இந்த வாரம் गत (gata) அதாவது சென்ற (கடந்த) மற்றும் आगामि (āgāmi) அதாவது ‘ இனிமேல் வருகிற’ என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
எப்போதும் कदा (kadā) அதாவது எப்போது ? அல்லது எத்தனை மணிக்கு ? என்ற வினாவின் விடை सप्तमीविभक्तिः(saptamīvibhaktiḥ) ஏழாவது வேற்றுமையில் அமையும் என்று ஏற்கனவே படித்தோமல்லவா?
उदा – अरुणः कदा उत्तिष्ठति ?
aruṇaḥ kadā uttiṣṭhati ?
அருண் எப்போது எழுகிறான்?
अरुणः षड्वादने उत्तिष्ठति
!
aruṇaḥ ṣaḍvādane uttiṣṭhati !
அருண் ஆறுமணிக்கு எழுகிறான்.
இதேபோல் சென்ற வாரம் , சென்ற மாதம், சென்ற வருடம் மற்றும் சென்ற தினம் ஆகிய சொற்களை உபயோகிக்கும்போதும், வருகிற (அடுத்த) நாள், வருகிற வாரம், வருகிற மாதம் மற்றும் அடுத்த வருடம் போன்ற வார்த்தைகள் सप्तमीविभक्तिः (saptamīvibhaktiḥ) அதாவது ஏழாவது வேற்றுமையில் அமையும் .
கீழேயுள்ளஉதாரணங்களைஉரத்துப்படிக்கவும்.
गत मासे निर्वाचनम् आसीत्।
gata māse nirvācanam āsīt |
சென்ற மாதத்தில் தேர்தல் இருந்தது.
गत दिने मम गृहे पूजा आसीत्।
gata dine mama gṛhe pūjā āsīt|
சென்ற தினம் என்னுடைய வீட்டில் பூஜை நடந்தது.
आगामि सप्ताहे मम मित्रम् आगमिष्यति।
āgāmi saptāhe mama mitram āgamiṣyati|
வருகிறவாரத்தில் என்னுடைய நண்பர் வருவார்.
आगामि वर्षे अहम् प्रवासं गमिष्यामि।
āgāmi varṣe aham pravāsaṁ gamiṣyāmi |
வருகிற வருடத்தில் நான் பிரயாணம் செல்வேன்.
गतदिने मम गृहे पर्व आसीत्।
gatadine mama gṛhe parva āsīt |
சென்ற தினத்தில் என்னுடைய வீட்டில் பண்டிகை இருந்தது.
आगामिवर्षे अहं एम् . ए . पठिष्यामि।
āgāmivarṣe ahaṁ eam. e .
paṭhiṣyāmi |
வருகிற வருடத்தில் நான் எம்.ஏ படிப்பேன்.
आगामिपर्वदिने अहं नूतनवस्त्रं क्रेष्यामि।
āgāmiparvadine ahaṁ nūtanavastraṁ kreṣyāmi |
வருகிற பண்டிகைதினத்தில் நான் புதிய ஆடை வாங்குவேன்.
प्रपरह्यः (praparahyaḥ) நேற்று முன்தினத்திற்கு முன்தினம், परह्यः (parahyaḥ) நேற்று முன்தினம், ह्यः (hyaḥ) நேற்று ஆகியவை गतकालः (gatakālaḥ) ஏற்கனவே நடந்து முடிந்த காலங்கள்.
श्वः (śvaḥ) நாளை, परश्वः (paraśvaḥ) நாளை மறுநாள், प्रपश्वः (prapaśvaḥ) நாளை மறுநாளுக்கு மறுநாள் ஆகியவை आगामिकालः (āgāmikālaḥ) வருகிற காலத்தைக் குறிக்கிறது.
अद्य (adya) இன்று என்பது சொல்லப்படுகிற நேரத்தைப் பொறுத்து ஏற்கனவே நடந்து முடிந்த காலத்தையோ அல்லது வருகிற காலத்தையோ குறிக்கும்.
अभ्यासः (abhyāsaḥ ) பயிற்சி 1
१. गतसप्ताहः – गोविन्दः
gatasaptāhaḥ – govindaḥ
சென்ற வாரம் – கோவிந்தன்
२. गतमासः – निर्देशकः
gatamāsaḥ – nirdeśakaḥ
சென்றமாதம் – தலைமை நிர்வாகி (director)
३. गतवर्षम् – मन्त्री
gatavarṣam
– mantrī
சென்றவருடம்
– மந்திரி
४. गतमार्च्मासः – स्नेहितः
gatamārcmāsaḥ – snehitaḥ
கடந்த மார்ச்மாதம் – நண்பன்
५. आगामिसप्ताहः – कार्यकर्तृगोष्ठी
āgāmisaptāhaḥ – kāryakartṛgoṣṭhī
வருகிறவாரம்
– செயற்குழு கூட்டம்
६. आगामिमासः – वार्षिकोत्सवः
āgāmimāsaḥ – vārṣikotsavaḥ
வருகிற மாதம்
– ஆண்டுவிழா
७. आगामिचैत्रमासः – वसन्तोत्सवः
āgāmicaitramāsaḥ – vasantotsavaḥ
வருகிற சித்திரைமாதம்
– வசந்தகால விழா
८. आगामिकालः – देशोभिवृद्धिः
āgāmikālaḥ – deśobhivṛddhiḥ
வருகிற காலம்
– தேச முன்னேற்றம்
९. गतवर्षम् – देहलीनगरम्
gatavarṣam
– dehalīnagaram
சென்றவருடம் – டெல்லிநகரம்
१०. गतदिनम् – पर्व
gatadinam
– parva
சென்ற தினம் – பண்டிகை
उदा(udā) உதாரணம் –
१. गतसप्ताहे गोविन्दः मम कार्यालयम् आगतवान्।
gatasaptāhe govindaḥ mama kāryālayam āgatavān |
கடந்த வாரத்தில் கோவிந்தன் என்னுடைய அலுவலகம் வந்திருந்தார்.
उपरितनकोष्ठकस्यआधाराणवाक्यानिलिखन्तु।
uparitanakoṣṭhakasya ādhārāṇa vākyāni likhantu |
மேலேஉள்ளஅட்டவணையின்உதவியுடன்வாக்கியங்களைஅமையுங்கள்.
२. ———— निर्देशकः मम कार्यालयम् आगतवान्।
————
nirdeśakaḥ mama kāryālayam āgatavān |
३. ————-
मन्त्री मम कार्यालयम् आगतवान्।
————- mantrī
mama kāryālayam āgatavān |
४. ————- ————– मम कार्यालयम् आगतवान्।
————-
————– mama kāryālayam āgatavān |
५. आगामिसप्ताहे कार्यकर्तृगोष्ठी भविष्यति।
āgāmisaptāhe kāryakartṛgoṣṭhī bhaviṣyati |
६. ————— वार्षिकोत्सवः ——————-।
————— vārṣikotsavaḥ ——————- |
७. ————————– ———— —————–।
————————– ———— —————– |
८. ——————- —————— ——————-।
——————- —————— ——————- |
९.
———- अहं ————–
आसम्।
————— ahaṁ —————— āsam |
१०.
———– मम गृहे पर्व आसीत्।
—————- mama gṛhe parva āsīt |
இந்த வாரம் பயின்ற गत (gata) மற்றும் आगामि (āgāmi) ஆகியவைகளை உபயோகித்து சுலபமான வாக்கியங்களை அமைத்துப் பேசிப் பழகவும்.
- பயணத்தின் மஞ்சள் நிறம்..
- விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை
- இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி
- ஏமாற்றம்
- ஆர்வமழை
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நீங்களும் எழுதலாம்.
- குற்றங்கள்
- வாய்ப்பு:-
- அவரைக்கொடிகள் இலவமாய்
- விசித்திர சேர்க்கை
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 10
- தியாகங்கள் புரிவதில்லை
- ஒன்றின்மேல் பற்று
- முடிவை நோக்கி…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)
- ஜென் – ஒரு புரிதல் பகுதி 3
- காதல் பரிசு
- எனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை
- செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை
- பழமொழிகளில்….பசியும், பசியாறுதலும்
- தையல் கனவு
- மீளா நிழல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)
- அரசாணை – ஐந்தாண்டுகளுக்கு!
- குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம். -3
- உபாதை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 42
- பஞ்சதந்திரம் – தொடர் முகவுரை
- புறக்கோள் அறிமுகம்: திரவ நிலையில் தண்ணீருடன் இருக்கக்கூடிய புறக்கோள் (exoplanet) கண்டுபிடிப்பு
- திமுக அவலத்தின் உச்சம்
I want to learn from to day. But I do not know to see the earlier lessons so as to start with ! ?
G.Varadarajan, SALEM.
varadangopalan@gmail.com