தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

“நடிகர் சிகரம் விக்ரம்”

ருத்ரா

Spread the love

எவ‌ரெஸ்ட் சிக‌ர‌ம்
இவ‌ர் ந‌டிப்பின்
விய‌ப்பில்
வ‌ழிவிட்டு ஒதுங்கிக்கொண்ட‌து.
விருதுக‌ளின் முக‌ங்க‌ள்
அச‌டு வ‌ழிந்த‌ன‌.
இவ‌ருக்கு விருது த‌ர‌
என்ன‌ இருக்கிற‌து இங்கு?

ஆங்கில‌ப்ப‌ட‌ம் த‌ழுவிய‌போதும்
இந்திப்ப‌ட‌மும் (“பார்”)
வ‌ந்து விட்ட‌ போதும்
அமிதாப் அங்கு சிற‌ப்பாக‌
அச‌த்திய‌ போதும்
எல்லாருமே
அண்ணாந்து பார்க்க‌ வைத்துவிட்டார்
விக்ர‌ம்.

தலைப்பின் சலசலப்பு
சந்திக்கு வரும் முன்
பந்தி விரித்துவிட்டார்கள்
தெய்வத்திருமகள் என்று!
தெய்வத்திருமகனா? தெய்வத்திருமகளா?
நடிப்பின் சுவையான பட்டிமன்றம் இது.

ம‌ழ‌லைக்குள் புகுந்து
ந‌ம் க‌ண்ணுக்குள்
ம‌ழைபெய்ய‌ வைத்து விட்டார்
விக்ர‌ம்..

புதிய‌ புதிய‌
ப‌ரிமாண‌ங்க‌ளுக்குள் எல்லாம்
பரிணாமம் செய்யும்
இவ‌ர‌து
ந‌டிப்பின் தாகம்
மசாலா வாசனை பிடிக்கும்
மற்ற‌ டாஸ்மாக் ஈச‌ல்க‌ளுக்கும்
க‌ட் அவுட்டுக‌ளில் சொரியும்
அந்த‌ பால்குட‌ங்க‌ளுக்கும்
புரியாது தான்.

திரையின் பொய்யை
த‌ரையின் மெய்யாய்
நின‌ந்து
மேய்ச்ச‌ல் புரியும்
ம‌ந்தைக‌ளின் ச‌ந்தைக‌ளால்
க‌றை ப‌ட்டு போகாத‌
ந‌டிப்பின் ர‌த்தின‌ம்
விக்ர‌ம்.

அந்த‌க்குழ‌ந்தை
தாராவின்
இன்னொரு குழ‌ந்தையாய்
விக்ர‌ம்
விய‌க்க‌ வைக்கிறார்.
ந‌டிப்பிற்கு
ஒரு “பிள்ளைத்த‌மிழ்” பாடியிருக்கிறார்.

முற்றிய
முர‌ட்டு உட‌ம்புக்குள்
ஒரு வெள்ளை ம‌ன‌த்தின்
வெள்ள‌ரிப்பிஞ்சை த‌ந்து ந‌ம்மை
புல்ல‌ரிக்க‌ வைக்கிறார்.

உட‌ம்பிய‌ல் அணுக்க‌ள்
இவ‌ரிட‌ம்
ஒரு அம்மா அப்பா விளையாட்டை
அர‌ங்கேற்றிய‌போதும்
இவ‌ருக்கு அது
ஒரு விவ‌ர‌ம் புரியாத‌ விப‌த்து தான்.
இவ‌ருக்கு
குழ‌ந்தை பிற‌த்தது கூட‌
ஏதோ ஒரு செடியில்
வைர‌மே
காயாக‌ பிஞ்சு விட்ட‌ ம‌கிழ்ச்சிதான்.
உற்சாகத்தின்
அந்த‌ மின்ன‌ல் வெள்ள‌த்தை
உடைத்து பிர‌வாக‌ம் செய்வ‌தில்
ந‌டிப்பின் பிர‌ப‌ஞ்ச‌ விளிம்புக்கே
போய்விட்டார்.
குழ‌ந்தையோ இவ‌ரிட‌ம்
விளையாடிய‌து
அற்புத‌மான‌
அம்மா ‍‍ம‌க‌ன் விளையாட்டு.

இந்த‌ப்ப‌ட‌த்துக்குள்
இன்னொரு விக்ர‌ம் ஒளிந்திருகிறார்.
டைர‌க்ட‌ர் விஜ‌ய் தான் அவ‌ர்.
இந்த‌ வாலிப‌ ப‌ருவ‌ விக்ர‌மையும்
குழ‌ந்தைப்ப‌ருவ‌ விக்ர‌மையும்
“ட‌பிள் ஆக்ட்”விக்ர‌ம்க‌ளாக‌
வ‌ல‌ம் வ‌ர‌ச்செய்திருக்கும் அவ‌ர‌து
வ‌ல்ல‌மையை
எவ்வ‌ள‌வு போற்றினாலும் த‌கும்.
குழ‌ந்தை தாராவின்
மிக‌ உய‌ரிய‌ ந‌டிப்பு
ந‌ம்மை மெய்சிலிர்க்க‌ வைக்கிற‌து.

அந்த‌ கோர்ட் ம‌ற்றும்
மாமூல் காட்சிக‌ளுக்காக‌
ஆனந்த‌ விக‌ட‌ன்
அந்த‌ இன்னொரு ஐம்ப‌து மார்க்கை
குறைத்து விட்ட‌போதும்
விக்ர‌மின்
ந‌டிப்பில் தெறித்த‌
ந‌ர‌ம்பின் ஒவ்வொரு நியூரான்க‌ளுக்கும்
நூற்றுக்கு நூறு
கொடுத்தே ஆக‌வேண்டும்.

ஆம்.
ச‌ந்தேக‌மில்லை.
விக்ர‌மின் ஒவ்வொரு
ந‌டிப்பின் திருப்ப‌ங்க‌ளில்
ஆன‌ந்த‌ விக‌ட‌னும்
விமரிசனங்கள் மூலம்
த‌ன்னை
புட‌ம் போட்டுக்கொள்கிற‌து.

=====ருத்ரா
24/7/2011

Series Navigationபாகிஸ்தான் சிறுகதைகள்வாரக் கடைசி.

16 Comments for ““நடிகர் சிகரம் விக்ரம்””

 • Ram says:

  Half of the credits should go Sean Penn and the director of I am Sam. I don’t know what is there to appreciate somebody who saw the film hundreds of times in DVD just to copy it frame by frame. Why repeat the same film again in different language with different actors, just dub it. The very idea of a new movie is to show something different which hasn’t appeared in any movie that came before, not to rip it off and parade as original.

 • Tamil MA says:

  ஜெயமோகன் கிண்டல் பண்றாரா இல்ல சீரியஸா சொல்றாரா?…படு மொக்கை

 • Enna solla says:

  அன்புள்ள ருத்ரா,
  என்ன சொல்லிப் புகழ்வது
  உங்கள் கவித்திறனை
  உங்கள் கவிதையைக்
  கேட்டு கல்லறைகள்
  திற‌ந்துகொண்டன,
  எலும்புக்கூடுக‌ள் புல்ல‌ரித்து
  எழுகின்ற‌ன‌
  வாய‌சைத்து (ம‌ன்னிக்க‌) ப‌ல்ல‌சைத்து
  உம் புக‌ழ் பாடுகின்ற‌ன‌.
  விக்கிர‌மே விக்கி நிக்கிறாராமே.

  ஆனாலும் நீங்க‌ள் ஒரு
  முக்கிய‌மான‌ விஷ‌ய‌த்தை
  க‌வித்துவ‌மான‌ த‌த்துவ‌த்தை
  ம‌ற‌ந்துவிட்டீர்க‌ள்
  விக்கிர‌மும் ‘வி’யில் துவ‌ங்கும்
  விஜ‌யும் ‘வி’யில் துவ‌ங்கும்
  விடுக‌தையும் ‘வி’யில் துவ‌ங்கும்
  விடுத‌லையும் ‘வி’யில் துவ‌ங்கும்
  விண்ணும் ‘வி’யில் துவ‌ங்கும்
  விக்ட‌ரியும் ‘வி’யில் துவ‌ங்கும்
  விக்டோரியாவும் ‘வி’யில் துவ‌ங்கும்
  விக்கிர‌ம் என்றால் உத‌டுக‌ள் ஒட்டும்(வாயை மூடிக்கொண்டு)
  ருத்ரா என்றாலும் உத‌டுக‌ள் ஒட்டும்

 • arangasamy says:

  ஒரு கவிதைச்சாதனை http://www.jeyamohan.in/?p=19368

  கடந்த சில வருடங்களில் தமிழில் எழுதப்பட்ட கவிதைகளிலேயே மிகச்சிறந்த கவிதை இவ்வாரத் திண்ணை இதழில் ருத்ரா என்ற புதிய கவிஞர் எழுதியதுதான் என்று சொல்லமுடியும்

  ருத்ரா,தமிழ்க்கவிதையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கிறார். இதுவரை வெளிவந்த தமிழ்க்கவிதைகளின் நெடியே இல்லாமல், சொல்லப்போனால் உலகமொழிகளி எழுதப்பட்ட எந்த கவிதையின் சாயலும் இல்லாமல், புத்தம்புதிதாக வெளிவந்திருக்கிறார் என்பதை ஒரு சாதனையாகவே சொல்வேன்.

  ருத்ரா தொடர்ந்து எழுதவேண்டும். வெளியிட்ட திண்ணை இதழுக்கும் அதன் ஆசிரியர்குழுவுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ஜெயமோகன்

 • ரவிசிநிவாஸ் says:

  சினிமாத்துறையில் உள்ள சிலரை கிண்டல் செய்து எழுதிவிட்டு பின் அதை தன் இணையதளத்திலிருந்து நீக்கிய ஜெயமோகன் இப்போது சினிமாத்துறையில் உள்ள எவரையும் விமர்சிப்பது போலிருக்கிறதே அது ஏன். முன்பெல்லாம் தமிழ்சினிமாவைப் பற்றி அவர் என்னவெல்லாம் எழுதியுள்ளார் என்பதை திண்ணையின் பழைய பக்கங்களில் பார்க்கலாம்.
  மணி கெளல் பற்றி எழுதும் ஜெயமோகன் ராவணன் போன்ற படங்களைப் பற்றி ஏன் எழுதுவதில்லை.

  ஐஸ்வர்யா ராய் பற்றிய கட்டுரையில் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய மணிரத்னத்தினைப் பற்றி ஒன்றும் குறிப்பிட்டு விமர்சிக்காதது என்ன வகையான தந்திரம்.அது மட்டுமின்றி மணிரத்னத்தின் மகன் இந்தியாவிற்கு வந்ததையும், தேர்தலையும் தொடர்புபடுத்தி ஐஸ் வைத்து எழுதியது என்ன வகை இலக்கிய நேர்மை.மணிரத்னத்தின் மகன் பிரிட்டனில் படிக்கிறார்.தேர்தல் வாக்குப்பதிவின் போது அங்கு பல பல்கலைகழகங்களில் ஈஸ்டர் விடுமுறை, கிட்டதட்ட 10 நாட்கள்.அதையொட்டி பல மாணவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குப் போவதுண்டு. இதை மறைத்து மணி ரதனத்தின் மகனுக்கே தேர்தல் ஒட்டு போட வந்தார் என்று ஜால்ரா போட்ட பேர்வழிக்கு திண்ணை, மற்றும் ருத்ராவை கிண்டல் செய்ய என்ன தார்மீக உரிமை உள்ளது.

  ருத்ரா யார் என்ன செய்கிறார் என்பது எனக்குத் தெரியாது.
  அவர் உண்மையிலேயே அப்படத்தினை சாதனையாக கருதி அதை எழுதியிருக்கலாம்.அதை நாம் விமர்சிக்கலாம்.
  ஆனால் சினிமாக்கரர்களுடன் சமரசம் செய்து கொண்டு பணம் சம்பாதிக்க தான் எழுதியதை தன் இணையதளத்திலிருந்து நீக்கியவர் என்ற குற்றசாட்டிற்கு உள்ளானவர் ருத்ராவை கிண்டல் செய்வதிற்கு எந்த தகுதியும் அற்றவர்.இன்று வரை தான் எழுதியதை ஏன் நீக்கினார், அவ்வாறு எழுதியதற்காக மன்னிப்புக் கேட்டாரா அல்லது வருத்தம் தெரிவித்தாரா என்பதை
  வெளிப்படையாக ஜெயமோகன் எங்காவது எழுதியுள்ளாரா.
  விகரம் ரசிகராக இருந்து அப்படி எழுதுவது ஜெயமோகனின் ரசிகராக இருந்து வாசகர் வட்டம் வைத்து செயல்படுவதை விட மோசமானது அல்ல.
  ஜெயமோகன் ருத்ராவை கிண்டல் செய்கிறார். அவர் மெச்சும் பாலா (இயக்குனர்) இப்பட்டத்தை புகழ்கிறார்.அவரையும் கிண்டல் செய்து எழுதும் தைரியம் ஜெயமோகனுக்கு உண்டா.

  • Karthikeyan says:

   enna solla varinga bossu,onnum ungalukku vera etho koovam jeyamohan mela..illa ungalukku avaru enna solraru ethai kindal panrarunu puriyala..,pls oru thadva aavaru enna eluthi irukarunu patinga,then ungaloda daarmiga kovatha kaatunga…rigth….

 • dinakaran says:

  இவ்வளவு பேசும் ஜெயமோகன் எங்கள் தானைத்தலைவர் சாருவை விமர்சிக்க முடியுமா.. பயந்து அடங்கி ஒடுங்கி இருக்கும் ஜெ.மோ. உங்கள் வீரத்தை ருத்ரா போன்ற இளையவர்களிடம் காட்டாதீர்கள்.. எங்கள் சிங்கத்திடம் காட்டிப்பாருங்கள்.. உங்கள் ரப்பர் காடு வெந்து போதும், எங்கள் அனலின் தணலில்.. சாரு .வா.வ

 • aravin says:

  ரவி ,

  ஜெயமோகன் எழுதியிருப்பது என்ன , ஜஸ்வர்யா கட்டுரையில் என்ன இருக்கிறது , இந்த “கவிதை” பற்றி ஜெயமோகன் சொல்லியிருப்பது என்ன என எதையும் புரிந்துகொள்ள உங்களால் முடியாது என உங்களுக்கும் தெரியும் .

  திண்ணையில் ஜெயமோகன் இருந்தவரை உயிர்ப்போடு இருந்தீர்கள் – அவரை திட்டுவதன் மூலம் , அய்யோ பாவம் இப்போதெல்லாம் கண்டுகொள்ளவும் ஆளில்லை என்பதால் நானாவது உங்களுக்கு பதில் சொல்லி உங்களை பொருட்படுத்தவும் ஆளிருக்கிறது என நிம்மதி தர விரும்புகிறேன் :)

  அண்ணே , வாழ்க்கை முழுவதும் வைத்து படித்து மகிழ “ரவிஸ்ரீனிவாஸின் இலக்கிய உலகங்கள்” இருக்கிறது , சந்தோஷமா இருங்க போங்க.

 • Viththakan says:

  ரவிசிநிவாஸ் அவர்களது பின்னூட்டம் ருத்ராவின் கவிதைக்கு இணையான இன்னுமொரு கவிதைதான். நயத்திலும் சொற்கட்டிலும் இரு படைப்புகளும் ஒத்திருந்தாலும் கூட ருத்ராவின் மெல்லிய எழுத்தை மயிலிறகு என்றும் ரவிசிநிவாஸ் அவர்களின் ஆக்ரோஷமான கேள்விகளை அமிலப் பாய்ச்சல் என்றும் வருணிக்க விரும்புகிறேன். வாழ்க தமிழ் கூறும் நல்லுலகம்!

 • aravin says:

  //Viththakan says://

  ஹஹ , கிளாஸ் , ஆனா இதுவும் ரவிக்கு புரியாது என்கிற துக்கம் என் தொண்டையை அடைக்கிறது :)

  ரவியண்னணை ஓட்டாதீங்கப்பா , அழுதுருவார் .

 • Kalai says:

  என்ன பிரசினை இந்தக் கவிதையில்? எந்தக் கவிதையில் தான் பிரசினை இல்லை?
  விக்ரம் பற்றி எழுதியதா? சிலுக்கு ஸ்மிதா பற்றி எழுதாததாலா?
  மிகை புகழ்ச்சியா? சினிமா பற்றி எழுதியதாலா?
  உரைநடையை உருட்டிக் கவிதை ஆக்கியதாலா?
  அவர் எழுதுவது கவிதை இல்லை இவர் கருத்துப் படி.
  இவர் எழுதுவது கவிதை இல்லை அவர் கருத்துப் படி.
  ஆக மொத்தம் கவிஞருக்குத் தெரிய வில்லை கவிதை எழுத.
  தமிழருக்கு தெரியவில்லை கவிதை எழுத

  • Mr.Anon says:

   //Kalai says:
   August 9, 2011 at 6:13 pm

   என்ன பிரசினை இந்தக் கவிதையில்? எந்தக் கவிதையில் தான் பிரசினை இல்லை?…//
   எனக்கென்னவோ திண்ணையில் வந்ததால் தான் என்று தோன்றுகிறது.

 • ruthraa (e.paramasivan) says:

  

  எட்டு பூச‌ணிக்காய்க‌ள்.
  ===========================================================கவிஞர் ருத்ரா

  இக்க‌விதையை எட்டு நூல்கள்” என்ற தலைப்பில் திண்ணை 23.10.2003 இதழில் நீண்ட கவிதையாக எழுதியுள்ளேன்.

  எழுத்தாள‌ர் திரு.ஜெய‌மோக‌ன் அவ‌ர்க‌ள் ஒரே ச‌ம‌ய‌த்தில் தான் எழுதிக்குவித்த எட்டு நூல்க‌ளுக்கு ஏற்புரையாற்றும் போது த‌மிழ் மொழியின் ஊற்றும் எழுச்சியுமாக‌ உள்ள‌ க‌லைஞ‌ர் மீது விம‌ரிச‌ன‌ம் என்ற‌ பெய‌ரில் வாரி இறைத்த‌ சேறு அவ‌ர் முக‌த்தின் மீது அவ‌ரே பூசிக்கொண்ட‌ க‌ரியாக‌த்தான் இருந்த‌து.த‌மிழ் எழுச்சியின் வ‌ர‌லாற்றுக்கு க‌ள‌ங்க‌ம் போல் இருந்த‌ அந்த‌ எட்டு நூல்க‌ளும் ந‌ம் த‌மிழ் அன்னைக்கு (அவர் மொழியிலேயே சொன்னால்)”திருஷ்டிக்க‌ழிப்பாய்”போட்டு உடைத்த‌ எட்டு பூச‌ணிக்காய்க‌ளாக‌த் தான் அங்கே சித‌ற‌ப்ப‌ட்ட‌ன‌.அது ப‌ற்றிய‌ நீண்ட‌ க‌விதை இது.அதன் மறுபதிப்பு இது.

  அஹ‌ம் ப்ரஹ்மாஸ்மி என்ற சமஸ்கிருதக் கூச்சலைப்புகுத்த ஒரு ஆர்யாவயும் பாலாவும் அவருக்கு கிடைத்தார்கள் என்பதும் சமூக அருவருப்புகளை அவர் பகடை உருட்டி ஒரு தேசிய விருது பெற்றுவிட்டார் என்பதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.தமிழனைக்கொண்டே தமிழனை வெட்டிச்சாய்க்கும் தமிழ்ப்பகைக் கும்பல்களின் கும்பமேளாக்களுக்கு இவரே நிரந்தர தலைவர் என்பதும் இலக்கிய உலகம் அறிந்த ஒன்று தான்.இந்தப்போலிகளிடமிருந்து தமிழினம் காக்கப்படவேண்டும் என்ற உணர்வில் எழுந்ததே இக்கவிதை.

  எட்டு பூச‌ணிக்காய்க‌ள்.

  =======================================================================ருத்ரா.

  எட்டு நூல்
  வெளியீட்டு விழாவில்
  ஏதோ
  எட்டாத உயரத்து
  சாளரத்தில் நின்றுகொண்டு
  காக்காய் குருவிகளை
  எட்டி பார்ப்பது போல்
  ஏற்புரை அருளியிருக்கிறார்
  ஜெயமோகன்.

  எழுத்து நாகரிகத்தை
  எட்டாதவை அவை.
  அவரது எட்டு நூல்
  ஒன்றும் எட்டுத்தொகை அல்ல.
  கொஞ்சம் விட்டால்
  சங்க இலக்கியத்தைக் கூட
  சாக்கடையில்
  வீசிவிடலாம் என்று
  ஒன்பதாய்
  ஒரு நூல் எழுதிவிடுவார்.

  எட்டுத்தொகையை
  இவரது ‘துட்டுத்தொகையாக்கி ‘
  பரபரப்பாய்
  இப்படி ஏதாவது எழுதினால் தான்
  அகாடமிக் காரர்களின்
  அங்கவஸ்திரம்
  இவர்மீது விழும்.

  ஏனெனில்
  தமிழை இன்னும்
  உயர் தனிச்செம்மொழி என்று
  ஏற்றுக்கொள்ளாத தேசம்
  அல்லவா இது.
  சங்கப்பாடல் பற்றி
  இவர் எழுதிய
  சில கட்டுரைகள்
  இப்படித்தான்
  அவசரகோலத்தில்
  அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தன.

  இன்று இவர் எழுதியதை
  அவர்கள் சங்க காலத்தில்
  அன்றே ‘காப்பி யடித்து ‘
  எழுதியதைப்போல் தான்
  மிக முறுக்கலோடு
  எழுதியிருந்தார்.

  அதனால்
  கலைஞர் எழுத்துக்களை
  காயப்படுத்தி
  காச்சு மூச்சு என்று
  இவர் எழுதியதில்
  ஒன்றும் வியப்பில்லை.

  ‘நாச்சார் மட ‘ விவகாரத்தில்
  ஏதோ ஒரு தருமிக்கு
  பாட்டு எழுதி கொடுத்தது போல்
  யாரோ ஒருவருடைய
  பேனாவுக்கு
  மை ஊற்றிக் கொடுத்து
  தன் முகத்தில்
  மை ஊற்றிக்கொண்டவர் தானே
  இவர்.

  இலக்கிய மேதை ஜெயகாந்தன்
  பாராட்டு பத்திரத்தில்
  இவருக்கு
  குடை பிடித்த போதும்,
  அந்த குடையும்
  கொஞ்சம் கந்தலாகத்தான்
  இருந்தது.
  ‘விஷ்ணுபுரத்தில் ‘
  அந்த இறுக்கமான
  அதிரடியான
  அடாவடிக் கற்பனையான
  எழுத்துக்கொத்துகளில்
  கதவு திறக்கப்பட முடியாமல்
  சிக்கித்தான் கிடந்தது

  ஜெயகாந்தன் சொன்னதைப்போல.
  சுஜாதா பட்டுக்கோட்டை பிரபாகர்
  ராஜேஷ் குமார் பாலகுமாரன்
  என்று எல்லோரையும் வைத்து
  அரைத்து பண்ணிய அவியல் அது.

  எழுத்துக்கு எழுத்து
  இடையே உள்ள
  இடைவெளிக்குள்
  ஒரு ‘உருவெளி ‘ மயக்கத்தின்
  (ஹேலூசினேஷன்)
  கூட்டுப்புழு தான்
  அடைந்து கிடந்தது.
  சன்னல் தேடிக்கொண்டிருக்கும்
  அவரது மனப்புழுக்கம்
  அங்கே மத்தாப்பு கொளுத்தியது.
  அதனால்
  அவ்வளவும் அங்கே
  வெறும் இருட்டு தான்.

  அவருக்குள்ளே
  தான் ஒரு குமரிக்காரர்
  என்ற பெருமிதம்
  இருப்பதில் தப்பில்லை.
  அதற்காக
  மற்ற இலக்கியவாதிகள் மீது
  குமுறிப்பாய்ந்து
  கூர் நகம் பாய்ச்சி
  பச்சை ரத்தம்
  பருகத்துடிப்பது
  விமரிசன நாகரிகமே இல்லை.

  தனக்குள்ளே
  ஒரு காழ்ப்புணர்ச்சியுள்ள
  மலையாளிக்காரரை
  புதைத்து
  வைத்துக்கெண்டிருப்பவர் போல்
  அல்லவா
  புகை கக்குகிறார்.

  சங்கீதக்கடல்களான
  செம்மங்குடிகளும்
  அரியக்குடிகளும்
  நிறைகுடமாய்
  நின்றிருக்க
  கர்நாடக சங்கீதத்தை
  வார்த்தையின்
  கழைக்கூத்தாடித்தனத்தில்
  வெறும் கொட்டாங்கச்சியாக்கி
  அதில் நீந்திகளித்த
  சுப்புடுகளின் அவதாரத்தில்
  கடுப்படிக்க வந்த
  இந்த
  ‘கடுப்புடுகளின் ‘
  கர்ண கடூரத்தை
  நாம் கவனிக்கத்தேவையில்லை.

  இவர் எழுதிக்கொண்டிருக்கும்
  ‘குமரி உலா ‘
  உண்மையில்
  ஆச்சரியமான இடங்களின்
  நிழற்பட தொகுப்பு என்பதில்
  சந்தேகமேயில்லை.
  பாவம்
  ஃபோட்டோக்கக்களின்
  அந்த ஆல்பம்
  என்ன செய்யும்?
  அதன் மீதும்
  இவர் எழுத்துக்கள்
  எச்சில் தான் துப்பியிருந்தன.

  ‘ஆன்மீகத்தேடல் ‘ என்று
  எதையோ தேடி
  மண்டை காய்ந்து
  மல்யுத்தம் செய்திருந்தார்.
  அவர் தீட்டிய வர்ணம்
  நன்றாகவே அதில் தெரிகிறது.
  அவர் யாருடைய தூரிகை
  என்று நன்றாகவே புரிகிறது.

  நாஞ்சில்காரர்களுக்கு தெரியும்
  சர்.சி.பி
  எப்படிப்பட்டவர் என்று.
  சுதந்திர தீயை
  அணைத்துக்காட்ட வந்த
  ஒரு சிறந்த ராஜ விசுவாசி அவர்.
  ஆனால்
  அவர் போட்ட ‘கான்கிரீட் ‘
  ரோட்டுக்காக
  அந்த ‘சர் ‘ டர்பனுக்கு மேலும்
  இவரும்
  இன்னொரு கிரீடம்
  சூட்டுகின்றார்.

  அரசியலுக்காக இலக்கியம்
  செய்தவர்களை
  இலக்கியவாதிகள் இல்லை
  என்று
  காலில் போட்டு மிதிக்கும்
  இவர்
  சுதந்திர உணர்ச்சி எனும்
  அரசியலை ஊட்டிய
  மகாகவி பாரதியையும்
  குப்பைத்தொட்டியில்
  எறிவது தானே!

  கலைஞருக்கு
  துதி பாடியதாக
  அந்த சிறந்த எழுத்தாளர்கள் மீது
  அதிர்ச்சி அடைந்ததாய்
  மூர்க்கத்தனமாய் விமர்சிக்கும்
  இந்த “முற்றிய” எழுத்தாளர்
  யாருக்கோ
  துதி பாடுவது
  நன்கு புலப்படுகிறது.

  ஆபாசம் என்ற வார்த்தை
  வெறும் ‘பாலியலை ‘ மட்டும்
  குறிப்பதல்ல.
  ஒரு மொழியின் உயிர்ப்பை
  அதன் துடிப்பை
  கொச்சைப்படுத்துவது கூட
  ‘மொழியியல் ஆபாசம் ‘ தான்.
  புள்ளி ராஜா விளம்பரத்தில்
  அந்த நோய் மறந்து போனது.
  உறை மட்டுமே
  ஊதப்பட்டு பூதம் ஆனது.
  ஜெயமோகன் அவர்களே
  உங்கள் ஏற்புரை மூலம்
  நீங்களும்
  ‘தமிழை ஆபாசபடுத்துவது ‘
  எனும் அந்த பலூனை
  பெரிதாய் ஊதியிருக்கிறீர்கள்.

  அறிவுஜீவிகள்
  என்று தங்களுக்குள்
  முத்திரை குத்திக்கொண்ட
  நாலைந்து ஜோல்னாப்பைகளின்
  தூக்காணாங் குருவிக்கூடுகளில்
  தூங்குவதற்கு மட்டுமே
  நூல்களை அச்சிட்டுவிட்டு
  ஏதோ எரிமலைகளை
  விரலிடுக்கின் சிகரெட்டுகளில்
  பற்ற வைத்துவிட்டதாய்
  நினைக்கும்
  உங்கள்மயக்கத்தை
  கலைத்துக்கொள்ளுங்கள்.

  அவர் குறிப்பிடுகிற
  ஆத்மீக தேடலின்
  பின்னே
  தொடர்ந்து தொடர்ந்து சென்றால்
  அதனுடைய
  கடைசி மைல்கல்
  ராமகோபாலனாய்த்தான்
  இருக்கும்.
  பிள்ளையார் சிலைகளை கடலில்
  பிண்டம் கரைக்க‌
  படைகள் திரட்டுவார்.

  இவர் எழுத்துகள்
  சிந்தனைபூர்வமான நாத்திகத்தை
  கொப்பளிக்கலாம்.
  புத்தன் தந்த
  நாத்திக வாதத்தை வைத்தே
  பிரம்ம சூத்திர பாஷ்யங்களை
  சங்கராச்சார்யர்கள்
  முழக்கம் இடவில்லயா ?
  அரசின் செங்கோல்களை யெல்லாம்
  துணைக்கு
  அருகில் வைத்துக்கொண்டு
  எதிர்வாதங்கள் எல்லாம்
  துண்டு துண்டாய் வெட்டப்பட்டு
  கழுகுக்கு இரையாக
  வீசப்படவில்லையா ?
  விஞ்ஞான வேடமிட்ட
  இவருடைய யதார்த்தமும்
  தத்துவார்த்த
  ஆத்மீக யாத்திரைகளும்
  அப்படிப்பட்டது தான்.

  சங்க இலக்கியங்களை
  சித்திரம் ஆக்கினாலும்
  தமிழைச் சித்திரவதை செய்து
  ரகசியமாய்
  அதை கழுகில் ஏற்ற
  அவர் பேனாவை
  கூர் தீட்டிக்கொண்டிருப்பது
  தமிழுக்கே
  பெரும் அபாயம் தான்.

  தமிழிலக்கியம்
  வெறும் சடலம் என்று
  தானே வெட்டியானாகி
  மண்வெட்டி
  தூக்கிய படலம் தான்
  இந்த எட்டு நூல்
  அரங்கேற்ற விழா,
  மற்றும் பேச்சாளர்களின்
  இந்த ஆரோகணம்
  அவரோகணம் எல்லாம்.

  லா.சா.ரா புடை சூழ
  கந்தர்வன் கவரிவீச
  இவர் நடத்திய
  நூல் வெளியீட்டு விழா
  ஒரு சாதனை தான்.

  பிச்சமூர்த்திகளையும்
  புதுமைப்பித்தன்களையும்
  வெற்றிலை போட்டு
  குதப்பிக்கொண்டு
  அவர்கள் மீதே
  காறி உமிழவும்
  தயங்காத எழுத்து வித்தகர்.

  அவர்
  தன்னுடைய
  பன்மொழி பாண்டித்தியத்துக்கு
  கட்டியம் கூறி
  எச்சில் துப்ப
  தமிழ் தானா கிடைத்தது.
  சில தமிழ் எழுத்தாளர்களை
  அவர் விமர்சித்தது
  இந்த பாணியில் தான்.

  வண்ண நிலவன்களும்
  மேலாண்மை பொன்னுச்சாமிகளும்
  தொப்பில் முகமது மீரான்களும்
  தி.ஜானகிராமன்களும்
  கி.ராஜநாராயணன்களும்
  சு.சமுத்திரங்களும்
  நுழைந்து பார்க்காத
  எழுத்தின்
  ருசியையும் ஆத்மாவையுமா
  இவர் காட்டியிருக்கிறார் ?

  எழுத்தாளர்களின்
  கர்வம்
  அவர்களது
  சொந்தக் கிரீடம்.
  அதில் நிறைய
  காக்காய் இறகுகளை
  சொருகிக்கொள்ளட்டும்
  நமக்கு கவலைஇல்லை.
  விமரிசன எழுத்தாளர்
  என்றால்
  அந்த கிரீடத்திற்கு அடியில்
  கொம்புமா
  முளைத்திருக்க வேண்டும் ?

  சக எழுத்தாளர்களை
  நொண்டி நாய்
  வெள்ளை நாய் என்று
  குரூரமாய்
  உருவகப்படுத்தியதில்
  அவர் இன்னமும்
  ‘கற் காலத்தில் ‘ தான்
  இருக்கிறார்
  என்பதை நன்கு காட்டுகிறது.

  தன்னிடம்
  ஊனமுற்ற சிந்தனையை
  வைத்துக்கொண்டு
  மற்றவர்களின்
  மரக்கால்களைப்பிறாண்டி
  இரத்தம் சுவைக்க நினைக்கும்
  இந்த பூனைகளா
  தமிழ் எழுத்துக்களை
  உருத்திராட்சக் கொட்டைகளாக்கி
  உருட்ட வந்திருப்பது ?

  உள்ளத்தின்
  உள்ளுக்குள்
  இரண்டாய் பிளந்திருக்கும்
  ‘ஸ்கிசோ ஃபெர்னிய ‘ வெறியில்
  உள்ளுக்குள்
  தமிழைத் தாக்க வந்தவர்
  வெளியே
  தமிழைக் காக்க வந்தவர்போல்
  தோரணங்கள் கட்டித்
  தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார்.

  மனத்தளவில்
  அவர் ஒரு சக்கரநாற்காலியில்
  உட்கார்ந்துகொண்டு
  ஒரு சக்கரவர்த்தியின்
  வேடம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

  குலேபகாவலி காட்டுவாசிகள்
  எலும்புகளை
  பிடித்துக்கொண்டு
  ஆடுவதைப்போல்
  பேனாவை பிடித்துக்கொண்டு
  ஆடுவதைத்தான்
  அவரது
  ஏற்புரை காட்டுகிறது.

  இது பொறாமையல்ல.
  அவர் குறிப்பிட்டது போல்.
  ‘புலமைக்காய்ச்சல் ‘ தான்.
  ஆனால்
  இந்தக் காய்ச்சலின்
  வைரஸ் கிருமிகள்
  அவரே தான்.

  எட்டுக்குழந்தைகள்
  ஒரே பிரசவத்தில் வந்ததைப்போல்
  எட்டு நூல்கள் ஆச்சரியம் தான்.
  எட்டு குழந்தைகளும்
  ஒரே தலையில் அல்லவா
  ஒட்டிப்பிறந்திருக்கின்றன.
  வெறும் தலைக்கனம் மட்டுமே
  அந்த எழுத்துக்களின்
  கன பரிமாணம்.

  தமிழிலக்கிய சிந்தனையாளர்களே!
  உங்கள் அறிவாயுதத்தின்
  மூலம் தான்
  அறுவை சிகிச்சை நடக்கவேண்டும்.
  அந்த குழந்தைகளும்
  பிழைத்திட வேண்டும்.

  ‘ப்ரிக்லி பியர் ப்ரிக்லி பியர்
  ஹியர் வி கோ ரவுண்ட் தி ப்ரிக்லி பியர் ‘
  டி.எஸ் எலியட் தான்
  இப்படி கவிதை எழுதியிருக்கிறார்.

  ஜெயமோகன் அவர்களே !
  கள்ளிக்காட்டுக்குள் திரியும்
  ‘உள்ளீடு அற்ற மனிதனாய் ‘
  உலா வருவதற்கா
  இந்த ஏற்புரை ஏற்பாடு.

  எட்டு நூல்கள் எனும்
  அந்த காகிதக்காடு
  நிச்சயம் கள்ளிக்காடாக
  இருக்கக்கூடாது என்று
  மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.

  த‌மிழ்ச்சூரிய‌னுக்கு
  தார் பூசி இருட்ட‌டிக்க‌ச் செய்யும்
  இந்த‌ விளையாட்டில்
  பாவ‌ம்
  அவ‌ர் ச‌ந்தோஷ‌ப்ப‌ட்டுக்கொள்ள‌ட்டும்
  க‌வ‌லையில்லை.
  திருஷ்டிக் க‌ழிப்பாய்
  எட்டு பூச‌ணிக்காய்க‌ளை
  உடைத்துக்கொள்ள‌ட்டும்
  அந்த‌ எட்டு நூல்க‌ளில்!

  இருப்பினும்
  அடைமொழிகளை
  முன்னால்
  சேர்த்துக்கொள்வதால் மட்டுமே
  ‘ஜெய ‘மோகன்கள்
  ஜெயகாந்தன்கள்
  ஆகிவிட முடியாது.

  ===========================================================
  ருத்ரா
  epsi_van@hotmail.com

 • பொன்.முத்துக்குமார் says:

  ஓஓஓஓஓ … இதுவும் கவிதைங்களா ருத்ரா ? யப்ப்ப்பாஆஆஆஆ ?????

 • aravin says:

  அப்ப திண்ணை வெகுகாலமாகவே ”கவிதை” என இதைத்தான் கருதுகிறதா ?

  அடப்பாவிகளா :)))))

  ருத்ரா அய்யா , விடாதீங்க , வாராவாரம் கட்டுரை எழுதி மூன்று வார்த்தைக்கொரு எண்டர் தட்டி ”கவிதை”யாக்கி திண்ணைக்கு அனுப்பாமல் விட்டுவிடவேண்டாம் என கலைஞர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் .

  (கலைஞர் ஏன் இலக்கியவாதியில்லைனு இப்ப நல்லாவே தெரியுதுங்க :)))

 • Rutradasan says:

  Hello boss Tamil natil “aduthutha T. Rajendar yaar”” potti ethuna nadakkutha?
  Ruthradasan


Leave a Comment to ரவிசிநிவாஸ்

Archives