ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இசை அரங்குக் குழுவில்
எல்லோ ரையும் விட
அதிட்ட வாதி யார் ?
நாணல் தட்டை தான் !
அதன் வாய்
உன்னிதழ் களைத் தொடும்
இன்னிசை கற்றுக் கொள்ள !
கன்னல் இலைகள் போல்
எல்லா இலைகளும்
இந்த வாய்ப்பு தனையே
எண்ணிக் கொள்ளும் !
பல்வேறு வழிகளில்
எல்லாப் புறத்திலும்
கரும்புத் தண்டுகள் அசைந்தாடும்
காற்றினிலே !
++++++++++++
நீயின்றி வாத்தியக் கருவிகள்
யாவும் ஓய்வெடுக்கும்
நிரந்தர மாய் !
உன்னருகில் அமரும் ஒன்று
நெடு முத்தமிடும் இன்னொன்று
தம்பட்டப் பறை மனம்
இரங்கிக் கேட்கும் :
“விரலால் தாளமிடு என்மேல்
நானாக முடியும் நான்
அப்போது தான் !”
உணர வேண்டும் நீ
எனது உறுப்பு
ஒவ்வொன் றிலும்
எலும்பு எலும்பாய் என்னுள்
ஊடுரும் போது !
நேற்றிரவு மரணம் அடைந்தது
தோற்றம் பெறும்
பூரண மாக இன்றைய
பொழுதில் !
++++++++++++
குடி போதை யின்றி ஏன்
வாழ வேண்டும்
ஒருவன் மனமுடைந்து ?
அப்படி நான் வாழ
இயலாது !
ஒன்று போதிய
ஒயின் அளி எனக்கு !
இன்றேல்
என்னைத் தனியே விட்டு விடு !
உன்னோடு
நிரந்தர மாய்
உரை யாடிக் கொண்டு
எப்படி வாழ்வ தென்று நான்
இப்போது அறிவேன் !
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 14, 2011)
- இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்
- சாம்பல்வெளிப் பறவைகள்
- என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை
- நாதம்
- சாகச விரல்கள்
- 5 குறுங்கவிதைகள்
- அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
- நினைவுகளின் சுவட்டில் – (70)
- எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து
- காலாதி காலங்களாய்
- உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
- சின்னாண்டியின் மரணம்
- விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?
- முதுகெலும்பா விவசாயம் ?
- கட்டங்கள் சொற்கள் கோடுகள்
- இரண்டு கவிதைகள்
- தியாகச் சுமை:
- ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்
- புள்ளி கோலங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
- எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)
- கறுப்புப்பூனை
- பழமொழிகளில் பணம்
- இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்
- விக்கிப்பீடியா – 3
- உறவுகள்
- தனித்திருப்பதன் காலம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா
- முதுகில் பதிந்த முகம்
- ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்
- கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”
- இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….
- அரச மாளிகை ஊக்க மருத்துவர்
- ஒற்றை எழுத்து
- சென்னை வானவில் விழா – 2011
- மாலைத் தேநீர்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40
- தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா
- 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4
- தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:
- காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை
- அறிவா உள்ளுணர்வா?
- இப்போதைக்கு இது – 2
- யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்