பாரதியாரைத் தனியே விடுங்கள் !

23
0 minutes, 3 seconds Read
This entry is part 9 of 45 in the series 2 அக்டோபர் 2011

தானிலிருந்து பிறப்பதுதான் இலக்கியம் என்போர் பலர். தானைவிட்டு விலகும்போதே சிறப்பான இலக்கியம் பிறக்கும் என்பார் பலர். எடுத்துக்காட்டாக, பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான்மை கலக்காப் பொதுவுடமைக் கருத்துக்களைச் சொல்பவை. பாரதிதாசன் தான்மை கலந்து தார்மீகக் கோபம் கொண்டாலும் அஃதெல்லை மீறாது. எஃது எப்படியிருந்தாலும் எல்லை மீறக்கூடாது. எல்லை மீறினால் தொல்லை.

பாரதியாரின் கதையே வேறு. அஃதென்ன ? இயற்கையைக்கூட அவரால் குழந்தையைப் போல இரசிக்க முடியாது. அதிலும் ஒருவகையான அரசியலைக் கலந்துதான் பார்ப்பார். குயிலும் அரசியல் கூவும். பாஞ்சாலியை வீதிவழியாக இழுத்துச்செல்லும் காட்சியிலும் சுதந்திரப்போராட்ட அரசியல் துள்ளிக் குதிக்கும்.

“நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான். வழி நெடுக மொய்த்தவராய்,
”என்ன கொடுமையிது!’ என்று பார்த்திருந்தார்.
ஊரவர்தம் கீழ்மை உரைக்குன் தரமாமோ?
வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே
பெண்ணை யவள் அந்தப்புரத்தினில் சேர்க்காமல்.
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப்புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?”

முதல் மூன்று வரிகளே சரி. அதன் பின்னர் தான்மை கலந்த உணர்ச்சிப்பிரவாகத்தில் வீசப்படும் சொற்கள் காவியமா? இல்லை ஓவியமா? இரண்டுமே இல்லை. தானிலிருந்து புறப்பட்டத் தார்மீகக் கோபம். ஓரளவுக்குச் சரி; ஒரேயடியாகப்போனால் என்னவாகும். இலக்கியம் சாகும். சுயபுராணம் அரங்கேறும்

கருத்து உயர்வே என்பதில் இரு கருத்துகளுக்குமிடமில்லை. அஃதல்ல நான் கதைப்பது.! தன்னை விலக்காமல் அவருக்கு வாழ்க்கையில்லை என்பதே. இப்படியாக அவர் பாக்களெல்லாம் தான்மை விரவியிருந்தபடியே அவரின் சிறப்பான கருத்துக்கள் தமிழ் உலகுக்குச் சொல்லப்பட்டன. இலக்கியத்தில் ஓரளவுக்குச் சரியானது, இயல்பு வாழ்க்கையில் முரணாகியது. அவரால் இயல்பாக வாழ முடியவில்லை. காண்பதெல்லாம் குறைவுகளில் தோயாமல் இல்லை என்பதே அவர் கட்சி. தன் சுற்றம், தன் இனம், தன் ஜாதியார், என்று ஒரு குற்றங்குறை பார்க்கும் பாவலர் ஆகி விட்டார். ‘பாரதியாரா எஸ்கேப்பாயிடுவோம் என பீதியடைய வேண்டியதாயிற்று.’ இப்படிப்பட்ட ஆளுமையிலே தன்னை உணர்ந்ததால், அவர் தன்னைப் பிறரிடமிருந்து மாறானவன் என்பதை உள்வாங்கி, தான் ஆயிரம்பேரில் ஒருவனாக காணாமல் போக மாட்டேன் எனவும் தன் சாதனைகள் எனக்கு எட்ட முடியும் எனவும் சொல்வதாக இப்பாடல் பாடுகிறார்.

தேடிச்சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுளன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

மற்றும் என்னை அருளுடன் படைத்து நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்றும் கேட்டுக் கொள்கிறார். இஃதெல்லாம் அவருக்குப் பொருந்தும். மற்றவருக்கும் பொருந்துமா ? இதே இக்கட்டுரையின் அடிநாதப்பொருள்.

எல்லாரும் தேடிச்சோறு நிதம் தின்றுதான் இருக்க முடியும். சின்னஞ்சிறு கதைகள் பேசாமல் தாம்பத்திய வாழ்க்கையோ குடும்ப வாழ்க்கையோ, நட்பு வட்டாரமோ இல்லை. வாடித் துன்பமடைகிறோம். கிழப்பருவமெய்தி போகிறோம். இவற்றில் என்ன குறை? குற்றம் ? எல்லாரையும் இறைவன் எதையாவது வேண்டுமென்று கட்டாயப்படுத்தியிருக்கிறானா? தோன்றின் புகழொடு தோன்றுக அல்லது தோன்றாமை நன்று என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் ? அல்லது வாழ்க்கை உண்மை? ஏன் ஒரு நல்ல கணவனாகவோ,மனைவியாகவோ, தகப்பனாகவோ, தாயாகவோ இருக்கக் கூடாது ? நான் ஏதோவொரு குக்கிராமத்தில் பிறக்கிறேன். வளர்கிறேன். ஆங்கு என வயலில் நித்தம் உழைக்கிறேன். பின்னர் மணம், மனைவி, மக்கள் என அங்கேயே வாழ்ந்து ஒரு மரணிக்கிறேன். என் மரணம் உலகெங்கும் பேசி வருந்தப்படவேண்டும் என நான் ஏன் நினைக்க வேண்டும்? என் வாழ்க்கையில் என்ன குற்றம் கண்டீர்கள்? புகழ், பெயர், என்பவையெல்லாம் யார் கட்டமைப்புக்கள் ? நீங்களாகவே வைத்துக்கொண்டு என்னிடம் ஏன் வருகிறீர்கள் ?

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு பெண்ணிடம் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்க வேண்டியவர்கள் கேட்கும்போது, அவள் வீட்டுப்பெண் ஹவுஸ் வைஃப் எனபதை கொஞ்சம் லஜ்ஜையுடந்தான் சொல்கிறாள். இதுபோல பலரும். ஏன் எல்லாரும் சாதனை சாதனை என்று பொருந்தா முடியா இலட்சியங்களோடு அலைய வேண்டும்? ஏன் ஒரு பள்ளியாசிரியையாக இருப்பது லஜ்ஜையான விசயம் ? ஒரு அரசு அதிகாரியாக இருப்பது உயர்வான விசயம்?

இத்தகைய எண்ணங்கள் எனக்கு வருகின்றன பலர் மேலே சுட்டிக்காட்டிய பாரதியாரின் பாடலை தம் இலட்சியமாகப் போட்டுக் கொண்டு எழுதுவதைப் படிக்கும்போது. இவர்கள் என்ன எல்லாரும் பாரதியார்களா? இல்லை அவர் போல கட்டாயம் ஆகத்தான் வேண்டுமா ? இல்லை அவருக்குச் சரி, நமக்கு சரியா என்பதெல்லாம் சிந்தித்தார்களா ?

இன்னொரு பதிவில் இலட்சியம் இதுவாம்:-

“வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை (அதாவது இருட்டை) ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக”

இதை எப்படி இவர் செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. செய்து விட்டால் அட்லீஸ்டு இவரை நாம் தமிழக முதல்வராக்கி தமிழ்நாட்டில் சாதி சாதிச்சண்டைகளை ஒழிக்கலாம்.

இஃது ஈயடிச்சான் காப்பி ! ஆட்டுமந்தைக் குணம்தான். அது சிந்திக்காது. யாரோவொருவர் ஒன்றைச்சொல்ல அவர் ஒரு பெரிய ஆசாமியென்றால், அவர் சொற்களை ஆயிரம்பேர் சொல்ல, ஆயிரத்தோராவது நபர் நாமும் அதைச்சொல்லாவிட்டால், ஆடையில்லா ஊரில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பதுபோல நம்மைச்சொல்லிவிடுவார்களோ எனப்பயந்தே இப்படி ஈயடிச்சான் காப்பியில் இறங்குகிறார்கள்.

பாரதியார் பாரதியாரே. அவர் அவராக இருக்கட்டும். அவருக்குச் அது சரி. பாரதியாரைத் தனியே விடுங்கள் ! நீங்கள் நீங்களாக இருங்கள். அஃதே உங்களுக்குச் சரி !

Series Navigationநியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்த்வனி
author

காவ்யா

Similar Posts

23 Comments

  1. Avatar
    விகடகவி says:

    பாரதியார் சராசரித்தது வேறொரு பரிணாமத்தில், அவர் சொல்லாழம் புரியாது விளக்கம் எழுதுகிறார்கள். எந்த மடமையை ஒழிக்க முட்பட்டாரோ அது உங்கள் எழுத்தில் நிறம்பி வழிகிறதம்மா.

    வேடிக்கை மனிதர்கள்.

  2. Avatar
    காவ்யா says:

    பாரதியாரைப்புரிந்து கொள்ளலாம். விகடகவியைப் புரிதல் இயலாது போலிருக்கிறதே.

    சராசரித்தது என்றால் என்ன தமிழ் ? எந்த மடமையை பாரதியார் அழிக்க முற்பட்டார் ? கொஞ்சம் விளக்கினால் – அது பின்னூட்டத்தில் அதிகம் முடியாதென்றாலும் – ஓரளவு விளக்கினால் புரிந்து பதில் சொல்லலாம்.

    நான் பாரதியாரை இக்கட்டுரையில் ஒரு கவிஞனாக மட்டுமே பார்க்கிறேன். கவிஞர்கள் ரொம்ப அலட்டல் பேர்வழிகள். ஷெல்லி ‘கவிஞர்கள் உலகத்தின் சட்டத்தை எழுத வந்தவர்கள்’ என்று நம்பினார். அவரைப் பின்பற்றிய பாரதியார் தன்னை ஷெல்லிதாசன் என்றழைத்துக்கொண்டு, சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய், என்னை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்று பலப்பட அரற்றினார். இவரை யார் எறிந்தார்கள் ? எமக்குத் தொழில் கவிதை, இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று தன் தொழிலே கவிதைப்புனைவது என்றவர் அதைச் செய்துவிட்டு மட்டும் போகலாம். மாறாகத் தன்னை அமானுசனாக நினைத்தைக்கொண்டு, வேடிக்கை மனிதரைப்போல தான் வீழ்வனோ என்றார். இவையெல்லாம் படிப்பவருக்கு என்ன நினைப்பைத் தரும் ? கவிஞர்களின் பேச்சுக்கு ஒரு குடிகாரன் பேச்சுக்குக் கொடுக்கும் மதிப்பைத்தவிர வேறென்ன தர முடியும்? என்றுதான். கவிஞர்களைப் படிப்பவர்கள் பாடல்களிலுள்ளக கருத்துக்களையும் கவித்துவத்தையும் இரசித்துவிட்டு தன் வேலைகளைக் கவனிக்கப்போகலாம். மாறாக, அவர்கள் சொல்லியவண்ணம் வாழ்க்கை உண்டு என்றெல்லாம் நினைப்பது, சினிமாவில் கதாநாயகன் பத்துபேரை சுழன்று சுழன்று அடிப்பதைப்போல தானும் அடிக்கலாம் தம் விரோதிகளை எனப் பள்ளிச்சிறுவர்கள் நினைப்பதைப்போல. ஆனால் அச்சிறுவர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வந்தப்பக்குவக்காலத்தில் சினிமா வேறு; வாழ்க்கை வேறு என்று கொள்வர். கவிஞர்கள் சொல்வதையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கும் கிழவர்களையும் கிழவிகளையும் என்ன சொல்வது விகடகவி?

  3. Avatar
    கார்த்திக் says:

    “சிலர் எதிரும் புதிருமான கருத்துக்கள வெளியிட்டு ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியைப் பெற்றுக் கொண்டு நிலைக்கிறார்கள்..”
    Was that a mere coincidence or a latent confession? :D

    1. Avatar
      காவ்யா says:

      The seekers after name and fame will reveal their names and put up their big size photos to ur view so that u cd identify them to praise. Some even make discreet publicity through their media network. They activite their fan clubs. Look at the big photos of Charu, Jeyamohan, S.Ramakrishnan, and their fan clubs. How big the photos r!

      Who I am ? U hve no chance to know. My identity s known only to the Thinnai admn. My intention s to make u to become aware that an issue can b viewed from different angles.

  4. Avatar
    ramani says:

    காவ்யா நீங்கள் உங்கள் கருத்துக்களை ஆணித்தரமாகவும், ஆக்ரோஷமாகவும் எடுத்து வைப்பது சிறப்பானது. அவர் அவ்ராகவே இருக்கட்டும் என்று பாரதியருக்குச் சலுகை காட்டிவிட்டு, பின் விகடகவிக்குப் பதில் சொல்லும்போது நீங்கள் பாரதியாரை சுழன்று சுழன்று அடித்திருக்கிறீர்களே! ஆட்டுமந்தைக் குணமும், ஈயடிச்சான் காப்பியையும் தாண்டி அடிமைத்தனத்தை வாழ்க்கையாகக் கொண்டிருந்த காலத்தின் மனிதர்களுக்கு, தான் வெறும் வித்தியாசமானவன் என்று ஜாலம் காட்டாது அவர்களைத் தவிர்க்கவியலாத ஒரு சரித்திரக் கடமைக்கு உசுப்பிவிட்டவன் வார்த்தைகளுக்கு உங்கள் விமர்சனம் சரிதானா? நல்லதோர் வீணையும், வீழ்வேனென நினைத்தாயோ என்பதெல்லாம் பாரதி என்ற தனிமனிதன் தனக்கான புலம்பலாகவோ தோள்தட்டலாகவோ இல்லாமல் மற்றவர்களுக்காகவே; சுதந்திர வேட்கையை ஊட்டவே சொன்னது என்பது உண்மையிலேயே உங்களுக்குப் புரியாது இருந்திருக்காது காவ்யா

  5. Avatar
    Lakshmanan says:

    பாரதி தன்னை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.

    1. Avatar
      காவ்யா says:

      This is fanaticism that is held to ridicule in my other essay on fans and their infatuation with their iconic writers.

  6. Avatar
    கார்த்திக் says:

    Big size photos and fan clubs? Not necessarily. Of course, I or any other reader would have no chance to know who Kavya is. But then, you do have an identity on this site. The author of a post can’t be a ‘nobody’? I’ll leave it at that.

    “My intention s to make u to ‘become aware’ that an issue can b viewed from different angles.”

    If I may say, this is a joke. You took the liberty of deciding someone is ‘unaware’ of the said perspective. That’s fine. But before making us ‘aware’, it’s the author’s duty to prove that she is able to view the fact in the different angles. You didn’t present any different angle than saying ‘Bharathi is egoistic and who appreciate him are a flock’.

    You didn’t justify the ‘why’ aspect for both. I’m not talking about the lame explanations laid in the post. Those will be enough for flocks. But there are a whole of questioning readers, who also appreciate Bharathi and his works, to whom you should justify why they are being called ‘flock’.

    1. Avatar
      காவ்யா says:

      கார்த்திக் புரிந்து கொள்ளவில்லை; அல்லது புரிய விரும்பவில்லை. என் கட்டுரையின் மையக்கருத்து யாதெனில், பாரதியார் ஒரு அமானுஸ்யர்; நம்மிடமிருந்து மாறுபட்டவர், அல்லது தன்னை அவ்வாறு உருவகப்படுத்திக்கொண்டவர். எனவேதான் எழுதினார்: தேடி நித்தம்…” ‘காலா அருகில் வாடா உன்னைக் காலால் உதைக்கிறேன்’. என்று .

      நம்மிடமிருந்து மாறுபட்டவரை அவர் சொற்களை வேடிக்கைப் பார்க்கலாம்; அவர் சொற்களைப் படித்து நகைக்கலாம், இலக்கிய இன்புறலாம். ஆனால் அவை நமக்கும் ஒத்துவரும் என்று மேடைகளில் முழங்குவதும் கற்பனை பண்ணுவதும் அறிவு முதிர்ச்சியில்லாமை; கல்லூரி முடித்தவுடன் இப்படிப்பட்ட கற்ப்னைகளை விட்டுவிடவேண்டும். This is the theme of the essay. இது புதிய பார்வையா, பழைய பார்வையா என்பதல்ல இங்கு வேண்டியது. இப்பார்வை வேண்டுமென்பதே வேண்டுவது.

      பாரதியாரின் விபரீதச் செய்கைகள் அவரின் பாரியாளைக்கூட பதற வைத்தது பலவேளைகளில். ஒரு சமயம் அவர் வீட்டைவிட்டுக் காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பலநாட்கள் விவரமேதுமில்லை. குடும்பம குட்டிகள் என்னாவது என்ற நினைப்பேயில்லாமல் காணாமல் போய்விட்டார். அவரின் மனைவியார் தன் அண்ணனுக்கு கடிதமெழுதிச்சொன்னார். அக்கடிதத்தில் தன் கணவரின் விபரீத நடவடிக்கைகளைப்பற்றி அரற்றி எழுதியிருந்தார். அண்ணன் தன் பதிலில், ‘செல்லம்மா…பயப்படாதே…வந்து விடுவார். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். நீ மணந்தது ஒரு அமானுசர் பாரதி ஒரு பொதுச்சொத்து. உன் கணவன் என்று மட்டும் நினைத்துவிடாதே.. அவரின் நடவடிக்கைகளில் ஏதாவது ஒரு பொது நலம் இருக்கும். எனவே அவருக்கு உன்னைப்பற்றி நினைப்பு இப்போது இல்லை. ஆனால் வரும்”

      அதன்படியே ஒரு நாள் ஒரு கடிதம் காசியிலிருந்து வந்தது. அக்கடித்ததில் பாரதியார் சொன்னார் செல்லம்மாவுக்கு: ‘மன்னித்துக்கொள். ஒரு கூட்டம் வந்தேமாதரம் எனமுழங்கிக்கொண்டு சென்றது. அவர்களிடம் எங்கு செல்கிறீர்கள் என்றதற்கு காசி காங்கிரசு மாநாட்டுக்குப் போகிறோம். முக்கியத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். நம் சுதந்திரம் நெருங்க அம்மாநாடு வழிகோலப்போகிறது என்ற ஒரே பேச்சு ஊரெங்கும்.. என்னால் தாங்க முடியவில்லை. இப்போது காசியில்தான் இருக்கிறேன். கவலைப்படாதே. சீக்கிரம் ஊர்வந்து சேருவேன்”

      இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஏராளம். பாரதியாரைக் காப்பியடிக்க முடியாது. அது உம் வாழ்க்கைக்கே உலைவைத்து விடும். If someone behaves with his wife and children in this way, we will condmen him as an irresponsible husband, wont we? அவர் அவராக இருக்கட்டும். நீங்கள் நீங்களாக இருங்கள். Be bold to be yourself.

  7. Avatar
    Paramasivam says:

    Nothing wrong in having a role model in one”s life.We may not achieve 100%.Atleast,let us strive to achieve perfection.If you do not appreciate the word “role model” take him or her as a” motivator”Bharathi was a motivator for fellow Indians and also many of poets of the next generation.Poets are bound to be egostic since they are the creators.

    1. Avatar
      காவ்யா says:

      The last line of Paramasivam is nothing but a rehash of my sole point, namely, we should take Bharathi as a maverick and reject many of his quixoticl life style as unworthy of emulation.

      All poets are, to some extent, more or less, egoists. If a person does not know this truism, he should not read or write about literature of any language. Wasn’t that I have been crying hoarse to call attention to? Having said that wasn’t I reminding ppl of the perils of imitating him to the core? I have seen ppl parroting his lines as it a worthy creed unthinkingly but passionately. An idiocy I have used the essay to highlight ! How come this idiocy? Because of routine brainwashing in schools, colleges and in general society! Everything has conspired to make our ppl intellectually lethargic. Result: We want only ready made opinions !

      No problem if v take only such things which r relevant to us like u said as inspiration, but trying to imitate his lines theediththeedi, as if it is all that we shd also do in life, is absolutely misplaced enthusiasm. Curb it!

      We are ordinary folks. We have to live our mundane lives. V shd be good husbands, good bros or good sisters, sons or daughters, employees etc. We cant abdicate any responsibility. But the quoted lines of Bhrathis mislead us if v take him seriously. Beware of him ! He is a bad role model for many aspect of our lives

      I have no quarrel with anyone who takes his passionate patriotism as a role model and many more; but not his maverick lines that refer to his lunatic life style.

      Be discreet in imitation – is the sole burden of my song (or essay) here Paramasivam.

  8. Avatar
    காவ்யா says:

    எங்கோ ஒருவரிடம் இரந்து பெற்று வீட்டில் சமைப்பதற்காக கல் பொறுக்கி சிலவில் (முறம்) வைத்திருந்த அரிசியைக்காணேம், செல்லமா தேடினார். வீட்டு முற்றத்தில் சிட்டுக்குருவிகள் அரிசிமணிகளைக் கொத்தித்தின்று கொண்டிருந்தன. அவைகளப்பார்த்து: ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’யெனப்பாடிக்கொண்டிருந்தார் அவர் கணவர் உணர்ச்சிப்பிரவாகத்தில் சொன்னார்: ” இதோ பார் செல்லம்மா அவை எவ்வளவு ஆனந்தமாக கொத்தித் தின்கின்றன”. குழந்தைகள் பட்டினி அன்று.

    இப்படி நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி வைத்திருந்த பள்ளிச்சீருடைகளை வாசலில் வந்து பிச்சைகேட்டச் சிறுமிக்குக் கொடுத்துவிட்டால், உங்களைப் பைத்தியக்காரர்கள் என்று வையாமல் வேறன்ன‌ என்ன சொல்ல முடியும்? ஆனால் பாரதியை இன்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரு அமானுசரின் நடவடிக்கை அமானுசருக்கான அளவுகோலை வைத்துத்தான் பார்க்க வேண்டும் என்று காரணம் சொல்வார்கள்.

    மகாராட்டிராவில் சிவாஜியைப்பற்றி எதையும் ‘தப்பாக; எழுதவோ, சொல்லவோ முடியாது. சிவசேனாக்கள் கொலை செய்துவிடுவார்கள். சிவாஜி ஒரு தெய்வம். அமெரிக்க எழுத்தாளர் சிவாஜி பற்றிய நூல் எரித்து வீசப்பட்டது. அவருக்கு ஆராய்ச்சிக்கு உதவிய‌ புனே நூலகம் அடித்து நொறுக்கப்பட்டது. எனவே இன்று சிவாஜியைப்பற்றி எந்த பலகலைக்கழகமும் ஆராய்ச்சி நடத்தக்கூடாது. அவர் ஆராய்ச்சிகளுக்கெல்ல்லாம் அப்பாற் பட்டவர்.

    இதே போல தமிழ்நாட்டில் அண்ணவைப்பற்றி எதிர்கருத்துச் சொன்ன சேசனின் ஓட்டல் அறை தாக்கப்பட்டது. பெரியாரைப்பற்றிச் சொன்னால் திகவினர் தாக்குவார்கள். ஜெயலலிதாவைப்பற்றி சொன்னால் அதிமுகவினர் தாக்குவார்கள். கருனாவைப்பற்றியென்றால் திமுகவினர் தாக்கவார்கள். அஜய்யைப்பற்றிச்சொன்னால் அஜய் இரசிகர்கள், விஜய்யைப்பற்றி அவர் இரசிகர்கள், விசாலைப்பற்றி, சூரியாவைப்பற்றி, தனுசைப்பற்றி – இப்படி எவரைப்ப்ற்றியும் பேசக்கூடாது. காங்கிரசில் ஒருவரைப்ப்ற்றிக்கொண்டால் இன்னொருவர் தாக்குவார். இவர்களாவது நடிகர்களும் அரசியல்வாதிகளும். ஆனால் இலக்கியவாதிக்ள், அதுவும் என்றோ வாழ்ந்து மறைந்த ஒருவனப்பற்றி எழுதும்போதும் இவ்வெறிச்செயலென்றால், நாம் காட்டுமிராண்டிகள் காலத்துக்குப் போய் விட்டோம்.

    இந்த வெறியர்கள் வாழும் நாட்டில்தான் முற்காலத்தில் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ‘ என்று சொன்னவர்களும் வாழ்ந்தார்கள் என்பது வியப்பு.

  9. Avatar
    இந்து இப்லிஸ் says:

    //…இந்த வெறியர்கள் வாழும் நாட்டில்தான் முற்காலத்தில் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ‘ என்று சொன்னவர்களும் வாழ்ந்தார்கள் என்பது வியப்பு..//

    மிகச் சரியான அவதானிப்பு காவ்யா.

    காரணம் என்ன?

    “நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று சொன்ன காலத்துக்குப் பின் நுழைந்த ஆபிரகாமிய இறையியல் வெறியே இத்தகைய சூழலை உருவாக்கிவிட்டது.

    சிவசேனை உள்ளிட்ட பல இந்துத்துவவாதிகளிடமும் இந்த ஆபிரகாமிய மத வெறிதான் இருக்கிறது.

    உபநிஷதங்களைப் பாக்கெட்டில் புதைத்துக் கொண்டு, குர்ஆன் வழியில் நடைபோடுகிறார்கள்.

    நாம் நமது முன்னோர் மரபுக்கு மீண்டும் உயர வேண்டியது அவசியம் காவ்யா.

    .

  10. Avatar
    சஹ்ரிதயன் says:

    //இயற்கையைக்கூட அவரால் குழந்தையைப் போல இரசிக்க முடியாது//
    இது என்ன ஒரு பார்வை ? எதுக்கு ஒரு கவியை அறுத்து பார்க்க நினைக்கிறீர்கள்; ரசிக்கலாம் வேண்டும் என்பவர்கள் ஆதர்சமாக கொள்ளட்டுமே; உங்களுக்கு அவரை போன்று கோபம் வெளிப்படுத்த ஆசை இருந்தால் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன ! முதலில் நீங்கள் அவரை அவராக பார்க்க முயலுங்கள்; முன்னுக்கு முரணாய் குழம்பி இருக்கிறீர்கள் !

    1. Avatar
      காவ்யா says:

      அதே கேள்வியைத்தான் என் கட்டுரை கேட்கிறது. ஏன் அவரை அவராகப்பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். அவர் வித்தியாசமானவர். அவர் ஆளுமை பிறமனிதர்களிடமிருந்து வேறுபட்டது. ஏன் காப்பியடிக்கிறீர்கள் என்று கேட்கிறது என் கட்டுரை.; அதையே என்னிடம் கேட்டால் எப்படி?

      அவரை நான் அப்படி எழுதக்கூடாதென்று சொல்லமுடியாது. அப்படி நினைக்ககூடாதென்ற சொல்லவில்லை. இயறகையை அவர் விரும்பும் வண்ணம் பார்க்கக்கூடாதென்று சொல்லவில்லை. பின்னே நான் சொல்வத்?

      பார்க்கிறார் என்று மட்டுமே சொல்கிறேன். இவ்வாறாக பாரதியார் பல வாழ்க்கை நிகழ்வுகளை அதன் அடைப்படை வெகுளித்தனத்திலிருந்து சிதைத்தே பார்க்கிறார். ஒரு சிதைந்த பார்வை. ஒரு மாறுபட்ட மனிதனின் அதீத பார்வை.

      ஆக, நான் அவரை அவராக நான் பார்க்க, மற்றவர்கள் ஏன் அதைச்செய்யவில்லை என்று கேள்வியே என் கட்டுரையென்று உங்களுக்கு ஏன் புரியவில்லை. ஏன் குழப்பம்?

      \தயவு செய்து அவரை அவராகப்பார்த்து விட்டுவிடுங்கள்.

  11. Avatar
    Anbu Selvan says:

    Kavya –
    If you think a poem is going to solve a mathematical problems it is called Algebra and not Poetry… Poems are illusions.
    A good poem is one with which you tend to identify yourself when it triggers your inner feelings…. Good poetry should be felt and enjoyed not dissected like what you are doing….. Leave the Poet enjoy the poem….

  12. Avatar
    காவ்யா says:

    U seem to hav not read the essay closely. It highlights the illusion many ppl I came across suffer from, namely, they can b like Bharatiyaar. To prove that illusion, the essay goes on to show why a person likes Bharatiyaar had made such outlandish statements, meaning impossible to achieve. The essay traces the traits of his abnormal personality and warns ppl not to imitate that. The essay also compares such ppl with children who imitate dare devilry stunts performed by trained artists on screen, in real life and meet with tragic death in tender young age. So, the essay reiterates, leave Bhratiyaar to himself, and carry on with your own life in the way suitable to u.

    Instead of reading the essay properly, u r presuming that the essay is all abt his poems.

    Even if I discuss ur point with u, it will be like this. Poets write as they like; many don’t conform to any rules. There s also such a thing as called propaganda poems. In such poems, poetic beauty s overwhelmed by mission, purpose and propaganda.

    Like Mu Ka writes poem to propagate his party principles, Bharati too s guilty of such action. He even used a great epic like Mahabaratham to project his views on it. He filled many of his poems with the hindutva idealogy like sudheshi education etc. They not good poetry to feel with, Selvan. They r period pieces written to please some. Some of his poems were so nasty that it hurt the sentiments of the some sections of society. Y not u read the address to Shivaji and say to this Thinnai readers whether the poem gives u any feeling :-). The poems, when it came out, hurt muslims, and many ppl complained. It came to B’s knowledge. He amended it. In many other poems, where he hurt ppl, he did not even do that.

    Bharatiyaar s guilty on many accounts; and it requires a full essay to dilate upon them.

  13. Avatar
    காவ்யா says:

    Selvan

    Some yrs ago, B’s Panchaali Sapatham was one of the prescribed texts for IAS etc. exam syllabus in Tamil Lit optional. When some students came to me to discuss it with me, I told them to treat the long poem as an allegory. I emphasised that B took the episode from Bharatam not to spread a Hindu view of life, but to exploit its potential to propagate nationalist sentiments among ppl. He was of the view that the nationalist fervor s not sufficient among us. So, u may read the text closely to understand his purpose.

    Believe me or not, the qn occurs in the following Question Bank prepared on the optional.

    Elucidate the view that Bharathiyar’s intention in this long poem is to spread nationalist view.

    Some students correlated the fact that Bhratiyaar was a renegade then (police were after him), so he was not in a position to directly provoke ppl against the British. Police wd put his wife and daughters in jail His ploy was to use the episode in the epic as an allegory.

    If the court pulls him up, he can always maintain that the poem s all about the Hindu epic.

    Therefore, dear friends, read the poet treating him as a poet, not as a political party leader to whom you can sacrifice ur life jumping in front of a train or cutting off of your tongue, or tonsuring your head in Tirupathi or take kaavadi to Pazhani or eat manchoru in Mariamman temple – common personality defects of Tamilians.

    Any disagreement ?

  14. Avatar
    penamanoharan says:

    மகாகவியை விமர்சிக்க ஒரு மேதைமை/ஆளுமை வேண்டும்.சிறுபிள்ளையப்போல் சாணி எறிந்து சந்தோசப்படுகிறீர்கள் காவ்யா.

  15. Avatar
    யுவராஜ் says:

    “தேடி சோறு..” என தேடிய என்னை google தவறான இடத்திற்கு தள்ளி விட்டதோ ! சரி…

    மனிதர்களே! மாயை என்றால் என்ன ? அதன் மேல் பாரதிக்கு எதாவது கோபமோ? “தேடி சோறு..” என பாடி, இப்படி அதை பழித்திருக்கிறாரே!!

Leave a Reply to penamanoharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *