எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !

author
1
0 minutes, 8 seconds Read
This entry is part 12 of 12 in the series 24 மே 2020


நவின் சீதாராமன்

உலகத்தையே உயிர் பயத்தில் உலுக்கிக்கொண்டுள்ள கரோனா சக்தி வாய்ந்ததா? இல்லை நாம் வணங்குகின்ற தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்களா? நாம் சார்ந்துள்ள மதங்கள், சாதிகள் சக்தி வாய்ந்தவைகளா? உலகத்துக்கே தலைவன் நான்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் வல்லரசு நாடுகள் சக்தி வாய்ந்தவைகளா? அல்லது பணம் படைத்தவர்கள் சக்தி வாய்ந்தவர்களா? உலகம் முழுக்க, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் இவை போன்ற ஆயிரமாயிரம் கேள்விகள். கரோனாவால் கொத்துக்கொத்தாக மடியும் அமொிக்க மண்ணில் அடுத்த அடி ‘டோனேடோ’ எனும் கடும்புயல். உயிர்ப்பலி, வீடு, குடும்பம், மின்சாரம், இணையம், உணவு இப்படி எல்லாம் இழந்து இயற்கைச் சீற்றத்திற்கு ஆளான மக்கள் ஒருபுறம். இச்சூழலில், அங்கிருந்து வரும் அமொிக்க வாழ் தமிழர் ஒருவரின் உடைந்த குரல்.

Covid – 19 and Tornado Vido of Mine

எனது காணொளி 1 : https://www.youtube.com/watch?v=DsXHG7Iidh4
டொனேடோ காணொளி 2 : https://www.youtube.com/watch?v=Eu-dwxlFNSU


 

Series Navigationஎம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்
author

Similar Posts

Comments

  1. Avatar
    BSV says:

    உலகத்தில் உள்ள ஜீவராசிகளை படைத்தவன் இறைவன். அஜ்ஜீவராசிகள் ஒன்றுக்குளொன்று சேர்ந்து விதவிதமான ஜீவராசிகளைப் படைத்துக்கொண்டன. விலங்கு மண்டலத்தில் பார்க்கலாம். பலபல ஜீவராசிகள் காலமாற்றத்தின் விளைவாக அழிகின்றன. மனிதன் அதில் ஒன்று. குட்டையாக இருந்த ஆதிமனிதன் நெட்டையானான். நாலுகால்களால் ஊர்ந்த மனிதன் இருகால்களால் நடந்து நிமிர்ந்த நடையுடன் மாறிய பின் நவீன் சீத்தாராமனாக தமிழ்னாட்டில் பிறந்து அமெரிக்காவில் குடியேறினான். :-)

    முதல்படைப்பு மட்டுமே இறைவனது. God is the original Creator only. As Stephen Hawkins said, He created it and then left the world for ever! பின்னர் நடந்தவைகள் இறைவன் படைத்த முதல் இயற்கையிலிருந்து உருமாற்றஙகள் கொண்டவை. ஜீவராசிகள் உடம்பில் லட்சக்கணக்கான கிருமிகள் உருவாகின. மனிதகுடலில் நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள் எப்போதுமே வாழ்கின்றன என்பது உடலியல் விஞ்ஞானம்.

    க்ரோனா வைரஸ் அப்படி உருவாகியது. மாற்றமடைந்தது. க்ரோனா வைரசைப் பற்றி மனிதன் கவலைப்பட வேண்டும். சாகப்போவது அவன். ஏன் இறைவன் வந்து க்ரோனாவை அழித்து மனிதனைக் காக்க வேண்டும்? விலங்குகளுக்கும் க்ரோனாவும் ஹை ஐ வி கிருமிகளும் வருகின்றன. அவையென்ன இறைவன் வந்து -அல்லது நாம் அவைகளை இறைவன் வந்து கிருமிகளிலிடமிருந்து காக்க வேண்டுமென்றா விண்ணப்பிக்கிறோம்?

    கடவுள் காக்கவில்லை என்ற புலம்பல் ஏனென்று எனக்குத் தெரியவில்லை. நீங்களே இறைவனுக்கு ஓர் குணத்தை கொடுத்துவிட்டு (நான் இம்மாம் பெரிய கோயிலை கோடிக்கணக்கில் கட்டியிருக்கிறேன் உனக்கு. ! நான்
    கும்பிட்றேனில்ல. வந்து காப்பாத்து; இல்லாவிட்டால் நீ பொய்..!) நீங்களே புலம்புவது சரியான பேத்தல்.

    Why should God give man special treatment? On which basis do you say he should come and save you? For what? If you live, does God gain anything? You mean a big big temples for Him? A big big temple car for Him? You can pray in hope, but you can’t demand. Beggars cannot be choosers.

    உண்மையிலே இறைவனை நம்புவன் க்ரோனா வைரசால் உலகம் அழிவதை இறைவன் செயலாக நினைப்பான். கொடுத்தவன் எப்போது வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக்கொள்ளலாம். அல்லது படைத்தவன் தன் படைப்பை டிங்கர் பண்ணலாம். அல்லது, மனிதனுக்கு ஆறாம் அறிவைக்கொடுத்து, இதை வைச்சு பொழச்சுக்கோ! என்று சொன்னவன் இறைவன். அதை வைத்து தடுப்பூசி கண்டுபிடித்து உன்னைக் காப்பாத்திக்கோ; என்னை இழுக்காதே என்று பொருள்.

    எல்லாம் அவன் செயல் மட்டுமல்ல. அவன் விருப்பம். மனித மனத்துக்குப் புலப்படாதவையே அவன் செயல்கள். புலப்பட்டால் மனிதன் இறைவனைவிட பெரிய ஆள்!

Leave a Reply to BSV Cancel reply

Your email address will not be published. Required fields are marked *