தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

12 ஆகஸ்ட் 2018

ஆப்பிள் தோப்புக்குப் போவோமா ? மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

சி. ஜெயபாரதன், கனடா

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++

உன்னைக் கூட்டிச் செல்லவா ?

ஆப்பிள் தோப்புக்கு போகிறேன்.

எதுவும் மெய்யல்ல !

எதையும் பற்றித் தொங்காதே !

ஆப்பிள் தோப்பிலே நீ

எப்போதும் கிடக்காதே !

விழிகளை மூடிக் கொண்டு

வாழ்வது எளிது !

பார்ப்ப தெல்லாம் புரியாது

திரிக்கப் படுகிறது !

அடுத்தவன் உடலுக்குள் புகுந்து

நடிப்பது கடினம் !

எல்லாம் நடக்குது எப்படியோ !

எனக்கொரு கவலையும்

இல்லை !

இருவரும் ஆப்பிள் தோப்புக்கு

ஏகுவோம் ! வா !

எதுவும் மெய்யல்ல !

எதையும் பற்றித் தொங்காதே !

ஆப்பிள் தோப்பு என்றும் உனக்கு

வாழும் இடமில்லை !

எனக்குத் தெரியும் நன்றாய்

ஆப்பிள்

பூப்பதில்லை என்றும்

என் மரத்தில் !

மேலிருக் கலாம், அன்றி

கீழிருக் கலாம் எனக் கூறுவாய் !

உனக்குத் தெரியுமா ?

ஆப்பிள் தோப்புக்கு போவோம்.

எதுவும் மெய்யல்ல !

எதையும் பற்றித் தொங்காதே !

Series Navigationதஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2018 – (குறும்படங்களுக்கு மட்டும்)

Leave a Comment

Archives