ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி

This entry is part 5 of 22 in the series 15 செப்டம்பர் 2013

 

மொழியாக்கம்-சத்தியப்பிரியன்

 

பக்கிம் சந்திர சட்டர்ஜியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.

பக்கிம் சந்திர சட்டர்ஜி துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்று புதல்வர்களில் கடைக் குட்டி..,1838ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம்நாள் கொல்கத்தா அருகில் உள்ள கந்தலபாறை என்ற இடத்தில் பிறந்தார். ஜாதவ் சந்திரர் ஒரு துணை நீதிபதி. நற்பண்பு நிறைந்தவர். பக்கிம்மின் மூத்த சகோதரரான சஞ்சீவ் சந்திரா ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவருடைய பாலமோ என்ற வங்க மொழியில் எழுதப்பட்ட பயண நூல் முக்கியமான பயண  நூல்களில் ஒன்று.

மேதினிப்பூரில் 1856ம ஆண்டு வரை ஒரு கான்வென்ட் பள்ளியில் கடுமையான பள்ளிப் படிப்பை முடித்த பக்கிம் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் சட்டம் படிக்க சேர்ந்தார்.

1857ம வருடம் கொல்கத்தா பல்கலைகழகத்தின் சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றார். 1858ம் ஆண்டு பல்கலை கழகத்தில் BA பரீட்சையை எழுதினர். ஆறு தாள்கள் கொண்ட தேர்வில் அவரால் ஒரே ஒரு தாளில் மட்டும் தேர்வு பெற முடியவில்லை. அது எந்த தாள் தெரியுமா? மொழிப் பாடமான வங்காள மொழிப் பாடத்திற்கான தாள். கருணை மதிப்பெண்களாக ஏழு மதிப்பெண்கள் போடப்பட்டதால் பக்கிமும் அவர் நண்பர் ஜாது நாத் பாசு அவர்களும் தேர்ச்சி பெற்றனர். கொல்கத்தா பல்கலைகழகத்தின் முதல் பட்டதாரிகள் என்ற சிறப்பை பெற்றனர்.

படிப்பை முடித்துக் கொண்டு அரசாங்க வேலையில் துணை நீதிபதியாகவும் பின்னர் துணை ஆட்சியராகவும் பணி புரிந்தார். ஆங்கில அரசாங்கத்துடன் அவ்வப்பொழுது மோதல்கள் நிகழ்ந்தாலும் தன் பணியை அவர் சிறப்புறச் செய்து வந்தார்.

அந்தக் கால வழக்கப்படி அவருக்கு பதினொன்றாம் வயதில் ஐந்து வயது சிறுமி ஒருத்தியுடன் திருமணம் நடை பெற்றது. ஒரு தசாப்தத்திற்கு பின்னர் அவர் ராஜலக்ஷ்மி தேவி என்பவரை மணந்து கொண்டார். அவரே பக்கிம்மின் வாழ்க்கைத் துணைவி ஆனார்.

பக்கிமின் முதல் நாவலான ராஜ்மோகனின் மனைவி (1864) என்ற நாவல் ஆங்கிலத்தில் எழுதப் பட்டது. அவர் வங்காள மொழியில் எழுதிய முதல் நாவல் துர்கேஷ் நந்தனி 1865ம வருடம் வெளியானது. கபால குந்தளம், மிர்ணாளினி, தேவி சௌதாரிணி மற்றும் ஆனந்த மடம் போன்றவை அவருடைய மிகச் சிறந்த நாவல்கள். அவர் எழுத்தாளராக வாழ்ந்த காலங்களில் ஏராளமான சிறந்த படைப்புகளை நாளிதழ்களுக்கும் தினசரி தாள்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.  அரசியல்,பொருளாதாரம்,சமுகம்,மதம்,தத்துவம் மற்றும் விஞ்ஞானம் என்று அவர் எழுதாத விஷயங்களே இல்லை என்று கூறலாம்.

உடல் நலக் கோளாறு காரணமாக அவர்  தனது பணியிலிருந்து 1891ம் வருடம் விருப்ப ஒய்வு பெற்றார்.அதன் பின்னர் இருந்த சொற்ப காலத்தை ஆன்மிகத்தில் கழித்தார். 1894ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் நாள் தனது 56ம் வயதில் இயற்கை எய்தினார்.

தாகூர் அவரது மறைவின் பொழுது இவ்வாறு குறிபிட்டார்.” பக்கிம் பெயருக்கோ பணத்திற்கோ எழுதவில்லை. ஒரு பண்பட்ட மனத்தின் உன்னதமான அழகான எண்ணங்களை அற்புதமான வார்த்தைகளில் சித்தரிப்பதற்காக எழுதினர்.” நிஜம்தான்.

அத்தியாயம் 1

பகுதி-1ஆதி

என் எழுத்தின் நோக்கம்.

                  ஹிந்துக்களில் பலரும்,ஏன் அனைவருமே ஸ்ரீ கிருஷ்ணனை ஒரு அவதார புருஷனாகவே நம்புகின்றனர்.வங்காளத்தில்  அனைத்து கிராமங்களிலும் கிருஷ்ண வழிபாடு என்பது பரவலானது. ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா கோவில்களிலும் , எல்லா இல்லங்களிலும் வழிபடப் படுபவர். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு குறிப்பிட்ட தினம் அவருடைய பூஜைக்கென்று ஒதுக்கப் படுகிறது. கோலாகலமான கொண்டாட்டங்கள், ஸ்ரீகிருஷ்ண ஊர்வலங்கள் என்று ஊரே அமர்க்களப்படும். காற்று ஸ்ரீ கிருஷ்ண நாமவளிகளாலும் கிருஷ்ண கீர்த்தனைகளாலும் நிரம்பி இருக்கும்.அணியும் ஆடைகளில் ஸ்ரீ கிருஷ்ணரின் வண்ணப் படங்கள்; மேனி முழுவதும் பச்சை குத்தல்களாய் ஸ்ரீ கிருஷ்ணரின் சித்திரங்கள் என எங்கும் ஸ்ரீ கிருஷ்ணர்தான்.. வங்காளிகள் குறிப்புகள் எழுதும் முன்னரோ அல்லது கடிதம் எழுதத் தொடங்குவதற்கு முன்னரோ ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் என்று எழுதிய பின்னரே தொடங்குவர். ஸ்ரீ கிருஷ்ணர் பெயரால் அளிக்கப் படும் தானங்களும் ஏராளம். வங்க தேசத்து பறவைகள் கூட ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா என்று கூவக் கற்றுக் கொள்கின்றன. எங்கும் கிருஷ்ணர் எதிலும் கிருஷ்ணர் என்பது வங்க தேசத்தின் குரல் மட்டுமல்ல; அது  நம் பாரத தேசத்தின் குரல்.

                வங்க தேசத்தினர் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு அவதார புருஷனாக வரித்து விட்டதால் அங்கு கிருஷ்ண உணர்வில் மூழ்கிக் கிடப்பது ஒன்றே தர்மத்தை ஏந்தி செல்லும் வழியாக இருக்கிறது. இதில் சந்தேகமில்லை.தன் மூசசுக் காற்றில் கூட கண்ணனை சுமக்கும் மக்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரை விட வேறு எது சத்தியமாக இருக்கும்? ஆனால் இது போன்ற கடவுள் நம்பிக்கையாளர்களின் கடவுள் பற்றிய சிந்தனை என்னவாக இருக்கும்? தங்களது நம்பிக்கைக்கு பாத்திரமான கடவுள் எவ்வாறு பிள்ளை பிராயத்தில் வெண்ணை திருடனாக, இளம் வயதில் ஸ்திரீ லோலனாக , முடிவில் துரோணாச்சாரியார் போன்ற மூத்த குருமார்களை ஏமாற்றிக் கொன்ற கொலைபாதகனாக ஏற்றுக் கொள்ள முடிகிறது? ஹிந்து மதத்தை விமர்சிப்பவர்களின் வாதமே இது போன்ற பகுத்தறிவற்ற ஹிந்துக்களை எப்படி நம்புவது என்பதுதான். இத்தகையவர்கள் எப்படி நேர்மையுடன் இருப்பார்கள்? இந்த வாதங்களை மறுக்கக் கூடிய ஒரு வங்காளியைக் கூட நான் இது வரை சந்தித்ததில்லை.

ஸ்ரீ கிருஷ்ணரிடம் எனக்கு அளவு கடந்த பக்தி என்பதால் என் பகவானின் பழக்க வழக்கங்கள் எனக்கு தெரியும். புராணங்களையும் ,இதிகாசங்களையும் தலை கீழ் பாடமாக கற்றவன் நான். அதன் விளைவால் இதுவரை ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்ட பல விஷயங்கள் முற்றிலும்  தவறானவை என்பதை அறிந்து கொண்டேன். கட்டுக் கதைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் உட்பொருள் மிகவும் தூய்மையானது. துல்லியமானது. பிரமாண்டமானது. மனித வரலாறு முழுவதிலும் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல் ஒரு உதாரண புருஷன் இல்லை என்பதை கண்டுணர்ந்தேன். எனது இந்தப் பணியின் இரண்டு முக்கிய நோக்கங்களில் ஒன்று நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்பதை விளக்குவதாகும். இரண்டாவது ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு பாரத வீர புருஷர்களின் நடுவில் மகா புருஷராக திகழ்கிறார் என்பதை விளக்குவதாகும்.

ஸ்ரீ கிருஷ்ணரைத் தேடி

என் வாசகர்களில் பெரும்பாலானோர் பகுத்தாய்ந்து பார்ப்பவர்கள். அவர்களால் ஸ்ரீ கிருஷ்ணரை வானத்திலிருந்து வந்துதித்த அவதார புருஷனாக ஏற்றுக் கொள்ள முடியாது.

நம் முன் நிற்கும் முதல் கேள்வி ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பாரத தேசத்தில் இருந்ததற்கான உத்திரவாதம் என்ன? ஸ்ரீ கிருஷ்ணர் நிஜமாகவே இந்த மண்ணில் தோன்றி வாழ்ந்திருந்தார் எனில் அவர் எப்படி இருப்பார்? இது போன்ற கேள்விகளுக்கு நான் விடை காண முயல்கிறேன்.

ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய தகவல்கள் நமக்கு மூன்று மூல நூல்களிலிருந்து கிடைக்கின்றன. அவை 1) மகாபாரதம்.2)ஹரி வம்சம்.3).புராணங்கள்.

மேற் சொன்னவற்றில் புராணம் எண்ணிக்கையில் பதினெட்டு. நமது ஜனங்கள் பெரும்பாலோர் அத்தனை புராணங்களும் ஒரே ஆசிரியரால் எழுதப் பட்டவை என்று கருதுகிறார்கள். மாறுபட்ட கதை சொல்லும் விதம், ஒரே கதை ஒவ்வொரு புராணத்தில் ஒவ்வொருவிதமாக சொல்லப் பட்ட விதம், கதைக் குறியீடுகள் போன்றவை புராணங்கள் பல பண்டிதர்களால் பல்வேறு கால கட்டங்களில் உருவாக்கப் பட்டு தொகுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஒரு புராணமே பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பௌராணிகர்களால் பல்வேறு வடிவங்களை பெற்றது என்று நம்புவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

மொத்தப் புராணங்களிலும் சிலவற்றில் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி சிறு குறிப்பு கூட இல்லை.ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள புராணங்களில் அவரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

1.பிரம்ம புராணம். 2.விஷ்ணு புராணம்.3.வாயு புராணம்.4.ஸ்ரீமத் பாகவதம்.5.பிரம்ம வைவத்ர புராணம். 6.ஸ்கந்த புராணம்.7.வாமன புராணம்.8.கூர்ம புராணம்.

ஆனால் மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி சொல்லப்பட்ட கருத்துகளுக்கும் புராணங்களில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி கூறப்பட்டுள்ள சில செய்திகள்    ஹரி வம்சத்திலும் ஏனைய புராணங்களிலும் இல்லை என்றே கூறலாம்.மகாபாரதம் பாண்டவர்களின் கதை என்பதும், அதில் கிருஷ்ணரைப் பற்றி சொல்ல நேர்ந்தது தற்செயலானது என்பதும் காரணமாகும். மகாபாரதம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களின் நண்பன் என்பதோடு முடிந்து விடுகிறது. பாண்டவர் தவிர்த்த ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய தனிப்பட்ட குறிப்புகள் மகாபாரதத்தில் குறைவே.

மகாபாரதத்தில் கூறப் படாத செய்திகளை சொல்வதற்காகவே கூறப் பட்ட புராணம்தான் ஹரிவம்சம் என்று அதில் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விடுகின்றனர். ஸ்ரீமத் பாகவதத்திலும் இது போன்ற தெளிவான குறிப்புகள் உள்ளன. வியாச பகவான் மகாபாரதத்தில் தான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை என்பதை சூசகமாக ஒப்புக் கொள்கிறார்..இதன் காரணமாக நாரதர் வியாசரை ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி தனியாக ஒரு நூல் எழுதப் பணிக்கிறார்.

மகாபாரதம் காலத்தால் புராணங்களுக்கும்,ஹரிவம்சத்திற்கும் முந்தையது என்பது தெளிவாகிறது.மகாபாரதமே ஒரு கற்பனைக் கதை என்னும்பொழுது ஹரிவம்சமோ,ஸ்ரீமத் பகவதாமோ மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கதை மாந்தரை தமது நூல்களின் காவியத் தலைவனாக முன் வைக்கும்பொழுது அந்த பாத்திரத்தின் மீது நமக்கு எவ்வாறு நம்பகத்தன்மை ஏற்படும்?

என் சத்திய ஆராய்வில் மகாபாரதத்தில் கூறப் பட்டுள்ள செய்திகளில் ஓரளவாவது உண்மை ஒளிந்துள்ளதா என்ற என் நெடும்பயணத்தில் நான் இரண்டு சவால்களை சந்திக்க நேர்ந்தது. முதலாவது நம் பாரத மக்கள் புராணங்களை இயற்றியது ரிஷிகள் என்பதால் அவற்றில் ஒரு சிறு தவறு கூட இராது என நம்புவதுதான். மற்றொரு சவால் மேலை நாட்டு அறிஞர்களின் பார்வையில் நலிந்த,அடிமை இந்தியர்களுக்கு போராடும்  வலிமையுடன் கூடிய கடந்த காலம் என்ற ஒன்று கிடையாது என்பதாகும். அத்தகைய மேலை நாட்டு “சான்றோர்களை”  விமர்சிக்க வேண்டியது எனது தற்சமய நோக்கமன்று. அவர்கள் தற்சமயம் சமஸ்க்ருத கிரந்தங்களுக்குள் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். எனக்கு அவர்களை விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை. என் அவசியம் எல்லாம் என் இந்திய மக்களை பற்றியது மட்டும்தான். நமது துரதிர்ஷ்டம் நம் நாட்டு அறிஞர்கள் சிலர் மேலை நாட்டு அறிஞர்கள் கூறுவதை கண்மூடித்தனமாக நம்புவதை லட்சியமாகக் கொண்டுள்ளனர். கண்பார்வையற்ற ஒரு மாற்று திறனாளி வேறொரு கண்பார்வையற்ற மாற்று திறனாளியை நம்புவதைப் போல.இது போன்ற ஆங்கிலமயமாக்கப் பட்ட இந்தியர்களும் எனது  இந்த புத்தகத்தைப் படிப்பதால் ஸ்ரீ கிருஷ்ணர் குறித்த மெய்மைக் கூறுகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள்.

வரலாற்றுப் பார்வையில் மகாபாரதம்.

ஸ்ரீ கிருஷ்ணர் முதலில் ஒரு பாத்திரமாக அறிமுகம் ஆவது மகாபாரதத்தில்தான். மகாபாரதம் என்பது இயற்கைக்குப் புறம்பான , சாத்தியமற்ற, குழப்பமான நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும் பொழுது அதனை எவ்வாறு ஒரு வரலாற்று ஆய்வு நூலாக கொள்ள முடியும்? அர்த்தமற்ற பிதற்றல்கள் மலிந்த மகாபாரதத்தை முற்றிலும் வரலாற்று ஆய்விற்கு அப்பால் பட்ட நூல் என்று ஒதுக்கி விட முடியாது. தோன்றிய நாளிலிருந்தே மகாபாரதத்தை நமது நாட்டினர் ஒரு இதிகாசமாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் ஐரோப்பியர்கள் அதனை காவியமாகக் கொள்கிறார்களே தவிர வராலற்று நூலாக ஏற்றுக் கொள்வது இல்லை.இதி-ஹா-ஆசம்{ முன்னால் நிகழ்ந்தது என்ற பொருள் படும் வடமொழிச் சொல்}-இதிகாசம் என்ற பெயர் பெற்றுள்ளதால் இதனை முற்றிலும் கற்பனைக் கதை என்று ஒதுக்கி விட முடியாது. மகாபாரதத்தில் சில பகுதிகளை கற்பனைப் புனைவு என்றும், சில பகுதிகளை வரலாற்று நிகழ்வுகளாகவுமே கொள்ள வேண்டும்.

எல்லா கலாச்சாரங்களிலும்  வரலாறும், புனைவும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. மற்ற நாடுகளில் உள்ள தொல் நூல்களில் காணப்படும் அளவை விட மகாபாரதத்தில் கற்பனைப் புனைவுகள் அதிகம் இருப்பதற்கு காரணம் உள்ளது.

இயற்கையை  மீறிய, உண்மைக்குப் புறம்பான கூறுகள் ஒரு தொல் நூலினுள் இரண்டு காரணங்களுக்காக உள்ளே நுழைகின்றன.முதலில் நூலாசிரியரே நிறைய கட்டுக் கதைகளை மூல நூலில் அவிழ்த்து விடுகிறார். காலப் போக்கில் மூல நூல் திரியத் தொடங்குகிறது. மாற்றி சித்தரிக்கப் படுகிறது.

நமது இதிகாசங்கள் வாய் மொழி மூலமே அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப் பட்டன. எனவேதான் மகபாராதத்தில் காணப் படும் வரலாற்று செய்திகளுடன் கட்டுக் கதைகளும் , உண்மைக்குப் புறம்பான கற்பனைப் புனைவுகளும் கலந்திருக்க வேண்டும். இந்த காரணத்தால்தான் மகாபாரதத்தில் மற்ற நாட்டு தொல் நூல்களில் காணப் படுவதையும் விட அதிகமான கட்டுக் கதைகள் மலிந்து காணப் படுகின்றன.

மற்ற நாடுகளில் தோன்றிய ஆவணங்களையும் விட மகாபாரதம் தான் தோன்றிய பாரத மண்ணில்மிக பிரசித்தி பெற்ற ஆவணமாக மாறத் தொடங்கியதால் காலங்கள் தோறும் மகாபாரத ஆசிரியர்கள் தன் வாசகர்களுக்கு தன் கற்பனைத் திறத்தை கலந்து புனை கற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

ரோமாபுரி,.கிரேக்க . நாட்டு ஆசிரியர்களைப் போல தாம் இயற்றிய நூலில் கையொப்பம் இடும் பழக்கம் இல்லாதவர்கள் நமது பண்டைய நூலாசிரியர்கள் . இதன் காரணமாக கால ஓட்டத்தில் ஒரு படைப்போ ஆவணமோ மூல நூலை விட்டு அதிக தூரம் வந்து விடுவதை தவிர்க்க முடிவதில்லை.

ஆயினும் மகாபாரதத்தில் முற்றிலும் வரலாற்று செய்திகள் இல்லை என்று புறந்தள்ளி விட முடியாது.

 

பாண்டவர்கள்

பண்டைய சமஸ்க்ருத நூல்களை ஆராய்ந்த பின்பு நான் ஒரு முடிவுக்கு  வந்துள்ளேன். யுதிர்ஷ்டர் அலெக்சாண்டர் சக்கரவர்த்தியை எதிர்த்த சந்திர குப்தரின் காலமான கி.பி.335க்கு முன்னால் சற்றேறக் குறைய 1115 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பதுதான் அந்த முடிவு.

மகாபாரதத்தின் மூலப் பிரதியில் பாண்டவர்கள் பற்றிய குறிப்புகள் கிடையாது. ஜெர்மானிய  அறிஞர் லேசன் என்பவர் மகாபாரதத்தில் கூறப்படும் மகா யுத்தம் குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால தேசத்தவருக்கும் இடையில் நிகழ்ந்தது என்று கூறுகிறார். இவர் கூற்றை அப்படியே எடுத்துக் கொண்டாலும் அந்த மகாயுத்தம் குரு வம்சத்தினருக்கும் பாஞ்சால தேசத்தினருக்கும் இடையில் என்ற போதும் பாண்டவர்களை புறக் கணிக்க இயலாது. ஏன் எனில் பாஞ்சால மன்னனின் மருமக்களாகிய பாண்டவர்கள் மாமனாரை எதிர்த்து திருதராட்டினனின் புதல்வர்கள் வரும்பொழுது உதவிக்காக போர் புரிந்திருப்பார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

ஐரோப்பியர்கள் பாண்டவர்களின் இருப்பை பற்றி ஐயப்படுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. மகாபாரதத்தின் சமகால நூல்கள் எதிலும் பாண்டவர்கள் பற்றிய குறிப்பு காணப் படாததே இதற்கு காரணம். இதற்கு என்னால் எளிய முறையில் விடை அளிக்க முடியும். இந்திய பாரம்பரியத்தில் வரலாற்று தொகுப்பு எழுதும் பழக்கம் இருந்தது கிடையாது. உதாரணமாக எந்த இந்திய தொல் நூலிலும் மாவீரன் அலெக்ஸாண்டர் படையெடுப்பு குறித்து தகவல்கள் இல்லை. அதற்காக அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படை எடுத்து வரவில்லை என்று அர்த்தமாகாது.

எனவே நம்மால் பாண்டவர்கள் இருப்பைப் பற்றியோ இருப்பின்மை பற்றியோ அறுதியிட்டு கூற முடியாது.

மகாபாரதத்தில் இடை செருகல்களும் திரிபுகளும்

இதுகாறும் நான் கூறியவற்றில் இருந்து மகாபாரதத்தில் வரலாற்றுக் கூறுகளும் இருக்கின்றன என்பதற்கு காரணங்கள் உள்ளன.எனவே இந்த வரலாற்று கூறுகளிலிருந்துஸ்ரீ கிருஷ்ணரை வடிவமைப்பது ஒன்றே என் பணியாக என் முன் நிற்கின்றது.  அத்தகைய வரலாற்று கூறுகள் என்று நம்பப் படுகின்ற பகுதிகளிலிருந்துதான் என்னால் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை வெளிக் கொணர இயலும்.  மற்ற நூல்களான ஸ்ரீமத் பாகவதத்திலிருந்தும்,ஹரி வம்சம் மற்றும் விஷ்ணு புராணம் ஆகிய நூல்களில் மட்டும் காணப்படும் செய்திகளையும் கணக்கில் எடுத்து கொள்ள போகிறேன்.சில பகுதிகள் மேற்கூறிய மூன்று புத்தகங்களில் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளன. மகாபாரதத்தில் இந்த குறிப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.இருப்பினும் நாம் ஒன்றை கவனத்தில்கொள்ள வேண்டும்.மகாபாரதத்திற்குப் பின் எழுதப்பட்ட நூல்களில் வரலாற்றிலிருந்து விலகிய உண்மைக்கு எதிரான கற்பனைப் புனைவுகளே மிகுந்து காணப்படுகின்றன.. இடைச் செருகல்களும்,கற்பனை திரிபுகளும் மிகுந்து காணப்படுகின்றன .கால ஓட்டத்தில் மிகைப் படுத்துதலும் மாற்றி கூறுதலும் தவிர்க்க இயலாத மனித இயல்பு.

 

மகாபாரதத்தில் செயற்கையும், இயற்கை மிகுதலும்

மகாபாரதத்தை முழுமையாகப் படிப்பவர்களுக்கு அது மூன்று தனி தனி தளங்களில் இயங்குவது விளங்கும். முதல் தளத்தில் மகாபாரதத்தின் ஊடுசரமாக விளங்கும் பிரதான கதைப் பகுதி. இது முற்றிலும் வரலாற்று ஆவணமாகவே விளங்குகிறது. இரண்டாவது தளம் நாடகப் படுத்த வேண்டிய காரணத்தால் பிரதான கதைப்பகுதி மிகைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாகும். மூன்றாவது தளம் என்பது மூலக் கதைக்கு சற்றும் தொடர்பில்லாத புனை கதைகளின் தொகுப்பாகும்.

எனவே மூலக் கதையை மற்ற இரண்டு தளங்களிலிருந்து எப்படி பிரித்து எடுப்பது என்று பார்ப்போம்.

1.மகாபாரதத்தில் எந்தப் பகுதியாக இருப்பினும் அதில் உள்ள இடைச் செருகல்களை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.

2.முற்றிலும் செயற்கையான அல்லது மிகு இயற்கையான நிகழ்வுகளை ஒதுக்கி விட வேண்டும்.

3.இடைச் செருகல் இன்றி இயல்புடன் சில பகுதிகள் தோன்றினாலும் அவை உண்மைக்குப் புறம்பானவைகளாகத் தோன்றுமேயானால் அவற்றையும் கணக்கில் கொள்ளக் கூடாது.

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 24ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை
author

சத்தியப்பிரியன்

Similar Posts

11 Comments

  1. Avatar
    paandiyan says:

    // என் அவசியம் எல்லாம் என் இந்திய மக்களை பற்றியது மட்டும்தான். நமது துரதிர்ஷ்டம் நம் நாட்டு அறிஞர்கள் சிலர் மேலை நாட்டு அறிஞர்கள் கூறுவதை கண்மூடித்தனமாக நம்புவதை லட்சியமாகக் கொண்டுள்ளனர். கண்பார்வையற்ற ஒரு மாற்று திறனாளி வேறொரு கண்பார்வையற்ற மாற்று திறனாளியை நம்புவதைப் போல.இது போன்ற ஆங்கிலமயமாக்கப் பட்ட இந்தியர்களும் எனது இந்த புத்தகத்தைப் படிப்பதால் ஸ்ரீ கிருஷ்ணர் குறித்த மெய்மைக் கூறுகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள்.

    //
    true .. true…

  2. Avatar
    ஷாலி says:

    “இடமறுகுவின் நூல் ‘கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்தவர்கள் அல்ல’

    “கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்தவர்களே என்று நான் அறுதியிட்டு சொல்வேனா? அப்படிச் சொல்லுமளவுக்கு எனக்கு அறியாமை இல்லை. ஆழமாக மதநம்பிக்கை அல்லது இடமறுகு போல ஆழமான எதிர்மதநம்பிக்கை இருந்தால் மட்டுமே அப்படி எதோ ஒன்றை உறுதியாகச் சொல்ல துணிவுவரும். நான் வரலாற்றையும் தத்துவத்தையும் ஆராய்பவன் மட்டுமே. ஆகவே இவ்வாறு சொல்வேன். கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வரலாற்று மனிதர்களாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகளே பெரும்பாலும் உள்ளன. பண்டைய நூல்கள் கூறும் தகவல்களைக்கொண்டு அந்த ஊகத்துக்கே செல்ல முடியும்
    அவ்விருவருடைய வரலாறுகளும் தொன்மமாகவே பதிவாயின. தொன்மமாக நீடித்தன. தொன்மங்கள் அடையும் எல்லா பரிணாமத்தையும் அவை அடைந்தன. தொன்மங்கள் கொள்ளும் எல்லா உரையாடல்களையும் அவை மேற்கொண்டன. அந்த வளர்ச்சிப்போக்கின் உச்சநிலையில் நமக்கு அவை இன்று கிடைக்கின்றன.”—–ஜெய மோகன்.
    நம்ம க்ருஷ்ண குமாரு இயேசு கிறிஸ்து வாழ்ந்ததுக்கு ஆதாரம் கேட்கிறார். ஜோசப் இடமறுகு ஸ்ரீ கிருஷ்ணனையும் சேர்த்துக்கொண்டார். விஷ்ணுபுரம் ஜெய மோகன் இருவரும் வாழ்ந்திருக்கலாம் என்ற ஊகத்திற்கு செல்கிறார்.குமாரண்ணே! உங்க ஜெயமோகன் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

  3. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீ சத்தியப்பிரியன்,

    உங்கள் வ்யாசத்தின் நாயகர் பெயர்

    பங்கிம் சந்த்ர சட்டர்ஜி. (பக்கிம் அல்ல)

    பேச்சு வழக்கு ஹிந்தியில் சந்த்ர என்பது சந்தர் என்று மறுவும்.

    பாங்க்ளாவில் பொங்கிம் சொந்த்ரோ சோட்டோபாத்தாய்

  4. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி

    ஒரு விஷயத்தைக் கூர்ந்து focussed ஆக உங்களால் விவாதம் செய்ய இயலும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. நான் காசி பற்றிப் பேசினால் நீங்கள் கோண்டா பற்றிப் பேசுவீர்கள். Still it goes.

    \ நம்ம க்ருஷ்ண குமாரு இயேசு கிறிஸ்து வாழ்ந்ததுக்கு ஆதாரம் கேட்கிறார். \

    mistaken. இது சம்பந்தமாக சில புஸ்தகங்கள் வாசித்துள்ளேன். முக்யமாக ஸ்ரீ சீதாரம் கோயல் அவர்களின் “Jesus Christ – An artifice for aggression”. iஇதற்கு ஆதரவான விமர்சனங்கள், நடுனிலை சார்ந்த விமர்சனங்கள், எதிரான விமர்சனத்தில் கருவசிரா (My spelling may be wrong) போன்றோர். ஏசு க்றிஸ்து வாழ்ந்ததற்கு ஆதாரம் கேட்கிறார் என்பது தவறு.

    நீங்கள் ப்ரகடனம் ஆவதற்கு முன் என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக வ்யாசம் பதிவேறியது. ஸ்ரீமான் ஜெயபாரதன் மற்றும் அன்பர் ஜான்சன் போன்றோர் …… அப்போது காவ்யா என்ற பெயரிலா தமிழ் என்ற பெயரிலா நினைவில்லை…இவர்….எல்லோரும் விவாதம் சரித்ரச் சான்றுகள் படி மட்டும் நடந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். நான் வாசித்தறிந்த படிக்கு “ஏசு” என்ற நபர் சரித்ரத்தில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை.

    \ உங்க ஜெயமோகன் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?\

    ஸ்ரீ ஜெயமோகன் அவர்கள் நான் மிகவும் மதிக்கும் தமிழ் எழுத்தாளர். நான் மிகவும் ரசித்து வாசித்தது அவரது வணங்கான் என்ற கதை. அதே சமயம் தமிழ் ஹிந்து தளத்தில் ஸ்ரீ அ.நீ அவர்கள் அன்பர் நேசமணி பற்றி — வேறொரு அன்பர் எழுதிய நூலறிமுகம். I perfectly got a balanced view reading both. May be since your views are extremely one sided, you may not appreciate a balanced view perhaps……

    Many concepts / tools / techniques are followed to arrive at a date of person believed to have lived on this earth. And scholarly focussed articles have been written on some personalities.

    கண்ணன் எனும் கார்மேக வண்ணன் – எனக்கு அவதாரம்.

    த்வாரகை சமுத்ரத்தில் நிகழ்ந்த சில ஆய்வுகளில் அங்கு அமிழ்ந்த ஒரு நகரத்தைப் பற்றி சமீபத்தில் வ்யாசங்கள் வாசித்ததாக் நினைவு உண்டு. ஆனால் கண்ணன் சரித்ரத்தில் இருந்த ஒரு நபர் என்று கருத…. நான் வாசித்த புஸ்தகங்களிலிருந்து ஒரு முடிவை என்னால் எட்ட முடியவில்லை.

  5. Avatar
    ஷாலி says:

    க்ருஷ்ணகுமார் says:
    September 19, 2013 at 2:41 pm

    // நான் வாசித்தறிந்த படிக்கு “ஏசு” என்ற நபர் சரித்ரத்தில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை………//

    // ஆனால் கண்ணன் சரித்ரத்தில் இருந்த ஒரு நபர் என்று கருத…. நான் வாசித்த புஸ்தகங்களிலிருந்து ஒரு முடிவை என்னால் எட்ட முடியவில்லை.//

    நன்றி! நன்றி!! நன்றி!!! திரு.க்ருஷ்ணாஜி, அவர்களே!

  6. Avatar
    IIM Ganapathi Raman says:

    மொழியாக்கம் நேர்மையாகச் செய்யப்பட வேண்டும். ஆசிரியர் சொல்லாத அல்லது சொல்ல நினைக்காதவொன்றா தானே ஏற்றி வாசகர்களை மதிமயங்க வைத்துத் தன்பக்கம் இழுக்கக்கூடாது.

    //அத்தகைய மேலை நாட்டு “சான்றோர்களை” விமர்சிக்க வேண்டியது எனது தற்சமய நோக்கமன்று. //

    இந்த்ச் சான்றோர்கள் என்ற சொல்லை, ஆசிரியரே குறீயீட்டடைப்புக்களில் போட்டிருக்கிறாரா? இல்லை சத்தியப்பிரியன் போட்டாரா? சத்தியப்பிரியன் போட்டாரென்றால், அவர் தன் பெயரின் பொருளையே சிதைக்கிறார்.

    இல்லை ஆசிரியர் போட்டிருந்தால் நோ காமெண்ட்ஸ்.

  7. Avatar
    IIM Ganapathi Raman says:

    பி சி சட்டர்ஜி ஒரே கட்டுரைக்குள்ளேயே இருவகையில் ஒரு கருத்தைச்சொல்கிறார்.

    மேலை நாட்டு அறிஞர்கள் குருடர்கள். அவர்களைப்படிக்கும் இந்தியர்களும் குருடர்கள். இப்படிப்படிப்பதைப் பார்க்கும் போது பி சி சட்டர்ஜிக்குத் தோன்றுவது இயேசுவின் கருத்தாம்: If bilind leads the bilind, both shall fall into the pitch. குருடனை குருடன் வழிநடாத்தும்போது இருவரும் குழிக்குள் தவறிவிழுவது நடக்கும் என்றார் இயேசு.

    இப்படிச்சொன்ன பி சி சட்டர்ஜி, இப்படியும் எழுதுகிறார்.

    //ஜெர்மானிய அறிஞர் லேசன் என்பவர் மகாபாரதத்தில் கூறப்படும் மகா யுத்தம் குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால தேசத்தவருக்கும் இடையில் நிகழ்ந்தது என்று கூறுகிறார். இவர் கூற்றை அப்படியே எடுத்துக் கொண்டாலும் அந்த மகாயுத்தம் குரு வம்சத்தினருக்கும் பாஞ்சால தேசத்தினருக்கும் இடையில் என்ற போதும் பாண்டவர்களை புறக் கணிக்க இயலாது. ஏன் எனில் பாஞ்சால மன்னனின் மருமக்களாகிய பாண்டவர்கள் மாமனாரை எதிர்த்து திருதராட்டினனின் புதல்வர்கள் வரும்பொழுது உதவிக்காக போர் புரிந்திருப்பார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

    ஐரோப்பியர்கள் பாண்டவர்களின் இருப்பை பற்றி ஐயப்படுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. மகாபாரதத்தின் சமகால நூல்கள் எதிலும் பாண்டவர்கள் பற்றிய குறிப்பு காணப் படாததே இதற்கு காரணம். இதற்கு என்னால் எளிய முறையில் விடை அளிக்க முடியும். இந்திய பாரம்பரியத்தில் வரலாற்று தொகுப்பு எழுதும் பழக்கம் இருந்தது கிடையாது. உதாரணமாக எந்த இந்திய தொல் நூலிலும் மாவீரன் அலெக்ஸாண்டர் படையெடுப்பு குறித்து தகவல்கள் இல்லை. அதற்காக அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படை எடுத்து வரவில்லை என்று அர்த்தமாகாது.

    எனவே நம்மால் பாண்டவர்கள் இருப்பைப் பற்றியோ இருப்பின்மை பற்றியோ அறுதியிட்டு கூற முடியாது.//

    ஜர்மானிய அறிஞர் லேசனின் கூற்றை ஓரளவுக்கு எடுத்துக்கொள்கிறார். மற்ற ஐரோப்பிய அறிஞர்களையும் மதித்து எடுத்துக்கொண்டு கருத்தளவில்தான். பின்னர் அக்கருத்திலிருந்து மாறுபடுகிறார். இது சரி.

    பின் ஏன் ஐரோப்பிய அறிஞர்கள் குருடர்கள் என்றார்?

    மை ஓன் டேக.

    எல்லா ஐரோப்பிய அறிஞ்ர்களும் இந்திய் வரலாற்றையோ இந்து மதத்தையோ பற்றி ஆராய்ந்து சொன்னவையெல்லாம் ஒரு அடிப்படை உள்ளோக்கம் கொண்டது; அதாவது இந்தியர்களைத் தம் மதத்தை வெறுத்து கிருத்துவர்களாக்குவதே என்பது இந்துதவா சிந்த்னையாகும்.

    அவர்களின் சிலர் இருக்கலாம். அவர்களை இலகுவாக இனங்காணவியலும். அதே சமயம், பல அறிஞர்க்ள் தம் வாணாளையே இப்படிபபட்ட ஆராய்ச்சிகளில் காய்தல் உவத்தலின்றி செய்தனர். தே ஹாட் ஓபன் மைண்ட. நம்மிடம் இருப்பது குளோஸ் மைண்டு. காக்கைக்கு தன்குஞ்சு பொன் குஞசல்லவா?

    சீத்தாராம் கோயலை அடிக்கடி எடுத்துக்காட்டுகிறார் இங்கு எழுதும் சிலர். அவரை இந்துத்த்வாவினர் மட்டுமே ஏற்கின்றனர். உலகப்பொதுவரங்கில் ஏற்றுக்கொள்ளப்படட்டும். பின்னர் நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

    1. Avatar
      சத்தியப்பிரியன் says:

      ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் வாங்க மொழியில் எழுதப் பட்டது.இது கிட்டத்தட்ட 600 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சி நூலாகும்.பிர்லா கல்வி தொண்டு நிறுவனம் இதை அப்படியே மொழி பெயர்த்து ஒரு புத்தகமாக வெளி இட்டுள்ளது.இதன் முக்கிய பகுதிகளை ஆசாம் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திருமதி.ஆலோ ஷோம் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதுவும் 300 பக்கங்கள் கொண்ட புத்தகம்.இந்த மொழி பெயர்ப்பில் ஒரு வாசகம் கூட என்னுடையது கிடையாது.மிகவும் நேர்மையாகவே மொழி பெயர்த்துள்ளேன் என்பதை முதலிலேயே குறிப்பிட்டு விடுகிறேன். என் நோக்கம் என்பது ஒன்றே ஒன்றுதான்.நமது பாரம்பரியத்தில் தொன்மையான விஷயங்களுக்கு ஆவணங்கள் செவி வழி தகவல்கள் மட்டுமே.கட்டு கதைகள் கவி வடிவம் பெரும்பொழுது அதன் மையத்தகவல்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொரு வடிவம் பெற்று விடுகிறது.எனவே புராணக் கதைகளுக்குப் பின்னால் எங்கோ ஒரு உண்மை ஒளிந்திருக்கும்.அந்த உண்மையை கொண்டு வர வேண்டும் என்பது என் நோக்கம்.எனக்கு என் கலாச்சார சூழலின் படி கிருஷ்ணனையும் ராமனையும் பற்றிதான் தெரியும். எனவேதான் இந்த மொழி பெயர்ப்பு.இதன் குரல் ஆலோ ஷோம் மற்றும் பங்கிம்மின் குரலே அன்றி என் குரல் அல்ல.

  8. Avatar
    ஜடாயு says:

    ஸ்ரீகிருஷ்ணரை கலாசார, வரலாற்று, பண்பாட்டு நோக்கில் அணுகி ஆராய்ந்து முன்வைக்கும் முக்கியமான நூல் பங்கிம் சந்திரருடையது. 120 வருடங்களுக்குப் பிறகும் கூட இந்த நூல் கூறும் கருத்தாக்கங்கள் நமக்கு சில திறப்புகளையும் தரிசனங்களையும் அளிக்கக் கூடும். இந்த மாபெரும் நூலை தமிழில் மொழிபெயர்க்க முன்வந்திருப்பதே மகத்தான பணி. மொழிபெயர்ப்பும் மிக சீராக, அருமையாக உள்ளது. மனமார்ந்த பாராட்டுக்கள் சத்தியப் பிரியன் அவர்களே.

  9. Avatar
    IIM Ganapathi Raman says:

    ஸ்ரீகிருஷ்ணர் ஒரு வரலாற்று நபர் என்றால் ஓகே. படித்துப்பார்த்து ‘சில திறப்புக்களையும் தரிசனங்களையும் -பக்கிம் சந்திரரிடமிருந்து பெற்று, எப்படி இராஜ இராஜ சோழனையோ, அரிமர்த்த பாண்டியனையோ, அல்லது ஈவேராவையோ – ஏனென்றால் இவர்களெல்லாம் வரலாற்று நபர்கள் – பார்க்கிறோமோ அப்படி பார்த்து சிறப்பிக்கலாம். விரும்பியவர்கள் கோயில்கள் கட்டிக்கொள்ளலாம். எம் ஜீ ஆருக்கு கட்டியிருப்பதைப்போல.

    ஆனால், ஒரு ஸ்ரீகிருஷ்ணர் முழுமுதற்கடவுள். அல்லது முக்கடவுள்களுல் ஒன்று. அல்லது ஒரே ஏக இறைவன். என்று தொழுபவர்களுக்கு இப்படி ‘திறப்புக்களும், தரிசனங்களும்’ தேவையில்லை.

    இந்துக்களைவிட தம் கடவுளை இழிமைப்படுத்தும் மத்ததவரை பார்த்ததில்லை.

    ஸ்ரீகிருஷ்ணர் வரலாற்று நபராக ஜடாயுக்கும் சந்திரருக்கும் இருக்கட்டும். வேண்டாமெனச் சொல்லவில்லை. மற்றெல்லா இந்துக்களுக்கும் அவரே ஏக இறைவனாக இருப்பதைத்தடுக்க வேண்டாம்.

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *