நன்னயம் – பின்னூட்டம்

This entry is part 30 of 31 in the series 2 டிசம்பர் 2012

அன்பின் திரு.இளங்கோ அவர்களுக்கும் திருமதி.ஹரிணி அவர்களுக்கும்..

வணக்கங்கள்.
நீங்கள் எழுதிய பின்னூட்டங்களை இன்று தான் படித்தேன் .
ஹரிணி நீங்கள் சொல்வதைப் போல இன்னொருவரின் கதையை மாற்றம் செய்து எழுதி அனுப்பியிருந்தால்…அதைக் கதைத் திருட்டு என்று தான் நானும் சொல்வேன். இதில் மாற்றுக் கருத்து என்னிடம் இல்லை.
இளங்கோ அவர்கள் நாசூக்காகக் சொல்லியதைப் படித்ததும்…தோன்றியது…”இவரி

டம் ஆதாரம் கேட்டால் இவரால் கொடுக்க இயலாது….” அப்படி இருக்கையில் எதை வைத்து இப்படி எழுதி இருக்கிறார் என்று.
அதற்கும் ஒரு படி மேலே சென்று நீங்கள் எழுதியதைப் படித்ததும் பதில் எழுதத் தோன்றியது.

இந்தக் கதை முழுக்க முழுக்க எனது சொந்தக் கற்பனையில் எழுதியது தான். இதற்க்கு முன்பு வைர நெஞ்சம் என்ற தலைப்பில்  வல்லமைக்கு கதை போட்டிக்கு சில மாதங்கள் முன்பு எழுதி அனுப்பியிருந்தேன். திரு.இளங்கோ அவர்கள் வல்லமையில்  படித்திருக்க வாய்ப்பு உண்டு

மேலும் அந்தக் கதை போட்டியில் தேர்ந்தெடுக்கப் படவில்லை . மேலும் சில திருத்தங்கள் செய்து எழுதி தலைப்பை மாற்றி நன்னயம் என்று  தலைப்பு  வைத்து திண்ணைக்கு அனுப்பினேன்.

எனது கதையை நானே மாற்றி., திருத்தி, சேர்த்து, கோர்த்து, தலைப்பை மாற்றி வைக்கும்  சுதந்திரம் எனக்கு உண்டு.
இது எனக்கும் என் எழுத்துக்குமான உறவு.  நான் பெற்ற  குழந்தையை நான் கொஞ்சுவது  போன்றது.

மனதுக்கு நிறைவு வரும் வரை  எழுதலாம் .
நீங்கள் சொல்வது  ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. நிரூபிக்க முடியுமா?

யாரோ எழுதிய கதையிலிருந்து  காலைக் கையாய் மாற்றி  எழுதும் தந்திரம்  என்னிடம் இல்லை.

எழுதுவது என்பது ஒரு ஆத்மார்த்தமான விஷயம்.
அது தானாக கற்பனையில் உருவாகி கருவாகி கதையாகி வருவது.

எத்தனையோ இடையூறுகளின் நடுவில்  எழுதும்
சொந்தப்  படைப்புக்கு வரும் இது போன்ற பின்னூட்டங்களைப்  படிக்கும் போது தான் மனிதர்களைப் புரிகிறது.

அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்புமரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

  1. Avatar
    இளங்கோ says:

    திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு,

    தங்களின் இந்த சாடலுக்கு என்னுடைய பின்னூட்டத்தை ஏற்கனவே ‘நன்னயம்’ கதையுடனேயே கொடுத்தாயிற்றே. மறுபடியும் சில நுண்ணிய மாற்றங்களுடன் எதற்கு இந்த தனிப்பதிவு? புரியவில்லை.

    வல்லமையில் இந்தக் கதை பிரசுரமாயிற்று என்பது உங்களுக்குத் தெரியாதா? அந்தந்த மாதம் பிரசுரமான கதைகள் அனைத்துமே போட்டியில் பங்கு பெற்ற கதைகள்தானே?

    இது ஏற்கனவே வல்லமையில் பிரசுரமான கதையின் திருத்திய பதிவு என்று சொல்லிவிட வேண்டியதுதானே? எதற்கு சுற்றிவளைக்க வேண்டும்?

    இளங்கோ

  2. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் இளங்கோ,

    உங்களைப் போலவே தான் எனக்கும் அந்த மடலைத் தனியாகப் பார்த்ததும் இருந்தது. உங்கள் கோபம் நியாயமானது. புரிகிறது.

    அந்தக் கடிதப் கடிதப் பகுதி இறுதியாய் இருந்ததால் நான் உடனடியாகக் கவனிக்க வில்லை. கடிதம் பகுதியில் படித்ததும் ஆச்சரியத்துடன் தவறுதலாக வந்திருக்கலாம் என்று உடனே திண்ணைக்கு அதை நீக்கிவிடும்படி கேட்டு மடல் போட்டு விட்டேன். அவர்கள் என் மடலை கவனித்திருக்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.

    இந்த நன்னயம் பின்னூட்டம் அந்த வாரத்துடன் முடிந்து போன கதை. இதில் இப்போது என் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

    இருப்பினும் தவறுக்கு மன்னிக்கவும் .

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply to ஜெயஸ்ரீ ஷங்கர். Cancel reply

Your email address will not be published. Required fields are marked *