ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி

author
14
0 minutes, 2 seconds Read
This entry is part 33 of 36 in the series 30 செப்டம்பர் 2012

ஹுஸைன் இப்னு லாபிர்

 

ஐயா வணக்கம்
தங்களது திண்ணை வாசகர்களில் நானும் ஒருவன்.

பாரதத்தில் உதித்ததனால்

பா ரதம்போல் கவி பொழியும்

பெயர் தனிலே ஜெயம் தாங்கிய

ஜெய பாரத பெருந்தகையே

 

அகிலத்துக்கும் அண்டத்துக்கும்

அணுவுக்கும் கருவுக்கும்

கிரகங்கள் விண்ணுளவி

கவி தொடுத்து விழங்க வைத்தாய்

 

சாளரத்து வழி தனிலே

திண்ணையிலே விழி வைத்து

ஈழத்து மாணவன் நான்

பெருந்தகையை அறிந்து கொண்டேன்

 

அடுக்கௌக்காய் உரை பொழிந்து

படம் வரைந்து விளக்கி வைத்த

ஆசானை வாழ்த்தவென

பேனாவை நானெடுத்தேன்

 

பெரியோரைப் பாரரிவார்

சிறியோனை யாரரிவார்

இருந்தாலும் உணர்வோடு

கடன் தீர்க்க விளைகின்றேன்

 

அணுவோடு உறவாடும்

பெருமனது உமக்கைய்யா

வாழ்த்துரைக்க வழிதேடும்

மனதோடு நானிங்கு

தினம் வாழ்த்தி உரைத்திடனும்

மனம் போற்றி புகழ்ந்திடனும்

பார் பார்த்து மகிழ்ந்திடனும்

உன் சேவை தொடர்ந்திடனும்

 

பெரு மனதில் சிறு இடத்தை

வாழ்த்துரையை வைப்பதற்கு

ஆசானை வேண்டி நின்றேன்

ஆதவனாய்ப் பார்க்கின்றேன்.

 

ஹுஸைன் இப்னு லாபிர்

மள்வானை

ஸ்ரீ லங்கா

Series Navigationஎன்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்“சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!”
author

Similar Posts

14 Comments

  1. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் ஹுசைன் இப்னு லாபிர்,

    வணக்கம். தங்களுடைய தேனினும் இனிய கவிமொழியை, மதிப்புரையை, அப்படியே நானும் வழி மொழிகிறேன். தகுதியான ஒருவருக்கு, தரமான வாழ்த்து வழங்கிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

  2. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் ஹுஸைன் இப்னு லாபிர் அவர்களுக்கு,

    ஸ்ரீ லங்காவிலிருந்து ஒரு வாழ்த்துக் கவி…
    கனடா வாழ் விஞ்ஞான கவிஞருக்கு..
    எங்கள் மதிப்பு மிக்க திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு..
    படிக்கும் பொது அகமகிழ்ந்தேன்.,

    திண்ணையில், வல்லமையில், அவரது பல கட்டுரைகள்
    நாடகங்கள், கவிதைகள், வாரா வாரம் படைப்புகளாக
    வெளியிட்டு அவரின் தரத்தை உயர்த்திக் கொண்டே
    இருக்கும் இந்த நேரத்தில் அவருக்காக எழுதப் பட்ட
    தங்களின் வாழ்த்துப் பாடல் அருமை…!

    தாங்கள் பாராட்டிய திருவாளர். ஜெயபாரதன் அவர்களுக்கு எமது பாராட்டையும்..
    வாழ்த்தையும் தெரிவித்து…..இந்த உன்னத படைப்பைத் தந்து சிறப்பித்த உங்களுக்கும்
    எனது உளமார்ந்த நன்றிகளை..இங்கு பவளசங்கரியோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்ள மகிழ்கிறேன்.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  3. Avatar
    S. Jayabarathan says:

    வாழிய வென்று பைந்தமிழ்ப் பாக்களில் பாராட்டி
    ஈழத் தமிழ்த் தோழர் திண்ணையில் என்னைச் சீராட்ட
    தோழியர் இருவர் தமிழகத்தில் இனிதாய் வழிமொழிய
    ஊழியன் பூரித்தேன் கனடாவில் கனிவாக நன்றியுடன்.
    ++++++++++++++++++++

    தமிழ்ப்பா எழுதிப் பாராட்டிய ஹுஸைன் இப்னு லாபிர் அவர்களுக்கும், வழிமொழிந்த பவள சங்கரி அவர்களுக்கும், அகமகிழ்ந்த ஜெயஶ்ரீ ஷங்கர் அவர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.

    சி. ஜெயபாரதன்.

  4. Avatar
    கௌதமன் says:

    ஜெயபாரதனின் பாரதி பற்றியக் கட்டுரைக்குப் பதிலாக காவ்யா அவர்கள் சென்ற வாரத்தில் கொடுத்த தகுதியற்ற வசை மொழியால் புண் பட்டிருந்த என் மனத்திற்கு மருந்து போல் அமைந்தது இந்தக் கவிதை. என் உளமார்ந்த நன்றிகள் ஈழத்து நண்பரே. எனக்குக் கவிதை எழுத வராது. ஆயின் உங்கள் கவிதையைப் படித்த பின் பவள சங்கரியின் அதே வார்த்தைகளில் முன் மொழிகிறேன். மீண்டும் நன்றிகள்.

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    வழிமொழியும் நண்பர் கெளதமன் அவர்களுக்கு நன்றி.

    காய்த்துக் கனிகள் தொங்கும் மரத்தில்தான் கல்லடிகள் விழும். ஆனால் வெறும் கல்லடிகளும், சொல்லடிகளும் மரத்தைச் சாய்க்க முடியுமா ?

    என்னை யாரும் இகழ முடியாது. அந்த அவல நிலையைத் தாண்டியவர்தான் திண்ணையில் எழுதத் துணிய வேண்டும்.
    சி. ஜெயபாரதன்.

  6. Avatar
    Kavya says:

    சில எழுத்துப்பிழைகளைத்தவிர கவிதை நன்று.

    பெரியோரைப் பாரரிவார்
    சிறியோனை யாரரிவார்
    பாரறிவார், யாரறிவார் என்றுதானே இருக்க வேண்டும்? தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.

    ஜெயபாரதன் தமிழ்ப்பதிவுலகில் ஒரு நல்ல படைப்பாளி மட்டுமல்லாமல், கொடையாளியும் கூட. எப்படிப்பட்ட கொடையவை என்பதை கவிதை சொல்கிறது. அதற்கு மாற்றுக் கருத்தில்லை.

    முடிந்தவர்கள் செய்வார்கள்; முடியாதவர்கள் செய்பவர்களைத் தூடணை செய்வார்கள்.

    1. Avatar
      Bala says:

      ‘பார்’ என்றால் உலகம் அஃறிணை ஒருமை. ‘பாரறியும்’ (பெரியோர்களை உலகம் அறியும்) என்றுதான் வரவேண்டும்.

    2. Avatar
      Kavya says:

      இரண்டாவது, பெரியோரை, சிறியோனை என்பதில் மோனையில்லை. பெரியோரை, சிறியோரை என்று இருத்தல் நலம்.

      சங்கப்பாடல் இதோ:

      யாதும் ஊரே, யாவரும் கேளிர்;

      தீதும் நன்றும், பிறர் தர வாரா;

      நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;

      சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

      இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்

      இன்னாது என்றலும் இலமே! மின்னொடு

      வானம் தண் துளி தலைஇ ஆனாது,

      கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று

      நீர்வழிப் படூஉம் புனை போல் ஆருயிர்

      முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

      காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்

      பெரியோரை வியத்தலும் இலமே!

      சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
        அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
        தமியர் உண்டலு மிலரே, முனிவிலர்
        துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
        புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
        உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
        அன்ன மாட்சி அனைய ராகித்
        தமக்கென முயலா நோன்றாட்
        பிறர்க்கென முயலுநர் உண்மையானே

  7. Avatar
    Kavya says:

    // பாரதி பற்றியக் கட்டுரைக்குப் பதிலாக…//

    பாரதியார் ஒரு தமிழ்க்கவிஞர் என்றுமட்டுமன்று, அவர்கள் 20ம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிஞர்களுள் மிகவும் கவனிக்க்ப்படவேண்டியவர். அவரைத் தமிழலகம் ஒரு ’மாமனிதனாகவும்’ பார்க்கிறது காரணம் அன்னாரின் வாழ்க்கை பொது வாழ்க்கையாகவும் அமைந்தபடியாலும் பிறர் செய்யவியலாச் செயல்களைச் செய்ததாலும்.

    இப்படிப்பட்ட பொது மனிதருக்கும் ஜெயபாரதனுக்கும் தனிப்பட்ட உறவேதுமில்லை. உங்களுக்கும் எனக்கும் பாரதியாருக்கும் என்ன உறவோ அதேதான் ஜெயபாரதனுக்கும் பாரதியாருக்கும்.

    பாரதியாரைப் பற்றி எவரும் அவர்தம் நோக்கில் தோன்றியதை எழுதலாம். அவ்வெழுத்துக்கள் பொதுவெளியில் வைக்கப்படும்போது, அந்நோக்கிலிருந்து மாறுபட்டோர் தம் நோக்கை வெளியிடுவது தடுக்கப்படவேண்டுமென்பதும். அல்லது அவ்வெளியிடுவோரை விமர்சிப்பதும் கற்றோர் செயலன்று. பொது விடயங்களைப்பற்றிப் பிறர் கருத்துக்கும் செவிமடுப்பதே உயர்ந்த கல்வி.

  8. Avatar
    லெட்சுமணன் says:

    கவி தொடுத்து விழங்க வைத்தாய் = கவி தொடுத்து விளங்க வைத்தாய்

    அடுக்கௌக்காய் உரை பொழிந்து = அடுக்கடுக்காய் உரை பொழிந்து (அடுக்கௌக்காய் – வேறு அர்த்தம் எதுவும் இருக்கா?)

    1. Avatar
      hussain ibnu lafir says:

      கவிதையின் மூல வடிவத்தில் நீங்கள் சுட்டிக் காட்டிய விதமாய்த்தான் தவறுகளற்று காணப்பட்டது.தட்டச்சிடும்போதுதான் தறுகள் நேர்ந்துவிட்டது.வழிமொழிந்தோரையும்,பிழை களைந்தோரையும், பதிவிட்டோரையும் நன்றியுடன் போற்றுகிறேன்.லெட்சுமணன், காவ்யா ஆகியோரின் கருத்துக்கள் சரியே.அவ்வாறுதான் கவிதை அமையப் பெற்றிருந்தது.

  9. Avatar
    M.L.M.Saed says:

    கவிஞர் ஜெயபாரதனுக்கு வாழ்த்துக் கவி படித்து
    ஈழத்திற்கும் எம் இனத்திற்கும் நல்லாசிதனையும் பெற்றீர்
    புகழ் மழை கொட்ட பெரு உள்ளத்தைப் பெற்றீர்
    வளரட்டும் இப்பணி, வாழ்த்துக்கள் Vaalththukkal !!
    அடியேனும் உமக்களிக்கும் இக்காணிக்கைதனில்
    முயல்கிறேன் inainthukolla !!!!

Leave a Reply to Kavya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *