தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜூன் 2018

மணமுறிவும் இந்திய ஆண்களும்

புதிய மாதவி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தியாவில் அண்மைக்காலங்களில் திருமண முறிவுகள் பெருகி வருகின்றன.

1980களில் இந்திய தலைநகர் புதுடில்லியில் விவாகரத்து வழக்குகளை கவனிக்க 2 நீதிமன்றங்கள் தான் இருந்தன. இன்று 16 நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகளைக் கவனிக்க இருந்தும் போதவில்லை.

மராத்திய மாநிலத்தில் ஓராண்டில் சட்டப்படி மணமுறிவு பெற்றவர்கள் 43000.

அதில் மும்பையில் 20,000, புனேயில் 15000.

கல்யாணமாலை இணைய தளத்தில் இரண்டாவது திருமணத்திற்கான

தனிப்பிரிவு வந்தாகி பலவருடங்கள் ஆகிவிட்டது.  secondshaadi.com பிரிவில்

இத்திருமணத்திற்குப் பதிவு செய்திருப்பவர்களின் வயது சற்றொப்ப 25 லிருந்து

35க்குள் இருப்பதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

மே 08, 2012 டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் காதல் திருமணங்களில்

மணமுறிவுகளின் விகிதாச்சாரம் அதிகமாக இருப்பதாக சொல்கிறது.

 

உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருக்கும் மணமுறிவுகளுடன் ஒப்பிடும் போது இந்திய மண முறிவுகளின் விகிதாச்சாரம் 1.1% தான் . அமெரிக்காவில்

50% மணமுறிவுகள். அமெரிக்காவைப் பொறுத்தவரை வெள்ளைக்கார தம்பதிகளின் மணமுறிவுகளை விட ஆப்பிரிக்க அமெரிக்கன் (கறுப்பினம்)

வெள்ளைக்கார அமெரிக்க தம்பதியரின் மணமுறிவு விகிதமே அதிகம்.

ஆப்பிரிக்கன் அமெரிக்கன் 32%, வெள்ளைக்கார தம்பதியர் 21%, .

ஆப்பிரிக்க இனத்தவரின் குடும்ப பின்னணியும் அதன் காரணமாக அவர்களிடம்

நிலவும் கலாச்சார வேறுபாடுகளுமே இந்த மணமுறிவுகளுக்கு காரணம் எனலாம். ஆனால் இந்தியாவில் மணமுறிவுகளுக்கு காரணம் இங்கு நிலவும்

சாதி, மத வேறுபாடுகளா? இந்தக் கேள்வி எழுகிறது. ஆனால் இந்தப் பின்னணியில் மணமுறிவுகள் குறித்த ஆய்வுகள் இல்லை. எனவே இம்மாதிரியான முடிவுகளுக்கு வருவது சாத்தியமில்லை.

சாதி மத வேறுபாடுகளைக் கடந்து இந்திய சமூகத்தின் குடும்ப பின்னணியும் அதன் கலாச்சார கட்டமைப்பும் அதிகமான வேறுபாடுகள் கொண்டதாக இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 

1979களில் சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதர மாற்றங்களுக்குப் பிறகே அங்கே மணமுறிவுகள் பெருகியது. 2010ல் சீனாவில் 1.2 மில்லியன் திருமணங்கள் நடந்தன ஆனால் அதை விட அதிகமாக 1.96 மில்லியன் மணமுறிவுகள் நடந்தன. அதாவது ஒரு நாளுக்கு 5000 தம்பதியர் விவாகரத்துப் பெறுகிறார்கள். விவாகரத்தையும் விருந்து வைத்துக் கொண்டாடி விடைபெற்றுக்கொள்கிறார்கள். இம்மாதிரியான விவாகரத்து விருந்துகள்

divorce ceremony மூலம் திருமண உறவில் பிரிந்தவர்கள் விரோத மனப்பான்மையுடன் இல்லாமல் நட்பாக இருக்கவும் காதலை மதிக்கவும்

கற்றுக்கொடுப்பதாக காரணமும் சொல்கிறார்கள். சீன இளம் தலைமுறையிடம்

பெருகி இருக்கும் மாத வருமானமே இதற்கெல்லாம் காரணம் என்று

சீன அரசின் மக்கள் துறை ஒத்துக்கொள்கிறது. சீனாவில் மணமுறிவுக்கான

சட்டங்கள் மிகவும் எளிதாக இருப்பதும் அரைமணி நேரத்தில் படிவங்களை முறையாக நிரப்பிக்கொடுப்பதன் மூலம் விவாகரத்து பெற்றுவிடும் எளிய

முறையே காரணம் என்று அங்கிருக்கும் பத்திரிகைகள் அடிக்கடி எழுதிக்குவிக்கின்றன.

 

 

 

 

இந்தியக் குடும்பத்தில் மணமுறிவுக்கு முன்னும் பின்னும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்துக் கொள்ளும்  ஆண்களின் எண்ணிக்கைப் பெருகி வருகிறது.

கீழ்கண்ட அட்டவணையைப் பாருங்கள்.

 

 

 

(அட்டவணை)

 

ஏன்?

 

இந்தக் கேள்வி விசவரூபம் எடுக்கிறது. காதல் தோல்வி, பணப்பிரச்சனை இத்தியாதி காரணங்களுக்காக தற்கொலை செய்துக் கொள்ளும் ஆண்களை விட

குடும்ப பிரச்சனைகளுக்காக தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம். ஒவ்வொரு 9 நிமிடத்திலும் 9 திருமணமான ஆண்

தற்கொலை செய்துக் கொள்வதாக சொல்கிறார் இந்தியக் குடும்ப பாதுகாப்பு

அமைப்பைச் சார்ந்த விரக் துலியா (Virag dhulia , Save Indian Family Foundation)

2009ல் 18000 ஆண்கள் கணவன் மனைவி பிரச்சனைக் காரணமாக தற்கொலை

செய்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்கொலை செய்து கொண்ட பெண்களை விட 7000 அதிகமாகும்.

 

திருமணமாகி 7 வருடங்களுக்குள் மனைவி இறந்தாலோ தற்கொலை செய்து கொண்டாலோ கணவனும் அவன் தாய் தந்தை உடன்பிறப்புகளும் குற்றம் செய்தவர்களாகவே கருதப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வழிவகுத்திருக்கும் இந்திய சட்டப்பிரிவு 498A  தான் இதற்கெல்லாம் காரணம்

என்று ஆண்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.

வரதட்சணைக் கொடுமை என்று சொல்லி கணவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது மிகவும் எளிதாக இருந்ததால்

ஒரு சில பெண்கள் அச்சட்டத்தை தவறுதலாக பயன்படுத்தியது உண்மைதான்.

ஆனால் இரண்டொரு வருடங்களில் வரதட்சணைக் கொடுமை சட்டத்தை

தவறுதலாக பயன்படுத்துவது குறைந்துவிட்டது. ஆனால் இந்தச் சட்ட விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஆணுக்குள் இருக்கும்

அதிகாரபீடமே ஆணைத் தற்கொலைக்கு தள்ளுகிறது என்பதை ஆண்கள்

ஒத்துக்கொள்வதில்லை. அல்லது அப்படியான ஒரு பார்வையை விலக்கி

வைக்கவே விரும்புகிறார்கள்.

மனைவியைக் கைநீட்டி அடிக்காத ஆண்கள் ஆபூர்வம்.

அதிலும் இப்போதெல்லாம் கோபத்தில் காதலியின் கன்னத்தில் ஓங்கி அறையும்

காதலனைக் காட்டாத தொலைக்காட்சி தொடர்கள் ஏதாவது ஒலிபரப்பாகின்றதா

என்று தேடித்தான் பார்க்க  வேண்டி இருக்கிறது.

இப்படியாக ஒரு பக்கம் ஆணின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தும் காட்சிகள்.

 

பெண்கள் பக்கமோ பொருளாதர ரீதியாக தனித்து வாழ முடியும் என்ற நிலை.

பெண் விவாகரத்து பெற்றால் கணவன் தான் கட்டாயம் கொடுமை செய்தவனாக

இருந்திருக்க வேண்டும் என்ற ஒரு எழுதாதச் சட்டம் ஒரு  வகையில் பெண்ணுக்குச் சாதகமாகவும் ஆணுக்கு ஆபத்தானதாகவும் அமைந்துள்ளது.

விவாகரத்து என்பது வன்கொடுமைகளுக்கு அப்பால் கணவன் மனைவிக்கு

நடுவில் ஒத்துப்போக முடியாத நிலையில் பிரிந்து வாழ எடுத்த முடிவு என்ற

நிலை இந்தியாவில் வரவில்லை.

பிறிதொரு முக்கியமான காரணம், அதிகமாக நம் சமூகவியலார் கவனம் செலுத்த வேண்டிய காரணிகளில் ஒன்றாக இருப்பது இன்றைய திருமண

உறவில் இணையும் தம்பதியர் கூட்டுக்குடும்பத்தை அறியாதவர்கள்.

ஆணும் பெண்ணும் பெரும்பாலும் அவர்கள் பெற்றோர்களுக்கு ஒரே

பிள்ளையாக இருப்பதையும் பார்க்கலாம். ஒரே பிள்ளையாக வளர்க்கப்படும்

குழந்தைகளுக்கு விட்டுக்கொடுப்பதும் அடுத்தவருடன் ஒத்துப்போவதும்

அவ்வளவு எளிதில் வருவதில்லை. அதிகமான விவாகரத்துகளுக்கு வலுவான

காரணங்கள் இருக்கிறதா என்பதை ஆராயும் போது அதிர்ச்சிகரமான

சில காரணங்கள் தெரியவருகின்றன.

 

விவாகரத்து மூலம் ஏற்படும் மன அழுத்தத்தை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வது பெண்ணின் இயல்பாக இருப்பது போல ஆணுக்கு இருப்பதில்லை.

மன உணர்வுகளை நெருங்கியவர்களிடன் பகிர்ந்து கொள்வதில் ஆணுக்கு

அதிகமான தயக்கம் இருப்பதாக உளவியல் சொல்கிறது.

ஏமாற்றப்படுவது, உணர்வு ரீதியாக காயப்படுவது, உடல் ரீதியாக வன்கொடுமைக்குள்ளாவது இத்தியாதி எல்லாம் பெண்ணுக்குப் பழக்கப்பட்டது.

துன்பங்களுக்கு நடுவில் வாழ்வதற்கு நாணலைப் போல பெண் பழகி இருக்கிறாள். ஆண் அதிலும் குடும்ப உறவில் அந்த நிலையில் ஆட்டம் காணும் போது சரிந்து விழுகிறான், ஆண்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாகி

இருப்பதற்கு இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

 

மணமுறிவை எதிர்கொள்வதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருபாலாருக்குமே

பிரச்சனைகள் ஒவ்வொரு விதத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அதை அவர்கள் எதிர்கொள்வதில் இருக்கும் வேறுபாடுகளே ஆணைத் தற்கொலைக்குத்

தள்ளுவதற்கான வலுவானக் காரணமாக இருக்கிறது எனலாம்.

Series Navigationருத்ராவின் க‌விதைக‌ள்பழ. சுரேஷின் “ பொற்கொடி பத்தாம் வகுப்பு “

8 Comments for “மணமுறிவும் இந்திய ஆண்களும்”

 • a.j.jeevavandam says:

  polianathuthan mana valkkai, vittuk kodupavargal mana murivu illai.

 • பொன்.முத்துக்குமார் says:

  “திருமணமாகி 7 வருடங்களுக்குள் மனைவி இறந்தாலோ தற்கொலை செய்து கொண்டாலோ கணவனும் அவன் தாய் தந்தை உடன்பிறப்புகளும் குற்றம் செய்தவர்களாகவே கருதப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வழிவகுத்திருக்கும் இந்திய சட்டப்பிரிவு 498A தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஆண்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது”

  ‘சொல்லப்படுகிறது’ என்று நீங்கள் மிக எளிதாக ஒதுக்கிவிட்டாலும், அது ஒரு வலுவான உண்மை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

  “வரதட்சணைக் கொடுமை என்று சொல்லி கணவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது மிகவும் எளிதாக இருந்ததால்
  ஒரு சில பெண்கள் அச்சட்டத்தை தவறுதலாக பயன்படுத்தியது உண்மைதான். ஆனால் இரண்டொரு வருடங்களில் வரதட்சணைக் கொடுமை சட்டத்தை
  தவறுதலாக பயன்படுத்துவது குறைந்துவிட்டது.”

  அந்த சட்டத்தை தவறுதலாக பயன்படுத்திய பெண்கள் ஒரு சில பேர்தான் என்பதற்கும் இரண்டொரு வருடங்களில் (அது என்னங்க ‘இரண்டொரு வருடங்கள்’ பொத்தாம் பொதுவாக ?) தவறுதலாக பயன்படுத்தப்படுவது குறைந்துவிட்டது என்பதற்கும் கைவசம் ஆதாரம் வைத்திருக்கிறீர்களா ?

  அம்மணி, கொஞ்சம் http://www.498a.org/ தளத்தை பாருங்கள் எவ்வளவு கண்ணீர்க்கதைகள் என்று.

  நமது சட்டம் இன்னும் கொடூரமான நிலையிலேயே உள்ளது. ஆணும் பெண்ணும் சரி சமம் என்றால் ஏன் இந்த சட்டம் மட்டும் ஆணை சிலுவையில் அறைகிறது ? வரதட்சணை தொடர்பான வழக்கில் இன்னும் ஆண் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சந்திக்கு இழுக்க முடியும்.

  வெகு சமீபத்தில் (மார்ச் மாதத்தில்) பாராளுமன்றத்தில் இந்து திருமண சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதலும் தந்துவிட்டது. இது எந்த அளவு பொதுப்பார்வைக்கு வந்தது என்பது தெரியவில்லை. அதில் இரு முக்கிய விஷயங்கள் :

  1. அதன்படி, adultery என்று கூறப்படும் திருமணத்துக்கு வெளியே தகாத உறவில் பெண் ஈடுபட்டால் அதை காரணம் காட்டி ஆண் விவாகரத்து கேட்டால் பெண் தர மறுக்கலாம். ஆனால் அதே தவறை ஆண் செய்து பெண் விவாகரத்து கேட்டால் ஆணால் மறுக்க முடியாது.

  2. விவாகரத்தான பின்னரும் “எப்போது வேண்டுமானாலும்” ஆணின் சொத்தில் பெண் பங்கு கேட்கலாம். ஆண் கொடுத்தே ஆக வேண்டும்.

  இது காட்டுமிராண்டித்தனமான சட்டமா இல்லையா ?

  இங்கே அமெரிக்காவில் என்னுடன் வேலை பார்ர்கும் தெலுங்கு நண்பர் ஒருவர் சொன்ன சம்பவம் இது :

  விடுமுறையில் ஊருக்குச்சென்ற அவரது நண்பர் விசா ஸ்டாம்பிங் பெற அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். அது தள்ளுபடி செய்யப்பட்டு அவரால் விடுமுறை கழிந்து அமெரிக்கா வர இயலவில்லை. காரணம் தெரிந்தபோது அதிர்ச்சி. அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் விவாகரத்தானவர். விவாகரத்தானபோது அவருடைய மனைவி நண்பர் என்ற காரணத்துக்காக இவரையும் புகாரில் இழுத்துவிட வழக்கு இழுத்துக்கொண்டிருந்தது. பின்னர் போராடி தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபித்து அதன் பின்னர்தான் அவரால் அமெரிக்கா வர முடிந்தது. (ஆனால் அவரது பழைய வேலை பணால்)

  அம்மணி, காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இன்னமும் பெண்கள் அடிமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள் என்ற பழைய பல்லவியையே பாடவேண்டாம். இல்லை என்று மறுக்கவில்லை, ஆனால் விகிதாச்சாரத்தில் பெரும் மாற்றம் வந்துவிட்டது கண்கூடு.

  கொஞ்சம் http://marumagal.blogspot.com/ வலைப்பதிவை பாருங்கள். வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாகவும் பயன்படுத்த எவ்வளவு துணிச்சலாக இணையத்தில் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று. மாதிரிக்கு சில பதிவுகளின் தலைப்புக்கள் :

  1. மனைவிக்கு ஓர் ரகசியம் – கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி
  2. வெளிநாட்டில் இருக்கும் கணவனை “கவனிப்பது” எப்படி
  3. NRI கணவனை விமான நிலையத்தில் கைது செய்வது எப்படி?
  4. NRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி?
  5. ஒளிந்து வாழும் NRI கணவன்கள்

  இவையெல்லாமே “விரும்பி படிக்கப்பட்ட அறிவுரைகள்”

 • puthiyamaadhavi says:

  இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலிருந்து இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் பெண்களும்,பெண்கள் அமைப்புகளும் என்ற குரல் 2009ல் உரக்க பேசப்பட்டது நினைவிருக்கிறது. அப்போது தான் பெண்கள் அமைப்பின் தலைவர் கிரிஜா வியாஷ் அவர்கள் புள்ளிவிவரங்களுடன் அக்குற்றச்சாட்டை மறுத்தார்.அதிலும் பெண்களின் அறியாமையை காவல்துறையும் அரசியலும் தாதாக்களும் பயன்படுத்திக்கொண்டு இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் அதுவும் படிப்படியாக குறைந்து வருவதையும் பதிவு செய்திருக்கிறார். (National commission for women chairperson Girija Vyas ).

  தவறாக அச்சட்டத்தைப் பயன்படுத்திய பெண் ஒருவர் தண்டனையாக கணவர் குடும்பத்திற்குப் பணம் செலுத்தினார் என்ற வழக்கும் பிரசித்தி பெற்றது.

  NCW காட்டும் புள்ளிவிவரங்களை SIFF முற்றிலும் மறுக்கிறது.
  SIFF காட்டும் சோகக்கதைகளுக்கு எவ்விதத்திலும் குறையாத பல்லாயிரக்கணக்கான பெண்களின் உண்மைக் கதைகள் எத்தனை எத்தனையோ உண்டு.

  என் கட்டுரையில் ஒரு குடும்ப பிரச்சனையை , மணமுறிவை
  ஆண் எதிர் கொள்ள முடியாமல் முறிந்து போவதற்கான காரணங்களை மட்டுமே முன்னிலைப் படுத்த விரும்பினேன்.

  நன்றி.

  • kargil_jay says:

   /தவறாக அச்சட்டத்தைப் பயன்படுத்திய பெண் ஒருவர் தண்டனையாக கணவர் குடும்பத்திற்குப் பணம் செலுத்தினார் என்ற வழக்கும் பிரசித்தி பெற்றது./

   I don’t know if I should laugh or cry for the above statistical statement about ‘single incident’ , while you have written there are thousands of cases.

   According to a commissioner of police, 93.5% of dowry torture cases filed by girls are fake. so your comment that a few girls //ஒரு சில பெண்கள் அச்சட்டத்தை தவறுதலாக பயன்படுத்தியது உண்மைதான்.// is something like 93.5 times wrong

 • பொன்.முத்துக்குமார் says:

  அன்புள்ள புதிய மாதவி,

  உங்களது கட்டுரையின் மையக்கருத்து புரிந்தே இருந்தது. இருப்பினும் நீங்கள் போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போன ஆதாரமற்ற (என்று நான் நினைக்கும்) சில வாக்கியங்களுக்கான எதிர்வினையே நான் கூறியிருப்பது.

 • puthiyamaadhavi says:

  498A.org சொல்வதை மட்டுமே கொண்டு ஒரு முடிவுக்கு வருவதில் எனக்கு உடன்பாடில்லை. சுப்ரீம்கோர்ட் இச்சட்டத்தை
  தவறுதலாக பயன்படுத்தியதாக கடுமையான சொற்களைப் பயன்ப்டுத்திய போது பெண் அமைப்புகள் அனைத்தும் இது குறித்த களப்பணியில் ஈடுபட்டோம். அரசியல் செல்வாக்கு, பணம், காவல்துறையின் ஆராஜகம் 498 ஐ எப்படி எல்லாம் தவறுதலாக பயன்படுத்தினார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதைத்தான் கிரிஜாவும் உரத்தக் குரலில் பதிவு செய்தார். அப்போதும் படித்தப் பெண்கள் தான், அதிலும் குறிப்பாக ஒரு தனிப்பட்ட ஐ.டி. நிறுவனத்தின் பெயரைச் சொல்லி
  (விருப்பம் உள்ளவர்கள் அந்த நிறுவனத்தின் பெயரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்!) அதில் வேலைப்பார்க்கும் பெண்கள் தான் இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி இருப்பதாகவும் கூட வந்த வதந்தியைப் பொய் என்று ஒவ்வொரு
  மாநிலத்தின் பெருநகரங்களின் தொண்டு நிறுவனங்கள் மூலம் கண்டறிந்து அறிக்கைகள் தயார் செய்யப்பட்டதை அறிவேன்.
  498 யின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டால் அதை திரும்ப பெறுவது கடினம். இந்த அடிப்படை உண்மையைக் கூட நம் வழக்கறிஞர்கள் பெண்களிடன் எடுத்துரைக்கவில்லை. பெண்கள் படித்தவர்கள் என்பதாலேயே எல்லா சட்டப்பிரிவுகளின் நுணுக்கமும் தெரிந்தவர்கள் என்று எதிர்ப்பார்ப்பது தவறு. அதன் பின் இதைப் பற்றிய விளக்கங்கள், அறிக்கைகள் தயாராகின.
  498 சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதால் பாதிக்கப்படுவது
  ஆண் மட்டுமல்ல, மாமியார், நாத்தனார் என்ற பெண்களும் தான்.
  என்ற உண்மையை பெண்கள் பக்கமிருந்து எங்களைப் போன்ற சிலர் சொல்லவும் எழுதவும் ஆரம்பித்தோம்.

  498A.org, ncw.nic.in செய்திகள் இரண்டும் வெவ்வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.

  ஒரளவு நடுநிலையான ஆய்வு செய்திருப்பது ekta.org அமைப்பு.

  எந்த போலீஸ் கமிஷனர் 93.5% பொய்யான வழக்குகள் என்று சொன்னார் என்பதை தெரியப்படுத்தவும். தெரிந்து கொண்டால்
  மேற்கொண்டு இது குறித்து சம்ப்ந்தப்பட்ட NCW நபர்களிடம் சொல்லி அந்த மாநிலம் அல்லது ஏரியா குறித்த வழக்குகளை
  சரிபார்க்க வசதிப்படும்.

  நன்றியுடன்,

  புதியமாதவி

 • Karthik says:

  ஒரு பெண் ஒருவ‌னை காத‌லித்து ப‌திவு திரும‌ண‌ம் செய்து விட்டு பிற‌கு ப‌திவு செய்த‌ திரும‌ண‌த்தை ரத்து செய்யாம‌ல் இன்னொருவ‌னை திரும‌ண‌ம் செய்து கொண்டால் இந்திய‌ ச‌ட்ட‌ப்ப‌டி என்ன‌ த‌ண்ட‌னை கிடைக்கும்?

 • mohamed says:

  சம உரிமையாள் ஆண் உரிமை பரி போன பரிதாபம்
  இதேல்லாம் கேட்டால் என்னவாக இருந்தாலும் சட்டம் பெண்களுக்கு மட்டும் ஆண்களுக்கு நிடையாது என்கிறார்கள்


Leave a Comment

Archives