அம்மா நாமம் வாழ்க !

This entry is part 6 of 12 in the series 22 மே 2016

ஜெயானந்தன்.

தமிழக அரசியல் 2016 முடிவுகள் வந்துக் கொண்டே இருக்கின்றன.
மீண்டும் அம்மா அலைதான் வீசுகின்றது. அம்மா போட்ட அரசியல்  கணக்கில், நரியாக செயல்பட்டு, வைகோ சரியாக அவரது சேவையை  செய்துவிட்டார். இந்த விளையாட்டில், பாவன் ஒரு காதநாயகன் தன் உரு இழந்து, கோமாளியாக மாறிப்போனக்கதை, அவருக்கும்  அவர்து மனைவிக்கும் புரிந்திருக்கும். போன தேர்தலில்,  ஒரு காமடியன், தன் சினிமா வாழ்க்கையே இழ்ந்தார்.

அம்மா உணவகம், அம்மா வாட்டர், அம்மா டாஷ்மார்க்,
அம்மா மிதிவண்டி, அம்மா கனணி, அம்மா தாலி திட்டம்,
அம்மா மக்ப்பேறு உதவி, இன்னும் எத்தையோ சொன்னதை,
சொல்லாததை எல்லாம் சேர்ந்து, அம்மாவை அரியணை
ஏறச்செய்தது. சென்னையில் மட்டும், மழை ஒட்டுக்களை
அடித்து கொண்டு சென்றுவிட்டது.

கருணநிதியின், குடும்ப கொள்ளை நோயால், பாவம் அவருக்கு
வரவேண்டிய அரியணை மாறிப்போனது. அவரது கண்க்கும்
தப்பானது. அவன் போட்ட கண்க்கொன்று, இவன் போட்ட கண்க்கொன்று, இரண்டுமே தவறானது. எல்லாம் அம்மா மயமானது.  காந்து நடிகர் வாழ்வே மாயம் என்று பாடுவதும் கேட்கின்றது.

முற்போக்கு கொள்கையோ, சாதி அரசியலோ இங்கு வேலை  செய்யவில்லை.  அம்மா திட்டங்கள்தான் வேலைசெய்துள்ளது. இதைதான் காமராசர் செய்தார், எம்ஜியார் செய்தார்.  கருனானிதிக்கு இதன் மேல்மோகம் கிடையாது.  ஆனால் இதுவரை, தமிழக அரசியல்வாதிகள், சந்திர பாபு நாயுடு   சொன்னது போல், தமிழக்த்தை, மென்பொருள் சிட்டியாக  மாற்வேன், சிங்கபூரா செய்துவிடுவேன் என்று சொன்னதெ இல்லை.

மோடி மோகமும், இங்கு வேலை செய்யவில்லை.சினிமாவும்  மோகத்திலிருந்து, தமிழக மக்கள் விடுபட்டனர் போல் திரிகின்றது.  ஆனால் மீண்டும் ஒரு எம்ஜியார் வந்தால் நிலைமை மாறலாம்.

அப்படியானால், காந்து ந்டிகர்தான், அரியணை ஏரியிருப்பார்.  பாவம், அவர் ஏரிப்பக்கம் போய்விட்டார். போகட்டும் அவரை  விட்டுவிடிங்கள் என்று, அவரது கூட்டாளிஅக்ளை கேட்டு  கொள்ள் வேண்டும்.

அம்மா, இனிமேல் சும்மா அரசியல் செய்ய முடியாது. ஸ்டாலின்,  கடுமையாக போராட த்ன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளார்.  அவரது, சூறாவளி சுற்று பயணம், திமுகாவிற்கு, நல்ல பலனை  தந்துள்ளது. அவரால், அவரது த்ந்தை செய்த , தவறுகளும்,  அவர்து குடும்பத்தார் செய்த கொள்ளையும் மறக்கப்படலாம்.

ஸ்டாலின், இனிமேல், மெல்ல் மெல்ல, எதிர் கட்சிகளையெல்லாம்  அரவணைத்து, ஒரு மாபெரும் அணியாக திரண்டால்தான்,  எதிர்காலத்தில், அவருக்கு அரியணை கிடைக்கலாம்.

அம்மா அம்மாதான். அம்மா நாமம் வாழ்க !

Series Navigation ‘முசுறும் காலமும்’பழைய கள்
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    smitha says:

    Stalin does not have the makings of a shrewd leader. His indifferent attitude was one of the reasons why vijaykanth did not align with the DMK.

    Vaiko was keen to have an alliance with the DMK. VCK was already with DMK. The communists too would have joined. It was stalin’s rigid attitude which prevented the DMK from forging a good alliance.

    He could have accommodated azhagiri into the DMK. Many seats were lost in Madurai, theni & dindigul bcos of non cooperation from Azhagiri. Specially in this election, where the victory margins were not high.

    We have to wait & watch his performance as the leader of the opposition. His past performance in the assy while in the opposition was nothing much to write about.

  2. Avatar
    ஷாலி says:

    எட்டு பத்தி கட்டுரையில் 22 எழுத்துப் பிழை. அம்மாவுக்கு நாமம் போடும் ஆர்வத்தில்,தப்புத் தப்பாக தமிழை தட்டி விட்டார் கட்டுரையாளர்.

    “அம்மா” சம்மந்தப்பட்ட எதிலும் பிழைகள் இருப்பது ஆச்சரியமல்லவே! அம்மாவின் ஆதர்ச நீதி தேவன், குமாரசாமியின் கணக்கிலேயே பிழைகள் வரும்போது…அம்மா நாமக் கட்டுரையில் வருவது சகஜமே.!

    மற்றபடி,மக்கள் சரியாகவே தீர்ப்பளித்துள்ளார்கள்.குடி மகன்களின் ஆதரவு ஜெயலலிதாவிற்கு இருக்கும் வரை,அனைத்துக் கட்சி குடி மகன்களும் அம்மாவிற்க்கே வாக்களிப்பார்கள்.

    தமிழகம் பொருளாதாரத்தில் தள்ளாடாமல் இருப்பதற்கு,குடிமகன்கள் தொடர்ந்து தள்ளாடியே ஆகவேண்டும்.ஒரு பெண்ணை தாயாக,தெய்வமாக கொண்டாடும் தேசத்தில்,அத் தாய் தெய்வமே தன் குழந்தைக்கு சீமை சாராயத்தை ஊத்திக் கெடுக்கும், டாஸ்மாக் கேவலத்தை வேறு எங்கும் காணமுடியாது.

    அம்மாவுக்கு பட்டை நாமம் போடாதவரை குடி கெடுக்கும் அரசை குழியில் தள்ள முடியாது.

  3. Avatar
    BSV says:

    மேம்போக்கான பார்வை.

    தேர்தலில் சாதி வேலை செய்யவில்லையென்பது தவறு. செய்ததது என்பதே உண்மை. அனைத்துக் கட்சிகளும் எச்சாதி எத்தொகுதியில் வாக்கு வங்கியாக இருக்கின்றதோ அத்தொகுதியில் அச்சாதி வேட்பாளரையையே நிறுத்தின. உடுமைலைப்பேட்டை ஆணவக்கொலை தேர்தலுக்கு முன் சற்றுத்தான் நடந்தேறியது மட்டுமனறு, ஊடகத்தில்வழி ஒட்டுமொத்த தமிழகத்தையும் போய்ச்செர்ந்தது. ஆனால், அனைத்துக்கட்சிகளுமே கப்சிப். கொங்கு வேளாளக்கவுண்ட்ர்கள், முக்குலத்தோர் வங்கிகள் வராமல் போய்விடுமோ என்ற பயத்தினால். திருமாவளவன் வற்புறுத்தலினால், ம ந கூ மட்டும் ஓர் எதிர்ப்பை வள்ளுவர் கோட்டத்துக்கு முன் செய்து விட்டு காணாமல் போய்விட்டது.

    சாதியும் தமிழனும் ஒன்றுவிட்ட சஹோதரச்சனியன்கள். கட்டிப்பிடித்துதான் தூங்குவார்கள். இப்படியிருக்க எப்படி சாதி வேலை செய்யவில்லை என்று பச்சையாக எழுத முடிகிறது?

    நடிகர் மேல் என்ன கோபமோ தெரியவில்லை! அவர் பெயர் மட்டுமே காந்து என ந்கையாடப்படுகிறது. ஜெயலலிதா அம்மா, கருநாநிதி கருநாநிதிதான், வைகோவை நரி என்று சொல்லிய கட்டுரையாளர் பெயரைத் திரிக்கவில்லை. வைகோதான். ஆனால், விஜயகாந்த் ஏன் காந்த் ஆனார்?

    அது கிடக்க.

    தேர்தலில் தி மு க தோற்றதாகச் சொல்ல முடியாது. இவ்வளவு விளம்பரப்படுத்தப்பட்ட ஊழல்களில் மேல் உருண்ட கட்சியை ஏன் இரண்டாமிடத்துக்குக் கொண்டு சென்றார்கள்? அதிமுக கூட வைப்புத்தொகையை இரு தொகுதிகளில் இழந்துவிட ஒரு தொகுதியில் கூட தி மு க இழக்காவண்ணம் ஏன் தமிழ் மக்கள் செய்தார்கள்?

    ஸ்டாலின் இனி என்ன செய்வார் என்பதை முன்பு என்ன செய்தார் என்பதை வைத்து முடிவு செய்ய முன்பு இருந்த சூழலே இன்னும் இருந்தால் மட்டுமேஅவர் அதையே செய்வார் எனலாம். நோ தெஜா வூ. இனி பார்க்கலாம்.

    இன்னொரு அறியாமை என்னவென்றால், எதிர்கட்சி அதுவும் கணிசமான வாக்குகளைப்பெற்று இரண்டாமிடத்தில் வந்த கட்சி, ஐந்தாண்டுகளில் நன்கு தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும். அதற்கான வசதிகள் த்ருவதே மக்களாட்சி. தமிழகத்தில் உண்டு. மக்கள் என்றுமே முன்பு நடந்தவையை நினைவில் வைத்து பழிதீர்க்கவேண்டுமானால், அது வெகு சமீபத்தில் நடந்தவொன்றாக இருக்கவேண்டும். ராஜீவின் கொலை போல. எனவே திமுகவில் மெல்ல மெல்ல ஸ்டாலின் தன்னை நிலை நிறுத்த, தி மு க, அவரோடுதான் வருங்காலத்தில் இணைத்துப் பேசப்படும்.

    தேர்தலில் அம்மாவின் வெற்றிக்குக்காரணம் இலவசங்கள் மட்டுமல்ல; தி மு க கொஞ்சம் காத்திருக்கட்டும் என்ற முடிவுதான். தி மு கவின் மேல் கடுங்கோபம் இருந்திருந்தால் அதையேன் இரண்டாவதாக வரச்செய்தார்கள்?

    ஸ்டாலின் கூட்டணிகளை விரும்பாமல் தடுத்த காரணம், கூட்டணி செய்து வெற்றிபெற்றால், அடுத்த தேர்தலில் அவரால் தனித்தலைவனாகமுன்வர முடியாது. சுப்பிரமணியம் சுவாமியின் கருத்து மிகச்சரியானது. தி மு க வென்றால் ஸ்டாலிந்தான் முதல்வர் என்று மக்கள் முன் வைக்கப்பட்டிருந்தால் தி மு கவே வென்றிருக்கும்.

    அப்படி வைக்கப்படா காரணம் தந்தை மேல் வைத்த மரியாதைதான்.

  4. Avatar
    r. jayanandan says:

    stalin should play his role carefully as an opposite leader and he should not provoke CM for her planning, which are for the poor mass. if he shout or make the cabinet as a market, then his image will go down in the image of the poor mass, which will reflect in the next election.
    he would not allow anybody to become as CM either vaiko or vijaykanth or vck or any other senior leaders in the politics.

    this attitude is from his father, who, in his young days not allowed anybody either Nedunchelian or Anbalagan or anybody.

    jayanandan.

  5. Avatar
    smitha says:

    Shali,

    Do you really think, the party that comes to power in TN (DMK or PMK) will really implement prohibition?

    Never. Also, that is not practically possible. Look at what’s happening in Bihar. Illicit liquor is flowing freely.

    What JJ said is practically feasible. It can only be implemented step by step. Of course, whether it will be implemented seriously is another aspect for discussion.

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *