வஞ்சிக்கப்பட்ட வழக்கு வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை – பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’

This entry is part 15 of 41 in the series 13 மே 2012

(இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’ திரைப்படத்தை முன் வைத்து)
சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘காதல்’ என்னும் வெற்றிப் படமொன்றைத் தந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ’வழக்கு எண் 18/9’. இன்றைய சூழலில், ஒரு குற்றப் பின்னணி எவ்விதம் வழக்காக மாறி, சட்டத்தின் பாதையில் பயணித்து, தீர்ப்பாய் மாறுகிறது என்பது கதை. அதனினும் முக்கியமானது, அதனால் நிகழும் எதிர்வினை. எந்த எதிர்வினையின் தீவிரமும், அதற்கான காரணத்தின் தீவிரத்தைப் பொருத்தே அமையும்.எதிவினைக்கான நியாயங்கள், எதிர்வினைகளுக்கான நியாயங்களே.இயல்பான அல்லது சட்டரீதியான நியாயங்களுக்குள் அடங்குவதில்லை.

ஒவ்வொரு கலைஞனுக்கும், ஒவ்வோர் இடம் பலம். பாலாஜி சக்திவேல், உச்சத்தில் எப்போதும் உச்சத்தில் இருப்பவர். ‘காதல்’ திரைப்படத்தைப் போலவே, இப்படத்திலும் நிரூபித்திருக்கிறார்.அதை நிகழ்த்துவதற்காக அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக்களம் மிகவும் யதார்த்தமானது.அதேசமயம், கதைசொன்ன விதம் புதுமையானது.
தந்தை வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தத்தில், வட இந்திய முறுக்கு கம்பனியில் வேலைக்கு சேர்கிறான்.கொடூரமான சூழலில்அடிமை போல் துயருற்று கடனை அடைக்க, அவனின் தாய் தந்தையின் மரணம் அடைந்த செய்தி கூட மறைக்கப்பட ,அறிய வரும் போது எண்ணெய் சட்டியாய் கொதிப்புற்று, தப்பி வருகிறான்.அவன் ஊரை விட்டு செல்லும்போது ‘படிப்போம் பயன் பெறுவோ’ என்னும் சுவர் வாசகப் பின்புலம், இன்னும் கொள்கைகள் வெற்று கோஷங்களாக நீர்த்து போனதின் அடையாளம்.

சென்னைத் தெருவொன்றில் மயக்கமுற்று விழும் அவனுக்கு யாரும் உதவ முன்வராத வேளையில், விலைமாது ஒருவர் உதவி செய்து, சாலையோரக் கடையொன்றில் சேர்த்து விடுகிறார்.எந்த விலைமாதுவை இந்தச் சமூகம் விலக்கி வைக்கிறதோ, அவரிடத்தில் தான் விலைமதிப்பில்லா சகமனித நேயம் இருக்கிறது. இத்தகைய அரிய முரண்களால் தான் இந்தச் சமூகம் இன்னும் உயிர்த்திருக்கிறது.
அவனின் கடையைக் கடந்து, தினமும் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்மீது ஏற்படும் காதல், ஏழ்மையின் விளிம்பில் தத்தளிக்கும் மனத்தின் மத்தாப்புக் காதல்.
கதாநாயகியின், புகைப்படம் அவனின் மணிப்பர்ஸில் இடம்பெறுவதற்கான, பின்னோக்கிய புனைவுதான் உடன் வேலை செய்யும் சிறுவனின் கூத்து பற்றிய புலமும், சினிமா ஆர்வத்தில் புகைப்படம் எடுக்கும் காட்சியும். எனினும் அச்சிறுவன் அதற்கு பாந்தமாக பொருந்துகிறான்.
நண்பன் பொய் சொல்ல மாட்டான், எனவே அவன் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அவன் பொய் சொல்கிறானாம். சிறுவர்கள் சில வேளைகளில் இதுபோல முதிர் விஷயங்களால் உருவகிக்கப்படும் போது மெல்லிய சிலிர்ப்பு உண்டாகி விடுகிறது.
நாயகி வேலை செய்யும் வீட்டுப் பெண்ணின் காதலன், அவளை செல்போனில் படம் எடுப்பதும் அதைத் தொடரும் பிரச்சனையில், அவளின் மீது ஆசிட் வீச்ச முயற்சிக்க எதிபாராத விதமாக நாயகி சிக்கிக் கொள்கிறாள். கணிணியும் செல்போனும் அறிவியலின் மேன்மையெனக் கருத நேரும் அதேசமயம், விரல் நுனியில் இருக்கும் விபரீதம் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
இந்த வழக்கு தான் ‘வழக்கு எண் 18/9’ ஆக பதிவு செய்யப்படுகிறது. அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி. நல்லவரைப் பார்த்திருக்கிறோம். கெட்டவரைப் பார்த்திருக்கிறோம். நல்லவரைப்போல நடிக்கும் கெட்டவரைப் பார்த்திருக்கிறோம். நல்லவராகவே அடையாளப்படும் கெட்டவராக இருக்கிறார் இவர். இவரிடம் இத்தனை வன்மமா? ஆபத்து. (சபாஷ் இன்ஸ்பெக்டர்).
யார் ஆசிட் ஊற்றியது என்னும் துப்பறியும் வேலைக்குள் இயக்குனர் செல்லவில்லை; அது அவருக்கு அவசியமாகவும் படவில்லை. ஏனெனில், அது வெளிப்படை. அந்த வெளிப்படை தான் வழக்கின் திசைமாறும் போக்கை வலிமையாக்குகிறது; கோபமூட்டுகிறது.
தான் காதலிக்கும், தன்னைக் காதலிக்காத (அது வரை) பெண்ணுக்காக ஏழு ஆண்டு சிறைத்தண்டனை ஏற்கிறான். அது தான் காதல். உள்ளெழும் காதல்.
கண்களில் பூக்கும் காதல் கரைந்து விடுகிறது.
நெஞ்சினில் பூக்கும் காதல் தான் இப்படி நிமிர்ந்து நிற்கிறது.
’கேவலம் பத்து லட்ச ரூபாய்க்காக, தப்பு செஞ்சவன விட்டுட்டு அப்பவிய ஜெயிலுக்கு அனுபினேல்ல. இவுங்களால் என்ன செய்ய முடியும்? கேவலம் வேலக்காரி தான அப்படிங்கிற நெனப்பு, ‘ என்பதாக ஒரு தாளில் எழுதிக் கொடுத்து, அதை இன்ஸ்பெக்டர் வாசித்து முடிக்க, கோர்ட் வாசலிலேயே, நாயகி அவரின் முகத்தில் ஆசிட் வீசுகிறாள்.
முடியும், எங்களாலும் முடியும்.
அவளின் எதிர்வினை சட்டப்படி குற்றம். தண்டனை பெற்று சிறைக்குச் செல்கிறாள். ஆனால், அந்த எதிர் வினைக்கான காரணம் ஆராயப்பட வேண்டியவர்களால் ஆராயப்படுகிறதா? அதுதான் பார்வையாளனின் நெஞ்சங்களை அலைக்கழிக்கிறது. காரணம், ’வழக்கு எண்18/9’ மட்டுமல்ல; அதேபோல வஞ்சிக்கப்பட்ட வழக்குகள் எத்தனை இருக்கக் கூடும் என்கிற அச்சமும் தான்.
யார் சொன்னது?
காத்திரமான, யதார்த்தமான படங்களை ரசிகர்கள் வரவேற்பதில்லையென்று. கரகோஷமிட்டு வரவேற்கிறார்கள்.
நல்ல படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் லிங்குசாமி, படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல்-தமிழ் உலகின் நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.
-தமிழ்மணவாளன்

Series Navigationகுகைமனிதனும் கோடிரூபாயும் நூல்வைதீஸ்வரன் வலைப்பூ
author

தமிழ்மணவாளன்

Similar Posts

8 Comments

  1. Avatar
    Kavya says:

    இருவர் இப்படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் எதில் என் பின்னூட்டத்தைப்போடவேண்டுமெனத் தெரியவில்லை. ஏதாகினும் ஒன்று எனற அடிப்படையில் இங்கு போடுகிறேன். நான் ஏறகனவே திண்ணைக்கு ஒரு கட்டுரை அனுப்பியிருக்கிறேன். அது விமர்சன‌மன்று. இப்படத்தைப்பார்த்து விட்டு வந்தவுடன் என்னுள் எழுந்த எண்ணங்கள். ஆனால் அது இவவ்வார திண்ணையிதழில் வரவில்லை.

    இப்படத்தின் மையக்கருத்து எனக்குப்பிடிக்கவில்லை. வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பது மூளைச்சோம்பேறித்தனமாகும். எவருமே அதைச்சொல்லிவிடலாம். பிறகு என்னதான் தீர்வு என்பதைச் சொல்வதிலேதான் – கிட்டத்தட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் – ஒரு படைப்பாளியின் திறன் வெளியாகிறது. பாலாஜி சகதிவேலுக்கு அப்படிச்செய்ய வேண்டுமெனத் தோனற்வில்லை.

    விளிம்புநிலை மனிதர்கள் என்றெல்லாம் எழுதுகிறார்கள். அப்படியெல்லாம் மனிதர்கள் ஆவதற்கு சமூகம் முழுவதும் பூஜவா ஆக் மாறினால்தான் சாத்தியம். கட்டுரையோ விமர்சனமோ எழுதுபவர்கள் எல்லாரும் தங்களைப்பூஜவாக்கள் என்று எகத்தாளாமாக நினைத்துக்கொண்டு படத்தில் வரும் கதாமாந்தர்களைபபார்த்துப் பச்சாபித்து எழுதுகிறார்கள். என்னால் முடியாது. அம்மாந்தர்களில் பலர் எனக்குச்சொந்தக்காரர்களாக இருக்கும் போது அவர்கள் வேறு நான் வேறா? அப்படியே நானிருந்தாலும் கதாமாந்ந்தர்கள் செய்வதும், இயக்கிய்வர் நாம் என்ன எடுத்துக்கொள்ளவேண்டுமென்பதும் எனக்குப்பிடிக்காதவை.

    இய்க்கியவர் என்ன சொல்ல்வருகிறார்? கீழ்த்தட்டு நபர்கள் கடும் உழைப்பாளிகள். நீதியும் நேர்மையும் நிறைந்தவர்கள். அவர்கள் பாவம். சுரண்டப்படுகிறார்கள். மேல்தட்டு நபர்கள் மோசமானவர்கள். அவர்கள் குழந்தைகளுக்கு பண்பு என்பதே தெரியாது. மேல்தட்டு வர்க்கம் உண்டு உறங்கி கண்டு களித்து கொழுப்பேறி மட்டுமே வாழ்கிறது.

    சுருக்கினால், இவர்கள் நல்லவர்கள் – அவர்கள் கெட்டவர்கள். என்பதாகும். இம்மாதிரி கருத்துககள் நிறைந்த படங்கள் இரு சாராருக்குமிடையில் பகையைத்தான் உருவாககும். ஒருவர் இல்லாமல் இன்னொருவா வாழ்முடியாது என்பதுதான் உணமை. அபார்ட்மென்டில் வேலைசெய்ய ஆட்கள். கேட்டைப்பார்க்க வாட்ச்மென், கார்களை ஓட்ட டிரைவர், பால்புட்டி, நாளிதழ் கள் போட பையன்கள், பிள்ளைகளை பள்ளிக்குச்சென்றுவிட, கவனிக்க என்றும் பலவகை ஆட்கள் – இவர்களெல்லாம் மேல்தட்டு வர்க்கத்தினருக்குத் தேவை. அத்தேவையை வைத்தே கீழ்ததட்டு வர்க்கம் வேலவாய்ப்புக்களைப்பெற்று வாழ்கிறது. சுரண்டல் ஆங்காங்கே இருக்கலாம். ஆனால் அது வேறு சப்ஜக்ட்.

    படம் நமக்குத் தவறான வழியைக்காட்டுகிறது. இதைப்பார்த்து விட்டு சென்னை பெரும்பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் எல்லாம் சீக்கிரம் வழுக்கிவிடுவார்கள். மாணாக்கர்களெல்லாம் குடி. போதை, காமமென 10ம் கிளாஸிலேயே ஆகிவிடுவார்கள் என்ற் பிம்பம் கண்டிப்பாக ஏற்படும். அய்யோ பாவம். அவர்கள் தலைகள் மேல் பழி விழுகிற்து. அவர்கள் இப்படத்தைப்பார்க்காமலிருக்க் இறைவன் அருள்புரிவாராக!

    ஒன்றை வாழவைக்க இன்னொன்றைப் பழிப்பதா? கிட்டத்தட்ட கொற்றவன் குடி உமாபதி சிவம் செய்த மாதிரி: பெரியபுராணத்தைப்புகழ சீவக சிந்தாமணியைப்பழித்தால் தான் முடியும் என்பதைப்போல.

    சொல்லுங்கள் எவராவது: ரோசியின் கிளையண்ட ஆர்? ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம்போடும் தொழிலதிபதரா? இல்லை துண்டுப்பீடி ரிகசாக்காரனா? விடலிப்பயனா? மேட்டுக்குடி ரோசியிடம் போகாது. சினிமா நடிகையைத்தான் தேடும். ஆக், இரண்டுமே மோசம் தத்தம் வழிகளிலே.

  2. Avatar
    Kavya says:

    அவளின் எதிர்வினை சட்டப்படி குற்றம். தண்டனை பெற்று சிறைக்குச் செல்கிறாள். ஆனால், அந்த எதிர் வினைக்கான காரணம் ஆராயப்பட வேண்டியவர்களால் ஆராயப்படுகிறதா? அதுதான் பார்வையாளனின் நெஞ்சங்களை அலைக்கழிக்கிறது. காரணம், ’வழக்கு எண்18/9’ மட்டுமல்ல; அதேபோல வஞ்சிக்கப்பட்ட வழக்குகள் எத்தனை இருக்கக் கூடும் என்கிற அச்சமும் தான்.

    சினிமா ஒரு கலையும் கூட. இலக்கியம் எழுத்துவடிவம். சினிமா அதே இலக்கியத்தை செல்லுலாயிடில் காட்டுவது. இலக்கியகர்த்தா பிர்ச்சாரம் பண்ணக்கூடாது. சொல்வதை அழகாகச்சொல்லி, அல்லது சொல்லவிரும்பும் வண்ணம் சொல்லி, முடிவுகளை வாசகனே தீர்மானிக்கசசெய்பவனே மாபெரும் கலைஞன். முடிவை ஆராயுந்து சொல்லவது இலக்கியத்தின் வேலையன்று. ஆராயப்பட்டால் அது டாகுமென்ட்ரி. எனவே பாலாஜி சக்திவேல அப்படியே விட்டதுதுதான் சரி.

    அதேபோல வஞ்சிக்கப்பட்ட வழ்க்குகள் எத்தனை இருக்க்க்கூடும் என்ற அச்சத்தினை – நிறைய விமர்சனங்கள் இந்த அச்சத்தை வெளிப்படுத்தியதப்படித்தேன் – பாரப்பவரின் நெஞ்சங்களில் கனலாக கொழுந்துவிட்டு எரியச்செய்ததே இப்படத்தின் வெற்றி.

  3. Avatar
    Kavya says:

    எங்கு படித்தேன் என்று தெரிய்வில்லை. அவன் கடைசியில் அப்பெண்ணை மணம் செய்துகொள்வேன் என்று சொன்னதை ஆரவாரமாக காதலில் வெற்றியென்று எழுதியிருக்கிறார்கள்.

    தவறு. காதலில் வெற்றி கலியாணம் என்ற ஆர் சொன்னது? காதல் எதற்கு? மணத்திற்காக என்றால் அஃது ஒரு முன்முடிபோடு செய்யப்படும் செயல். அச்செயல் காதலாகாது.

    ஒரு அவலட்சமாக்கப்பட்ட பெண்ணை மணந்து விட்டால் அது தியாகம். அப்படிப்பட்ட தியாகம் ஒரு போலியாகும். அது காதலன்று. கலியாணம் பண்ணுவது குழந்தைகள் பெற்று வாழ்வதற்காக. காதலித்தல் கலியாணத்தில் மட்டுமே முடியவேண்டுமென்பது இல்லை.

    விரும்பி காமுற்று புணர்ந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வர். அஃதை எவருடனும் செய்யமுடியாது. விபச்சாரியிடனோ அல்லது விபச்சாரனுடனோ செய்யலாம். சிலர் கஸ்டமர்களிடமே குழந்தை பெற்று வளர்த்து தொழிலை பிறரிடம் தொடர்வார்கள். ‘தாசி’ என்ற அவார்டு வாங்கிய தெலுங்கு படத்தில் வரும் காட்சிகளில் ஒன்று: குழந்தையை அழிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்க அப்படி அழிப்பதுதுதான் நமக்கு விதிக்கப்பட்ட தர்மமாகும் என்று முதிய தாசிகள் புதிய தாசிக்கு (அர்ச்சனா) அறிவுரை பகர்வர். தாய்மையென்பது அவளுக்குமுண்டு; அந்தோ அவளுக்குக்கிடைக்கவொண்ணாதபடி அவளின் வாழ்க்கைவிதிகள் தடுக்கின்றன என்பது இயக்குனார் காட்டுவது.

    ஓரளவு பார்க்கும்படி ஆள் வேண்டும் விரும்ப, காமுற, மற்றும் புணர‌. இங்கு ஒரு யுவனுக்கும் யுவதிக்கும் நேரும் தொடர்பால் ஏற்படும் காதலுக்கும் காமுற்று குழந்தைகள் பெற்று குடும்பம் நடாத்தும் இருவருக்குமிடையில் நேரும் தொடர்புக்கும் சம்பந்தமில்லை.

    ஆயினும் பார்ப்ப்வர்களைத்திருப்தி படுத்த, அல்லது நான் சொன்ன சென்டிமென்டல் வியாபாரம் பண்ணி படத்தைக் காசாக்க, சக்திவேலில் சராசரி யுக்திதான் அவன் அவளை உன்னையே மணம் முடிப்பேன் என்று சொன்னது.
    மலரினும் மெல்லியது காதல். அதை பிச்சுப்பிடுங்காதீர்கள் ஆன்-பெண் உறவில் ஒரு தெய்வ நிலையே அஃது என்ப்தால அதைப்பாவனையாக உணர்ந்து வெற்றிகண்டவர்கள் நம் ஆழ்வார்கள். (ந்ம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ம்ற்றும் ஆண்டாள்)

  4. Avatar
    Kavya says:

    சக்திவேலுக்கு ஒரோ ஒரு சபாஷ் மட்டும் போடுவேன். அஃதாவது அந்தப்போலிசதிகாரியின் உள்ளக்கிடைக்கையை இறுதிவரை வெளிக்காட்டாமல் நம்மை வேறுமாதிரி முடிவுசெய்யவைத்து கடைசியில் காட்டுவது. கிட்டத்தட்ட அகஸ்தா கிருட்டியின் நாவலைப்போல.

  5. Avatar
    punai peyaril says:

    அந்த பக்கம் காவ்யா என்ற பெயரில் செண்டிமெண்ட் வியாபாரம் என்று இந்த படம் பற்றி தாக்கு, இந்த பக்கம் பாராட்டு..? ஏன் ஸ்கிஷோப்ரினியா பாதிப்பில் உள்ளீரா…?

    1. Avatar
      Kavya says:

      நான் தமிழ் சினிமாவின் சென்டிமென்ட் வியாபாரம் என்றெழுதியது இப்போது வெளியாகும் பலபடங்களை வைத்தும் இந்தப்படத்தை வைத்தும் எழுதியது.

      தமிழர்கள் அதீத உணர்ச்சிகளை அள்ளிக்கொட்டுவர் எனப்து அவர்களில் கலாச்சாரத்திலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிலையிலும் காணபபடுவது. மாபெரும் நடிகன் மரணித்தபோது தலைவிரி கோலமாக மாரடித்தழும் கலாச்சாரத்தை தமிழர்கள் உயர்வாக நினைக்கிறார்கள். எங்கும் உணர்ச்சிகள் கரைபுரண்டோடுகின்றன. இத்தகையப்போக்கை சினிமா நடிகன், அரசியல்வாதி, பிச்சையெடுப்போர் பயன்ப்டுத்துகிறார்கள். அதாவது சுரண்டிப்பிழைக்கிறார்கள். குருடர்கள் சோக திரைப்படப்பாடல்களை ஒலிபெருக்கிகள் வைத்துபபாடி மக்களின் மனங்களைக்கரைய வைத்து பிச்சையெடுக்கிறார்கள். அதாவது உணர்ச்சிகளைச்ச் சுரண்டுகிறார்கள். பேருந்து நிற்குமிடங்களில் ஒருவர் வந்து துண்டுப்பிரசுரம் விநியோகிப்பார். அவரின் சோகக்கதை (பொய்யானதுதான்) எழுத்ப்பட்டிருக்கும். பின்னர் அப்பிர்சுரங்களை எடுத்துக்கொள்ளும்போது அவருக்குப் பிச்சை கிடைக்கும். இப்படியாக எங்கு பார்த்தாலும் எவராவது சுரண்டுகிறார்கள். அதையே சினிவாவின் வெற்றிக்காக புது உத்தியாககண்டு வெற்றிய்டைந்து வருகிறார்கள் சக்திவேலில் வெற்றி தமிழர்களின் உணர்ச்சிச்சுரண்டலே. இவ்வுத்தி ஒரு பார்முலாக கொஞ்சம் நாள் வரும்.

      வழக்கு எண படத்தைப்பார்த்து வெளிவருவோர் தலையைத்தொங்கபோட்டுக்கொண்டே வருகிறார்கள். உணர்ச்சிகளில் மூழ்கிய்வர்கள் இன்னும் வெளியேவரவில்லையாம் ! அடடே !!

      நான் இடைவேளையில் போது காட்டப்பட்ட பில்லா 2ன் ட்ரெயிலரை நினத்துக்கொண்டு சந்தோஷமாக வெளியே வந்தேன். எப்போது அஜித்தின் படம் வெளிவரும் என்று என் அண்ணன்மகனிடம் கேட்டேன். அவன் சீக்கரம். என்றான். அப்படம் சீக்கிரம் வந்து இந்த் சக்திவேலகள்களிடமிருந்து தமிழர்கள் தப்பிப்பார்கள் என்பது என் கருத்து.

      இவனெல்லாம் ஒரு மனுசனா? என்று பார்த்த்வர்கள் யோசித்திருப்பார்கள். ஈவு இரக்கமேயில்லையே !! நீங்களும்தான்!! Rn’t u?

  6. Avatar
    smitha says:

    Kavya,

    The director has not portrayed the upper class coummunity entirely as black. Take the rich girl for instance. She is aghast when she discovers while sitting in the car that her friend has taken pictures of her in his mobile. She deletes them & rejects him after that.

    Also, she goes & complains about him to the police.

    Not all the lower strata of the society are portrayed as evil. The watchman of the apartment for instance. He takes money from the boy & drives out the hero from the house & warns the heroine.

  7. Avatar
    Kavya says:

    There s a subtle point u may know: A film gives a general impression which a watcher carries home. That general impression is questioned here.

    As for your selective examples, I find them too weak to undo the damage of the general impression: that the upper classes have loose moral values.

    I don’t want to continue in English as I fear the editor. He is partial to u, so you hold forth in your English.

    போனவாண்டு ஒரு பரப்ரப்பான சம்பவம் தென்மாவட்ட பள்ளியொன்றில் நடந்தது. த்மிழகமே அதிர்ந்தது. பள்ளியில் கழிப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவியொருத்தி குழந்தை ஈன்றாள் எவருக்கும் தெரியாமல். எவனோ ஒருவனால் அவள் கருவுற்றதை மறைத்து பள்ளிக்கு வந்துகொண்டிருந்தாள். அப்பள்ளி அரசுப்பள்ளி. அவள் ஒரு வறுமைக்கோட்டுக்கு அடியில் வாழும் வர்க்கத்தவள். காமம், காதல், கள்ளக்காதல், கொலை, திருடடு, ஏமாற்று, பித்தலாட்டம் என இரு வர்க்கங்களும் உழன்று வாழ்கின்றன. ஆனால் படத்தின் மையக்கருத்து ஒரு வர்க்கத்தை கறுப்பாக எண்ன முனைகிறது. அது மேம்போக்கோ அடிப்போக்கோ என்றில்லை. போக்கு போக்குத்தான்..

    அபபெண் மொபைலைப்பார்க்கிறாள்; அதிர்ச்சியடைகிறாள்; அழிக்கிறாள்; பின்னர் போலீசிடன் செல்கிறாள். எனவே அவளுக்கு தன்னைக்காப்பாற்றிக்கொள்ளும் உணர்ச்சிகளுண்டு என்று காட்டுகிறார். அஃது எல்லா வர்க்கப்பெண்களுக்குமுண்டு. ஒரு விபச்சாரியை நீங்கள் அவளுக்குத்தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது. அவளுடன் படுக்கையைபகிர்ந்தாலும் அவளுக்குத்தெரியாமல் அவள் உடலைப்படம் எடுக்கமுடியாது. பின்னர் தெரிந்தால் அவளும் இம்மேட்டுக்குடி பெண் செய்ததையையே செய்வாள்; போலீசுக்கு மட்டும் போகமாட்டாள். போலிசு அவளுக்கு நீதி வழங்காமல் அவளை அவமானப்படுத்த மட்டுமே செய்யும். நீயே உடலை விற்றுப்பிழைப்பவள்; உனக்கென்ன மானவுணர்வு என்றுதான் கேட்கும். இம்மேட்டுக்குடிப்பெண்ணைககேட்காது இல்லையா? தேவநாதனிடம் உறவுகொண்டவர்களுள் விபச்ச்சாரப்பெண்களுமுண்டு. இப்போது போலீசு அதைச்செய்ததும் தவறு என்றுதான் வழக்கு. ஏனெனில் இது வெளியில் தெரிந்ததால். இல்லாமலிருந்தால் போலீசு சட்டைபண்ணியிருக்காது.

    அது கிடக்க. இச்செயலகளுக்கு முன் அம்மேட்டுக்குடிப்பெண் என்ன செய்தாள்? வெகு இலகுவாக அவளை நம்பினாள். வெகு இலகுவாக அவனை வீட்டுக்குள் விட்டாள். அவன் ஒரு சிறிய வகுப்பில் படிக்கும் மாணவள் அன்று. ‘அக்கா எனக்குக் கொஞ்சம் சொல்லித்தாங்க’ என்று வந்தால் இவள் சொல்லிக்கொடுத்தால் சரி. ஆனால் அவன் பெரிய வகுப்பு மாணவன். அதன் பிறகு அவன் கூப்பிட்ட இடத்துக்கு எல்லாம் போனாள். அவளிடம் பெற்றோருக்குத்தெரியாமல் மொபைலில் உரையாடினாள். அவனின் இரவுக்கேளிக்கை பார்ட்டிக்குப் போகத்துடித்தாள். அஃதாவ்து அவன் செடக்ஸனில் வெகு இலகுவாக தானே போய் விழுந்தாள். ஒழுக்கமாக வளர்க்கப்படா குடும்பங்களிலிருந்து இப்படி பெண் அமைவாள். அவன் போட்டோக்கள் எடுக்காமலே இவள் உடலை நுகரும் வரை செடக்ஷன் பண்ணலாம். ஏனென்றால் அவன் ஒரு திறமையான செடக்ஸன் பேர்வழியென்று காட்டுகிறார் இயக்குனர். மேலும் அவளில் தோழிகளும் அவனின் தோழர்களும் எந்தவொரு மாரல் கான்சியஸ் இல்லாதவர்களாகவே காட்டப்படுகிறார்கள். அஃதாவது அவளையும் அவனையும்தூண்டுகிறார்கள்.

    எனக்கு என்ன வருத்தமென்றால், பெரும்பள்ளி மாணவர்களை மட்டுமன்றி, குஜராத்தி மக்களையும் தவறாகக்காட்டுகிறார் இயக்குனர். கோலாட்டத்தைக்காட்டி அவர்கள் குஜராத்திகள் என்று காட்டுகிறார் சக்திவேல்.

    அய்யோ பாவம் குட் ஷெப்பர்டு, பத்மா சேசாத்திரி, புனித அர்சுலா பள்ளி (சர்ச் பார்க் கான்வெண்டு ஜெயலலிதாபடித்தப்பள்ளி) கிரிஷ் ஸ்டெவர்டு, புனித தொன் பொஸ்கோ (செஸ் விஸ்வநாதனின் பள்ளி) – இம்மாணவர்களை எல்லாரும் இனி சந்தேகிப்பார்கள். மாணவர்களாவது பரவாயில்லை. மாணவிகள் நிலை ????

Leave a Reply to Kavya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *