நினைவுகளின் சுவட்டில் (92)

This entry is part 4 of 41 in the series 8 ஜூலை 2012

ராஜ்காங்பூர், கல்கத்தா சுற்றிவந்த புராணத்தை இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி சொன்னதில் ஒரு விஷயம் தவறி விட்டது. அது எங்களுடன் இருந்த ஜியார்ஜின் பிரசன்னத்தை. மறந்து தான் போனேன். எங்களுடன் அவரது பிரசன்னத்தை நான் மறந்த போதிலும் அவரது பிரசன்னத்தை மாத்திரம் கவனித்தவர்கள் உண்டு. நாங்களும் அவருடன் இருப்பது அந்த ஜீவன்களுக்கு எப்படி தெரியாமல் போகிறது?, ஜியார்ஜி மாத்திரமே அவர்களுக்கு தெரிவது எப்படி? என்பது எனக்கும் சரி மற்ற நண்பர்களுக்கும் புரிந்ததில்லை. அது மாலை நேரம். ஜெர்ஸகுடா […]

ஜெயமோகனின் இந்தியா : ராஜன் குறையின் “தர்க்க” ரீதியான மறுப்பும் பூச்சாண்டி வேடக் கலைப்பும்

This entry is part 32 of 32 in the series 1 ஜூலை 2012

நண்பர் ராஜன் வழக்கம்போல அவர் பாணியில் நக்கலும் நையாண்டியுமாக ஜெயமோகனுக்கு பதிலெழுதியிருக்கிறார். http://mdmuthukumaraswamy.blogspot.com/அதனை இங்கே காணலாம். அந்த கட்டுரையிலிருந்து சில முக்கியமான பகுதிகளை இந்த கட்டுரையிலேயே மேற்கோள் காட்டுகிறேன். ராஜனின் கட்டுரை முழுவதும் விரக்தி நெடி அடிக்கிறது. தமிழ் “அறிவுஜீவி எழுத்துக்களின் என்னத்த கன்னையா” என்ற பெயரில் அவருக்கு அழியாத இடம் கிடைத்துவிடும் என்று கருதும் அளவுக்கு புலம்பி வைத்திருக்கிறார். இருந்தாலும், அவற்றை அவர் “தர்க்கரீதியான மறுப்பு” என்ற அடைப்பு வேறு கொடுத்துவிட்டதால், பேசிவிடுவோம் என்று நானும் […]

மணமான அந்தப் பெண்களின் பெயரில்…

This entry is part 26 of 32 in the series 1 ஜூலை 2012

  உருது மூலம் – இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி மாலை நான்கு அல்லது நாலரை மணி இருக்கலாம். வாசலில் அழைப்பு மணி அலறியது.  வேலைக்காரன் ஓடிச்சென்று கதவைத் திறந்தவன் கலவரமான முகத்துடன் ஓடிவந்தான். “யார் அது?” “போலீஸ்”.  இந்தத் தெருவில் ஏதாவது ஒரு வீட்டில் களவு போனால் இங்குள்ள எல்லா வீடுகளின்  வேலைக்காரர்களிடம் முதலில் விசாரணை நடக்கும். “போலீஸ்?” என்று எரிச்சலுடன் கேட்டுக் கொண்டே பரபரப்புடன் எழுந்தார்  ஷாஹித். “ஆமாம் […]

துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி

This entry is part 25 of 32 in the series 1 ஜூலை 2012

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் ஏப்ரல் ஒன்றாம் தேதி பிற்பகல்  அண்ட்டல்யாவின் பழைய நகரத்தோடு கழிந்தது. ஒரு தேசத்தைப்போலவே    ஊர் அல்லது நகரத்திற்கும் நெடிய வரலாறுகளுண்டு. இலக்கியம் போன்று பாடல் போன்று இசைபோன்று கடந்த காலத்திய நீங்காத நினைவுகளை மீட்கவென்று ஊரின் ஒரு தோப்போ, குளமோ நகரத்தின் கோபுரமோ, கோட்டை மதிற்சுவரோ காலக் கறையானுக்கு இரையாகமல் நிற்கலாம். இம்மகிழ்ச்சியும், களிப்பும் அந்தி நேரக் காற்றுபோல மனதோடு சலசலப்பவை கல்வெட்டுபோல காலத்தை எதிர்கொள்ளும் எச்சங்கள்  அவை வரலாற்றின் […]

ஏழாம் அறிவு….

This entry is part 19 of 32 in the series 1 ஜூலை 2012

கணினியில் இணையத்தை இணைத்து, திண்ணை இணைய வார இதழுக்குள்  நுழைந்தததும்…கண்கள்  “மஞ்சள் கயிறு” கதையைத் தேடியது. சென்ற வாரம் முழுதும் மனதை ஆக்கிரமித்து வார்த்தை வார்த்தையாக ஊறிப் பிரசிவித்த கதை. எல்லா உடல் வலிகளையும் வீட்டு வேலைகளையும்  உதறித் தள்ளி விட்டு பொறுமையாக கருமமே கண்ணாயினவளாக சுமந்த கதைக்கரு,  ஜம்மென்று  கண்ணாடி அறைக்குள் அமர்ந்து என்னைப் பார்த்துக் கண்ணடித்தது.. மனசுக்குள் ஏதோ ஒரு நிறைவு.  பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி விட்டு முடிவுகளுக்குக் காத்திருந்த மனநிலை பாஸான […]

ஹைக்கூ தடங்கள்

This entry is part 15 of 32 in the series 1 ஜூலை 2012

ஜென் தத்துவம் சார்ந்து எழுந்ததுதான் ஹைக்கூ என்று சொல்கிறார்கள். ஜப்பானியத் துறவிகள் எழுதியவை அவை என்றும் ஒரு வரலாற்றுக் குறிப்பு உண்டு. அவர்கள் இயற்கையை மட்டுமே பாடினார்கள் என்பது, கற்று தெளிந்த உண்மை. ஜென் என்னும் gene (மரபணு) பல கல் தாண்டி, எப்படி தமிழன் உடலுக்குள் புகுந்தது என்பது ஆய்வுக்கான விசயம். இன்னும் சொல்லப் போனால் குருவை மிஞ்சிய சிஷ்யனைப் போல், தமிழ் கவிஞர்கள்தான் இப்போதெல்லாம் ஜப்பானியர்களை விட அதிகம் எழுதுகிறார்கள். இந்த விசயத்தில் ஜப்பானியன் […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-8)

This entry is part 13 of 32 in the series 1 ஜூலை 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com குழந்தைகளுக்குப் பாடிய குழந்தைக் கவிஞர்கள்        குழந்தைகளே நாட்டின் எதிர்காலச் சிற்பிகள். அவர்களால் தான் நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி உள்ளிட்டவை நிர்ணயிக்கப்பட வேண்டும். நல்ல குழந்தைகள் நல்ல வலிமையான நாட்டை உருவாக்குவர். குழந்தைகளை வைத்தே ஒரு நாட்டின் தலையெழுத்து அமைகிறது. ஒரு சமுதாயத்தில் குழந்தைகளை மாற்றிவிட்டால் பின்பு அந்தச் சமுதாயக் கட்டுக்கோப்பே கலகலத்துவிடும். இதனை உணர்ந்துதான் மகாகவியும் மக்கள் கவியும் குழந்தைகளுக்காக எழுதினர். குழந்தைகளின் […]

நினைவுகளின் சுவட்டில் (91)

This entry is part 4 of 32 in the series 1 ஜூலை 2012

நாங்கள் அடுத்து பயணம் சென்றது கல்கத்தாவுக்கு. பஞ்சாட்சரம், மணி, இருவரைத் தவிர எங்களில் வேறு யாரும் பெரிய நகரத்தைப் பார்த்திராதவர்கள். அந்த நாட்களில் அப்படித்தான். எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் தஞ்சாவூர், திருநெல்வேலி, மாயவரம் போன்ற டவுன்கள் தான். வாஸ்தவம். சென்னை என்ற பெரு நகரம்  ஹிராகுட்டுக்கும் எங்கள் அவரவரின் சொந்த கிராமம் அல்லது ஊருக்குமான இடையில் இருந்தது தான். அதைக் கடந்து தான் ஹிராகுட் வந்தோம். ஆனால் யார் சென்னையைக் கண்டது? எக்மோர் ஸ்டேஷன் தெரியும், செண்ட்ரல் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 19

This entry is part 2 of 32 in the series 1 ஜூலை 2012

  ஊறெரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டில் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்   நாட்டுக்காக விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் அதன் எழுச்சியின் வேகம் கூட்டுப் பறவையாக இருந்த பெண்ணை வெளியில் எட்டி பார்க்க வைத்தது. “பெண் விடுதலை” என்ற புதுப்பாட்டும் ஒலிக்க ஆரம்பித்தது. அப்படியென்றால் அவள் வாழ்ந்து வந்தது சிறைக்குள்ளா? வேறு பெயர் வைத்திருக்கலாமோ ? பெண் கல்வி, பெண் சுதந்திரம் என்று ஆரம்பித்தால் இதிகாசமும் இலக்கியமும் வரலாறும் போட்டி போட்டுக் கொண்டு சில நிகழ்வுகளைக் காட்டி […]

எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2

This entry is part 43 of 43 in the series 24 ஜூன் 2012

மரபு பற்றியும், மரபு நமக்குச் சுமையா அல்லது நாம் மரபுக்குச் சுமையா என்பதையும் பற்றி பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது பாரவியின் நீள் கட்டுரை. “மரபு எது? மரபுக்கு பொருள் உண்டா? மரபு தளம் உண்டா? உண்டெனில் அது என்னவாக இருக்கிறது? ” தொடர்ந்து பல கேள்விகளை இதச் சுற்றியே பின்னுகிறார் பாரவி. “இங்கு இன்று நான் எதுவாக இருக்கிறேன். நீ என்னவாக உள்ளாய்? எதன் அர்த்தம்/ பொருள் இயங்கு தளங்களாக நாம் பயணப் படுகிறோம். தேடலின்றியே […]