தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

thevadasi

எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம் இது. என்ன அழகான ஆனால் அர்த்தமும் தகுதியும் பெற்ற தலைப்பு. தேவதாசி குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தால் தேவதாசியாக அறியப்பட்டு தன் தேர்வினாலும் தளராத முனைப்பினாலும் வாழ்ந்த வாழ்க்கை மகானாக உயர்த்தியுள்ளது. புத்தக மதிப்புரையைப் படித்ததும் அது தன்னையே பரிசுக்கு உயர்த்திக்கொண்டது, பரிசும் கிடைத்தது. எல்லாம் சரி. அது படித்தாக வேண்டும். காலச்சுவடு பதிப்பித்தது தான் என்றாலும் ஏதோ சுற்று வழியில் தான் என் கவனத்திற்கு வந்து சேர்ந்தது தற்செயலாக. பின் அதைத் தவறவிடுவார்களா?

நாகரத்தினம்மா கேள்விப்பட்ட பெயர் தான். பங்களூரிலிருந்து வந்த ஒரு தேவதாசி. சங்கீதம் தெரிந்தவர். தியாகராஜரிடம் அதீத பக்தி கொண்டவர். பிருந்தாவனம் என்று சொல்லப்பட்டாலும் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கும் தியாகராஜர் சமாதி கண்டு வேதனைப் பட்டு இன்று நாம் அறிந்த தியாக ராஜர் விக்கிரஹமும் கோவிலும் ஆராதனை விழாக்களும் நடக்கக் காரணமானவர் என்ற அளவுக்குத் தான் எனக்கு அவர் பற்றிய விவரங்கள் தெரியும்.

தென்னிந்தியாவிலேயே மற்ற மாநிலங்களைவிட தமிழ் நாட்டில் தான் கர்நாடக சங்கீத உபாசகர்கள் அதிகம். தஞ்சை அத்தகைய வளம் கொண்டது. மற்ற மாநிலத்தவர் சென்னை வந்து தம் வித்வத்தைக் காட்டினால் தான் அங்கீகாரம் பெறுவர் என்று சொல்லப்பட்டது. அது அப்படித் தான் இருந்ததும் கூட. இருந்தும் தஞ்சையில் வாழ்ந்த ஒரு மகத்தான வாக்யேக்காரரை, அவரது சிஷ்ய பரம்பரை இங்கு தான் சுற்றியிருந்த தில்லை ஸ்தானம், உமையாள்புரம் போன்ற கிராமங்களில் வாழ்ந்திருந்தாலும் தியாகராஜருக்கு ஒரு தேவதாசி பங்களூரிலிருந்து வரவேண்டியிருந்தது அவரது நினைவுகளைப் புதுப்பிக்க, அச்சுடர் மீண்டும் கொழுந்து விட்டெரிய, இப்படித்தான் என் மனது சலனித்துக்கொண்டிருக்கும். அதிகம் ஆச்சரியப் படத் தேவையில்லை.தியாகராஜர் இறந்து கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆகப் போகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன் மறைந்த இன்னொரு தியாகராஜர் சமாதியை திருச்சியில் எங்கோ ஒரு இடத்தில் கேட்பாரற்று புதர் மண்டிக்கிடக்கும் புகைப்படத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். இந்த தியாகராஜர் வாக்யேயக்காரர் இல்லை. சினிமா பாடகர் தான். என்றாலும், குரல் கேட்டதுமே நின்று முழுதுமாகக் கேட்கத் தூண்டும் குரல், பாட்டு. மறைந்து அறுபது வருடங்களுக்கு கிட்டத்தட்ட ஆகிறது. காலம் மாறிவிட்டது. “உன்னை எவண்டி பெத்தான், பெத்தான், அவன் என் முன்னாலே வந்தா செத்தான் செத்தான்,” “கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லே ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கலாமா?” வகையறா கீர்த்தனைகளும், வாக்யேயக்காரர்களும் மக்கள் மனதில் ஆட்சி செய்யும் காலத்தில். அப்படித்தான் இருக்கும். புதர் தான் மண்டிப் போகும். உ.வே.சா வாழ்ந்த இல்லம் உருத்தெரியாது பாழாகிக்கிடக்க அங்கு ”அவர் தகுதிக்கும் பெருமைக்கும் ஏற்ற ஒரு மண்டபம்” எழுப்பும் சிந்தனைகள் ஆட்சி செய்யும் காலம்.

நாகரத்தினம்மாவின் ஆரம்பங்கள் அப்படி ஒன்றும் பிரகாசமானதல்ல. அவர் நாம் இன்று கொள்ளும் அர்த்தத்தில், தேவதாசியாக புகழும் செல்வமும் பெறக்கூடியவரும் அல்லர். சிகப்புத்தான். ஆனால் குள்ளமும் பருமனுமான தேகவாகு கொண்டவர். அதெல்லாம் போக குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு இடத்தில் நிலைக்க விடாது விரட்டி அடிக்கப்பட்டவர். 13 வயதில் தாயையும் இழந்தவர். தனித்துவிடப்பட்ட ஒரு குள்ளமும் பருமனுமான ஒரு பெண் பெற்ற வித்வத்தையும், சாதித்த சாதனைகளையும் தனக்காக்கிக் கொள்ள முடிந்தது என்பது வியப்புதான்.

நாகரத்தினம்மா எந்தக் கோவிலுக்கும் தேவதாசியாக பொட்டுக்கட்டப்பட்டவர் இல்லை. கர்னாடகாவில் நஞ்சன் கூடு கோவிலைச் சார்ந்த தேவதாசி புட்டலக்ஷ்மிக்கு 1878-ம் வருடம் மகளாகப் பிறந்தவர் நாகரத்தினம்மா. அப்பா சுப்பண்ணா என்ற ஒரு பிராமணர். ஆனால் ஆதரித்தவர் சுப்பாராவ் என்ற வேறொருவர். அவர் புட்டலக்ஷ்மியின் சொத்தையெல்லாம் அபகரித்துக் கொண்டு விரட்டி அடித்தார் அப்போது ஆதரவளித்தவர் மைசூர் தர்பாரில் சங்கீத வித்வானாகத் திகழ்ந்த கிரிபட்ட திம்மய்யா. அவர் நாகரத்தினத்துக்கு சங்கீத சிக்ஷை மட்டுமல்லாமல் சமஸ்கிருதத்திலும் திறமை பெறச் செய்தார். 5 வயதிலேயே நாகரத்தினத்தின் தேர்ச்சி கவனத்தைக் கவர்ந்தது. சங்கீத பயிற்சி தந்தது மைசூர் யக்ஷகான கலைஞரின் மகனும் திம்மய்யாவின் சிஷ்யனுமான பிடாரம் கிருஷ்ணப்பா. இங்கும் திம்மப்பாவுக்கு நாகரத்தினத்தின் வளர்ச்சி வேகம் தனக்கு ஆபத்தாகுமோ என்ற பயத்தில் புட்டலக்ஷ்மியை ”போ, போய் எங்காவது சாணி பொறுக்கிப் பிழை” என்று விரட்டச் செய்திருக்கிறது அப்போது புட்டலக்ஷ்மி தனக்குள் சபதம் செய்துகொள்கிறாள் ” மைசூர் மகாராஜாவே அழைத்து கௌரவிக்கச் செய்கிறேன்” இனி இங்கு யாரையும் அண்டிப் பயனில்லை என் தீர்மானித்து காஞ்சீபுரத்தில் இருக்கும் தன் சினேகிதி தனகோடியைத் தஞ்சம் அடைகிறார். தனகோடியும் அவர் சகோதரி காமாட்சியும் சியாமா சாஸ்திரியின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர்கள். சங்கீதத்தில் புகழ் பெற்றவர்கள். பல்லவி பாடும் பெண்மணி என்ற சிறப்பு வேறு. ஆனால் தனகோடி அப்போது மிக வறிய நிலையில் இருந்தவர். அதிக நாள் அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாமென திரும்ப மைசூருக்கே திரும்பி அங்கு வயலின் வாசிக்கும் தன் சகோதரர் வெங்கட சாமப்பாவிடம் தஞ்சம் அடைகிறார். அவர் நாகரத்தினத்துக்கு வயலின் பயிற்சி அளித்துப் பின் முனுசாமப்பா என்னும் வயலின் வித்வானிடம் அனுப்பினார். முனுசாமப்பா தியாகராஜ சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர். அவரிடம் நாகரத்தினம்மா கற்றது வயலின் அல்ல. வாய்ப்பாட்டு. அங்கும் அவருக்கு முனுசாமப்பாவின் மருமகள் சந்திரவதனா சேர்ந்து பாடத்துணையானாள். புட்ட லக்ஷ்மியின் சபதம் ஒன்று உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருக்கிறதே. தன் பெண்ணுக்கு தெலுங்கு, ஆங்கிலம், புராணங்கள் இதிகாசம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாள். மிகுந்த கண்டிப்பும் பிடிவாதமும் திடமனதும் கொண்டவர் புட்ட லக்ஷ்மி அவ்வளவும் நாகரத்தினம்மாவுக்கும் பிதிரார்ஜிதமாக வந்தடைகிறது. எந்நிலையிலும் தன்னிரக்கம் கொண்டு தன் சுயகௌரவத்தை விட்டவரில்லை.

தன் போராட்டங்களும் மன அழுத்தங்களும், தன் மகளுக்காக பட்ட கஷ்டங்களும் விலை கோரின. காசநோய் பீடித்து தன் அந்திம நாள் நெருங்கியதை உணர்ந்த புட்ட லக்ஷ்மிக்கு, தன் மகளை எல்லா கலைகளிலும் கல்வியிலும் தேர்ச்சி பெற்று தன் சபதத்தை நிறைவேற்றும் தகுதி பெற்றவளாக்கியதில் திருப்தி. முனுசாமப்பாவிடம் தன் மறைவிற்குப் பிறகு தன் சபதம் நிறைவேற உதவும்படி கேட்டுக்கொள்கிறாள். அவரும் வெங்கடஸாமப்பாவின் பிரத்யேகத் திட்டங்களை உணர்ந்தவர் போல, நாகரத்தினத்தை வீணை சேஷண்ணாவிடம் அனுப்புகிறார். வீணை தான் என்றில்லை. சகலகலா வல்லவர், ஐரோப்பிய வாத்தியங்களையும் சேர்த்து.

சேஷண்ணா தன் வீட்டிலேயே நாகரத்தினத்தின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்கிறார். அது நாகரத்தினம்மாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம். சேஷண்ணா மாத்திரம் அல்ல, பிடாரம் கிருஷ்ணப்பா, மைசூர் வாசுதேவாச்சாரியார், சுப்பண்ணா போன்ற பெரிய திக்கஜங்களின் பார்வையும் பாராட்டும் பெறுகிறது. மைசூர் அரண்மனையிலிருந்தும் அழைப்பு வருகிறது.

இந்த சமயத்தில் தான் கோவில்களிலும் அரண்மனையிலும் தேவதாசிகளுக்கு தரப்பட்ட ஆதரவு படிப்படியாக குறைகிறது. ஆனாலும் மைசூரில் நீதிபதியாக இருந்த நரஹரி ராவின் ஆதரவு கிடைக்கிறது. நரஹரி ராவின் மனைவிக்கும் நாகரத்தினம்மா ஆப்த சினேகிதியாகி, குடும்பத்திலேயே ஒன்றாகிறாள். நரஹரி ராவ் அவளுக்காக ஒரு தனி மாளிகையே ஒரு குன்றின் மேல் கட்டிக் கொடுக்கிறார். அந்த இடம் பல சங்கீத வினிகைகளுக்கும் பல வித்வான்கள் அவ்வப்போது கூடும் இடமாகவும் ஆகிறது. இந்த மகிழ்ச்சிகர நாட்கள் அதிகம் நீடிக்கவில்லை. 1902-ல் நரஹரி ராவ் இறந்துவிடவே அடுத்த வருடம் நாகரத்தினம்மா தன் 25- வயதில் சென்னைக்கு குடிபெயர்கிறார்.

சென்னை அப்போது பெரிய செல்வந்தர்களும் சங்கீத வித்வான்களும் தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த வித்வாம்சினிகளும் குழுமியிருந்த நகரம். இன்று நாம் போற்றிக் கொண்டாடும் நக்ஷத்திரங்கள், மைலாப்பூர் கௌரி அம்மாள், வீணை தனம், அடிக்கடி வந்து போகும் தனகோடி சகோதரிகள் என அந்த பட்டியல் வெகுவாக நீளும். பெரும்பாலும் ஜார்ஜ் டவுனின் அடுக்கடுக்கான நீண்ட தெருக்களில். வீணை தனத்தின் அபிமானம் பெற்று அவர் குடும்பத்தில் ஒருவராகிறார் நாகரத்தினம்மா. இருந்தாலும் இப்பெரிய ஆகிருதிகளிடையே புதிதாக வந்த இளம்பெண் நாகரத்தினம்மாவும் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளவேண்டுமே. நெருப்புக் குண்டத்தில் குதித்தெழுவது போல என்று சொல்கிறார் இவ்வரலாற்றை எழுதிய ஸ்ரீராம். பல வித்வான்களின் அறிமுகத்தால் நிறைய கற்றுக்கொள்ளவும் முடிகிறது. பல கச்சேரி வாய்ப்புக்களும் கிட்டுகின்றன். நடனம், பாட்டு, இரண்டும் தான் பின்னர் ஹரி கதாவும் சேரவிருக்கிறது. முன்னார் சேஷன்ணா வீட்டில் நடந்த கச்சேரியில் வாசுதேவாச்சாரியார் போன்ற பெருந்தலைகள் பாராட்டி எழுதியிருக்கின்றனர். ஆனாலும் கர்நாடக சங்கீத பரிச்சயம் இல்லாத ஹிந்துஸ்தானி பாடகர் விஷ்ணுநாராயண் பட்கண்டே ஏதோ நடக்கிறதே என்று அழையா விருந்தினராக நுழைந்து ஒர் ஒரத்தில் நின்று கேட்டவரை விரும்பிக் கேட்கச் செய்தது அதுபற்றி பாராட்டி எழுதவும் செய்தது என்றால் நாகரத்தினம்மா எத்தகைய சங்கீதத்தை தன்னுள் வளர்த்திருக்கிறார், அம்மாவின் கண்டிப்பில், அது எத்தகைய பிரகாசம் நிறைந்த எதிர்காலத்தை அவருக்கு தரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பட்கண்டே விரிவாகவே எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக ஒரு வரி “ பம்பாய் தாசிகளைப் போல அல்லாமல் இவர் மிகவும் கண்ணியமாக இருந்ததைக் காண முடிந்தது. பாடிய பாடல்கள் எல்லாம் தெய்வஙளைப் பற்றியவை போலும்.” மற்றபடி அவரது இனிமையான குரல், பாவபூர்வமான சங்கீதம் பற்றி யெல்லாம் பாராட்டுகிறார்.

வெகு சீக்கிரம் அவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்கிறார். சங்கீத வாய்ப்புகள் குவிகின்றன. ஜார்ஜ் டவுனில் வீடு வாங்குகிறார். நகைகளில் ஆடையணிகளில் விருப்பம் வங்கிக் கணக்குகள் பத்திர சேமிப்பு என அவர் செல்வம் விரிகிறது. தன் உரிமைகளை விட்டுக் கொடாதவர். பிடிவாதம் கொண்டவர் என்றும் பெயர் பெறுகிறார். குறவஞ்சி நாட்டியம் கோவிலில் ஆடக்கூடாதென்றால் முற்றத்தில் ஆடுவேன் என்று காவலர் படையோடு தயாராகிறார். இப்படி எத்தனையோ வழக்காடுதலும் உரிமை நிலை நாட்டலுமாக நிறைந்த வாழ்க்கை இன்னும் பல பிரசித்த வழக்காடல் களுக்கும் இட்டுச் செல்கிறது. அவை அவர் வாழ்க்கையில் மாத்திரம் அல்ல. தென்னிந்திய கலை வரலாற்றிலும் தம் சுவடுகளை, தன் தரப்பை, மக்கள் மனதில் பதியாத இன்னொரு கோணத்தை பதிவு செய்தவை.

விஷ்ணு பட்கண்டே இந்த சமூகத்துக்கும் மொழிக்கும், சங்கீதத்துக்கும் அன்னியர். அழையா விருந்தினராக ஏதோ பாட்டு என்று கேட்க வந்தவருக்கு பம்பாய் தேவதாசிகளைப் போல் அல்லாது கண்ணியமானவர், பாட்டின் அர்த்தமும் மொழியும் ராகமும் எதுவென்று தெரியாது, பாட்டின் சப்த ரூபத்தை மாத்திரம் கொண்டே அது பாவரூபம் பெற்றது என்று உணரக் கூடுமானால் வேறு என்ன சொல்லவேண்டும். நாம் நாகரத்தினம்மாவை தேவதாசியாகத் தான் அறிவோம். நமக்குத்தெரிந்த அர்த்தத்தில்.

Series Navigation
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

20 Comments

  1. Avatar
    paandiyan says:

    //நாம் நாகரத்தினம்மாவை தேவதாசியாகத் தான் அறிவோம். நமக்குத்தெரிந்த அர்த்தத்தில்.//

    AND THAT TOO CASTE BASED…..

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    வடமொழிச்சொற்களைப்போட்டு எழுதுவதைக் குறை சொல்லவில்லை. ஆனால் அச்சொற்கள் படிப்போர்களுக்கு நன்கு தெரிந்தவைகளாக இருக்கவேண்டும். வெ.சாமிநாதன் நிறைய தெரியாச்சொற்களைப்போட்டு எழுதுகிறார். வாக்யேக்காரர்; பிதிரார்ஜிதமாக. இன்னும் பல.

    இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். அவ்வடசொற்களுக்கு இணையான நன்கு தெரிந்த நன்சொற்கள் தமிழில் இருந்தால் அவற்றையே தேர்ந்தெடுத்தல் தமிழுக்கு நாம் செய்யும் வணக்கம். வாக்யேக்காரர் என்பது vocalist என்ற பொருளில் எழுதுகிறார். வாய்ப்பாட்டுக்காரர் என்பது நல்ல தமிழ். அதையேன் பயனபடுத்தவில்லை? கிருஷ்ணகுமார் என்பவர் மணிப்பிரவாளத்தில் வடசொற்களைக்கொட்டி எழுதுவார். அதற்கு அவர் சொல்லும் காரணம்: தான் தமிழகத்தைவிட்டு ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வடமாநிலமொன்றில் வாழ்வதே. வெ சாமிநாதனுக்கு அப்பிரச்சினையில்லை. மேலும் ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர். இவர் இப்படி எழுதலாமா?

    //பம்பாய் தேவதாசிகளைப் போல் அல்லாது கண்ணியமானவர், //

    இப்படிப்பட்ட கருத்துக்கள் மனிதாபனமில்லாக்கருத்துக்கள். He lacks consideration and kindness towards down trodden people. முதலில், பம்பாயில் வாழ்பவர்கள் தேவதாசிகளல்ல. தேவதாசிகள் என்போர் இந்துமதத்தால் உருவாக்கப்பட்டவர்கள். அவர்கள் பெருங்கோயில் ஊர்களில் வாழ்ந்தோர். கோயில் சுற்றுத்தெருக்களில் வாழ்ந்தனர். மதுரை மீனாட்சி கோயில் சுற்றுத்தெருவில் வாழ்ந்த தேவதாசிக்குலத்தவரான வடிவின் மகளே பாடகர் சுப்புலட்சுமி; திருவண்ணாமலையில் அக்குல்த்துப்பெண்ணுக்கு மகனாகப்பிறந்தவர் அருணகிரிநாதரி. இப்படி பலர் பெரியோர்கள் வந்த குலம் என்பது தெரியுமல்லவா? நாகரத்தினம்மா தேவதாசிக்குலம். இப்பொட்டுக்கட்டும் குலம் கோயிலலா ஊர்களுக்கு விரிந்து இன்னும் வாழ்வதை பிஜப்பூர் ஜில்லா கருநாடகம், சித்தூர் ஜில்லா ஆந்திராவில் காணலாம். இவர்களின் பரிதாப வாழ்க்கையை திரைப்படமாக்கி ஒரு தெலுங்குப் படம் வந்தது. தாசி என்று பெயர்; அர்ச்சனா நடித்திருந்தார். தேசிய பரிசும் கிடைத்தது.

    இருக்கட்டும். பம்பாயில் வாழ்வோர் வெறும் பாலியல் தொழிலாளர்கள் மட்டுமே: பல ஜாதிகள், பல மாநிலங்கள், பல மதத்தவரும் கூட. In sociilogy, they are now called Commercial Sex Workers (CSWs). இவர்கள் எப்படி தேவதாசிகள் ஆவார்கள்? ஒரு கிருத்துவ, அல்லது இசுலாமிய பாலியல் தொழிலாளர் எப்படி தேவதாசி ஆவார்? The word Devadasi refers to a community of people, mostly in South India. They were not basically sex workers. They might have drifted – that’s a different matter. But they did not work as CSWs like the Kamathipura women.

    போகட்டும்: பம்பாய் CSWs கண்ணியமில்லாதவர்கள் என்று எப்படி வெ சாமிநாதன் சொல்கிறார்? இவர் சொல்லவில்லை இன்னொருவர் சொல்கிறார் என்றாலும் தான் இதை ஒத்துக்கொள்ளவில்லையென்று அடையாளம் காட்டியிருக்கவேண்டும். Very insensitive!

    எல்லா மக்களுமே மதிக்கப்படவேண்டியவர்கள் எனபதை Dr S கலைவாணி இவ்வாரத் திண்ணைக்கட்டுரையில் தெரியவைக்கிறார். வெ சாமிநாதன் கண்டிப்பாக படிக்கவேண்டும். Every human being is entitled to basic human dignity; but the society, not only ours, but our ancient Tamil society, too, denied that dignity to the third sex – this is the theme of that fantastic essay by Dr S Kalaivani.

    I hope that essay will sensitize us.

  3. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    வந்தனம் ஸ்ரீ வெ.சா. மஹாசய,

    அருமையான வ்யாசம். இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தூண்டுகிறது.

    இந்த முதிய வயதிலும் எழுதுவதை நிஷ்டையாகக் கொண்டு “கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன” – பலனை எதிர்பாராது கடமையை செய் என்ற கண்ணன் வாக்கினை அனுசரித்து எழுதிக்கொண்டிருக்கும் தங்களது நிஷ்டைக்கு அனேக வந்தனங்கள்.

    வணக்கத்துக்குரிய நாகரத்னம்மா என்னென்ன நற்பணிகள் தம் வாழ்க்கையில் செய்திருக்கிறாரோ…………த்யாகராஜரின் சமாதி புனருத்தாரணத்துக்கு அவர் ஆற்றிய தொண்டு காலத்தால் அழியாத் தொண்டு.

    கூடவே எம்.கே.த்யாகராஜ பாகவதரை நினைவூட்டியுள்ளீர்கள். அப்பப்பா என்ன கந்தர்வ கானம். அவர் பாடும் முறையே பாடல்களை ஹ்ருதயத்தில் அமிழச்செய்பவை. பல பாடல்கள் சிறியேனுக்கு கண்டஸ்தம்.

    தாங்கள் ப்ரயோகம் செய்த இரு பதங்களில் பிழையிருப்பதாகப்படுகிறது. பிழைதிருத்தம் செய்திருக்கிறேன். தோஷாரோபணஞ்செய்வதாகக் கருத வேண்டா.

    வாக்யேக்காரர் – பிழை
    திருத்தம் – வாக்கேயக்காரர் (கீர்த்தனைகள் இயற்றுபவர்)

    பிதிரார்ஜிதம் – பிழை
    திருத்தம் – பிதுரார்ஜிதம் (முன்னோர் சொத்து)

    இறைவனுக்கு மட்டும் ஆட்பட்டவர்களாக வணக்கத்துக்குரிய துறவியை ஒத்தவர்களாக ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் தேவதாசிகள். ஆதரிப்போரின்றி சமூஹம் கைவிடப்பட்ட பின் அவர்கள் தத்தளித்ததற்கு குற்றவாளிகள் அவர்களுக்கு உபகாரம் செய்யாத சமூஹமே. இன்றைய திகதி வரைக்கும் கூட தமிழகத்தில் இசை மற்றும் நடனம் செழித்து ………… வர்த்ததாம் அபிவர்த்ததாம்…………. என வளர்ந்து வருவதற்கு தேவதாசிகளின்….. குடும்பத்தை நினையாது………… கலைக்கு மட்டிலும் வாழ்க்கையை அர்ப்பணம் செய்த மாண்பே ஹேதுவாகும்.

    இன்றைக்கும் ஜகன்னாத பூரி மஹா க்ஷேத்ரத்தில் ஓரிரு தேவதாசி நாரீமணிகள் ஜகன்னாத ப்ரபுவுக்கு மட்டிலும் ஆட்பட்டு ஆலயத்தில் ந்ருத்ய கைங்கர்யபரர்களாக தங்கள் வாழ்க்கையை ஜகன்னாதனுக்கு மட்டிலும் அர்ப்பணம் செய்த துறவிகளாய் வாழ்ந்து வருகின்றனர். ஒட்டு மொத்த சமூஹத்தின் மரியாதைக்கும் பாத்ரமாக இருக்கின்றனர்.

    அன்பின் அய்,

    தோஷாரோபணஞ்செய்வது என்றால் உங்களுக்கு பஞ்சு மிடாய் சாப்பிடுவது போலும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என.

    \\\ மேலும் ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர். இவர் இப்படி எழுதலாமா?
    //பம்பாய் தேவதாசிகளைப் போல் அல்லாது கண்ணியமானவர், //
    இப்படிப்பட்ட கருத்துக்கள் மனிதாபனமில்லாக்கருத்துக்கள். \\\\

    இந்த தோஷாரோபணம் உங்களது புனைவு. வ்யாசம் சொல்லுவது என்ன?

    \\\\ பட்கண்டே விரிவாகவே எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக ஒரு வரி “ பம்பாய் தாசிகளைப் போல அல்லாமல் இவர் மிகவும் கண்ணியமாக இருந்ததைக் காண முடிந்தது. பாடிய பாடல்கள் எல்லாம் தெய்வஙளைப் பற்றியவை போலும்.” மற்றபடி அவரது இனிமையான குரல், பாவபூர்வமான சங்கீதம் பற்றி யெல்லாம் பாராட்டுகிறார். \\\\

    பட்கண்டே அவர்களின் எழுத்துக்களை வெ.சா.மஹாசயர் உதாஹரித்திருக்கிறார். அவ்வளவே. நீங்கள் தோஷாரோபணஞ்செய்ய வேண்டுமானால் பட்கண்டே பால். இன்றைய நாகரீகத்தின் பாற்பட்டு ஒரு சதாப்தம் முன் ஒருவர் எழுதிய வாசகத்தை அலகிட முனைவது சுஷ்கதர்க்கமாகும்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //பட்கண்டே அவர்களின் எழுத்துக்களை வெ.சா.மஹாசயர் உதாஹரித்திருக்கிறார். அவ்வளவே. நீங்கள் தோஷாரோபணஞ்செய்ய வேண்டுமானால் பட்கண்டே பால். இன்றைய நாகரீகத்தின் பாற்பட்டு ஒரு சதாப்தம் முன் ஒருவர் எழுதிய வாசகத்தை அலகிட முனைவது சுஷ்கதர்க்கமாகும்.//

      Krishnakumar!

      There are some human values which are Universal and Everchanging. Also, called Absolute Values.

      மனிதன் என்று தோன்றினானோ அன்றிலிருந்து அவன் இப்பூவலகில் மறையும் காலம் வரைக்கும் அவை சமூகத்தில் நிலவும். மற்ற வாழ்க்கை வழிமுறைகள் மாறலாம்; மாறாமலுமிருக்கலாம்.

      மாறா, மாற்றமுடியா முறைகளில் ஒன்று அப்பாவிகள், தங்களைக் காக்கவியலாதோர், பிறரால் வஞ்சிக்கப்பட்டு அவ்வஞ்சனையிலிருந்து மீளமுடியோதொர், குழந்தைகள், வலிமையில்லா பெண்டிர் – இப்படிப்பட்ட வாழ்க்கையில் மிதிபட்டு அல்லறும் மக்களை நாம் சொல்லால் கூட இழிவுபடுத்த‌க்கூடாது.

      பட்கண்டே அன்று சொன்னார்; அது அன்றுதான் ஒத்துவரும். இன்றைய அலகை வைத்து விமர்சிக்கக்கூடாதென்பது. அவர் வேறெதாவது சொன்னால் அதற்குசத்தான் சரி. கமாதிப்புரா பாலியல் தொழிலாளர்கள் கண்ணியிமில்லாதவர்கள் என்பது எக்காலத்திலும் கண்டிக்கப்படவேண்டிய சொற்கள்.

      பிறர் எழுதியதைப் போடும்போது அவை நாகரிமான சொற்களா எனத்தெரிந்துகொண்டுதான் போட வேண்டும். அப்படியே போட்டாலும் அவற்றைத்தாம் ஏற்கவில்லை என வெ.சாமிநாதன் சொல்லியிருக்கவேண்டும்.

      கிருஷ்ணகுமார்; நாம் எல்லாரையும் மதிக்க வேண்டும் அவர்கள் கைம்பெண்களோ, திருநங்கைகளோ, தேவதாசிகளோ. எக்குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவிப்போரை இகழ்வது மனிதாபிமான‌ செயலா என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேளுங்கள்! கண்டிப்பாக சொல்லும்!

  4. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    அன்புள்ள நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    தங்கள் திருத்தங்களுக்கு நன்றி. என் பிழைகளுக்கு இரண்டு காரணங்கள் சாத்தியம். நான் சமஸ்கிருதம் படித்தவனில்லை. படித்த, கேட்ட ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன். நினைவில் தவறாக பதிந்திருக்கக் கூடும். இதை ஒரு சால்ஜாப்பாகச் சொல்லவில்லை. சால்ஜாப்பு என்ற சொல்லை வேண்டுமென்றே தான் உபயோகிக்கிறேன் இங்கு. நான் எது எழுதினாலும் முகத்தில் கடுகு வெடிக்கும் ஒருவர் இங்கு இருக்கிறார். அது வெடிக்கும் முகத்தை மனதில் நினைத்துக்கொள்வேன். வேடிக்கையாக இருக்கும்.வடிவேலு இல்லாத குறை தீரும்.

    மற்றபடி தங்களுக்கு என் நன்றி. வங்காளிகளிடம் தான் மஹாஷய் (பேச்சு வழக்கில் முஷாய்) என்று விளிக்கும் பழக்கத்தைக் கேட்டிருக்கிறேன். உங்கள் எழுத்தில் இது வந்தது எப்படி? சமஸ்கிருத மூலம் என்று நினைக்கிறேன்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //சாத்தியம். நான் சமஸ்கிருதம் படித்தவனில்லை. படித்த, கேட்ட ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன். //

      அப்படி சரியாகத் தெரியவில்லையென்றால், வடமொழிச்சொற்கள் தவிர்க்கலாமே? அப்படியே போடுவதென்றால், அதற்கிணையாக நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது அவற்றை பயன்ப‌டுத்தாலாமே? அப்படியே வடமொழிச்சொற்கள்தான் என்ற விருப்பம் இருந்தால், அச்சொற்கள் படிப்போருக்கு பரிச்சயமான சொற்களாகவாவது இருக்கலாமே? ஏனென்றால், தமிழில் வடமொழிச்சொற்கள் மக்களின் பேச்சுவழக்கில்கூட நிறைய இருக்கின்றன. எனவே வடமொழிச்சொற்களினால் எந்தப்பிரச்சினையுமில்லை அவை தமிழோடு கலந்துவிடும்போது. கோயில் கும்பாபிஷேகம் என்றுதான் மக்கள் பேசிக்கொள்வர்; திருக்குடமுழுக்கு என்று சொல்வதில்லை. இல்லையா?

      நானும் ஆங்கிலச்சொற்களை அவ்வப்போது நுழைக்கிறேன். அதற்கு இருகாரணங்கள்; தமிழர்கள் ஆங்கிலத்தை வெறுப்பதில்லை. இரண்டாவது அச்சொற்களின் ஒன்று கூட படித்தவர்களுக்குத் தெரியா சொல்லில்லை. திண்ணை வாசர்களில் ஆங்கிலம் தெரியாதோர் அபூர்வம் என்பது என் கணிப்பு.

      To write unknown and uncommon words in Thinnai is to insult the readers. வாக்யேக்காரர், பிதிரார்ஜிதம்,தோஷாரோபணம், திகதி, வர்த்ததாம் அபிவர்த்ததாம், உதாஹரித்திருக்கிறார், சுஷ்கதர்க்கமாகும் – இச்சொற்கள் தமிழ்வாசகர்களை முகஞ்சுழிக்கவைப்பதாகும்.

      குறைகளைச் சுட்டிக்காட்டும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும். குறைகளைத் திருத்திக்கொள்வது நயத்தக்க நாகரிகம் பெரியவரே.

  5. Avatar
    IIM Ganapathi Raman says:

    இன்னொருவர் சொன்னது மனிதனேயமில்லாததாக இருக்கும்போது, அதையெடுத்துப்போடுபவர் தான் இக்கருத்தை ஏற்கவில்லையென தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். அதைச்சொல்ல ஒன்றும் பெரிய முயற்சி தேவையில்லை. அடைப்புக்குறிகளுக்குள் போட்டால் போதும்.

    ”பம்பாய் தேவதாசிகளைப்போன்று கண்ணியமில்லா”

    அதாவது இன்னொருவர் கூற்று இது எனவும் தான் அக்கூற்றை ஏற்கவில்லையெனபதும் நன்கு தெளியும். ஒரு எழுத்தாளருக்குத் இதுகூட தெரியாமல் போனது வியப்பே. அல்லது அவருக்கு இது உடந்தையாக இருக்கலாம்.

    முதல் தவறு: பம்பாய் கமாதிபுரா பாலியல் தொழிலாளர்களைத் தேவதாசிகள் என்றது.
    இரண்டாவது தவறு: அவர்களைக் கண்ணியமில்லாதவர்கள் என்றது.

    இவ்விரு தவறுகளுமே கட்டுரையின் தரத்தைக் குறைக்கின்றன! மனதினிலே ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம் என்பார் பாரதியார்.

    தேவதாசிகள் இறைவனுக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள் என்பது தியரி. இவர்கள் பெருங்கோயிலுக்கருகில் வாழவேண்டியகட்டாயத்தால் பிறமக்களிடம் தொடர்பில்லை. இவர்கள் கோயிலில் பணிசெய்ததால் பிறமக்கள் அவரக்ளிடன் நெருங்குவதில்லை. இவர்களுக்கு கணவர்கள் இல்லாததால், கோயிலைச்சுற்றி வாழ்ந்த பார்ப்பனரகளுக்கும், கோயில் புரவலர்களான பெருந்தனவந்தர்களுக்கும் இவர்கள் வைப்பாட்டிகளாக வாழ்ந்தார்கள். அப்படி சுப்பிரமணிய ஐயருக்கு வாழ்ந்தவர்தான் வடிவு. இவர்களோடு பிராமணர்களே தொடர்பு வைத்திருந்தபடியால், இசை நாட்டியம் என்று பரிச்சயம் ஏற்பட்டு, பின்னர் அவர்களுள் ஒரு சிலர் அத்திறமையை மெருகூட்ட வாய்ப்பும் கிடைக்கப்பெற்று புகழ்பெற்ற நர்த்தகிகளாகவும் பாடகிகளாகவும் ஆனார்கள். அவர்களுள் ஒருவர் இக்கட்டுரை நாயகி; இன்னொருவர் எம்.எஸ். சுப்புலட்சுமி.

    சங்கராபரணம் தெலுங்குப்படமே இதைத்தான் அடிப்படையாகக் கொண்டது. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் ஒரு உண்மைப்பாத்திரம். மோகனாம்பாள் வடிவைப்போலவே மீனாட்சி கோயில் தெருவில் வாழ்ந்தவர். இன்றும் அவரின் வீடு கிழக்கு வாசலருகேயுள்ள சந்தில் உள்ளது. இது தில்லானா மோகனாம்பாள் வாழ்ந்த வீடு என்று பலகை தொங்கும். Check it yourself?

    தேவதாசிகள் கோயிலுக்கு உடந்தையானார்கள், இல்லையா? அப்படி ஆனவர்கள் அனைவருமே விரும்பிச்செய்தார்கள் என்று சொல்வதும், கத்தோலிக்க பெண்கள் துறவிகளாக்கபடுவதும் ஒன்றே. அதாவது பலர் கட்டாயத்தின் பேரில் ஆனார்கள்.

    மதத்துக்கு பலிகடா ஆனவர்கள் இருசமூகத்தவர்: ஒன்று தலித்துக்கள்; இன்னொன்று: தேவதாசிகள்.

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அய்………….

    உங்களுக்கு லஜ்ஜை என்பது இருக்கவே இருக்காதா?

    பட்கண்டே சொன்னதை வெ.சா ஐயா சொன்னதாகப் புளுகிவிட்டு அது சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் லவலேசமாவது லஜ்ஜையுள்ளவராக இருந்தால் க்ஷமாயாசனம் கேட்டிருக்க வேண்டும்.

    வெ.சா ஐயா எழுதிய வ்யாசம் என்று என்ன அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் காலத்திலிருந்தே யார் எழுதிய வ்யாசத்தையும் வாசிப்பது என்பதே கிடையாது. வள வள சள சள என பொழுதுபோக்காக சம்பந்தமே இல்லாமல் எத்தையாவது காமா சோமா என எழுத வேண்டியது.

    \\\ To write unknown and uncommon words in Thinnai is to insult the readers. \\\\

    ஆமாஞ்சாமி. திண்ணை தளத்தை வாசிப்பவர்கள் எல்லோரும் ஆங்க்ல வித்தகர்கள் பாருங்கள் ரெவரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ போல. இந்த லக்ஷணத்தில் தமிழுக்காக வக்காலத்து வாங்கும் கந்தறகோளம் வேற

    நாகரத்னம்மா என்ற தேவதாசிப்பெண் வாழ்வைச் சவாலாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றதை விளக்கும் வ்யாசம் இது.

    வ்யாசம் முழுக்க இந்த அம்மணியை வெ.சா ஐயா விதந்தோதி இருக்கிறார். இந்த அம்மணியின் சளைக்காத போராட்டத்துக்கும் இவர் கலைக்கும் சமயத்துக்கும் செய்த அர்ப்பணிப்பை உள்வாங்கியே இந்த அம்மணியின் பெயருடன் வணக்கத்துக்குரிய என்ற அடைமொழியை சேர்த்திருக்கிறேன்.

    வணக்கத்துக்குரிய என்பது தமிழ் தெரிந்தவர்களுக்கெல்லாம் தெரியும். ஆங்க்லத்துக்கு அடிமை சாசனம் எழுதித் தந்தவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான்.

    நீங்கள் தனியாக வெளுத்து ஜமாயுங்கள். எனக்கு லே ப்ரயாணம் காத்திருக்கிறது.

    சவாலாக எடுத்துக்கொண்டு அடுத்த அவதாரத்தில் வலம் வாருங்கள் பார்க்கலாம் :-)

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //உங்களுக்கு லஜ்ஜை என்பது இருக்கவே இருக்காதா?
      பட்கண்டே சொன்னதை வெ.சா ஐயா சொன்னதாகப் புளுகிவிட்டு அது சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் லவலேசமாவது லஜ்ஜையுள்ளவராக இருந்தால் க்ஷமாயாசனம் கேட்டிருக்க வேண்டும்.//

      லஜ்ஜை இருக்கின்றபடியாலே ஒருவரை உயர்த்த இன்னொருவரை இகழக்கூடாதென்று சொல்கிறேன். பட்கண்டே சொன்னார்: பம்பாய் தேவதாசிகள்; அவர்கள் கண்ணியமில்லாதவர்கள் என்ற் இரு பொய்களை எடுத்தியம்பும்போது தான் அப்படிப்பட்ட தரக்குறைவான பேச்சை ஏற்கவில்லை என்று வெ.சா சொல்ல வேண்டும் அல்லது அடையாளம் காட்டியிருக்கவேண்டும். இல்லாதபட்சத்தில், அவரும் பட்கண்டேயின் கூற்றை ஆதரிக்கிறார் என்றுதான் பொருள். ஒருவரை விதந்தோத இன்னொருவரை இழித்துரைப்பதா? என்ன நீதி இது? இனிவரும் கட்டுரைகளில் வெ சா இப்படி எவராவது பிறரை இழிவுபடுத்திச் சொன்னவற்றைப்போடும்போது கவனமாக இருப்பார் என நம்பலாம்.

      கிருஷ்ணகுமாருக்கு லஜ்ஜை இருந்திருந்தால், நான் எழுதியவற்றை வெசாவுக்குச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். வெசா சொன்னதாக நான் எழுதியிருந்தால் அதுதான் பொய். நான் எழுதியது: இன்னொருவர் சொன்ன இழிசொற்களைத் தன் கட்டுரையில் கையாளும்போது கவனம் தேவை. இல்லாவிட்டால் கட்டுரையாளர் அதனுடன் ஒத்துப்போகிறார் என நினைக்க வேண்டியிருக்கும். இதை கிருஷ்ணகுமார் ‘புளுகு என்று சொன்னால், அவருக்கு ஏதோ பிரச்சினை!

      I think I have made my points more than clear. I leave it to the readers to judge for themselves.

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      //\\ To write unknown and uncommon words in Thinnai is to insult the readers. \\\\
      ஆமாஞ்சாமி. திண்ணை தளத்தை வாசிப்பவர்கள் எல்லோரும் ஆங்க்ல வித்தகர்கள் பாருங்கள் //

      நான் unknown and uncommon words என்றது நீங்கள் எழுதிய வடமொழிச்சொற்களைக் குறிக்கவே.

      //இந்த அம்மணியின் சளைக்காத போராட்டத்துக்கும் இவர் கலைக்கும் சமயத்துக்கும் செய்த அர்ப்பணிப்பை உள்வாங்கியே இந்த அம்மணியின் பெயருடன் வணக்கத்துக்குரிய என்ற அடைமொழியை சேர்த்திருக்கிறேன்.
      வணக்கத்துக்குரிய என்பது தமிழ் தெரிந்தவர்களுக்கெல்லாம் தெரியும். ஆங்க்லத்துக்கு அடிமை சாசனம் எழுதித் தந்தவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான்.//

      கிருஸ்ணகுமார், இவர் தேவதாசிக்குலமில்லாமல் வேறொரு குலத்தில் பிறந்திருந்தால் இசைக்கும் பாட்டுக்கும் சேவை செய்ய போராட்டம் நடாத்தியிருக்கத் தேவையிருந்திருக்காது. நித்யா மஹாதேவனைப்போல நேராகவே மேடையேறி கச்சேரி செய்திருக்கலாம். பதமா சுப்பிரமணியத்தைப்போல சிதம்பரத்திலேயே பரத நாட்டியமாடியிருக்கலாம்.

      போராட்டம் என்பதே உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட வர்க்கத்திற்குத்தான். மற்றவருக்கு இல்லை !

      ஏன் தேவதாசிகுலம் உருவாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது? ஏன் ஒரு குறிப்பிட்ட குலப்பெண்கள் கோயில் ஊழியத்துக்கு என்ற போர்வையில் சந்துகளிலும் பொந்துகளிலும் குடியமர்த்தப்பட்டு பணக்காரர்களின் சதைப்பசிக்கும் பிராமணர்களின் வைப்புக்களாகவும் ஆக்க‌ப்பட்டார்கள்? ஏன் கோயில்தேவைகள் மறைந்த காலத்தில் தாசிகளாயினர்? அவர்களுக்குத் தகப்பன்பெயர் தெரியாமல், அல்லது தெரிந்து தகப்பனால் அங்கீகரிக்கபப்டாத குழந்தைகள் எத்தனை? எத்தனை? எல்லாருமா நாகரத்தினமாக்களாகவும், அருணகிரிநாதரகாவும், எம் எஸ் சுப்புலட்சுமிக்களாகவும் ஆக முடியும்? தேவதாசிக்குலத்தை உருவாக்கியவர்களே இன்று தேவதாசியைப்பற்றி விதந்தோதுவதும் வணககுத்துக்குரியவர் என்றெழுதுவதும், மோடி முசுலீம்களைப் புகழ்வது போலத்தான். அவமானப்படுத்தல் மட்டுமன்று; அச்சொல்லே அசிங்கமான சொல்லாகத் தமிழில் மாறிவிட்டது. தேவனுக்கு அடியாள் = தேவரடியாள் மறுவி தேவடியாள் எனவாகிவிட்டது. யார் காரணம் கிருஷ்ணகுமார்?

      விராலி மலையிலும் திருவண்ணாமலையிலும் காள‌ஹஸ்தியிலும் இன்றும் அவர்கள் தாசிகளாக இருப்பதைக் காணலாம். கோயில் ஊழியர்களாக‌ இல்லை. இன்று எவருமே நாட்டியம் இசை என்றில்லை. எல்லாமே மாறிவிட்டன‌. நான் சொன்ன தெலுங்குப்படமான ‘தாசி பார்க்கவும். அது தேவதாசிக்குலத்திலிருந்து பின்னர் தாசிகளாக்கப்பட்ட பெண்களின் உணர்ச்சிகரமான வரலாறு. அவர்களெல்லாம் பாவம் உஙகள் வணக்கத்துக்குரியவர்கள் இல்லை. அவர்களை விதந்தோத முடியாது. அவர்கள் கண்ணியமில்லாதவர்கள்.

      டிசமப்ர் மாத இசை விழாக்கள் நாரத கான சபாவில் வரவிருக்கின்றன. போய்க் கேட்டு மகிழுங்கள்.

  7. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \\ வங்காளிகளிடம் தான் மஹாஷய் (பேச்சு வழக்கில் முஷாய்) என்று விளிக்கும் பழக்கத்தைக் கேட்டிருக்கிறேன். உங்கள் எழுத்தில் இது வந்தது எப்படி? சமஸ்கிருத மூலம் என்று நினைக்கிறேன். \\

    அன்பின் ஸ்ரீ. வெ.சா. மஹாசயர் அவர்களுக்கு.

    மஹாசய் என்பது பாங்க்ளாவில் மொஹசய் என்று திரிந்து ச என்ற எழுத்து ஷ வாகவும் மாறுவதால் மொஷாய்……… பாபு மொஷாய்……. இத்யாதி. சிறியேனுக்கு பாங்க்ளா அதிகம் பரிச்சயம் இல்லை.

    ஹிமாசல், உ.பி மற்றும் பூர்வி பாரத் முழுதும் மஹாசய் / மஹோதய் என்ற புழக்கம் உண்டு. நாம் தமிழ்க்காரர்கள் எல்லோரும் வார்த்தைகளின் கடைசியில் மெய்யெழுத்தை காலி செய்து விடுவோமே. ஆதலால் மஹாசய.

    இருபது வருஷமாக கார்யாலயப்பணிகள் எல்லாம் ஹிந்தியில் தான். எப்படித் தொற்றிக்கொண்டிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.

    தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு இசைக்கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வ்யாஜத்தில் வணக்கத்துக்குரிய இந்த அம்மணி தமிழகத்தில் இசைக்கும் கலைக்கும் செய்த பணி ஒப்புயர்வற்றது. வாய்ப்புகள் அதிகம் இல்லாத சமூஹத்தில் எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையை சவாலாய் எடுத்து வெற்றி கொண்ட இந்த அம்மணியின் வாழ்க்கை அப்படி கஷ்டப்படுபவர்கள் அனைவருக்கும் ஒரு உதாஹரணம்.

    இதை அறிமுகம் செய்த உங்களுக்கு மீண்டும் உளமார்ந்த நன்றிகள் ஐயா.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //ஹிமாசல், உ.பி மற்றும் பூர்வி பாரத் முழுதும் மஹாசய் / மஹோதய் என்ற புழக்கம் உண்டு. நாம் தமிழ்க்காரர்கள் எல்லோரும் வார்த்தைகளின் கடைசியில் மெய்யெழுத்தை காலி செய்து விடுவோமே. ஆதலால் மஹாசய.
      இருபது வருஷமாக கார்யாலயப்பணிகள் எல்லாம் ஹிந்தியில் தான். எப்படித் தொற்றிக்கொண்டிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.//

      ஹிந்தியில் பேச்சுவழக்கில் இரு சொற்களுமே பயன்படுத்தப்படுவதில்லை. எழுத்தில் மஹோதய மட்டும் பயனபடுத்தக்காணலாம்.

      போகட்டும். நாமென்ன ஹிந்தியைத்தாய்மொழியாகக்கொண்டோரிடமா இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம். வெ சா தமிழ் எழுத்தாளர்தானே? அவருக்கே மஹாசய என்றால் தெரியவில்லையென்றால், ஏன் அச்சொல்லை வலியவந்து பயனப்டுத்தவேண்டும். திரு என்றால், உயர்திரு என்றெழுதினால் கிருஸ்ணகுமாரில் கை வலியெடுத்துவிடுமா?

      முதலில் ஒரு மொழி தெரியாதவரிடம் போய் அம்மொழியில் பேசுவது பண்பாட்டற்றச் செயல். திண்ணை வாசகர்கள், வெ சா உடபட, பலருக்கு வடமொழிச்சொற்கள் – அதாவது தமிழ்நாட்டில் புழக்கித்திலில்லா – சொற்கள் தெரியாது. அவர்களிடம் போய் வலிய கேட்டறியதா, மஹாசய போன்று சொற்களை வீசி உரையாட வருவது என்ன நாகரிகம் கிருஸ்ணகுமார்?

  8. Avatar
    paandiyan says:

    நெறைய ஸைட்களில் பின்னூட்டம் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று ஒரு suffix வருகின்றது. இங்கு அப்படி ஒன்று போட்டு கட்டுரை விட பின்னூட்டம் பெரிதாக இருந்தால் கண்டிப்பாக தனி கட்டுரையாக வரவேண்டும் என்றும் போடவேண்டிய தருணம் இது.

  9. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

    \\ திரு என்றால், உயர்திரு என்றெழுதினால் கிருஸ்ணகுமாரில் கை வலியெடுத்துவிடுமா? \\

    ஏன் அன்பர் என்ற விகுதியில் என்ன குறை. தமிழ் தெரியாதா? கை வலித்தா இந்த விகுதியைச் சேர்க்கிறேன்.

    திரு எனக்கு கடையில் விற்கும் மிட்டாய் இல்லை.

    தங்கள் வாழ்நாள் முழுதும் திருப்புகழமுதத்துக்கு தங்களை அர்ப்பணித்தவர்களுக்கு மட்டிலும் திரு என்ற விகுதி இது வரை சேர்த்திருக்கிறேன். குஹத்திரு.

    பொதுவில் அன்பர்.

    முகமூடி சுவிசேஷ ப்ரசங்கத்தை விட்டு விட்டு திருப்புகழமுதத்துக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க விழைவது எனக்குத் தெரிந்தால் நிச்சயம் திரு சேர்ப்பேன்.

    \\ அவர்களிடம் போய் வலிய கேட்டறியதா, மஹாசய போன்று சொற்களை வீசி உரையாட வருவது என்ன நாகரிகம் கிருஸ்ணகுமார்? \\

    காஷ்மீரத்தில் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் என்னை ஜெனாப் என்று தான் விளிப்பர். ஆதலால் நான் காஷ்மீரியாகவோ அல்லது முஸ்லீமாகவோ மாறுவதில்லை. அவர்களிடம் நாகரீகக் குறைவு இருப்பதாகவும் எண்ணியதில்லை.

    விகுதிகள் அன்பை ப்ரதிபலிப்பவை. அவ்வளவே. நீங்கள் என்ன தான் ஆங்க்ல அடிமையாக இருந்து தமிழின் நடுவே ஆங்க்லத்தை ஜபர்தஸ்தியாக சொருகினாலும் கூட உங்களை விளிப்பதற்கு அன்பர் என்ற விகுதி சேர்ப்பதில்லையா? காழ்ப்பு மற்றும் வெறுப்பின் பாற்பட்டு மட்டிலும் நீங்கள் எழுதுவதால் உங்கள் பெயரின் முன் சேர்க்கப்படும் விகுதியான அன்பர் என்பது உங்களுக்கு கண்ணில் கூடப் படுவதில்லை.

    தெளிவான தமிழைத் தங்கள் செயல்பாட்டில் கொண்ட யாராவது இப்படிச் சொன்னால் நிச்சயம் அதில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொள்வேன்.

    \\ ஹிந்தியில் பேச்சுவழக்கில் இரு சொற்களுமே பயன்படுத்தப்படுவதில்லை. \\

    எங்கே? முகமூடி சுவிசேஷ ப்ரசங்கிகள் மத அறுவடைக்காக ஹிந்தியை பேசும்போதா.

    \\ முதலில் ஒரு மொழி தெரியாதவரிடம் போய் அம்மொழியில் பேசுவது பண்பாட்டற்றச் செயல். \\

    ஆமாம். திண்ணை தள வாசகர்கள் அனைவரும் ஆங்க்ல வித்தகர்கள் ஜபர்தஸ்தியாக அரைகுறை ஆங்க்லத்தை தமிழினூடே சொருகுவது எந்தப் பண்பாட்டின் பாற்பட்டது.

    த்வீபாந்தரங்களுக்கு வெளியே இருந்து வந்த ஆங்க்லம் ஓகே. ஆனால் ஹிந்துஸ்தானி பாஷையான சம்ஸ்க்ருதம் கூடாது என்பது த்வேஷத்தின் பாற்பட்டு மட்டிலும் தான்.

    சம்ஸ்க்ருதம் தெரியாமல் தான் எனது முதல் இரண்டு வ்யாசத்துக்கு 468 உத்தரங்கள் பதிவானதா? முழு உத்தரங்கள் சம்ஸ்க்ருதத்திலேயா இருக்கிறது. நீங்கள் ஆங்க்லத்தை ஜபர்தஸ்தியாகச் சொருகும் சதமானத்தை விட என் சம்ஸ்க்ருத பத ப்ரயோகம் குறைவானதே.

    வெறுப்பையும் காழ்ப்பையும் விதண்டாவாதத்தையும் முன்வைக்கத்தானே உங்களுக்கு சாரமில்லாத ஆங்க்லம் கலந்த தமிழ் தேவையாக இருக்கிறது.

    உங்களது கருத்துக்களில் சாரமில்லை என்பது உங்களுக்கு தெளிவாகத் தெரிந்து விட்டால் இப்படி வடையத் திங்காமல் துளையை எண்ணும் கார்யத்தை ஆரம்பித்து விடுவீர்களே.

    இப்போதைக்கு இந்த மண்டகப்படி போதும்.

    விதிவிலக்காகவாவது எழுதப்பட்ட வ்யாசத்தை வாசித்து அதன் கருத்தை உள்வாங்கி உங்கள் உத்தரங்களைப் பதிவு செய்ய முனையுங்கள்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      மஹாசய கிருஸ்ணகுமாருக்கு

      பெரியவர் வெங்கட் சாமிநாதனை மஹாசய என்று சொல்லாமல் திரு அல்லது உயர்திரு என்று சொன்னால் போதும். மற்ற வியாக்யானங்கள் தொடர்பில்லாதவை. வடமொழி தெரியாத வெ.சாவிடம் போய் வடமொழியைத்திணிப்பது, கிராமத்துமனிதரிடம் போய் இங்கிலீசு பேசுவது போல. அவரே ஓபனாகச் சொல்லிவிட்டார். இனியாவது வடமொழி திணிப்பை நிறுத்துங்கள்.

      //த்வீபாந்தரங்களுக்கு வெளியே இருந்து வந்த ஆங்க்லம் ஓகே. ஆனால் ஹிந்துஸ்தானி பாஷையான சம்ஸ்க்ருதம் கூடாது என்பது த்வேஷத்தின் பாற்பட்டு மட்டிலும் தான்.//

      இதுதான் இந்துத்வாவினரின் இன்றைய தந்திரம். ஆங்கிலம் அன்னியர் மொழி. நம் அடிமை மொழி. வடமொழியும் ஹிந்தியும் நம்மொழிகள் என்பதுதான் இன்றைய பிரச்சாரம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடாவில் ஆங்கிலம் வெறுக்கப்படவில்லை. மோடி அரசுக்கு அதுதான் இடைஞ்சலாக இருக்கிறது. ஆங்கிலத்தை விரட்டிவிட்டால் திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. வெற்றிடம் வந்துவிட்டதே! அதே இந்துத்வா பிரச்சாரம் இங்கு பண்ணிக்கொண்டு செய்து கொண்டும் இருக்கிறார். அவர் வடமொழி திணிப்பை சொல்கிறேன்.

  10. Avatar
    ஒரு அரிசோனன் says:

    நான் இந்தப் பின்னூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என்று இருந்தேன்…

    …சமூகத்தில் இழிநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் எப்படிப் போராடி, வாழ்வில் வெற்றிபெற்று, போற்றப்பட்டவர் ஆனார்கள் என்பதைச் சிறப்பிக்கும் கட்டுரை இது.

    தங்கள் இல்லற வாழ்வையே வேள்வியாக மாற்றி,”இறைவனடிமை”களாக, கலைக்குத் தொண்டாற்றிச் சிறப்பித்த நிலை மாறி, வடமொழியில் “தேவதாசி”களாக உருவெடுத்துப் பின்னர் வெறும் “தாசி”களாகப் புறம்தள்ளப்பட்டதும் விதிவசமே.

    சிலர் தங்களது புறம் தள்ளப்பட்ட நிலையில் இருந்து முன்னேறி, கலைகளைச் எப்படிச் சிறப்பித்தார்கள் என்று காட்டுகிறது இக்கட்டுரை.

    //புல்லும் புதரும் மண்டிக்கிடக்கும் தியாகராஜர் சமாதி கண்டு வேதனைப் பட்டு இன்று நாம் அறிந்த தியாக ராஜர் விக்கிரஹமும் கோவிலும் ஆராதனை விழாக்களும் நடக்கக் காரணமானவர்//

    எப்படிப்பட்ட கலைத் தொண்டு இது!

    இப்பொழுது இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாத, பின்நூட்டக்களுடன் தொடர்புள்ள கருத்தையும் பதிவு செய்யும் நிலையில் தொடர்கிறேன்.

    ஒருகாலத்தில் கோவிலில் கடவுளர்கள் பெயர்கள் எல்லாம் தமிழில்தான் இருந்தன. அண்ணாமலை, உண்ணாமுலை, அங்கயற்கண்ணி, அழகன்,செந்தாமரைக்கண்ணன், அலர்மேல்மங்கை, அரங்கநாதன், அம்பலவாணன் என்றுதான் இருந்தன.

    அவை அபீதகுசாம்பாள், மீனாக்ஷி, சுந்தரேசன், அரவிந்தாக்ஷன், சபாநாயகன் என்று வடமொழிலும் வழங்கப்பட்டன — காரணம், வடநாட்டிலிருந்து வருபவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக. அதுவே நிலைத்து நின்றுவிட்டது. அவ்விதமே “இறைவனடிமையும்” தேவதாசிகளாகிப் போனார்கள்.

    //தேவதாசிகள் இறைவனுக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள் என்பது தியரி. //

    இல்லை ஐயா இல்லை. அதுதான் உண்மை. ஆதற்காகத்தான் அவர்கள் கண்ணியர்களாகக் காலம் கழித்தார்கள். அவர்கள் தொண்டு செய்யும் கோவில் இறைவனுடன் அவர்களுக்குத் திருமணம் செய்துவிக்கப்பட்டது. இறைவனின் மனைவியை அனைவரும் அன்னையாகக் கருதவேண்டும் என்பதற்காக. அவர்களின் குடும்பத்திக்கு அரச மானியம் வழங்கப்பட்டது. பின்னர் இறைச் சொத்தையே திருடுபவர் இறைவனின் மனைவியையும் திருடத் துவங்கினர்.

    //இவர்களுக்கு கணவர்கள் இல்லாததால், கோயிலைச்சுற்றி வாழ்ந்த பார்ப்பனரகளுக்கும், கோயில் புரவலர்களான பெருந்தனவந்தர்களுக்கும் இவர்கள் வைப்பாட்டிகளாக வாழ்ந்தார்கள்.//

    மற்றவர்களுக்கு வை…களாக வாழ்ந்தார்கள் என்று குறிப்பிட்டு நிறுத்தி இருக்கலாமே! இதில் தேவை இல்லாமல் சாதியையும், கோவில் புரவலர்களையும் குறிப்பிடத்தேவை என்ன? வெறுப்புணர்வையும், காழ்ப்புணர்வையும் உண்டு செய்தால்தான் ஒரு கருத்தை வலியுறுத்த இயலுமா?

    //நாமென்ன ஹிந்தியைத்தாய்மொழியாகக்கொண்டோரிடமா இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம்.//

    இல்லை. எனவே, தமிழத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் புரிந்துகொள்ளுபடி கருத்துத் தெரிவிப்பதே சாலச் சிறந்தது. இதை நான் பல தடவை வலியுருத்தித் தோல்வியே கண்டிருக்கிறேன். “எறும்பூரக் கற்குழியும்” என்ற பழமொழியில் நம்பிக்கை வைத்து, இதமாகச் சொல்வதே சான்றோர்க்கழகு. அதை விடுத்து, சொற்போரில் இறங்கினால், பிடிவாதமே வலுப்படும்.

    //பலருக்கு வடமொழிச்சொற்கள் – அதாவது தமிழ்நாட்டில் புழக்கித்திலில்லா – சொற்கள் தெரியாது.//

    தமிழ்நாட்டை விடுங்கள் ஐயா, திண்ணையில் வருவதைப் படிப்பவர்கள் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்காவது வடமொழியுடன் அறிமுகம் இருக்கலாம். வெளிநாட்டாருக்கு அது அறவே இருக்காது. எனவே, நாம் சொல்வது அனைவருக்கும் புரியவேண்டும் என்றால், எளிய தமிழிலேயே எழுதுவது நலம் பயக்கும்.

  11. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    ஷாலி, கணபதி ராமன் என்ற புனைபெயர்களில் வாள் வீசும் அன்பர்களுக்கு, முன்னர் எல்லாம் இன்னம் நிறையப் பேர்கள் இங்குவ் அந்து சிலம்பம் ஆடுவார்கள். புனைபெயர்களில் தான். என் பெயரைக் கண்டாலே பற்றி எரியும் அவர்களுக்கு. இப்போதைக்கு இரண்டே இரண்டு பேராக ஏன் குறைந்து விட்டார்கள்? ஒரு வேளை அவர்களும் இவர்களின் வேறு நாட்களில் தரித்து வந்த வேறு “பகல் வேஷங்களோ” உலக நாயகன் கமல் சார் போல. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு வேஷம் என்று தொடங்கி, பத்து வேஷங்கள் என்று தன்னைப் ப்ரொமோட் பண்ணியுள்ளார்.போகட்டும்.

    இந்த புனைபெயர்(வேஷதாரி) அன்பர்களுக்கு ஒரு ஆலோசனை.
    தேவதாசி மகான் கட்டுரையின் முதல் பகுதியிலேயே கூடாரம் அடித்து உட்கார்ந்துவிட்டார்களே. இரண்டாம் பகுதி வந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. மூன்றாம் பகுதி கூட திண்ணை ஆசிரியர் தயவு இருக்குமானால் திங்கட்கிழமை வரலாம்.

    கரித்துக் கொட்ட அங்கு இரண்டு பகுதிகளிலும் நிறைய தீனி கிடைக்க இருக்கும் போது இங்கேயே உட்கார்ந்து இருந்தால், நல்லாவா இருக்கு?

    கொஞ்சம் இந்த இடத்தைவிட்டு நகரந்து இரண்டாம் மூன்றாம் பகுதிக்கு வந்தால் இன்னம் ஒரு மாசம் இரண்டு மாசம் லபோ லபோ என்று அடித்துக்கொள்ள நிறைய சந்தர்ப்பம் காத்துக் கிடக்கிறது, அன்பர்களே.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      You have done a great job, which is not in question at all. But you write the following also that contribute little to the course of your essay. In fact, it diverts the flow annoyingly :-(

      //மக்கள் மனதில் ஆட்சி செய்யும் காலத்தில். அப்படித்தான் இருக்கும். புதர் தான் மண்டிப் போகும். உ.வே.சா வாழ்ந்த இல்லம் உருத்தெரியாது பாழாகிக்கிடக்க அங்கு ”அவர் தகுதிக்கும் பெருமைக்கும் ஏற்ற ஒரு மண்டபம்” எழுப்பும் சிந்தனைகள் ஆட்சி செய்யும் காலம்.//

  12. Avatar
    paandiyan says:

    //பெரியவர் வெங்கட் சாமிநாதனை மஹாசய என்று சொல்லாமல் திரு அல்லது உயர்திரு என்று சொன்னால் போதும். மற்ற வியாக்யானங்கள் தொடர்பில்லாதவை. //

    அப்படிதான் சொல்லுவோம். என்ன பண்ண முடியும்? இது என்ன தலபான்கள் இடமா என்ன? இனி நானும் பெரு மதிப்பிற்குரிய வெ சா அவர்களை மஹாசய என்றுதான் அழைப்பேன்.

  13. Avatar
    IIM Ganapathi Raman says:

    மஹாசய என்று சொல்லலாம். யாரும் தடுக்கவில்லை. ஆனால் வெ சா ஒத்துக்கொள்ள வேண்டுமே? அவரே தனக்கு வடமொழி தெரியாதென்ற பின், அவரிடம் அம்மொழியைப்பேசுவது நாகரிகமான செயலா?

    எவரும் எம்மொழியிலும் எவருடனும் பேசலாம். ஆனால் ஒருவர் பேசுவது மற்றவருக்குப் புரிய வேண்டும். திரு என்றால் தமிழைத்தாய்மொழியாகக் கொண்டோருக்குப் புரியும். மஹாசய என்றால் புரியுமா? எனவே இப்படிப்பாருங்கள். ஒருவரிடம் உரையாடும் போது அவருக்குப் புரிந்த மொழியில் உரையாடவேண்டும். அவருக்குப்புரியாத மொழியில் உரையாடுவது, பண்பாடற்ற செயல். பண்பாடற்றச்செயலைச் சுட்டிக்காட்டுவது தாலிபானித்தனமாகாது.

Leave a Reply to IIM Ganapathi Raman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *