திண்ணை

வெயில் விளையாடும் களம்
வையவன்

வெயில் விளையாடும்

களத்து மேட்டில்

பதரடிக்கும் போது

தலை காட்டலாமே தவிர

முளைக்கச் சுதந்திரமில்லை

புல்லுக்கு.

இந்நிமிடம் ..
இந்நிமிட குப்பிக்குள்

பழைய நினைவுகளை

புதிய நினைவுகளை

திணிக்க திணிக்க

திமிறி ஓடுகிறது அமைதி..

இந்நிமிட கொள் அளவில்

வைக்க வேண்டியதை மட்டும்

வைத்து எடுக்க எடுக்க -இந்நிமிடம்

அடுத்த ,அதற்கடுத்த நிமிடம் ..

மாற்று நிறங்களின் தறி பாவில்

ஊடு நூலாக – வளைந்து புகுந்து

அமைதியை நெய்ந்து தருகிறது

இந்நிமிடங்கள்…

- சித்ரா (k_chithra@yahoo.com)

”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது
”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது

சற்றுக் கடினம்.

அவர்கள்

நம்மைப் போல் தான் இருப்பார்கள்.

”ஒழுக்கங்கள்” பற்றி

அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

அதனால் தான்

அவர்கள் “ஒழுக்கமானவர்கள்”.

அவர்களுக்கு

ஆண்கள் பெண்கள் ஒழுக்கங்கள் மேல்

அதிக அக்கறை.

அடிப்படையில்

ஆண்கள் பெண்கள்

எலும்புக் கூடுகள்.

எலும்புக் கூடுகள்

ஒழுக்கமானவை.

அப்படியே

ஆண்கள் பெண்கள் ஒழுக்கங்கள்

இருக்க வேண்டும்

இப்படியெல்லாம்

ஒழுக்கங்களுக்கு

அவர்கள் வியாக்கியானம் இருக்கும்.

விளக்கிப் பதில் சொல்ல

வீணாகும்  நேரமென்று

விமர்சனங்களை

அவர்கள் அனுமதிப்பதில்லை

”ஒழுக்கமானவர்கள்”

நம்மைப் போல் தான் இருப்பார்கள்.

அவர்களுக்குக்

கோணல் மாணல்கள் பிடிப்பதில்லை.

அதனால்

கேலிச் சித்திரிப்புக்களை

அவர்கள் விரும்புவதில்லை.

கண்ணாடி முன்னால் கூட

முகத்தைக்

கோணல்மாணல் செய்து

சிரிக்க மாட்டார்கள்.

கண்ணாடி மேல்

அவர்களுக்கு ஒரு பயம்.

கண்ணாடி உடைந்தால்

அவர்கள் உடைந்து போவார்கள்

என்று கலவரப்படுவார்கள்.

உடைந்த சில்லுகளில்

’உண்மைகள்’ வெளிப்பட்டுவிடும்

என்று கவலைப்படுவார்கள்.

”ஒழுக்கமானவர்கள்”

நம்மைப் போல் தான் இருப்பார்கள்.

அவர்கள் எங்கிருந்தாவது

வருவோர் போவோரைக்

கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் கிழித்த கோட்டை மீறிப்

போகும் வழிகள்

பொல்லாத வழிகள் என்று

எச்சரிப்பார்கள்.

பொல்லாத வழிகளில்

மீறிப் போனவர்களின் மிச்சமாய்

வெறுஞ் செருப்புகள் கிடந்த வரலாற்றைச்

சான்றாகக் காட்டுவார்கள்.

’குரல்வளைகள்’

சுதந்திரமாய்ப் பேசுவது

கேட்கும் காதுகளுக்கு ஆபத்து

என்பார்கள்.

மழை இராத்திரி

வயல்தவளைகளின் கூச்சல்கள்

அவர்கள்

மனதிற்குப் பிடித்தவை.

மாறுபட்டுக்

குரல்வளையில் பேசினால்

கொஞ்சம் கை வைப்பார்கள்.

”ஒழுக்கமானவர்கள்” தாம்

குரல்வளைகளை நெறிப்பார்கள்.

எல்லாமே

அமைதியாய் இருக்க வேண்டும்.

அமைதி

அவர்களுக்குப் பிடிக்கும்.

”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது

சற்றுக் கடினம்.

அவர்கள்

நம்மைப் போல் தான் இருப்பார்கள்.

வலைத் தளத்தில்
அன்பு திண்ணை ஆசிரியருக்கும் வாசகருக்கும் வணக்கம்.

திண்ணை இணைய தளத்தில் வெளியான என் படைப்புகளையும் அச்சில் வந்த பிற படைப்புகளையும் tamilwritersathyanandhan.wordpress.com

என்னும் வலைத் தளத்தில் வலையேற்றம் செய்திருக்கிறேன். வாசித்து உற்சாகம் தர வேண்டுகிறேன். நன்றி சத்யானந்தன்.

மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25
28.  “அம்மாவும் ஜெகதீசனும் இடைக்குல பெண்மணி ஜெகதாம்பாள் பாதுகாப்பில் இருக்கிறார்கள்; அவர்களிருவரையும் அதிக நேரம் அந்நியபெண்மணியின் பொறுப்பில் விட்டு வைப்பதும் நல்லதல்ல. இன்னொருமுறை வருகிறேன். சாவகாசமாக உன்னிடம் சம்பாஷிக்க விஷயங்கள் இருக்கின்றன”, எனக்கூறி சித்ராங்கி செண்பகத்திடம் விடைபெற்றாள்.

- இதோ பக்கத்தில்தானே இருக்கிறீர்கள், ஒரு வண்டியை அனுப்பி அழைத்துவர ஏற்பாடு செய்யட்டுமா, என்ற சேடியின் வற்புறுத்தலுக்கு சித்ராங்கி கூறிய சமாதானம் அவளுக்கு நியாயமானதாகத் தோன்றியிருக்குமாவென்கிற அக்கைறையின்றி புறப்பட்டாள்.

வண்டிக்காரன் மாடுகளை இழுத்துப்பிடித்து, நாக்கில் சொடுக்குப்போட்டு ஏர்காலிலிருந்து சித்ராங்கின் இல்லத்தின்முன்னே குதித்தபொழுது சாயங்காலம் ஆகியிருந்தது. குறிசொல்லும் மண்டபத்தில் செண்பகத்தைப் பார்ப்பதற்கு முன்பாக சகலவியாதியையும் குணப்படுத்தும் கமலக்கண்ணியின் முலைப்பால் கையிலிருந்தது. இது தவிர பிரசாதமென்று பக்தர்களுக்கு தானமாக வழங்கிய விபூதி, உதிரிப்பூக்கள், வேப்பிலைக்கொழுந்து ஆகியவையும் மடியிலிருந்தன. வாசற்படியில் கால்வைத்தபோது, வலது திண்ணையில் படுத்திருந்த ஜெகதீசன் எழுந்து உட்கார்ந்தான். ஒரு வாரத்திற்கு முன்பு அம்மா அழைத்துவந்த ஜெகதீசனில்லை. விலா எலும்புகள் தசைக்குள் புதைந்திருந்தன. எண்ணெய் பூசியதுபோல சரீரத்திற்கு மினுமினுப்பு கிடைத்திருந்தது.

-ஹி..ஹி.. ஈறுகள் தெரிய பற்களைக் காட்டி சிரித்தான். கண்களில் மொய்த்த கொசுக்களை ஓட்டக் கைகளில் வலுவிருந்தது. அவனிடம் வலதுகை ஐந்துவிரல்களையும் முத்திரைபிடிப்பதுபோலக் குவித்து:

- சாப்பிட்டாயா? எனக்கேட்டாள்.

- அம்மா!

திரும்பிப் பார்த்தாள், வண்டிக்காரனின் குரல்.

- என்னய்யா?

- நான் புறப்படறேன் அம்மா. தம்பி கார்மேகத்திடம் பேசிக்கொள்கிறேன்

- செய்யுங்கள்- என்றவள் பார்வை மீண்டும் ஜெகதீசனிடம் படிந்தது.

- உங்களிடம் சாப்பீட்டீர்களா என்று கேட்டேன், நீங்கள் பதிலேதும் சொல்லவில்லையே?

அவன் தலையாட்டினான். தாய் மீனாம்பாள் மனதை சித்ராங்கி பிறந்ததிலிருந்து நன்றாகப் படித்தவள். ஜெகதீசன் பட்டினிகிடக்க வேடிக்கை பார்க்கமாட்டாளென்று நன்கு தெரியும். சித்ராங்கியிடம் ஒவ்வொருநாளும், “நாளைக்கு முதல்வேலையாக இப்பைத்தியத்தை வீட்டைவிட்டு துரத்தினால்தான் நமக்கு நிம்மதி”, என்பாள். ஆனால் உணவருந்த உட்காருகிறபொழுது, “ஏண்டி அந்தப் பிள்ளைக்கு ஏதாச்சும் கொடுத்தாயா இல்லையா?” என்ற கேள்வி தவறாமல் வரும்.

அவன் தலையாட்டலில் நிம்மதியுற்றவளாய் நிலைவாசற்படியில் கால் வைக்கிறபொழுதுதான் அவன் வேட்டி அவிழ்ந்து அம்மணமாக இருப்பது தெரிந்தது. திடுக்குற்றவளாய் கையிலிருந்தவற்றை திண்ணையில் வைத்துவிட்டு குறட்டோரமாக வேகமாக நடந்து திண்னையின் மறுகோடிக்குவந்தாள். உட்கார்ந்திருந்தவனை மார்பில் சாய்த்து  வேட்டிமுனையை முடிந்தாள்.

- வந்ததும் வராததுமாக அவனுக்கு சிசுருட்ஷை ஆரம்பித்தாகிவிட்டதா? மீனாம்பாள் குரல்- வாசலுக்கு வெளியே இருந்தாள்.

- உள்ளே போம்மா. எதற்காக ஊதற்காற்றில் நிற்கிறாய்.. உனக்குதான் கபமிருக்கிறதே, வீணாய் உடம்பை ஏன் கெடுத்துக்கொள்கிறாய்.

- ஏதோ என்னைப்பற்றியும் நினைக்கிறாயே சந்தோஷம். இவன் வந்த நாளிலிருந்து என்னை மறந்துபோச்சுதோவென நினைத்தேன். ரங்கநாதர் புண்ணியத்துலே அப்படி எதுவுமில்லை. செண்பகத்தைப் பார்த்தாயாமே?

இவள் கரத்தைப் பற்றிய ஜெகதீசனிடம், ‘பிறகு வந்து உங்களைப் பார்க்கிறேன்’ என்பதுபோல கைஜாடை செய்துவிட்டு அவன் முகபாவத்தை பார்த்தாள். அவன் தலையாட்டலை சம்மதமாக எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். கூடத்தில் பாய்விரித்து மீனாம்பாளும் ஜெகதாம்பாளும் உட்கார்ந்திருந்தார்கள்.  ஐந்தடி தள்ளி கார்மேகம் உட்கார்ந்திருந்தான். சித்ராங்கி இருபெண்மணிகளுக்கிடையில் சம்மணமிட்டு பாயில் உட்கார்ந்தாள்.

- ஏண்டி செண்பகத்தைப் பார்த்தாயாமே? – மீனாம்பாள் மகளிடம் கேட்டாள்.

- அவளைப்பற்றியே மூச்சுவிடாமல் கேட்டுக்கொண்டிருக்கிறாயே? பார்த்தேன். இப்போது என்ன நடக்கணுமெனென்று எதிர்பார்க்கிற. நாங்கள் பட்டினிகிடந்துசாகிறோம். எங்ககிட்ட நீ பார்த்த சேவகத்தை நினைத்து ஏதாச்சும் சகாயம்செய்யென காலில் விழவா?

- சித்தெமுன்னே நன்றாகத்தானே இருந்தாய். அதற்குள்ள குணம் கெட்டுப்போகுமா என்ன? நீ சொல்லவில்¨யென்றாலென்ன கார்மேகம் எல்லா வயணத்தையும் சொன்னான்.

சித்ராங்கி கார்மேகத்தைத் திருப்பிபார்த்தாள். அவன்மீது முதன்முறையாக கோபம் வந்தது. அவனை முறைத்துப் பார்த்தாள். எதையும் தன்னிடம் தெரிவிக்க அவன் கடமைபட்டவன் என்பதுபோல அவள் பார்வை இருந்தது. அவன் மௌனம் சாதித்தான்.

- கிருஷ்ணபுரமே செண்பகத்தின் முந்தானையிலிருக்கிறதென்கிறான் கார்மேகம்.

சித்ராங்கியின் பார்வை மீண்டும் கார்மேகம் திசைக்குத் திரும்பியது. அவன் தலையாட்டினான்.

மீனாம்பாள் தொடர்ந்தாள்:

- சிலமாதங்களுக்கு முன்பாக மலைக்கு ஆட்டை தேடிபோனபோது இராத்திரிவேளையில் செண்பகத்தை காவலர்கள் ராஜகிரிபக்கம் இழுத்துபோனதைக் கண்ணாரகண்டிருக்கிறான். அதற்குப்பிறகு அவள் கமலக்கண்ணியாக அவதாரமெடுத்திருப்பதும் கிருஷ்ணப்ப நாயக்கர் அவள் சொல்லுக்குத் தலையாட்டுவதும் புரியாத மர்மம் என்கிறான். என்ன அழிவுகாலமோ?

- அழிவுகாலமில்லாமலா? மன்னர் மீண்டும்  மஹாமண்டலத்தை எதிர்த்து அரசியல் செய்யப்போகிறாராம். நேற்று குறிகேட்க சென்றிருந்தபோது அருள்வாக்கு கேட்க மன்னர் வந்துபோனதாக பேசிக்கொண்டார்கள்-கார்மேகம் குறுகிட்டான். .

- ஏன் அதனாலென்ன ஆளுகின்றவர்கள் சுதந்திரமாக இருக்கவேண்டுமென்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும் – சித்ராங்கி

- தவறில்லைதான். ஆனால் நம்முடைய பலம் எதிராளியின் பலம் இவருக்கு துணை நிற்கிறவர்களின் பலம் என்றெல்லாம பார்க்க வேண்டுமில்லையா? இவர் பெரிதும் நம்பிகொண்டிருந்த லிங்கம நாயக்கர் கதை என்னவாயிற்றென்று உலகம் அறியுமே.

- அரசர்கள் சாமான்யமானவர்களா? நீ சொல்லும் விடயங்களெல்லாம் அவர்களுக்கும் தெரிந்ததுதானே? பார்க்காமலா இருப்பார்?

- இவர் பார்க்கிறவரில்லையே. இருபது வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது?  இதுபோலவே விஜயநகர அரசாங்கத்தை எதிர்த்தார், தேவையின்றி பலமாதங்கள் சிறையிலிருந்தார். தஞ்சை இரகுநாத நாயக்கர் விஜயநகர பேரசுவிற்கு இஸ்லாமியரின் படையெடுப்பின்போது தமது படையை அனுப்பி உதவினார். அதற்கு கைமாற்றாக தஞ்சை மன்னர் இரகுநாத நாயக்கர் கேட்டுக்கொள்ள விஜயநகரமன்னர் மகாராயர் வெங்கிடபதி நாயக்கர், சிறையிலிருந்து நமது மன்னரை விடுவித்து கைப்பற்றிய நாட்டையும் அவர் வசம் ஒப்புவித்தார். அதற்கு நன்றிக்கடனாக இரகுநாத நாயக்கருக்கு இவர்மகளையும் திருமணம் செய்துவைக்கவேண்டியிருந்தது. மீண்டும் இப்போது விஜயநகர அரசாங்கத்திற்கு திரைசெலுத்த மாட்டேன் என்கிறார். இவர் திரை செலுத்தவில்லையே தவிர, நம்மிடம் தண்டல் செய்வது எவ்வித குறையுமின்றி நடந்தேறுகிறது. போதாததென்று இராத்திரி காலங்களில் மன்னரின் வீரர்களே குதிரையில் வந்து வரபேர் போரபேர்களை அடிச்சு பறிக்கிறதும் நடக்கிறது. மன்னருக்கு நெருக்கமான இருவர் இதைச் செய்கிறார்களென்று வதந்தி. விஜயநகர அரசாங்கமும்  தூதுமேல் தூது அனுப்பி பார்த்துவிட்டார்கள். மகாராயரின் ஒற்றர்கள் ஏற்கனவே நாட்டில் நிலவரத்தை அறிய வந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. எந்நேரமும் விஜய நகரப்படைகள் கிருஷ்ணபுரத்தின் மீது படையெடுக்கலாம் என்பதுதான் நாட்டின் நிலவரம்.

(தொடரும்).

ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு
ரியாத் தமிழ்ச்சங்கத்தின் ஏழாண்டு நிறைவை முன்னிட்டு பாலையில் தமிழ்மாலை

என்னும் விழா கடந்த 11.05.2012 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்தியத் தூதரகத்தின் திட்டப்பணி உதவி தலைவர் (DCM) திரு, மனோகர் ராம்,

மன்னர் சவூத் பல்கலைகழகத்தில் பணியாற்றும் தமிழ் விஞ்ஞானி பேராசிரியர்.

மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்த இவ்விழாவில், இந்தநாள் இனியநாள் புகழ்

பேச்சாளர் கலைமாமணி சுகி.சிவம்,   மனோதத்துவப் பேராசிரியர் முனைவர்

அப்துல்லாஹ் (பெரியோன்தாசன்) ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாளர்களாகப்

பங்கேற்று நகைச்சுவையுடன் நன்னெறிக் கருத்துகளைக் கூறிச்  சிறப்பித்தனர்.

முன்னதாக, மாணவ மாணவியருக்கான வினாடி வினா நிகழ்ச்சியை செயற்குழு

உறுப்பினர் லியோ டெரன்ஸ், சிவா ஆகியோர் சிறப்புற நடத்தினர்.

வினாடி வினாவில் வென்றவர்களுக்கும்  பத்தாம் வகுப்பு, + 2 தேர்வுகளில்

இந்தியப் பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும்  சிறப்புப்

பரிசுகள் வழங்கப்பட்டன,

கவிஞர்கள்  (பஃக்ருத்தீன்) இப்னுஹம்துன், மகேஷ் ஆகியோர் இனிய கவிதை

நடையில் தொகுத்தளித்த இவ்விழாவிற்கு, ரியாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்

எம். வெற்றிவேல் வரவேற்புரையாற்றினார். செயலாளர் அ. அஹமதுஇம்தியாஸ்

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் காலடிச்சுவடுகளை நினைவுறுத்தி

இந்தியத்தூதரகத்தில் தமிழர்நலன் பேணும் அமைப்புதவிக்கு வேண்டுகோள்

விடுத்தார்.  துணைத்தலைவர் ஷாஹுல்ஹமீது, பொருளாளர் ஷேக்தாவூத் ஆகியோர்

முன்னிலை வகிக்க, செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது ஷெரீஃப், விஜயகுமார்,

சிக்கந்தர், ஹைதர் அலி, ஜாஃபர் சாதிக், முஹைதீன் கஸ்ஸாலி, ஜவஹர்

சவரிமுத்து, அலெக்ஸ் ஆகியோர் நல்ல பங்களிப்பு செய்தனர்.

மனோதத்துவப் பேராசிரியர்  முனைவர். அப்துல்லாஹ் பெரியோன் தாசன்

பேசுகையில் திருக்குறளின் அறநெறிக் குறள்களுக்கான விளக்கத்தைச் சொல்லி

அன்பைக் கொண்டே மனத்தை நிரப்ப வேண்டும், பொறாமை என்பது தன்னம்பிக்கைக்

குறைவு, அது அழிவையேத் தரும்  என்பதை சுவையான முறையில் விளக்கிக்

கூறினார்.

கணவன் மனைவி உறவு மேம்பாட்டை வலியுறுத்திப் பேசிய கலைமாமணி சுகி.சிவம்

மனித உறவுகளுக்கிடைப்பட்ட புரிந்துணர்வுப் பிழைகளை களையவேண்டியதன்

தேவையையும், எதுவும் கிடைக்காதவரையே மலை; கிடைத்துவிட்டால் கடுகு என்று

கருதும் மனித மனத்தின் இயல்பினையும் நகைச்சுவையாக விளக்கினார்.

இனியதொரு மாலை நிகழ்வாக, மனம் மணக்க அமைந்த இந்நிகழ்வின் பின்னணியில்

நன்கு உழைத்து, நிகழ்ச்சி சிறக்கப் பாடுபட்ட அஹமது இம்தியாஸ், முஹம்மது

ஷெரீஃப் ஆகியோருக்கு தமிழ்மக்கள் மிகவும் நன்றி தெரிவித்தனர்.

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது
1929  ஜனவரி 30  விபவ வருஷம் தை 17  புதன்கிழமை

பெண்டல்வில் ஜெயில் இருக்கப்பட்ட வீதியில் ஆஸ்டின் கார் மெதுவாக ஊர்ந்து வந்தது.  கென்சிங்டனிலேயே இருக்கப்பட்ட டாக்சி தெலூக்ஸ் கம்பெனிக்கு ஆளனுப்பிச் சொல்லி தெரிசா வரவழைத்தது. டிராமில் வந்திருக்கலாம். கூட்டத்தைக் கண்டால் பயமாக இருக்கிறது. மனுஷர்களைப் பார்த்து உண்டான பயம் இல்லை இது. இடித்துப் பிடித்து வண்டியில் ஏறி, குளிர் காலம் என்ற சாக்கில் மாசக் கணக்கில் குளிக்காமல் உடுப்பு மாற்றாமல் திரிகிறவர்களின் உடம்பு வாடை பற்றிய சங்கடம்.

அரை மணி நேரம் முன்னால் பனி பொழிந்து வெளுத்துக் கிடக்கிற சாலை. பாதி அடைத்து மூடி இருக்கும் கடை வாசல்களுக்கு உள்ளே இருந்து மண்வெட்டிகளும், வாரியல்களும் எடுத்துக் கொண்டு தெருவில் வந்தவர்கள் கட்டித்துப் போன பனியைக் கூடிய மட்டும் விலக்கித் தள்ளித் தெரு ஓரமாகக் குவித்துக் கொண்டிருந்தார்கள். நாலைந்து விடலைகள் ட்வீட் கால்சராய்களும். கண்ணை மறைக்கிற விதத்தில் உசரத் தொப்பிகளும் அணிந்து தெருவோரத்தில் பனிக்கட்டி பொம்மை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தெரிசா சாரட்டில் இருந்து இறங்கியதும் பொம்மை தான் கண்ணில் பட்டது. வெள்ளைக்காரி. முலைகள் குத்திட்டு நிற்க காலை அகட்டி வாவா என்று கூப்பிடுகிற பாவம்.  ஒருத்தன் அந்த பொம்மையின் இடுப்புக்குக் கீழே உள்ளங்கையை நுழைத்துக் குடைந்து கொண்டிருந்ததைப் பார்க்க தெரிசாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. யோனி வைக்கிறானாம் போக்குக் கெட்ட பயல்.

மேடம் மேடம். அங்கஹீனன். உதவி செய்யுங்க.

பிச்சைக்காரன் ஒருத்தன் தொப்பியைக் கையில் பிடித்துக் கொண்டு பின்னாலேயே வந்தான்.

ஹேண்டிகேப் என்றால் கையாவது கண்ணாவது காலாவது பிசகாகி இருக்க வேண்டாமோ? கிழங்கு மாதிரி இருக்கிறியே?

அவன் கையில் பிடித்த தொப்பியைக் காட்டிச் சிரித்தான்.

கேப் இன் ஹேண்ட். ஹேண்டிகேப். சரிதானா மேடம்?

ஒழிந்து போ.

தானும் சிரித்துக் கைப்பையில் இருந்து காசு எடுத்துப் போட்டபடி பெண்டல்வில் சிறைச்சாலை வாசலைக் கடந்தாள் தெரிசா.

உள்ளே நுழைந்ததும் வந்திருக்கவே வேண்டாமே என்ற நினைப்பு முனைப்பாக மேலேறி வந்தது. பீட்டரின் சாவும் இந்த இடத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அவனுடைய சுவாசத்தை நிறுத்திக் கட்டையாக்கிக் கிடத்தியதற்காக கோர்ட் தீர்ப்பு விதித்து இங்கே தான் குற்றம் சாட்டப்பட்டவனை அனுப்பினார்கள்.  தெரிசா இங்கே வந்து அவனைச் சந்தித்த காலைப் பொழுது இப்போது போல பனியோடு இல்லை. நல்ல காற்றும் பூவாடையும் கூடிய வசந்த காலம் அது. பூவும் வாசனையும் கூட மனசில் துன்பத்தை மீண்டும் கிளப்பும் போல.

இந்த ஹால் முடிந்து இடது கைப்பக்கம் நடந்தால் ஜெயில் சூப்பிரண்டண்ட் ஆபீஸ் வரும். ஏதேதோ மறந்து போக, இந்தத் தகவல் ஏனோ இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு வேளை தெரிசா இங்கே வர வேண்டும் என்று உள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறதோ? அவளுக்குத் தெரியவில்லை,

மன்னிக்க வேணும். யாரைப் பார்க்கணும்?

காக்கி உடுப்பு தரித்த இரண்டு பேர் வழி மறித்தது போல் நின்றார்கள்.  இரண்டு பேருமே ஐரீஷ்காரர்களாக இருக்கும் என்று தெரிசாவுக்குத் தோன்றியது. இந்த அளவு நீலக் கண்கள் இங்கிலாந்துக் காரர்களுக்குக் கிடையாது. பல்லும் இத்தனை சுத்தமாக, மஞ்சள்கரை பிடிக்காமல் வெளேரென வெளுத்து இருக்காது.

சூப்பிரண்டண்டை பார்க்கணும்.

அவர் இந்தப் பக்கம் இல்லையே.

இங்கே தானே இருந்தார்?

சின்னக் குழந்தை பிடிவாதம் பிடிக்கிற மாதிரி அவள் சொல்ல ஒரு கான்ஸ்டபிள் மென்மையாகச் சிரித்தான்.

நான் இங்கே வந்து அஞ்சு வருஷமாகிறது. சூப்பிரண்டண்ட் மேல் மாடியில் தான் இருப்பு. படி இந்தப் பக்கம் இருக்கு மேடம்.

அங்கே இருந்தாரே.

அங்கே இப்போ தூக்குமேடைக்குப் போகிற ரெண்டு கைதிகளை வச்சிருக்கு. பார்க்க முடியாது.

கூட இருந்தவன் சொல்லியபடி மாடிப் படியேறினான். ரெண்டு படி முன்னால் போய், வாங்க என்று தெரிசாவைக் கூப்பிட்டான்.

வழி மறித்தவர்கள் யார் என்ன என்ற விவரம் எதுவும் கேட்கவில்லை. தெரிசாவின் தோரணை அவர்களுக்கு சகல சந்தேகத்தையும் போக்கியிருக்கலாம். கழுத்தில் தழையத் தழைய அணிந்த சிலுவை கோர்த்த வெள்ளிச் சங்கிலியும் அங்கங்கே அழுத்தமாக நரை படர்ந்த தலைமுடியும் கண் கண்ணாடியும் அவளுக்கு ஒரு கன்யாஸ்திரியின் தோற்றத்தைக் கொடுத்திருக்கலாம். வெள்ளைப் பாவாடையும்.

அந்த அறை விசாலமாக இருந்தது. நீள விரிந்த மர மேஜையில் ஒரு பூங்கொத்து தவிர வெறுமையாகக் கிடந்தது.  சுவரில் கன்யாஸ்த்ரி புனித ஜோன் ஓஃப் ஆர்க் மாதாவை வைக்கோல் படப்பில் உட்கார்த்தி வைத்து எரிக்கிற ஓவியம் பெரியதாக மாட்டப் பட்டிருந்தது. சுவர் ஓரமாக டெலிபோன் ஒன்றை ஸ்டாண்ட் அடித்துப் பொருத்தி வைத்திருந்தார்கள்.

வாழ்க்கையிலேயே எத்தனை முறை இந்தக் கருவியில் பேசியிருக்கிறோம்? தெரிசா யோசித்துப் பார்த்தால். மிஞ்சினால் நாலு தடவை. எடின்பரோவில் இருந்து மடாலய விஷயமாக கார்டினலோடு இரண்டு நிமிடமும் மூன்று நிமிடமும் பேசியது அதெல்லாம். கையில் வைத்துப் பேச ஒரு குழாயும் காதில் பொருத்திக் கொள்ள இன்னொன்றுமாக இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள சற்றுச் சிரமப்பட வேண்டியிருக்கும். தூரத்தில் இருந்து பல தடவை தேசலாக குரல் கேட்கும். இப்போதெல்லாம் பேக்லைட்டி கன்னங் கறேலென்று பேசவும் கேட்கவும் ஒரே குழாயோடு இது வந்து விட்டது. நாளைக்கு குழாயே இல்லாமல் பேச முடியலாம்.

இந்தியாவுக்குக் கூட இந்த டெலிபோன் வந்துவிட்டதாக கார்டியனில் படித்திருக்கிறாள் தெரிசா. தம்பி வேதையன் வீட்டில் வாங்கி வைத்திருப்பானோ? ஆஸ்டின் கார் போல் இதுவும் மேட்டுக்குடிக்கான சுகபோகமாக இருந்தால்?

யாரோ செருமுகிற சத்தம். தெரிசா திரும்பிப் பார்த்தாள்.

நெடுநெடுவென்று உயரமாக, வயதில் இளையவனாக நுழைந்தவன் ஜெயில் சூப்பிரண்டண்ட் ஆக இருக்க வேண்டும். தேகம் பூஞ்சை என்றாலும் வலிமை கண்ணில் தெரிந்தது. ஆனால் என்ன? கத்தோலிக்கன். இல்லாவிட்டால் ஜோன் ஓஃப் ஆர்க் படத்தை உத்தியோக ஸ்தலத்தில் பிரதானமாக மாட்டி வைத்து பூஜிக்க மாட்டான். நாட்டில் பெரும்பான்மை ப்ராட்டஸ்டண்ட் இருக்கும்போது ஒன்று இரண்டு கத்தோலிக்கர்கள் இப்படி முக்கியமான பதவிகளுக்கு வருவது அபூர்வமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கையில் விரைப்பாகப் பிடித்திருந்த பிரம்பை மேஜையில் உருளாமல் ஜாக்கிரதையாக வைத்து விட்டு, தெரிசாவைப் பார்த்தான். மரியாதை நிமித்தம் சற்றே குனிந்து வந்தனம் செய்தான்.

அம்மா உங்களுக்கு நான் என்ன விதத்தில் உதவி செய்யக் கூடும் என்று சொல்லுங்கள்.

ஐரிஷ்காரன் இல்லை. ஸ்காட்லாந்து. ஸ்காட்லாந்துக் காரர்கள் மரியாதை என்ன விலை என்று கேட்கக் கூடியவர்கள் ஆச்சே. கத்தோலிக்கனாக இருப்பதால் மரியாதையையும் பிரார்த்தனை கிரமத்தையும் கற்றுக் கொடுப்பதோடு, கட்டுச் சாதம் போல் இன்னும் பத்து வருடத்துக்குத் தீராதபடிக்கு மூளையில் அடைத்து அனுப்பியிருப்பார்கள். எடின்பரோ கில்மோர் தெரு கன்யாஸ்திரிகள் போல ஸ்காட்லாந்து முழுக்க மும்முரமாக பல விசுவாசிகளும் செய்கிற காரியம் இது. மிடாக்குடி பிரதேசத்தில் எப்படியோ கிறிஸ்துவமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

எனக்கு. எனக்கு இங்கே.

தெரிசாவுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. இங்கே எதற்கு வந்திருக்கிறாள்? நினைவு வரவில்லை. இது என்ன இடம்? முன்னால் இருப்பது யார்? ஒன்றும் புலப்படவில்லை. கொஞ்சம் உடம்பு தள்ளாடியது.

சூப்பிரண்டண்ட் விரசாக முன்னால் நகர்ந்து ஆதரவாக தெரிசாவின் தோளைப் பற்றி அவளை நாற்காலியில் அமர்த்தினான். தெரிசாவுக்கு ஒரு மகன் இருந்தால் இந்த வயது இருக்கும். இப்படி ஆதரவாகக் கவனித்துக் கொண்டிருப்பான். அவளுக்கு நெஞ்சு கனத்தது.

பீட்டர், தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாயேடா. தன்னந்தனியாக விட்டுவிட்டு பர்லிங்க்டன் கல்லறை வளாகத்தில் உனக்கு என்ன அந்திம விஸ்ரமம் நிம்மதியாகக் கண்ணை மூடி சவப்பெட்டிக்குள் படுத்தபடி வேண்டியிருக்கு? நீ செய்தது அநியாயம் இல்லையா?

பீட்டர் பீட்டர் என்று மெல்ல இரண்டு முறை முனகினாள் தெரிசா.

அம்மா, உடம்பு சுகமில்லாமல் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேணாம் இல்லையா? ஏதாவது தேவையா? கடுதாசி கொடுத்து விட்டிருந்தால் நானே மடாலயத்தில் வந்து பார்த்திருப்பேனே? இங்கே வேணுமானால் இங்கே. எடின்பரோவில் நீங்க ஊழியம் செய்யும் இடத்தில் வேணுமானால் அங்கே.

சட்டென்று திரும்ப எல்லா நினைப்பும் வர, சுறுசுறுப்பானாள் தெரிசா. இந்தப் பையன் யார்? அவளை எப்படித் தெரியும்? போன தடவை அவள் ஜெயிலுக்கு வந்தபோது வேலை பார்த்தவனா? ஊஹும். அப்போது பள்ளிக் கூடத்தில் இல்லையா படித்துக் கொண்டு இருந்திருப்பான்?

நீங்கள்?

தெரிசா தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

எடின்பரோ தான். தோப்புத்தெருவில் என் தாத்தா விடுதி வைத்திருந்தார். நீங்கள் அங்கே வந்து தங்கியபோது பார்த்திருக்கிறேன். எடின்பரோ வந்த சக்கரவர்த்திகளிடம் தாத்தாவுக்காக நிதி உதவி கேட்டுக் கடிதம் கொடுத்தபோது நான் உங்கள் பக்கத்திலே சின்னப் பையனாக வாய் பார்த்துக் கொண்டு நின்றேன். நினைவு இல்லையா?

அவன் சிரித்தபடி கேட்டான்.

நினைவில் இல்லை என்று சொல்ல தெரிசாவுக்கு வருத்தமாக இருந்தது. அவள் வெறுமனே சிரித்தபடி அவன் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தாள்.

செயிண்ட் ஜேம்ஸ் சர்ச்சில் நாலு வருஷம் முந்தி நீங்க பியானோ வகுப்பு எடுத்தபோது என் வீட்டுக்காரி உங்க சிஷ்யை.

அப்படியா? பெயர் என்ன?

தெரிசா பரபரப்பாகக் கேட்டாள். எப்படியாவது இந்தப் பையனோடு சொந்தம் கொண்டாட வேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது.

மூரியல். கொஞ்சம் மெலிந்த பெண். தங்க நிறத்துலே தலைமுடி இருக்கறவள்.

தெரிசா தனக்குத் தெரிந்த தங்க நிறத் தலைமுடிப் பெண்களை எல்லாம் நினைவு படுத்திப் பார்த்தாள். நாற்பது வயதுக்கு மேற்பட்ட, தேவ ஊழியம் பார்க்கிற, சால்வேஷன் ஆர்மியில் சேர்ந்து, அநாதைகளுக்காகப் பழைய துணியும் நிதியும் வாங்க தெருவோரத்தில் டிரம்பெட் ஊதுகிற, பேங்கில் கணக்கு பதிந்து தருகிற ஸ்தூல சரீரமுள்ள பெண்கள். இவன் வயதில் யாரும் மனதில் உடனடியாக வர மாட்டேன் என்கிறார்கள்.

ஆமா, நினைவு வந்துவிட்டது. அவள் டால்ரி தெருதானே.

இவனிடம் பொய் சொல்லக் கூட சந்தோஷமாக இருந்தது. யாருக்கும் எந்த சிரமத்தையும் கொடுக்காத பொய். கூட நாலு கரண்டி சர்க்கரையாக மனசில் பால் பாயசத்தைப் பொங்கி வழிந்து தித்திக்க வைக்கட்டும்.

அவளே தான். நீங்க யாரை மறந்தீங்க, அந்த கீச்சுக் கீச்சுக் குரல் பூனைக்குட்டியை மறக்க?

சூப்பிரண்டெண்ட் பையன் கால் சராய் பாக்கெட்டில் இருந்து தன் பர்ஸை எடுத்து அதில் செருகி வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான். படத்தில் சிரிக்கிற பெண்ணை அவள் பார்த்திருக்கிறாள், பழகியிருக்கிறாள் என்று நம்பத் தயாராக இருந்தாள் அவள்.

பீட்டரை இந்த மாதிரி ஒரு ஃபோட்டோ பிடித்து வைக்காமல் போய்விட்டதற்காக தெரிசாவுக்கு சட்டென்று வருத்தம் எட்டிப் பார்த்தது. தனியாக ஏன்? தெரிசாவும் கூட நின்றபடிக்கு. டெலிபோன் இல்லாவிட்டால் போகட்டும், புது விஷயமாக ஃபோட்டோவாவது அவள் வாழ்க்கையில் எங்கேயாவது மெல்ல நுழைந்திருக்கக் கூடாதா?

பார் நான் ஞாபகம் வச்சிருக்கேன். நீ உன் கல்யாணத்துக்குக் கூப்பிட்டியா? உன் தாத்தா உயிரோடு இருந்தால் கூப்பிடாமல் விட்டிருப்பாரா?

அவள் சூப்பிரண்டெண்ட் பையனை சும்மா சீண்டினாள்.

அம்மா, நாங்க இன்னும் முறைப்படி கல்யாணம் செய்துக்கலே. என்னை ப்ராட்டஸ்டண்ட் ஆகச் சொல்றாங்க.

அதுக்காக.

ஏதோ பேச ஆரம்பித்த தெரிசா கட்டுப்படுத்திக் கொண்டாள். கல்யாணம் இல்லாமல் அவர்கள் சேர்ந்து வாழ்வது அவர்களாக எடுத்த முடிவு. இந்தப் பையன் எதற்காக மாற வேண்டும்? அவன் என்ன தெரிசாவா? நாற்பது வருடம் முந்தி அம்பலப்புழை இந்து பிராமண கன்யகையாக இருந்து கத்தோலிக்க ஸ்திரியாக மாற்றம். அதுக்கு பத்து வருஷம் கழித்து பீட்டரின் பெண்டாட்டியாக, கப்பலில் விதேசியாகப் போகவேண்டி வந்தபோது, கத்தோலிக்கத்தில் இருந்து ப்ராட்டஸ்டண்ட் மதம்.

இதெல்லாம் இல்லாமலேயே இந்த வாழ்க்கை எல்லா மகிழ்ச்சிகளோடும் சோகங்களோடும் ஒழுகிப் போயிருக்காதா?

அம்மா, சூடாக பால் சாப்பிடறீங்களா? ஆர்டர்லியை எடுத்து வரச் சொல்றேன்.

சூப்பிரண்ட் கேட்டபோது சிரிப்போடு வேண்டாம் என்று மறுத்துவிட்டு வந்த காரியத்தைச் சொன்னாள்.

கைதியைப் பார்க்க வேணுமா? ஆயுள் தண்டனை பெற்ற இந்தியனா? இங்கே பெண்ட்வில் ஜெயிலிலா? நான் தானே ஜெயிலர். எனக்குத் தெரியாமல் இந்தியக் கைதியா?

இல்லை, மொரிஷியஸ்காரன் என்று விவரம் இருக்கும். ஒரு பத்து வருடம் முந்தி இங்கேதான் இருந்தான்.

அப்படியா? கொஞ்சம் இருங்க.

அவன் பழைய ரிக்கார்டுகளைக் கொண்டுவரச் சொல்லி ஆர்டர்லியை அனுப்பினான். தூசியைக் கிளப்பிக் கொண்டு ஒரு கட்டு காகிதங்களும் பைண்ட் செய்த நோட்டுப் புத்தகங்களும் அவனுடைய சுத்தமாக மேஜையில் பரந்து கிடந்து இடத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன.

மொரிஷியஸ். சாமி. கென்சிங்க்டன் தெரு பீட்டர் மெக்கன்ஸியை கொலை செய்த குற்றத்துக்காக.

பீட்டர் மெக்கன்ஸி என் கணவன்.

தெரிசா இடைமறித்த போது அவள் குரல் கம்மி இருந்தது.

வருத்தப்படுகிறேன் அம்மா. ரொம்ப வருத்தப்படுகிறேன்.

அந்தப் பையன் கண்களில் சோகம் தெரிந்தது.

பரவாயில்லை. அது நடந்து பத்து வருடம் ஆகியாச்சு. அந்தக் கைதி இப்போ எங்கே.

தெரிசா முடிப்பதற்குள், பழைய ரிக்கார்டில் ஆள்காட்டி விரலால் கோடு மாதிரி கிழித்தபடி சூப்பிரண்டண்ட் உரக்கப் படித்தான்.

சாமி. கைதி எண் முன்னூத்து முப்பத்தெட்டு. நாலு வருட தண்டனைக்கு அப்புறம் மேல் விசாரணை கோரிக்கை ஏற்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்  படாததால் விடுதலை.

சாமி வெளியே போய் கிட்டத்தட்ட நாலு வருடம் கடந்து போச்சு அம்மா.

தெரிசாவுக்குத் திரும்ப மனதில் சந்தேகம் பலமாக எழுந்து வந்தது.

இங்கே எதற்காக வந்தேன்?

வாசல் வரை அவள் கூட நடந்து வழியனுப்ப வந்தான் சூப்பிரண்டண்ட்.

அம்மா, வாரக் கடைசியில் நான் உங்களை என் வீட்டுக்கு அழைத்துப் போக அனுமதி தருவீங்களா? மூரியலும் நானும் உங்களோடு ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுக்க இருக்க வேணும். தயவு செய்து சரி என்று சொல்லணும்.

அவன் தெரிசாவின் கையைப் பற்றியபடி சொன்னான்.

தெரிசா அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தாள்.

மூரியலுக்கு என் ஆசிர்வாதத்தைச் சொல்லு.. நீயும் அவளும் ஆஸ்திரேலியா தேசத்துக்குப் பயணம் போகிறதாக திட்டம் இருந்தால் தெரியப்படுத்து.

அவனுக்கு விளங்கவில்லை.

சனிக்கிழமையன்று நான் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் வச்சிருக்கேன். தேவ ஊழியம் செய்ய அங்கே போய் இருக்கச் சொல்லி திருச்சபை உத்தரவு.

கர்த்தர் உங்களோடு எப்பவும் இருக்கட்டும் அம்மா.

வாசலில் காத்து நின்ற மோட்டார் காரில் அவள் ஏறக் கார்க் கதவைத் திறந்தபடி சொன்னான்.

உன்னோடும் தான். மூரியலை உடனே கல்யாணம் செஞ்சுக்கோ. சரியா?

அவன் தலையசைக்க, வண்டி நகர்ந்தது.

(தொடரும்)

வேழ விரிபூ!
வள்ளி படர்த்திய வெள்வீக்கிழங்கின்

மண்குழி உழற்றும் கொடும்பல் கேழல்

எல்வளை நீள அளைஇ ஒளிக்கும்

எலிகள் தின்ற காய்நெல் பழனம்

பாசடை பைம்புனல் குண்டுநீர் ஆம்பல்

குவித்தன்ன காட்டி விரிகிளர் ஊட்டும்

நீள்விழிக்காடு தீப்பெய்த நீழல்

நடுக்குறூஉம் காட்சி நலன் அழி செய்ய‌

மாவதிர ஓட்டிய மணித்தேர் வெற்ப‌ன்

கடிவிசை வலிப்ப கதழ்பரி மள்ளல்

துள்ளல் கூட்டி ஆறுவடுப்படுத்தி

அலரி ஆட்டிய அந்துணர் உள்ளி

நுண்சிறை வண்டினம் நுவல் இமிழ்தந்து

நுண்சொல் உரைப்ப நுழைபு மெய் விதிர்த்தான்.

வேழ விரிபூ விரியுரை இஃதே.

கடல்நுரைபோல் யான் அலைபடுகின்றேன்.

கண்விழி இருந்தும் க‌ல்ல‌ன் ஆகி

விரைவு ஆற்றாய் அலைவுறும் நெஞ்சு

அறிகில்லையாகி. ஊஊர்பு உருள் தேர் உருட்டி

நோதல் செய்தாய்!பொறிக்கல் நாட!

விரைதி விரைதி வேய்புரைத் தோள!

பாலாவி அன்ன பாம்புரி போர்த்து

பசலை பாய மாயும் மென் றடந்தோள்.

===================================================ருத்ரா

பொழிப்புரை

வ‌ள்ளிக்கொடி ப‌ட‌ர்ந்த‌ நில‌த்தில் வெண்மையான‌ சிறுபூக்க‌ளுட‌ன் கிட‌க்கும்

கிழ‌ங்குக‌ளை ம‌ண்குழி ப‌றித்து வ‌ளைந்த‌ ப‌ற்க‌ளையுடைய‌ காட்டுப்ப‌ன்றி

தின்ப‌த‌னால் ஏற்ப‌ட்ட‌ வ‌ளைகளில் முற்றிய‌ நெல் விளைந்த‌ வ‌ய‌ல்களின்

எலிக‌ள் மேய்ந்து ஒளிக்கும்.ப‌ச்சைஇலைக‌ள் ப‌ட‌ர்ந்த‌ ஆழ்ந்த‌

நீர்த்த‌டாக‌ ஆம்ப‌ல் பூக்க‌ள் குவிவ‌து போல் காட்டி விரிந்து

கிள‌ர்ச்சியை ஊட்டும்.அவை ஆம்ப‌ல்க‌ள் அல்ல‌.அவ‌ள‌து நீள் விழிகளவை!

காத‌ல் நெருப்பின் சுட‌ர்போல் காட்டி  அந்த‌ தீக்குள்ளும் ஒரு த‌ண்ணிழ‌ல்

புதைத்து த‌லைவ‌னை மிக‌ப்பாடாய் ப‌டுத்தி ந‌டுங்க‌ச்செய்து

விடும்.ம‌ணித்தேர் ஒலிக்க‌ குதிரையை பூமி அதிரும் வ‌ண்ண‌ம் ஓட்டி வ‌ரும்

அவ‌ன் க‌டும் விரைவில் வ‌ரும் குதிரையின் குள‌ம்புக‌ளால் வலிமையும்

துள்ளும்பாய்ச்சல்களும் வ‌ழித்த‌ட‌த்தை புண்ணாக்கும்.அப்போது

அக்குதிரையின் த‌லையில் சூட்டிய‌ வெள்ளைப்பூ ஆட்டி ஆட்டி(வேழ‌ம் என்ற

க‌ரும்பின் வெண்பூ)வ‌ருவ‌தில் உதிரும் பூந்தாதுகள் இருப்பதாக (எண்ணி)உண்ண

வரும் சிறு சிறு வ‌ண்டுக‌ள் அதிர்வொலி காட்டும்.அதில் த‌லைவி கூறும்

நுட்ப‌க்குறிப்பு ஏதோ ஒன்று இருப்ப‌தாக‌ த‌லைவ‌ன்

மெய்விதிர்த்துப்போனான்.அந்த‌ “வேழ‌ விரிபூ” விரித்துச்சொல்வ‌து

இதுவே…என் உள்ள‌ம் அந்த‌ வெள்ளையான‌ க‌ட‌ல்நுரைபோல் (வேழ‌ விரி பூ

போல்)பிரிவாற்றாமையால் அலைப‌டுகிற‌து.அதை அறிந்து கொள்ளாத‌வ‌னாக கண்டும்

காணாத கல் நெஞ்சனாக தேரை மெதுவாக‌ ஊரும் வ‌ண்ண‌ம் உருட்டிவ‌ந்து என்னை

வ‌தைக்கிறாயே!ப‌ச்சை ம‌ர‌க்கூட்ட‌ங்க‌ள் புள்ளிக‌ள் போல்

போர்த்திருக்கும் ம‌லை நாட‌!மூங்கில் போல‌ வ‌லிய‌ தோள்க‌ளை

உடைய‌வ‌னே!விரைந்து விரைந்து வா! பாலின் ஆவி போல் ப‌ச‌லை நோய்

(பிரிவுத்துன்ப‌ம்)என்மீது பாம்புச்ச‌ட்டையாய்

போர்த்திக்கொண்டிருக்கிற‌து.அத‌னால் என் அக‌ன்ற‌ இள‌ந்தோள்க‌ளும்

மெலிந்து வாடுமே.(யான் என் செய்வேன்?)

====================================================ருத்ரா

நேர்காணல் இதழ் ஐந்து :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழா
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

இத்துடன் நேர்காணல் இதழ் ஐந்து வெளியீட்டு விழாவும்

ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழாவும்

பற்றிய அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்.

திண்ணை இணைய இதழில் வெளியிட வேண்டுகிறேன்.

அன்புடன்,

அய்யனார்

முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?
(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை  இதோ)

பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன்  2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு , மணல் கொள்ளை என மணல் பிரச்சனையாகத் தொடங்கிய கால கட்டம் அப்போது அவர் காமராஜர் கால கட்டத்தில் வைகை அணைகட்டிய போது நடந்த  விசயங்களை  நினைவு படுத்திப் பேசும் போது, இன்றைய நடைமுறைச் சிக்கல்களையும் இன்று தண்ணீர் மணல் , விவசாயம் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறைகளும் எனக்கு உனக்கு என்று சண்டைகளும் வருவதைக் குறித்துச் சொல்லி “ ”அணையைக் கட்டினார்கள் அடிவயிற்றில் அடித்தார்கள்” என்  தலைப்பிட்டு எழுதிய கட்டுரையை என்னிடம் தந்தார். அது அப்போதைய இணைய இதழ்களில் வெளி வந்தது அதில் சொல்லிய ஒரு வரி இன்று என் நினைவுக்கு வருகின்றது

”அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளின் Ego தான் அணைகள் கட்டப்பட்டன ”.

இதே வசனம் இன்று நிதர்சனமாகி வருகின்றது. கட்டப் படுவதற்கும் உடைக்கப் படுவதற்கும் கூட அதே ஈகோதான் இன்று காரணமாக இருக்கின்றது.கேரள பகுதி மக்களின் பிரதி நிதியாகவோ தமிழக மக்களின் பிரதி நிதியாகவோ இல்லாது  நீர் நலமும் , நில நலமுமாக யோசிக்கின்ற பொது நலவாதிகளோ நாம் நம் இன மக்களுக்கு எதிரானவனாக சித்தரிக்கப் பட்டு விடுவோமோ என்று பயந்து தான் வார்த்தை பேச வேண்டி இருக்கின்றது.அல்லது அப்படியான பொதுநலவாதிகளின் குரல்கள் அமுங்கிப் போய் இனப் பற்றென்பதன் பேரில் இனவெறியை தூண்டிவிடும்  தலைவர்கள் தான் பகுத்தறிவு பாசறையில் பிரகாச வெளிச்சத்தில் இன்று இருக்கின்றார்கள்

இன்று கம்பம் தேனி , என கேரள எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து மக்கள் சகஜ வாழ்வு பாதிக்கப் பட்டு உள்ளனர். தெருவில் இறங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் மனநிலை உருவாகி வருகின்றது  எல்லா விசயத்தையும் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து  கிளை பிரிந்தவர்கள் எல்லாருமே தீர்வு நோக்கி அறிவுத் தளத்தில் செயல்படுவதை விடுத்து    உணர்வுக் கொந்தளிப்பில் ஈடுபடுவதற்கு  வழிகோலுகின்றனர்.தமிழ்நாட்டில்  ஏதோ ஒரு மலையாளியை இதற்கு பலியாக்குவதும், கேரளாவில் தமிழர்களை விரட்டியடிப்பதும், கவன ஈர்ப்புக்காக இனமானத்தோடு இளைஞர்கள் தீக்குளிப்பதும், அதற்கு ஓடிச் சென்று தலைவர்கள் மாலையணிவித்து இறந்தவன் மேலும் தன் மேலும் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொள்வதும் ஒரு நாளும் பிரச்சனைக்குரிய தீர்வாகப் போவதில்லை.

எனக்கு தெரிந்த இலங்கை நண்பர்கள் நமது கேரளாவில் தமிழர்கள் விரட்டியடிக்கப் பட்டர்கள் என்று செய்தி தெரிந்ததும் குறுந்தகவலில் விசாரித்தார்கள். ஏற்கனவே இனவாத பிரச்சனையால் பாதிக்கப் பட்டு  இன்று ஏதிலிகலாக வாழ்பவர்களுக்கு  தமிழனின் சொந்த நாட்டிலுமா இந்த நிலைமை  என்ற கேள்வியும் பயமும் வருவது  சரிதான் ஆனால் அது அதீதமான பயம். அந்த பயம் தமிழர்களிடையே நிலைபெறச் செய்ய இனமான தலைவர்கள்  பாடுபடுகின்றார்கள் . ஒரு நல்ல தலைவன் தம் மக்களை அறிவு  வழியில் நகர்த்த வேண்டுமே அல்லாது  உணர்வு வழியில் திசை திருப்பி விடுதல் சரியில்லை. தலைவனுக்காக தீக்குளிக்க பழக்கிய பகுத்தறிவுக் கட்சிகளால் வளர்ந்த  அரசியல் அபாயகரமானது.

அதேபோல், குழந்தையை காப்பகத்தில் அல்லது விடுதியில் வளர அனுமதித்த பெற்றோர்கள் சிலருக்கு குழந்தை வளர்ப்பு  நம்முடைய பொறுப்பில் இல்லையே என்று எப்பவும் குற்ற உணர்வு இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் அக்குழந்தை வீடு வருகின்ற நேரம் கொடுக்கின்ற கூடுதல் கவனிப்பு  எல்லாவிதத்திலும் கெடுதலாகவே அமையும்

இன்றைய பொது சனமும்  எல்லா நேரமும் குற்ற உணர்வுடனேயே வாழ கடமைப் பட்டுள்ளது

தப்பை சரியா செஞ்சா தப்பில்லை

50 சதவீதம் பொய் தொழிலில் தப்பில்லை

லஞ்சம் தவறு என்று தெரிந்த போதும், கெட்டிக் காரத் தனமாக வேலையை முடித்தேன் என்று பெருமைப் பட்டுக் கொள்ளுதல்

என எல்லா தவறுகளையும் நியாயப் படுத்தி நியாயப் படுத்தி வாழ நேர்ந்த குற்ற உணர்வை  மறைக்க சமூக பொறுப்புள்ளவர்களாக காட்டியாக வேண்டிய மனோநிலைக்கு பொது சனம் தள்ளப் பட்டிருக்கின்றது.

அந்த மாதிரியான போலி சமூகப் பொறுப்புணர்வு இன்று எல்லாரிடத்தும் தலை தூக்கியுள்ளது மிகவும் ஆபத்தானது.

மூன்றாவது மீடியா எனப் படும்பத்திரிக்கை தொலைக் காட்சி கள்

முன்பெல்லாம் ஒரு தொலைக் காட்சி அதில் குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே செய்தி, வெகு சில பத்திரிக்கைகளே மக்கள் அபிமானத்தோடு உலா வந்தன

இன்று ஏகப் பட்ட தொலைக் காட்சி நிறுவனங்கள்,  எல்லா நேரமும் செய்தி வாசித்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயங்கள் இதில் டி ஆர் பி ரேட்டிங் வெறு.

எதையாவது கொடுத்து  தன் பத்திரிக்கையை வாங்கச் செய்யவேண்டிய கட்டாயத்தில் பத்திரிக்கைகள்

எல்லாருக்கும் யார் செய்திகளை முந்தித் தருவது என்ற போட்டியில்  செய்திகள் பல உருவாக்கப் படுகின்றது. சில ஊதிப் பெரிதாக்கப் படுகின்றன ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் போட்டது அந்தக் காலம்.ஒன்றுமே இல்லாததை நாளெல்லாம் பேசியே பிரச்சனை இருப்பது போலத் தோற்றம் தந்து , பின்னர் பிரச்சனையாக்கி, பிறகு தான் ஓய்கின்றார்கள்

அணைஉடையப் போகின்றது என்று கேரளாவில் ஓயாது கத்திப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் மீடியாக்களும், தமிழன் தவிச்ச வாய்க்கு தண்ணீர்  இல்லாது  அலையப் போகின்றான்  இன்னொரு இலங்கை இங்கே உருவாகப் போகின்றது எனக் கதறும் தமிழ் செய்தி நிறுவனங்களும்

பாவம்,” இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்”

உணர்வு கொந்தளிப்பு , தன் முனைப் படுத்தல், போலி சமூக பொறுப்புணர்வு இவை தமிழக மக்களை மட்டுமல்ல, கேரள மக்களையும்தான் தீர்வுகளை விட்டு விரட்டி  விடுகின்றது. இவையெல்லாம் மட்டுப் பட மட்டுப் பட. அறிவு பூர்வமான மக்கள் வாழ வழி செய்யும் முடிவுகள் தானே எடுக்கப் படும் . இனப் பற்று வெறியாக மாறாமலிருப்பது எல்லாருக்குமே நல்லது