கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)

Spread the love

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

விடிவ தற்குச் சற்று முன்பு
பொழுது புலரும்
வேளையில்
விழித் தெழுந்தாள் காதலி !
ஒருவாய்த் தண்ணீர்
அருந்தி
அவள் கேட்டாள் :
“நீ நேசிப்பது என்னையா ?
அல்லது
நீ நேசிப்பது உன்னையா ?
நிஜத்தைச் சொல்
என்னிடம் உண்மை யாக,
உறுதி யாக !”

+++++++++

ஒருவாய் நீர் அருந்தி
ஆடவன் கூறினான் :
“என்னிடம் எதுவும்
எஞ்சி இருக்க வில்லை !
பரிதி ஒளியில் நீட்டிய
ஒரு ரூபியை
ஒத்தவன் நான் !
அது விலை மதிப்பில்லாக்
கல்லா ? அல்லது
செந்நிறக் கல்லில்
செதுக்கிய உண்டையா ?
கீழ்வானம் சிவந்து
இளம் ஒளி படிவதை
ரூபிக் கல்லால்
விடுவிக்க
முடிய வில்லை !”

+++++++++++++

இப்படித் தான் உரைத்தார்
ஞானி ஹல்லாஜ்* :
“நானே கடவுள்
நானே உண்மை !”
காலைப் பொழுதும்
செந்நிற ரூபிக் கல்லும்
ஒன்றே !
உறுதி பெறுவீர் ! உம்மை
ஒழுங்கு படுத்துவீர் !
காதும் கேட்பதும் ஒன்றுதான் !
செவில் அணிந்திடு
செந்நிற ரூபியை !

++++++++++++++

மெய்வருந்தி உழைப்பாய்
கிணறு தோண்டுவதைத் தொடர் !
வேலை நிறுத்தம் செய்ய
நினைக் காதே !
நீர் எங்கோ இருக்கும் !
தினப் பயிற்சி புரியத்
திட்டமிடு !
கதவைத் தட்ட மறவாதே
அதுவே
உன் ராஜபக்திக்கு
உத்திர வாதம் !
தாக்குவதைத் தொடர்
உள்ளெழும் இன்ப உணர்ச்சியால்
சாளரக் கதவு திறக்கும் !
வாசலில் வந்து நிற்பதை
வரவேற்கும் !

***************
ஹல்லாஜ்* (Hallaj)

*Al Hallaj was a legendary Iranian Sufi Master who lived in between 858 – 922 AD. Al Hallaj was one of the earliest Sufi masters, he lead his life as a dervish wanderer, he would often go into trans where he felt one with all the creation, existence, with God.

He once said “Ana al-haqq” (“I am the Truth”–i.e., God), something people at the time found offensive and could not understand, because of that. Al Hallaj was persecuted and found guilty of heresy. He found an unfortunate and brutal death

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 9, 2011)

Series Navigationகவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)