ஆலமரத்துக்கிளிகள்

This entry is part 3 of 36 in the series 30 செப்டம்பர் 2012

பச்சை வயல்வெளி ..
பக்கத்தில் காவலுக்குப்
பனை மரங்கள்…!!
—————————————-

என்றும் நீ கூண்டில்..
நான் நீதிபதி..
மனசாட்சி.!
————————————–

பூமியை
அளக்கிறதோ..?
நெடுஞ்சாலைகள்..!
—————————————–

இரவும் பகலும்
ஒன்றுதான்
உறங்குபவனுக்கு..!
——————————————-

மீண்டும் தாய்வீடு…
நிம்மதியாய்….
விதைநெல்..!
_________________________

வான்மேகங்கள்
வேடிக்கை பார்க்கும்
பூமியில் சாகசங்கள்..!
_________________________

வில்லு போல் உடல்
புறப்படும் அம்பு..
குறிகோள்கள்..!
_________________________

கரும்புக் காடுகள்
இரும்புகளால்
முள்வேலி..!
_________________________

சிறு புல்லும் நெடு மரமும்
எண்ணுமாம் தாங்களே
பூமிக்குத தூண்..!
__________________________

நீ வேகமாய்ப் போனதால்..
நான் வேகமாய் வருகிறேன்…
ஆம்புலன்ஸ்..!
__________________________

மௌன ஊர்வலத்தில்
ஆக்ரோஷமாய்…
மனம்..!
___________________________

ஊர்வலத்தில்
மௌனமாய்
பிணம்..!
_____________________________

சாதுவான பசுவுக்கு
கொம்பும், குளம்பும்..!
தேவனின் நீதி….!
________________________________

கனிகளே இல்லாத கிளைகள்
இருந்தும் , ஆரவாரம்….
ஆலமரத்துக் கிளிகள்.!

===========================

ஜெயஸ்ரீ ஷங்கர்..

Series Navigationபத்மஜா நாராயணன் : மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்சும்மா வந்தவர்கள்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

  1. Avatar
    இளங்கோ says:

    எல்லாம் நன்கு இருக்கின்றன..
    /* மீண்டும் தாய்வீடு…
    நிம்மதியாய்….
    விதைநெல்..!
    ____________*/ இதில் கருத்துப் பிழை இருக்கிறது என எண்ணுகிறேன். பரிசீலிக்க….

  2. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் இளங்கோ அவர்களுக்கு,

    சில நேரங்களில் கவிதையில் தன்னையும் மீறி பொருட் குற்றம்
    வந்து விடுவதும் உண்டு.
    குறிப்பாக இந்த இடத்தில்…விதை நெல்லானது…அரிசியாகாமல்
    சாதமாகாமல் மீண்டும் நெல்லாகவே…விதைக்காக நிலத்தில்
    விதைக்கப் படுவதால்…மீண்டும் தாய்வீடு…என்று குறித்தேன்.
    எனது பரிசீலனை இது தான்.

    நன்றி.
    ஜெயஸ்ரீ ஷங்கர்

Leave a Reply to இளங்கோ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *