர் வாணிதாசனும், மு.அண்ணாமலையும், பொன்னடியானும், பெரி.சிவனடியானும் மற்றும் பலரும் அதன்மூலம் பிரபலமானார்கள். அந்த பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர்களில் இன்னும் சிலர் அதே பாணியில் […]

தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 12 of 35 in the series 29 ஜூலை 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) கவிஞர் நிந்தவூர் ஷிப்லியின் தற்கொலைக் குறிப்பு என்ற கவிதைத் தொகுதி இந்தியாவின் பிளின்ட் பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இவர் 2002 இல் சொட்டும் மலர்கள், 2006 இல் விடியலின் விலாசம், 2008 இல் நிழல் தேடும் கால்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டவர். 77 பக்கங்களில் வெளிந்துள்ள இந்த நூலானது போர்ச் சூழல் கால கவிதைகளால் நிறைந்திருக்கிறது. யுத்தம் விழுங்கிய அத்தனை அப்பாவி உயிர்களுக்காகவுமே இந்த நூலைக் கவிஞர் சமர்ப்பணம் செய்துள்ளார். […]

சிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.

This entry is part 10 of 35 in the series 29 ஜூலை 2012

சந்திரா மனோகரன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஈரோட்டில் இருந்து வரும் இதழ். மூன்று வரிக் கவிதையோடு பல வண்ணங்களில் அச்சிடப்பட்ட அட்டை ஒரு ரிச் லுக்கைக் கொடுக்கிறது. கல்லூரி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகள், பள்ளி ஆசிரியர்கள் எழுதிய போட்டியில் பரிசு பெற்ற கதைகள் எனபயணிக்கிறது இதழ். கவிஞர் அமரன் எழுதியுள்ள ஹைக்கூ ஒப்பியல் ஒரு பயனுள்ள பகுதி. இந்தப் பகுதியின் விசேசமே, இது அமரன் எழுதிய ஹைக்கூக்களால் நிரம்பி விடாமல் பாஷோ போன்றோர் எழுதிய ஹைக்கூகளால் […]

மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்

This entry is part 6 of 35 in the series 29 ஜூலை 2012

1968 என்று நினைவு. 1969- ஆகவும் இருக்கலாம். இவ்வளவு வருடங்கள் தள்ளிப் பேசும்போது இதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது? மாமியார் இறந்து ஒரு வருடம் ஆயிற்று. வருஷாப்தீகத்துக்காக மனைவியுடன் தில்லியிலிருந்து திருமுல்லைவாயிலுக்கு வந்திருந்தேன். திரும்பி தில்லி போக வேண்டும். சென்னையில் மனைவியின் அக்கா பெண் வீட்டில் சில நாட்கள். எனக்கு ஏதோ தூரத்து உறவினர் என்பதை விட சினேகிதம் தரும் நெருக்கம் அதிகம் அவர்களுடன். கொஞ்ச நாட்களாக தனக்கு ஒரு வீட்டு மனை இருப்பதாகவும் […]

நினைவுகளின் சுவட்டில் (95)

This entry is part 5 of 35 in the series 29 ஜூலை 2012

ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும்  கிராமத்திலிருந்து இங்கு வேலை பார்க்க வந்திருக்கும் 16 வயதுச் சிறுவனுக்கு வயதில் konjam மூத்த நண்பனாக சொல்லாமலேயே வழிகாட்டியாக இருந்தவர்களில் செல்லஸ்வாமி முக்கியமானவர். வயதில் நாற்பதைத் தாண்டிய எஸ். என். ராஜாவுக்கு அடுத்த படியாக என்று சொல்ல வேண்டும். அவர் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருக்கும் ஜனார்த்தனன் என்பவரின் வீட்டில் இருந்த அவருடைய விதவைத் தாய்க்கும் சின்ன […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23

This entry is part 4 of 35 in the series 29 ஜூலை 2012

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு இருட்டுக் குடிலிலிருந்து உயிர் வெளியே வந்தது. வெளி வந்த உயிரிடமிருந்து எழுந்த முதல் ஓசை அழுகை அதன் பயணத்தை உணரும் சக்தி அப்பொழுதே அந்த உயிருக்கு இருந்ததோ?! சுற்றி நின்றவர் சிரித்தனர். மகிழ்ச்சியாலா அல்லது அவர்கள் போராட்டத்திற்கு ஓர் கூட்டாளி வந்துவிட்டான் என்பதாலா?! நாம் இலக்கியம் படைக்கும் பொழுதே வாழ்வியலை அகம் என்றும் புறம் என்றும் பிரித்திருக்கின்றோம். மனிதனின் வளர்ச்சியையும் அப்படியே பிரித்துப் பார்ப்பதே சிறந்தது. குழந்தையின் […]

ஒரு புதையலைத் தேடி

This entry is part 3 of 35 in the series 29 ஜூலை 2012

    பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுதி “ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியமான கதைகளில் ஒன்று “அழகி”. தனது இளம்பருவத்தில் அப்பா அழகான ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிய செய்தியை அறிந்துகொள்கிறான் மகனான இளைஞன். யாரும் தடுத்துக் கட்டுப்படுத்தமுடியாத இளம்வயதுத் துடிப்பில் இருப்பவன் அவன். தன் அப்பாவைக் கட்டிப் போட்ட அழகு எப்படிப்பட்டது என்று பார்ப்பதற்காக ஒருநாள் புறப்பட்டுச் செல்கிறான். அந்தப் பெண்ணின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். கதவைத் தட்டிவிட்டுக் […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)

This entry is part 33 of 37 in the series 22 ஜூலை 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்களின் வரலாற்றோடு இணைந்த பெரியார்கள்        இருகவிஞர்களின் வாழ்க்கையுடன் பல பெரியார்களின் பெயர்களும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருபெருங் கவிஞர்களின் வாழ்வில் பங்கு கொண்ட அத்தகைய பெரியார்களின் வாழ்வு வாராற்றுச் சுவடுகளாக அமைந்து அவ்வக் கால வரலாற்றை நமக்குப் புலப்படுத்துவதாக உள்ளன. மகாகவியின் வரலாற்றோடு பல பெரியார்களுடைய பெயர்கள் இணைந்துள்ளன. அவர்கள் பல துறைசார்ந்த பெருமக்களாவர். அவர்களுள் சிலர் பாரதியின் கவிதையாக்கத்திற்கு ஊக்கம் நல்கினர். சலர் […]