இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !

This entry is part 29 of 44 in the series 16 அக்டோபர் 2011

 

“என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு பேரதிசயம்” என்றெழுதுகிறார் மலர்மன்னன்.

 

எல்லாருக்கும் அந்தப் பேரதிசயத்தின் மூல காரணம் தெரியவேண்டுமென அவாவினால் இக்கட்டுரை இங்கு வரையப்படுகிறது.

 

பேரதிசயத்தின் காரணம் இந்து மதத்தின் தொன்மையன்று. அதன் லிபரல் நேட்ச‌ரே.  எவர் என்ன சொன்னாலும் நாம் கண்டு கொள்ள மாட்டோம் என்ற உணர்வே காரணம். மேலும்,  இம்மதத்தின் ‘இதுதான் கொள்கை; இதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லா விட்டால் நீவிர் இந்துக்கள் அல்ல!” என்ற மூர்க்கத்தனமில்லை.

 

மக்களில் பெரும்பாலோருக்கு மதமே வாழ்க்கையில்லை. மதத்தால் ஒரு வாய்க்கஞ்சி கூட ஊற்ற‌ முடியாது.  உழைத்தால்தான் வாழ்வு. முத்தீ வளர்த்து வேதம் ஓதினால் இருக்கும் பொருளும் தீயில் காலியாகி விடும். டைம் வேஸ்ட். காசும் வேஸ்ட்.  எனவே மதங்கள் மனிதனுக்கு இவ்வுலகில் உதவும் என்றொரு வியாபாரத் தந்திரம் மதவாதிகளால் பரப்பப்பட்டது..  இந்த லேகியத்தைச் சாப்பிட்டால் குழந்தை பேறடையலாம் என புத்திர புத்திரி பாக்யமில்லாதோரை ஏமாற்றுவது போல‌.   இவ்வுலகைக்காட்டிக் பொய் பரப்பி எவ்வளவு காலம்தான் கடையை விரிக்க முடியும்?  அவ்வுலகைக்காட்டித்தான் பொழப்பை ஓட்ட வேண்டும். எனவே, விண்ணுலகம் புகுவது மண்ணவர் விதியே என மக்களுக்குச் சொல்லப்பட்டது. அதைக்கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளலாமென வாழ்ந்து கிழடு தட்டும் போது பட்டையும் நாமமும் அடித்துக்கொண்டு,. அல்லது ரோசாரியை உருட்டிக்கொண்டு, அல்லது குரானைப்பற்றி களியக்கா விளையில் உணர்ச்சிவசமாகப்பேசிக்கொண்டு தமிழன் டி.வி பார்த்துக் கொண்டு மாறி விடுகிறார்கள்.  ஆசை யாரை விட்டது ? அவ்வுலகத்துக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணிவிட்டால், ஸ்டேஷனில் டி டி ஆருக்கு வெட்ட வேண்டாமில்லையா ?

 

போகட்டும்.. இந்து மதத்துக்கே வருவோம். ஏனென்றால் மலர் மன்னனுக்குத்தான் பதில் போடுகிறோம். எந்த முல்லாவும் பாதிரியும் திண்ணையில் மதமே வாழ்க்கை என்று டுபாக்கூர் விட்டாரென்றால் அவர்களுக்கும் பதில் போடலாம்.

 

மதம் மக்களின் அத்யாவசியத் தேவையில்லாததாலும், ஒரு ஜான் வயிற்றுக்கு உணவு தேடலே தலையாய வேலையாகி விட்டதாலும், மக்களுக்கு தங்கள் தலைகள் மேல் உட்கார்ந்து அழுத்திக்கொண்டு, தங்கள் பொருள் அல்லது உணவு வேட்டைக்குத் தொல்லை செய்யும் மதம் எரிச்சலையேத் தரும்.

 

காதலித்து, காமத்தில் கட்டுண்டு பிள்ளைகளைப் பொல பொலவென பெற்றுப்போட்டு, நர்சரி அட்மிசனுக்கு நாயாக அலையும் மக்களுக்கு மதம் ஒரு இடஞ்சலாகவிருக்கிறதென்று தெரிந்தும் மதம் வேண்டுமேயென்றால் அவர்கள் எல்லாரும் சன்னியாசிகளாத்தான் வேண்டும். அப்படியே ஆனாலும் அங்கேயும் ஆரணங்குகள் வந்து சன்னியாச வேடத்தை வைத்துக் கொண்டே ஜமாய்க்காலாம் சார்? காவியென்றாலே எனக்கு ஒரு மாதிரியா வருது!’ என்று சொன்னால் என்னதான் செய்வது ? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. அவ்வுலகமாச்சே? அல்லாவின் காலடியிலோ, வைகுந்தத்தில் பெருமாளிடமோ, கைலாசத்தில் சிவராஜ்ஜியமே இவ்வுலகத்தை விட சூப்பராக இருந்து தொலைத்து விட்டால் என்ன செய்வது ? எனவே ஒரு காம்ப்ரமைஸ் செய்வோம். மதம் வேண்டும். ஆனால் தொட்டு தொடாமலும் இருக்க வேண்டும். பி.எஃ சேமிப்பு மாதிரி. எப்போ வேணுமோ அப்போ  வித்டராயல் பண்ணிக்கொண்டு வாழலாம். இதற்கு ஏற்ற மதமே இந்து மதம். தலைவனும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. எவனும் அடிப்பேன் கொல்லுவேன் இவன் தலையைக் கொய்து வந்தால் பத்து லட்சம் தருவோம் என்று டயலாக் பேச முடியாது. ‘கோட்டிக்கார பய புள்ள விட்டுத்தள்ளு” என்று இந்துக்கள் ஃபட்வா போடும் படுவாவை எள்ளி நகையாடுவர்;.

 

இந்து மதம் இத்தகைய எரிச்சல்களைத் தரா. வ‌ன்முறை விரும்புவன் ‘சகோதரனாயானாலும் கொன்று விடு ;அஃது ஒரு பெரும்தேவையும் நன்மையும் தருமெனில்’ என்ற பக்கா சுயநலமும் வன்முறையையும் எடுத்து வாழலாம்; விரும்பாதவன், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’ எனவும் வாழலாம். மாட்டுக்கறி சாப்பிட்டு விட்டு பார்ப்பான் வேடம் போடலாம். சைவம் மட்டுமே சாப்பிடுறேன் என்று சொல்லியும் பார்ப்பன வேடம் போடலாம். .அந்தணர் என்பர் அறவோர் எனச் சாதிப்பெருமை பேசலாம்.  சாதிகள் இல்லையடி பாப்பா எனவும் பாட்டெழுதி ஊர்மக்களை ஏமாற்றலாம்.

 

சைவம், வன்முறை, சமாதானம். சாதிகள், அல்லது சாதிகளே வேண்டாம், பூஜைகள் புனஸ்காரங்கள், அல்லது ஒரே ஒரு பூவை எனக்குத்தந்தால் போதும் என்றார் கடவுள் (இச்சுலோகம் பகவத் கீதையிலிருந்து). கல்சாமியே வேணாம் போ என தயானந்த சரசுவதி போல, அல்லது நட்ட கல்லும் பேசுமோ? என நையாண்டி மேளம் வாசிக்கலாம். அல்லது அர்ச்சாவதாரத்தில் (தெய்வத்திருமேனிகளில்) மூழ்கி, ‘என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர-லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே!  என்று பாசுரம் மழை பொழியலாம். எண்ணற்றக் கடவுளர்கள், அதே சமயம் வேதங்கள் ஒரே கடவுளைத்தான் சொல்கின்றன என்று வியாக்யானம் பண்ணித் திண்ணை வாசகர்களை அசத்தலாம். ஆக முரண்பாடுகள், முரண்பாடுகள்,  ஒரே முரண்பாடுகள்.  Conflicts all the way.

 

பல்பொருள் அங்காடி. ஆச்சி சிக்கன் மசாலாவுக்குப் பக்கத்தில் மாம்பலம் ஐயர் சாம்பார் பொடி (இன்று சென்னையில் விற்கும் ஒரு மசாலா பிராண்டு)  எஃது எவருக்கு வேண்டுமே அஃதை அங்கே வாங்கிக் கொள்ளலாம். U can get ot cheap if u r poor; u can get it expensively if u r rich. அடடே ஒன்றைச் சொல்ல மறந்துட்டேனே. அதான் நாத்திகனாகயிருந்தாலும் கமப்ர்டபுளா இந்துவா இருக்கலாம். இந்து என்றாலே திருடன் என்று சொல்லிவிட்டு நானும் இந்துதான் எங்கப்பா சொன்னாரு எனலாம். ராமர் ஒரு குடிகாரன் என்று சொல்லிவிட்டு அப்படித்தாங்க வால்மீகி எழுதி வைச்சிருக்காரு நான் என்ன பண்ணுவேன் ? என நைசாகப் பேசலாம். எல்லாருக்குமே எல்லா வழிகளிலும் வாய்ப்பாக வரும் மதம் இந்து மதம். எல்லாருக்கும் பொதுவான கடை.  All things to all men.

 

இப்படிப்பட்ட பலவிதமான வாய்ப்புக்களடங்கிய பல்பொருள் அங்காடியாக‌ இருப்பதனாலேயே இந்து மதம் இன்று வரைமட்டுமல்ல என்றுமே இருக்கும்.  தொன்மை எனவே இருக்கிறது என்பதெல்லாம் சுத்த கப்சா.

Series Navigationமழைப்பாடல்மண் சமைத்தல்
author

காவ்யா

Similar Posts

80 Comments

  1. Avatar
    சபரிநாதன் அ says:

    //தீர்க்கதரிசன மதங்கள் பரவுவதற்கும் தத்துவ மதங்கள் பரவுவதற்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. தீர்க்கதரிசன மதங்கள் பிறரிடம் அவர்களின் பழைய நம்பிக்கைகளை, ஆசாரங்களை முழுக்க உதறிவிட்டுத் தங்களிடம் வரும்படி சொல்கின்றன. முழுமையான நம்பிக்கையுடன் தாங்கள் சொல்வதை முழுக்க ஏற்றுக்கொள்ளும்படி ஆணையிடுகின்றன. நீங்கள் கிறித்தவராகவோ இஸ்லாமியராகவோ ஆனால் உங்கள் பழைய மதத்தின், குலதெய்வங்களின், ஆசாரங்களின் எந்த அம்சத்தையும் மிச்சம்வைத்துக்கொள்ள முடியாது. கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கைகளில் சிறிதளவேனும் ஐயம் கொள்ளமுடியாது.

    ஆனால் தத்துவமதங்கள் அப்படிச் சொல்வதில்லை. உங்கள் சிந்தனையிலும் வாழ்க்கைமுறையிலும் அந்தத் தத்துவத்தை உள்வாங்கிக்கொள்வதையே அவை முன்வைக்கின்றன. சமணத்தின் ஐந்து ஆசாரங்களையும், அடிப்படை நெறியாகிய பிரபஞ்ச சுழற்சியையும் ஏற்றுக்கொண்டாலே ஒருவர் சமணராகலாம். அவர் அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு அவர் குலதெய்வத்தை வழிபடலாம். ஆசாரங்களைக் கடைப்பிடிக்கலாம்.அதாவது அவை பரப்புவது மதத்தை அல்ல, தத்துவத்தை//

    http://www.jeyamohan.in/?p=21656

  2. Avatar
    களிமிகு கணபதி says:

    நீங்கள் சொல்பவை உண்மைதான் காவ்யா. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

    .

  3. Avatar
    GovindGocha says:

    அது…… இது மாதிரி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். தர்க்கம், சிந்தனை தூண்டல் வாசகர்களுக்கு விட்டு விடுங்கள். என்னைப் பொறுத்தவரை… கடவுள் கோட்பாடு பணக்கார ஆளத் துடிக்கும் வர்க்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட போதை வஸ்து…. ஏழைகள் வரை இறங்கி நீக்கமற ஆகிப்போனது. சரி.. கோவிலுக்கு போக வேண்டும்… வர்றேன்…

  4. Avatar
    ruthraa (e.paramasivan) says:

    காவ்யா அவர்களே

    உங்கள் ஏக்கம் புரிகிறது.
    சிவனின் அடியும் முடியும்
    கண்டுபிடிக்க முடியாத‌
    ஒரு பெருமை மிக்க மதம்
    இப்படி
    ரங்கநாதன் தெரு
    காயலான் கடை போல‌
    இரைச்சல் கூளம் ஆகிவிட்டதே
    என்று நீங்கள்
    மனசுக்குள் அழுவதை
    சுஜாதா ஸ்டைலில்
    கொட்டித்தீர்த்திருக்கிறீர்கள்.
    அத்வைதம் பரப்ப வந்த சங்கர்கள்
    ஜைன மதத்தின்
    சங்கை அறுப்பதற்கு
    தர்க்க குத‌ர்க்க வாதங்களை வைத்து
    ஆதரித்த அர‌ச‌ர்க‌ளின்
    ம‌டியில் உட்கார்ந்து கொண்டு
    இந்து ம‌த‌ம் ப‌ர‌ப்பிய‌தை
    அறிஞ‌ர்க‌ள் ம‌றுக்க‌வோ ம‌றைக்கவோ
    முடியாது.
    இந்து ம‌த‌ம் அடிப்ப‌டையில்
    சிந்துவெளியின் ம‌த‌ம் தான்.
    இது ஒன்றுமேயில்லை என்ப‌தை
    நீங்க‌ள் புரிந்து கொள்ள‌வேண்டாம்
    என்ப‌த‌ற்காக‌
    அதை (வேத‌த்தை)மூடி மூடி வைத்து
    நான்கு ம‌றைக‌ள் என்றார்க‌ள்.
    மூடியை திற‌ந்து பார்த்த‌போது (ரிக் வேத‌ம்)
    இந்த‌ ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ளின்
    ம‌ன்ன‌ர்க‌ளை(சிந்து வெளி தாச‌ர்க‌ளை)
    இன்றைய‌ வெள்ளைய‌ன் செய்த‌
    அதே பிரித்தாளும் சூழ்ச்சியால்
    கொன்று குவித்த‌ ர‌த்த‌ப்புகை
    ய‌க்ஞ‌ங்க‌ளை சூழ்ந்திருந்த‌ன‌.
    அங்கிருந்து வ‌ந்த‌ தாச‌ர்க‌ளான‌
    அக‌ஸ்திய‌ன் வ‌ஸிஷ்ட‌ன் விசுவாமித்திர‌ன்
    சிந்து ம‌த‌த்தை இந்து ம‌த‌ம் ஆக்கினார்க‌ள்.
    உங்க‌ள் ஏக்க‌த்தில்
    எரியும் வெளிச்ச‌த்தில் தெரிவ‌து எல்லாம்
    ஒரு வெறியின் மெல்லிய‌ இழையே
    ந‌கைச்சுவை யாக ந‌டிக்கிற‌து

    இப்ப‌டிக்கு
    அன்புட‌ன் ருத்ரா

  5. Avatar
    annavi says:

    அது எப்படி காவ்யா உங்களால் ஒரே கட்டுரையில் எல்லாரையும் பிடித்து ஒரு வாங்கு வாங்க முடியுது. ஆனால் கட்டுரை நகைச்சுவையாக ரசிக்கும் படி இருந்தது. நன்றி.

  6. Avatar
    GovindGocha says:

    திறந்த வெளி பொது மைதானம் என்றால், விளையாடலாம், செடி கொடி நடலாம் என்று தோன்றுவதை விட பலருக்கும் அதை மந்தைக் குப்பைகாடாகும் மனநிலை தானே அதிகம்…. இந்து மத நிலையும் அது தான்… ஆனால், அந்த குப்பைகளையும் உரமாகக் கொண்டதால் அது பயனாகிறது… ஆனால், சில பிற மதங்கள் வேலிபோட்டு, காவல்காரன் கொண்ட மைதான நிலை… அது பத்திரமாக அப்படியே தான் இருக்கும்… நான் இந்துமத கோட்பாட்டை விட, பிற மதக் கோட்பாடுகளை விட திருக்குறளை நம்புகிறவன்… அதனினும் உயர்ந்தது ஏதுமில்லை.. இருந்தால் அதையும் ஏற்கலாம்… இந்துமதம் சரியில்லை என்று மதம் மாறியதாக, காழ்ப்புணர்ச்சி கக்குபவர்கள், திருக்குறளை தங்கள் வாழ்வு முறையாக பின்பற்றாதது ஏன்…? அறிவுசார் பெரியவர்கள் விளக்கலாம்…

  7. Avatar
    Karthikeyan G says:

    // சாதிகள் இல்லையடி பாப்பா எனவும் பாட்டெழுதி ஊர்மக்களை ஏமாற்றலாம்.// What do you mean? What do you intend to convey?

    1. Avatar
      காவ்யா says:

      நீங்கள் குழந்தையாக 3ம் வகுப்பில் படிக்கும்போது ஆசிரியர் பாரதியாரின் பாடலைப் பாடுவார்; நீங்கள் தொடர்ந்து கோரஸாகப் பாடுவீர்கள். தேர்விலும் கேட்பார்கள். எழுதி மதிப்பெண் பெற்றுவிடுவீர்கள். வருடங்கள் செல்லும். . உங்களுக்கு பெண் பார்ப்பார்கள். ஜாதி மட்டுமல்ல; கோத்திரத்தையும், மற்றும் வடகலையா தென்கலையா என்று ஆராய்வார்கள். பெண் லட்சணமாக இருக்காளா என்பதெல்லாம் பின்னாடிதான். மற்ற ஜாதியாராயிருந்தாலும் இதே கதைதான். ஜாதி மட்டுமா ஊரும் தேடுவார்கள் நாடார்கள். சிவகாசி நாடார் தூத்துக்குடி நாடாருக்குப் பெண் கொடுக்க மாட்டார். பனையேறி நாடார் பெண்ணைப் பனையேறி நாடார்தான் கட்ட வேண்டும்.

      சரி, ஒருவழியா பெண் பார்த்தாயிற்று கார்த்திக்கு. ஜாம் ஜாமென்று கலியாணம்;. குழந்தை பிறக்கிறது. அதுவும் மூணாம் கிளாஸ் படிக்கின்றது. அப்பா இன்னைக்கு எங்க டீச்சர் இந்தப்பாட்டைச் சொல்லித்தந்தாங்க. யாரோ ஒரு தாத்தா எழுதினதாம். ‘சாதிகள் இல்லையடி பாப்பா”

      அப்போது கார்த்திக்குத் தெரியும். இந்த ஏமாற்று வேலை காலங்காலமாக தொடர்ந்து கொண்டே வருவது. என்ன செய்ய? குழந்தைகள் எதைச்சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள். பாரதியார் சொல்லிக்கொடுத்த குழந்தை கண்டிப்பாகப் பின்னாளில் உணர்ந்திருக்கும்.; அப்பா நமக்கு ஒரு பொய்யைத்தான் சொல்லித்தந்தார்.

      கார்த்திக். பரமக்குடிக்கும் எட்டயபுரத்துக்கும் தூரமில்லை. தலித்துக்கள் இன்றும் காலணி நடந்து செல்லக்கூடாது ஊர்த்தெருக்களில். சைக்களிலோ, வாகனங்களிலிலோ பயணிக்கக்கூடாது. இறங்கித்தள்ளிக்கொண்டுதான் செல்ல வேண்டும் வில்லாபுரத்தில், இதுவும் எட்டயபுரமும் தூரமில்லை. எட்டயபுரம் தாண்டி கொஞசம் பஸ் பயணத்தில் அந்த மரண பூமி ஆரம்பித்து விடும்.

      அந்தக்குழந்தை பின்னாளின் இதைக்கண்டு என்ன நினைக்கும்?

      எனவே ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பது ஒரு பச்சைப் பொய மட்டுமல்ல. அஃதொரு வேதனைதரும் பொய்.

      பாரதியார் குழந்தையை ஏமாற்றினார் என்று சொல்லலாம். இந்தப்பாட்டு பிறந்த கதையே அப்படித்தான் சொல்ல வைக்கிறது.

      வீட்டில் சமைக்க அரிசி இல்லை. இறுதியில் கடனாகக் கிடைக்க ரொம்ப நேரம் ஆகிவிட சமைத்துப்போடுவதற்கு நாழியாகி விடும். குழந்தைகள் தூங்கி விடக்கூடாது. இரண்டாவது குழந்தை அழவும் ஆரம்பித்து விட்டது.

      ‘கொஞ்சம் எதையாவது சொல்லி, கவனத்தைத் திருப்புங்கோ! – செல்லம்மாள்.

      ‘சித்த வா பாப்பா (அவர் அப்படித்தான் கூப்பிடுவார்) அப்பா ஒரு பாட்டு சொல்லித்தாரேன்’

      ஓடி விளையாடு பாப்பா…என்று ஆரம்பித்தது பாட்டு. ஒரு வழியாகச் சமாளித்தார் தகப்பன்.

      பயப்படாதீர்கள் கார்த்திக். பாப்பாக்கள் சாப்பிட்டுவிட்டுத்தான் தூங்கினார்கள் அன்று.

      ஆபத்துக்குப் பாவமில்லை. பொய்யும் சொல்லலாம்.

  8. Avatar
    காவ்யா says:

    I am sorry. An error of fact has occured. It is viloor, not villaapuram. வில்லூர் என்று மாற்றிப்படிக்கவும்.

  9. Avatar
    Karthikeyan G says:

    மன்னிக்கவும் சகோதரி!! உங்கள் தார்மீகக் கோபம் புரிகிறது!! ஆனால், வேத புராண இதிகாசங்களில் சொல்லப்படாததை செய்துவிட்டு இதற்கு வேத புராண இதிகாசங்களில் ஆதாரம் உண்டு என்று சொன்னால் அதற்கு அவை என்ன செய்யும். அது போல பாரதி சொன்னதும்!! அதை நாம் பின்பற்றாமல் இருப்பது நம் தவறே அன்றி அவர் குற்றம் அல்ல. எனக்கு நீங்கள் எழுதியது தவறாகப் பட்டது. எழுதினேன். மறுமொழிக்கு அன்பும் நன்றியும்!!

  10. Avatar
    shylapathy says:

    பாரதியை போகிறகோக்கில் வம்பிற்கிளுப்பதுதான் அறிவுஜீவித்தனம் என்று நம்பும் தற்கால நாகரீகம் (trend) ஐ மிக சரியாக காவ்யா வெளிப்படுத்தியிருக்கிறார். பாரதி பற்றிய எந்தப்புரிதலும் இன்றி இவர்கள் பேசித்திரிவது சிறுபிள்ளைத்தனம். இன்னும் நாம் வாழும் காலத்துப்ப் படைப்புகளை முதலில் சரியாக உள்வாங்கி விமர்சனம் நிகழ்த்திப்பாருங்கள். பிறகு நீங்கள் பாரதியைப் பற்றிய விமர்சனங்களுக்கு வரலாம்.

    குழந்தைகளை ஏமாற்றத்தான் பாரதி ஒடிவிளையாடு பாடலைப் பாடினான் என்று சொல்வதன் மூலம் நீங்கள் என்ன நிறுவ முயல்கிறீர்கள்? பாரதி சாதிவெறி பிடித்தவன் என்றா? அவன் சாதிகள் இல்லை என்று சொன்னது பொய்யாக என்றா? பாரதியைப்போல வாழ்வும் எழுத்தும் ஒன்றாக இருக்க வாழ்ந்தவன் கடந்த இருநூறு ஆண்டுகளில் ஒருவனும் இருந்திருக்கவில்லை.

    பாரதியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்றுவிடக்கூடாது என்று முயலும் அனைவரும் அறியுங்கள், பாரதி மறைத்துவிடத் தீக்குச்சியில்லை, சூரியன்.

    காவ்யாவின் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை புறக்கணிக்க வாசகர்கள் தயங்கக்கூடாது

    1. Avatar
      காவ்யா says:

      இக்கட்டுரையில் பாரதியார் பற்றிய விவாதங்கள் வம்பு என்று நினைக்கிறேன். அவரைப்பற்றியக் கட்டுரையில் கதைக்கலாமே ? ஒன்று மட்டும் சொல்லி இங்கே நிறுத்தலாம். உலகம் விரிந்துபட்டது. முப்பது கோடி முகமுடையாள் என்று பாரதியார் பாடி அதைச் சொன்னார். அதன்படி ஆயிரம் மக்களுக்கு ஆயிரத்தோரு கருத்துக்கள் இருக்கலாம். பிடிக்காக் கருத்துக்களைப் படித்துப‌ பிடிபட்ட புழு போல புரளுவதைச் செய்யாமல் “எவனோவொரு ஒரு கோட்டிக்காரன் பிதற்றுகிறான்” என்று விட்டுவிட்டு பாரதியாரைப்பற்றி புகழாரம் சூட்டுவர்கள் எழுத்துகளை மட்டும் படியுங்கள். அவர்களுக்கென்ன பஞ்சமா ? எனினும் ஓரிரு கோட்டிக்காரர்கள் இருக்கத்தானே செய்வார்கள் ? அவர்கள் பார்வைகோணம் வேறு. (வேறுகோணம் உடையோரைப் பைத்தியக்காரர்கள் என்றுதானே உலகம் சொல்லும்? அப்படிப்பட்ட மாறுகோணப் பார்வைகளுக்காகப் பாரதியார் இழித்துப்பேசப்பட்டார். உலகம் அவரை விலக்கி வைத்தது ! What an irony I have to remind this to Bharati worshipers !

      இப்படிப்பட்ட கோட்டிக்காரர்களைப் படிக்கவும் பலர் இருப்பார்கள். அவர்களுக்காக அவர்கள் எழுதட்டும். எழுத்துச் சுதந்திரத்தில் தலையிடுவது தாலிபானித்தனம். தாலிபானித்தனத்தை நோக்கிப் பயணிக்காதீர்கள். உங்களைப்பார்த்து உலகம் சிரிக்கும். பயப்படவும் செய்யும் !

    2. Avatar
      காவ்யா says:

      ஆம்…சாதிகள் இல்லையடி பாப்பா என்பது ஒருபச்சைப் பொய் என்று அவர் காலம் மட்டுமல்ல. நம் காலமும் காட்டிக்கொண்டு நம்மைப்பார்த்துப் பல்லிளிக்கிறது. இந்த காலத்துப் பாப்பாக்கள் எதிர்கேள்வி கேட்டு அசத்திவிடும்: “அங்கிள் அப்போ ஏன் பரமக்குடியிலே கொடியங்குளத்திலே கொலை செய்கிறார்கள்?”

      சைலபதி, உங்களுக்கு அப்படியும் பாப்பாக்களை ஏமாற்ற ஆசையிருந்தால் டி.வி பார்க்க வைக்காதீர்கள். தமிழ் நாளிதழ்களை வாங்காதீர்கள்.

      எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! இந்தப்பாட்டு கசக்கிறதென்றால், இந்தப்பாட்டு, சாட்சாத் பாரதியார் எழுதியதுதான் ;அதே ஓடி விளையாடு பாப்பா பாட்டில்:

      பொய் சொல்லக்கூடாது பாப்பா

      குழந்தை: சைலப்தியிடம்: அங்கிள் நீங்கள் மட்டும் பொய் சொல்றேளே ?

  11. Avatar
    gurunathan says:

    ஒலியும் ஒளியும் ஒன்றாகி நின்றே
    இசுஇசுவென சொல்லாகி நன்றே
    சொல்லும் கேளும் தன்மை கேற்றி
    நல்லீராய் நீண்டே ஆனது
    ஆகமென்றே சொல்லும் கல்லாகி நின்றே
    தாகமென்றே தாண்ட வித்து
    வித்தவன் சித்தவன் செய்தவன் செய்தே
    வைத்தன் வாசமது சிவன்
    சீவனது சச்செது வெந்தேடில் சாரமது
    சாமனது அந்தர் அசன்

    1. Avatar
      காவ்யா says:

      பாமர மக்களையும் இந்து மதம் தன் பக்கம் இழுக்கும் சக்தி கொண்டது என படிக்கிறோம். அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம். இடையிடையே குருநாதன் போன்ற பண்டிதர்கள் வந்து ‘இல்லையில்லை. இந்து மதம் பண்டிதர்களுக்குத்தான் ! ” என்று இப்படிப்பட்ட புரியாப் பாடலைப்போட்டு அதிர்ச்சியில் ஆழ்த்திவிடுகிறார்கள். என்ன கொடுமையிது !

      யாருக்காவது குருநாதன் போட்ட கவிதை புரிகிறதா ?

      But I guess fairly that the poem relates to Hindu religion, maybe about some God therein. That mystery should remain so that ppl may run away from his religion. And I can remain to poke fun at such elitist arrogance.

  12. Avatar
    காவ்யா says:

    தொன்மைதான் இந்து மத்ததைத்தூக்கிப் பிடிக்கின்றது என்றால் பல விபரீத முடிபுகளை எதிர்னோக்கியாக வேண்டும். ஆதிமனிதனுக்கும் ஆன்மிகம் இருந்தது. அவ்வான்மீகம் ஒரு விளக்கத்தின் வடிவங்களாகப் மதங்களாகத் தோன்றியது. அதாவது இருந்த ஒன்றைத்தான் மதங்கள் விரிவுபடித்தின‌. மனிதனின் அடிப்படை உணர்வுகளே அவற்றின் ஆணிவேர்கள்.

    ஆதிகாலத்தில் மனிதன் நரமாமிசமும் சாப்பிட்டான். நரமாமிசத்திலும் சில ஆதிக்குடிகள் ஆன்மீகத்தைத் தேடின, கிடைக்குமென நம்பின.. எனவே நரபலி சார்ந்த‌ வேள்விகளை அவர்கள் நடாத்தினார்கள். இந்தியாவிலும் காளிக்கு நரபலி கொடுத்தல் இன்றும் அவ்வப்போது வெளிப்படுத்தப்படுகிறது. நரமாமிசம் சாப்பிடும் அகோரிகள் இருக்கின்றார்கள் எனக் கேள்விப்படுகிறோம்.

    இக்காலத்தைவிட்டுவிட்டு ஆதிகாலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், தேவதைகளுக்கு நரபலியிட்டு திருப்தி படுத்தலும், பின்னர் நரமாமிசத்தைப் படையலாக உண்பதும் நடந்தது. அஃதெல்லாம் ஆப்பிரிக்காவிலும் பிறதேயங்களிலும். அவ்வாதிக்குடிகள் நெடுங்காலம் வெளியுலகத்துக்கு (அதாவது நமக்கு) தெரியாமலிருந்தார்கள். அவர்களுக்கும் நம்மைத் தெரியாது. பாப்புவா நியு கினியாவில் இருக்கும் நரமாமிசம் சாப்பிடும் ஆதிக்குடிகள் 1977லில்தான் ஆந்த்ரோபாலஜிஸ்டுகளால் வெளியில் தெரியப்பட்டனர். ஆன்மிகம் இல்லா வெறும் உணவாகவும் நரபலி கொடுக்கப்பட்டது. அது நமது விவாதத்தில் இல்லை.

    இவ்வான்மிகக் கலாச்சாரத்தைக்கொண்டோர் இன்றிருந்தால், (பாப்புவ நியு கினியாவில் இருக்கிறார்கள் என்று கேள்வி), அவர்கள் தங்கள் தொனமையைக் காட்டி கனிபலிசம் (நரபலி, மற்றும் நரமாமிசம் வேட்டல்) உலகத்திலேயே சிறந்த ஒரு கலாசாரம் தங்களது என்று சொல்வதில் என்ன தடை?. ஆன்மிகத்தோடு அது கலந்திருந்தால், உலகத்திலேயே ஒரு உயர்ந்தது தங்கள் மதம் என்று சொல்ல என்ன தடை ?

    தொன்மையை அளவுகோலாக வைத்து ஒரு மதத்தின் சிறப்பை எடைபோட முயன்றால், இந்துமதத்தை விட ஆதிக்குடிகளில் கனிபலிசம் கொண்ட மதமே சிறந்தது என்ற விபரீத முடிபை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் !

  13. Avatar
    விருட்சம் says:

    பரந்து விரிந்த இணையத்தில் யாரும் யாரும் ஆகலாம். ‘ஜோ’ , காவ்யா ஆகலாம். காவ்யா ‘ஜோ’ ஆகலாம். anony ஆகலாம். கட்டுரை எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். விமர்சிக்கலாம். இணையத்தில் பலரும் வந்து பல குப்பைகளையும் கொட்டுவதால் அதற்கு வேறு எந்த உபயோகமோ அர்த்தமோ நன்மையோ இல்லை. இணையத்தில் எழுதுபவர்கள் எல்லோரும் சுத்த வேஸ்ட். கப்சா. இணையமே சுத்த வேஸ்ட். கப்சா.

      1. Avatar
        காவ்யா says:

        விருட்சம்

        தொன்மையை வைத்து வியாபாரம் செய்வதை கட்டுரை விமர்சிக்கிறது. இசுலாமியர் தங்கள் மதம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகிறது என்றும், கிருத்துவர்கள் 2011 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது எனவே சிறந்தது என்றும் சொல்வதில்லை. இந்துக்கள் மட்டுமே அப்படிச் சொல்கிறார்கள்.

        தொன்மையே ஒரு மதத்தை உயர்வாக்குகிறதென்றால், ஆதிக்குடிகளின் கனிபலிசம் இந்து மதத்தைவிட உயர்ந்தது எனச்சொல்லலாமா என்று கேட்கிறேன். ஒருவேளை அவ்வாதிக்குடிகள் இன்றும் இருப்பரினெனில் அவர்களின் இசம் இந்துமதத்தைவிட உயர்ந்ததெனலாமா ?

        பதில் சொல்லுங்கள் விருட்சம்

  14. Avatar
    விருட்சம் says:

    தொன்மை விளக்கங்கள் எல்லாம் அதற்கான ஆதரங்களுடன் விளக்கும் பல தளங்கள் இருக்கின்றன. மாநகராட்சி குப்பை தொட்டிக்குள் தலையை விட்டுக் கொண்டு மாநகராட்சியே குப்பை என்று சொல்லுபவர்களிடம் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.

  15. Avatar
    காவ்யா says:

    எழுதுகிறவரின் ஜாதகத்தைத் தேடியலைந்து ஆராயும் காழ்ப்புணர்ச்சி இங்கு தேவையில்லை; பிற தளங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று தேட எங்களுக்கும் தெரியும்.

    இங்கே உங்கள் கருத்தென்ன ? தொன்மை எப்படி எதை ஒரு மதத்துக்குக் கொடுக்கும் என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது/. தொன்மையை வைத்து ஏன் உங்கள் மதம் சிறக்கும் என்கிறீர்கள் எப்படி ? அதைச்சொன்னால் போதும். காழ்ப்புணர்ச்சியைக் கொட்ட பொது தளங்கள் ஏன் ? கருத்துக்களைக் கொட்ட்டுங்கள் விருச்சம்!

  16. Avatar
    A.K.Chandramouli says:

    Hellow VIRUTCHAM, You should not comment anything about Kavya s writings. In the name of secularism they can write anything about Hinduism. In they have not raed anything about Hinduism. This is their website. They dont have the guts to write anything negative about other religions. LONG LIVE SECULARISM.

    1. Avatar
      காவ்யா says:

      There s no link between secularism here, and the only qn whether a religion becomes a great one to choose from among a plethora of religions, merely because it began to exist at a very ancient time.

      If u r very sensitive abt ur religion, u can take it as a general qn. Now, tell me can Islam call itself great merely because it was founded abt 1 millennium ago; or Xanity call itself great merely because Christ taught abt 2 millennia ago; and Hinduism call itself greater than the said 2 religions merely because it predated both ?

      Does such hoary past add value to a religion worthy enough to persuade us to pick it up as ours from among a plethora of religions ?

      Pl go to that qn only. Don’t take it as an arrow aimed at ur religion. It s a general qn.

      The same qn is applied to ur mother tongue (not my mother tongue)also. Most of u boast that Tamil is more ancient than other tongues. I wonder how a religion or a language becomes worthy because of its antiquity alone ?

      Please face these qns. I am afraid it will expose some of the hypocrisy and arrogance v see around today.

      Virutcham and Chandramouli can take these qns. Xians and Muslims wont because they know their religions survive on the theologies alone. Everything else to them is adventitious. That s y I am not talking abt them Chandramouli. U cant sweep all this under ur convenient carpet of secularism or selective secularism !

      It s u or persons like Malarmannan who r boasting of the hoary and unexplored past of ur religion. So, the onus s on u, not on Muslims and Christians, to answer the qn.

      Come on, face it.

      1. Avatar
        காவ்யா says:

        To facilitate u to think in the intended direction, let me elucidate as follows:

        It s just a matter of fact to say Hinduism is chronologically older than all religions being followed today, except religions like Judaism. Such a distant past may bring some pride to its followers, but it s a vanity and vaingloriousness. The fact s useless. Just as we are proud to possess an ancient item in our household, like the saree we wore on our wedding day, or the one our husbands gave for the first time. The saree is today unusable but we keep it as a memento to cherish fond memories. In some families, the daughters wear the same saree on certain occasions which their mothers wore.

        Sentiments are attached to such items. Sometimes, some belief is attached to it, like it may fetch good luck as it had done in the past.

        There s nothing more to say on that item, do we?

        However, we have to live on; we buy more sarees, discarding the earlier ones, depending upon our income.

        In the case of religions, its theology should be practicable to its followers; intelligible to them; it should not be arcane and exotic; and it should give them some time to spend in an spiritual atmosphere taking them away from their mundane chores in a day, or in a month, or occasionally. To fool the ppl and thereby tp hook them to it for ever, the religion can add certain superstitions and spread false stories like ‘I went to Velankannai, and my daughter was betrothed as we found a match immediately after the pilgrimage ! All glories to Mother Mary!”

        These things are important to a religion. No religion today, including ur great Hindu religion, can claim to have adopted fair means for survival. SO it is by hook or crook. To be fair, a good sounding theology is always with them, which too attract some enlightened followers.

        AT THE SAME TIME, THE PAST OF THE RELIGION IS UTTERLY USELESS except to the extent to inject some kind of vanity in the minds of the followers as Malarmannan attempts in the quoted statement at the beginning of my essay.

        Do u accept this explanation Chandramouli and other Hindus here ? U r better educated thinkers and I hope to know your considered views.

        Don’t let me down.

  17. Avatar
    விருட்சம் says:

    கட்டுரைக்குத் தான் கருத்து சொல்ல வேண்டும். குப்பைகளுக்கு அல்ல.

    சில காலமாக திண்ணையின் தரம் உங்களால் உயர்ந்து கொண்டே இருக்கிறது. திண்ணைக்கு வாழ்த்துக்கள்.

  18. Avatar
    suvanappiriyan says:

    காவ்யா!

    //அல்லது குரானைப்பற்றி களியக்கா விளையில் உணர்ச்சிவசமாகப்பேசிக்கொண்டு தமிழன் டி.வி பார்த்துக் கொண்டு….//

    ஹா…ஹா..ஹா…

    எந்த ஒரு விவாதமும் விளக்கமும் மக்களை நல்வழிப் படுத்த வேண்டும். இஸ்லாமியர்களிடம் உள்ள குறையே அவர்கள் குர்ஆனை தெளிவாக விளங்காததுதான். ஆனால் கடந்த 20 வருடமாக இளைஞர்கள் முதல் முதியவர் வரை குர்ஆனை அதன் அர்த்தம் தெரிந்து படிக்க ஆரம்பித்தவுடன் மாற்று மதத்தவர்களை நேசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.. ஏனெனில் அனைத்து மக்களும் ஆதம் ஹவ்வாவிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்ற குர்ஆனின் அறைகூவலும் உலகில் உள்ள அனைத்து மதங்களின் வேதங்களும் இறைவனால் அருளப்பட்டவையே(ரிக்,யஜூர்,சாம, அதர்வண வேதம் உட்பட) என்ற உண்மையும் பலருக்கு தற்போதுதான் விளங்கவே ஆரம்பித்து இருக்கிறது. பல வேதங்கள் இறை கருத்தோடு மனித கருத்துகளும் புகுந்ததால்தான் மதிப்பிழந்து போனதாகவும் குர்ஆன் விளக்குகிறது. எனவே இது போன்ற விளக்கங்கள் விவாதங்கள் மனிதiனின் தேடலை அதிகப்படுத்தவும் நேர்வழிப் பெறவும் ஊக்குவிக்கிறது.

    //இப்படிப்பட்ட பலவிதமான வாய்ப்புக்களடங்கிய பல்பொருள் அங்காடியாக‌ இருப்பதனாலேயே இந்து மதம் இன்று வரைமட்டுமல்ல என்றுமே இருக்கும். தொன்மை எனவே இருக்கிறது என்பதெல்லாம் சுத்த கப்சா.//

    உண்மைதான். ஆனால் தவறு எங்கு நடந்தது என்று ஆராய்ச்சி செய்து தொன்மையான இந்து மதத்தின் உண்மையான வரலாறை தேடி கண்டுபிடிக்க வேண்டியதும் இந்து மக்களின் கடமை. இல்லை என்றால் உண்மை அழிந்து இந்து மதத்துக்குள் பொய்யான தத்துவங்கள் நிரந்தரமாக அமர்ந்து விட வாய்ப்புண்டு.

    1. Avatar
      காவ்யா says:

      சுவனப்பிரியன்

      மதங்கள், அவைகளைப்பற்றி ஞானம் என்பது இருவோரங்களும் தீட்டப்பட்ட கத்தி போல என்பது என் அபிப்பிராயம்.

      மதத்தால் ‘மதம்’ பலருக்கு; பக்தி பலருக்கு; அதுபோல மதத்தப் பற்றிய ஞானமும்.
      ஞானத்தால் செருக்கு பலருக்கு; இறையுணர்வு மிக்க பணிவும் பண்பும் அன்பும் பரிவும் பாசமும் பலருக்கு.

      நான் எழுதிய வரிகள், ஞானத்தை முதுகைச் சொறிந்து சுகங்காண பயனபடுத்துவோரைப் பார்த்தே எழுதப்பட்டவை. இப்படிப்பட்ட கனவாண்கள் எம்மதத்திலும் உண்டு. தமிழன் டி.வி யில் இப்படிச் சிலர் தோன்றி என் எரிச்சலைக் கிளப்புகிறார்கள். இந்து மதத்திலோ இப்படி ஒரு பட்டாளம் எப்போதுமே உண்டு. கிருத்துவத்திலும் உண்டு.

      For so many, religion and its knowledge is a tool for ego gratification.

  19. Avatar
    GovindGocha says:

    ஆனால் கடந்த 20 வருடமாக இளைஞர்கள் …… மாற்று மதத்தவர்களை நேசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.. ….. >> அப்படியா…?

  20. Avatar
    காவ்யா says:

    A K C

    I have crossed the boundaries of the Hindu religion and brought my qn to the open arena: The qn is:

    Can a religion become great based on its antiquity as Malarmannan and many Hindus boasts in respect of their religion ?

    My qn refers to all religions if they makes similar claim.

    And I further have added the rider;

    If the reply is in the affirmative, we must treat cannibalism the greatest faith since it is more ancient than all religions, including the Hindu religion
    and I have explained there r two kinds of this ism:
    one to merely eat the dead bodies, and
    two, sacrificing humans and eating their flesh as rituals of their faith.

    U can read anthropologists to know such ism existed; and does exist in a few parts of interior forests of Amazon and Papua New Guinea.

    Face the qn fair and square
    and reply.

  21. Avatar
    காவ்யா says:

    Chandramouli!

    U r stuck in a groove. I have come across it.

    To explain, I have posited my overwhelming Qn in a public sphere having dragged it out of a specific religion, here, ur religion.

    My Qn has thus become general. It is:

    CAN WE SAY A RELIGION BECOME GREAT, OR HAVE BECOME GREAT BASED ON ITS ANTIQUITY ?

    How a religion becomes special or great because it is more ancient than others ? Malarmannan and other Hindus are routinely claiming such honour to their religion saying it originates in a past no one can fathom. How comes ?

    If such boast is heard from Muslims and Xians, my Qn is directed against them also ? I dare them to counter the Qn.

    So, the qn is before u. Face it fair and square and reply.

    This s the boast from MM: “என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம்…//

    தொன்மை எப்படி இந்து மதத்தையோ அல்லது பிறமதங்களையோ உயர் நிலைக்குக் கொண்டு வைக்கிறது ? தொன்மை அப்படிச்செய்கிறதென்றால், கனிபலிசம், இசுலாம், கிருத்துவம், இந்தியிசம் இவற்றையெல்லாம் தொன்மை வாய்ந்தது எனவே கனிபலிசம் இம்மதங்களை விட உயர்ந்தது. சரியா? தவறா ?

    இக்கேள்வியைக் கேட்க எனக்கென்ன இந்து மதப்பாண்டித்தியம் வேண்டுமா ?

    இந்துக்கள் இப்படி தம்பட்டம் பண்ணுகிறது ஒரு பித்தலாட்டம் என்கிறேன். பதில் சொல்லவும்.

  22. Avatar
    A.K.Chandramouli says:

    பலபேர் இதுபோலவே மதங்களை கடந்தவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் குறைசொல்வத்ர்கு கிடைப்பது ஹிந்து மதம் மட்டுமே .கவிஞர் கண்ணதாசன் அவர் சார்ந்திருந்த நதிக கொள்கையை வலியுருதுவதர்காக ஹிந்து மத நூல்களை படிக்க ஆரம்பித்து கடைசியில் தீவிரமான ஆஸ்திகர் ஆனார். உடனே காவ்யா நான் கண்ணதாசனையும் கடந்தவர் என்று கூறி கொள்ளாதீர்கள்.

  23. Avatar
    காவ்யா says:

    Mr சந்திரமவுலி

    என் கேள்வி வேறே. உங்கள் பதில் வேறே.

    எங்கள் மதம் 5000 ஆயிரமாண்டுகளுக்கு முன்பிருந்து வருகிறது என்று மலர்மன்னன் சொல்கிறார். அவரைப்போன்று பல இந்துக்கள் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள்.

    ஒரு மதம் தன் கொள்கைகள். அல்லது கோட்பாடுக்களை வைத்து மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமா அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயிருந்து வரும் தொன்மை வாய்ந்தது எனவே உயர்ந்தது மற்றெல்லா மதங்களைக்காட்டிலும் என்பதனால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமா ?

    இரண்டாவது சரியென்றால், ஏன் கனிபலசமே உயர்ந்த இசம் என் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது ? கனிபலிசமும் ஒரு மதச்சடங்குதான்.

    இசுலாமியரும் கிருத்துவரும் இப்படித் தொன்மையைக்காட்டி மதம் வளர்த்தார்களானால் அவர்களுக்கும் இதே கேள்விதான்.

    இப்போது பதில் சொல்லுங்கள்.

  24. Avatar
    காவ்யா says:

    //“என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம்…//// எழுதியவர் மலர் மன்னன்.

    என்ன தற்பெருமை ! என்ன ஏமாற்று !

    இஃதொரு பெருமையா ?

    பெருமையே என்றால் ஏன் என்று விளக்கவும்.

    இம்மதத்தை தோற்றுவித்தவர் எவர் என்று தெரியவில்லையாம். எனவே அஃதொரு பெருமையாம். தலைவனே இல்லையாம். எனவே அஃதொரு பெருமையாம் !

    எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இஃதெல்லாம் எப்படி பெருமைகளாக முடியும் என்றுதான் கேட்கிறேன். சந்திரமவுலி கண்ணதாசனாவது உதவுக்கு வருவாரா என்று நினைக்கிறார். மற்றவர்கள் எவரேனும் என் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும்.

    இதையே ரிவர்சில் போடுகிறேன்.

    நாங்கள்தான் இளைய மதம். தற்காலத்தில் இவர்தான் தோற்றுவித்தார்; – என்று இசுலாமியரோ கிருத்துவரோ, நாங்கள் புதிய மதம். எனவே பெருமை ! என்றால், என் கேள்வி:

    எப்படி புதுமை பெருமை தரும் ?! அப்படியென்றால், புதியதாக ஒருவன் சொல்கிறான்: கொலைசெய்வதே எம்மதம் என்றால் அவன் எல்லா மதங்களுக்குப் பின்னால் தோன்றிய நாங்கள்தான் இளையவர்கள்; புதுமையிலும் புதுமை. என்றால், அவர்களை நான் ஏன் உங்களைக்காட்டிலும் உயர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது ?

  25. Avatar
    vedamgopal says:

    This comment is copied from psenthilraj blog & felt it will help the critic on the above topic

    Swami says:
    October 30, 2011 at 6:11 am
    @contrarian,
    intresting perspective on identities. like you said, the ethnic identity is the only true identity and religious/national identities are false identities. thats why in india we didnt have any religion before as we understood the human nature and life as a whole. we understood that as a science. we understood that as god. in india its just way of life AKA sanathana dharma.. YOU ARRIVED AT THE RESULT YOURSELF.
    there are no rules in india. only duties.
    there are no divisions in india. only classifications.
    there are no oppression in india. only duties based on ones capabilities.
    there is no religion in india (ancient). only path and way of life.
    till then i dont think people felt as if they are indians or anything. they had only one identity like you said based on their ethnic group (jaathi) and their spiritual aspiration is to even break and come out of that identity and to realize the self and live just as a life form without entangling themselves with identitity.
    there were lots of such ethnic groups and still people felt connected in sutle way because of the inner pursuit that they had. they had common tools for their inner welbeing. rishis like agasthya went to every house in every street literally and taught yoga to every person. so inner search and aspiritation to attain mukthi was the common thread that connected every person in bharata varsha geography.
    this was india for you before. almost everyone was educated. education happened everywhere right from their home. the invaders could not understand this model and they made a whole mess and i dont have to say the rest.. the moment they said “our path is the right path”, there started some friction and resistance and “way of life” turned as a religion. HERE YOUR RELIGIONS IDENTITY IS GIVEN BIRTH BY THE INVADERS. ITS NEW!!!!
    once someone stood with a christian identity, the other (whole indian population) had to be called with some common name. since this culture was based on river sindu, they called us hindu and hindustan. if at all they had not said “our path is the only path and right path”, things would have been different. Because of this friction, a requirement to protect their culture araised. now people had to take more identities, based on the newly created religion and nation. To protect this civilization today, the so called hindu zealots as mentioned by you had to atleast retain the national level identity and they are fighting for that in some ways and people keep accusing that as well. this is the sad part.
    In the past, if someone drops one identity, he can get enlightened. now a days, an individual has to drop multiple identities to get to that state of being. he is in an identity struggle all because some external invaders came and made a mess out of our peoples mind.
    If there is no organized attempt to convert people from hinduism to christianity, then its OK. but thats not the case as you know it very well. look at http://www.joshuaproject.net/. these people are maintaining websites and status trackers on conversion levels. see how organized the attempt is. how dare they are.. do you say defending their attempt from our end is barbaric??? if they stop every confusion will come to an end. like in nayagan movie “avana nirutha chol. naa nirutharen ”
    so in a nut shell, the spiritual tools available in this land for ones inner pursuit is not available anywhere and so indian civilization is worth protecting and preserving. and thats always happening at various levels. by gurus preaching yoga everywhere, by singing songs of the gods , true historians trying to revive the forgoten indian history and pride. Anything done against this in the name of religious conversion is against the act of preserving and so its destroying the harmony. Hence the blog.. Hence Proved…

    1. Avatar
      காவ்யா says:

      Vedam Gopal

      U r trying to use this arena to compare religions with a view to extol urs.

      It s a pity ur religion, in order to survive, needs the crutches of the presence of other religions so that u can compare and gloat.

      Here, u need to say, whether the greatness of ur religion comes from the fact of it being older than other religions – which is implied not only in MM’s quotation here, but routinely trumpeted by many Hindus – then, and if so, what s wrong if the religions of ancient tribes r taken to be greater than urs as they r older than urs.

      Further, by lionizing the past of ur religion as sacrosanct, u r no different from a Muslim who does the same in r/o of his religion. The Muslims believe the Koran was given by Allah through their Prophet; hence, unalterable. Their Holy Book shd pass to the future as it came down from the origin: intact and compact. Verbal inerrancy. There s no qn of dilution – even for a split second.

      What s the difference between an average Muslim thinking and this Malarmannan’s gloating over the glory of the past of his religion and like him a lot of Hindus. I have not seen a single Hindu in my life who does not boast that their religion is most venerable because it is ancient.

      Ur long cut and paste work does not face this qn. It s skulduggery.

  26. Avatar
    vedamgopal says:

    பொதுவாகவே உலகில் கற்காலம் இடைகாலம் நாகரீகம் வளர்ந்தகாலம் என்று சரித்திர வரலாறு நமக்கு தெரியும். இப்படி உலகின் பல பாகங்களில் கற்கால இடைகால நிலையிலிருந்து மாறாமல் காண்டுமிராண்டிகளாய் வாழ்ந்த காலகட்டங்களில் முதல் முதலில் நாகரிகம் வளரதொடங்கிய நாடுதான் பாரதம். அதுதான் வேதகால நாகரீகம் அதுதான் உலக நாகரீகங்களின் முன்னோடி. மற்ற நாகரீகங்களை ஆராய்ந்தால் அவை சற்று ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்தான் வளர ஆரமபித்தது. ஆனால் பாரததேசத்தின் வரலாறு யுகம் யுகமாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு யுகத்திலும் பாரதியர்கள் தர்மத்தின் வழியில் நி்ன்று அதர்மத்தை அழித்து வந்தமைக்கு புராணமாக சொல்லி வைத்த நிகழ்வுகள் இன்று இது யுகங்களில் நடந்த உண்மை சரித்திரம் என்று நீருபிக்கபட்டு வருகின்றது. எனவே வேதகாலம் தொடங்கி இன்று இந்து மதம் என்று உலகத்தாரால் ஏற்றுக்கொண்ட இந்த மதம் மிகவும் தொன்மையான நாகரீக முதிர்சிபெற்ற மதமாகும். எனவே மலர் மண்ணன் கூறியதும் சரியே !!!!!!!!

  27. Avatar
    காவ்யா says:

    //எனவே மலர் மண்ணன் கூறியதும் சரியே !!!!!!!!//

    மலர் மன்னன் எழுதியதில் தொன்மை பற்றி மட்டுமே விளக்குங்கள் என்று நான் கேட்கிறேன். மற்றபடி இந்து மதப்பிரச்சாரம் இங்கு வேண்டாம்.

    ஏன் கேட்கிறேன்? தொன்மையான மதம் என்பதில் மலர்மன்னன் போன்றோர் கிருத்துவ இசுலாமிய மதங்கள் எங்களைக் காட்டிலும் தொன்மையில்லை என்ற பீற்றல் இருக்கிறது. எந்த தீவிர இந்துவைக் கேட்டாலும் தொன்மை…தொன்மை என்றுதான் பேசுகிறான். வயதான ஒரு பிரபலம் பொதிகை டி.வியில் இந்து மதத்தைப்பற்றிப் பேசும்போது, தொன்மை என்று சொல்லியே பெருமூச்சு விடுகிறது!!!. அவ்வளவு முக்கியமான விடயமாமிது.

    இருக்கட்டும். என் அறிவுக்கெட்டிய கேள்வி உங்களுக்கு எட்டுகிறதா ? பருகும் ஒயின் போன்ற வெகுசில பொருட்களுக்குமட்டுமே தொன்மை சிறப்பைத்தரும். எப்படி மதத்துக்குத் தொன்மை என்றதனாலே சிறப்பு என்பது மட்டுமே என் கேள்வி, ஆம், தொன்மை எனவே சிறப்பு என்றால். உங்களைக்காட்டிலும் தொன்மையான ஒரு மதம் இருந்தால் அவர்கள் நுங்கள் மதத்தைவிட சிறப்பு என்று சொன்னதற்காக‌ அம்மதத்துக்குத் தாவி விடலாமா வேதம் கோபால் ?

    ஏன் தொன்மை என்ற சொல்லைப்பற்றி இவ்வளவு கோபப்படுகிறேன் என்றால், தொன்மை என்று சொல்லி தலைமுறை தலைமுறையாக மக்களை ஏமாற்றும் படலம் தொடர்ந்து கொண்டே வருகிறது. அப்படிச்செய்யும் சிலரில் மலர்மன்னன் போன்றோர் பலர். இன்னொரு உபத்திரம் என்னவென்றால், இவர்களின் வயது. 70 அல்லது 80களில் இருப்பார்களானால், ஏமாற்றுவது தெரியாது. மக்கள், ‘ஆ…’ என்று வாய்பிளந்து அடிமையாகிறார்கள். Thus, these old men abuse our trust.

    Cant u put up a relevant reply ?

  28. Avatar
    vedamgopal says:

    தொன்மை என்றும் முதுர்சிபெற்ற நாகரீகம் என்றும் பெருமை பட்டுகொள்வதில் என்ன தவறு என்று எனக்கு விளங்கவில்லை. ஆதனாலேயே எல்லோரும் இந்து மதத்தைதான் தழுவவேண்டும் என்றும் யாரும் கட்டாயபடுத்தவில்லை. தொன்மை என்று சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றலாம் என்றால் அது ஏமாளியின் கோமாளிதனமே அன்றி அது ஏமாற்றுபவன் தவறு அல்ல. தொன்மை என்று சொல்லியோ முதுர்சி பெற்ற நாகரீகம் என்று சொல்லியோ யாரும் யாரையும் ஏமாற்றி இந்து மதத்தில் சேருங்கள் என்று கூப்பாடு போட்டதும் இல்லை. இப்படித்தான் மிலேசமதங்கள் தங்கள் மதம்தான் உண்மை தங்கள் கடவுள்தான் உண்மை என்று கூறி செம்மறி ஆட்டு கூட்டத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மதம் மாறும் ஏமாளிகளான கோமாளி பலி கடா இந்துகளுக்காக தான் மலர் மண்ணன் குரல் கொடுக்கிறார்.

    1. Avatar
      காவ்யா says:

      “தொன்மை என்றும் முதுர்சிபெற்ற நாகரீகம் என்றும் பெருமை பட்டுகொள்வதில் என்ன தவறு”

      வேதம் கோபால்
      பெருமையென்றால் எப்படி பெருமை?
      ஆப்கானில் பல்லாயிரமாண்டுகளுக்கு வாழ்ந்தவரின் கற்பனையில் என்ன பெருமை உங்களுக்கு?

  29. Avatar
    காவ்யா says:

    மதம் மாறுபவர்கள் பிறமதத்தலைவரகள் சொன்னதை ஏற்றுக் கொண்டுதான் மாறுகிறார்கள். அவர்களை இந்து மதத்துக்கு இழுப்பதற்கு தொன்மை என்ற மந்திரக்கோலைக் காட்டிப் பிடிக்கலாமென நினைக்கிறார். இது ஏமாற்றுதல் மட்டுமல்ல. அப்பாவித்தனமாகும். மதத்தில் ஏன் சேருகிறார்கள் ? அம்மதம் காட்டும் வழியில் சென்று ஆன்மிக நன்மை பெறவே. தொன்மைக்காகச் சேருபவனும் அதைக்காட்டிச் சேருங்கள் எனச்சொல்லும் மலர்மன்னன் போன்றோரும் ஏமாற்றுகிறார்கள் என்பதே என் வாதம். மதக்கொள்கைகளைக்காட்ட அவர்கள் தயங்குகிறார்கள்.

    “தொன்மை என்றும் முதிர்ச்சி பெற்ற நாகரீகம்” என்றால், இந்துமதம் மட்டுமா ? பிறமதங்களும் உண்டே! பவுத்தம் இல்லையா? சமணம் இல்லையா? தமிழர் தொல் வழிபாடில்லையா ? பிறநாட்டு மதங்களான யூதமதமில்லையா? அஃது உங்கள் தொன்மையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டுவிடும். தெரியுமில்ல.? அதைத்தானே நான் சொல்கிறேன். தொன்மைதான் என்றால் ஏன் இந்துமதம் ? அதற்குத் தொன்மையான “ முதிர்ச்சி பெற்ற “ நாகரிகமானவை இருக்கின்றனவே? பல தொல் மதங்களையும் அழித்துத்தானே இந்துமதம் முன்னேறியது? பவுத்தத்தையும் சமணத்தையும் தமிழ்நாட்டை விட்டே விரட்டியவர்கள் யார் வேதம் கோபால் ? நீங்கள் செய்தால் சரி ! மற்றவர்கள் செய்தால் தவறா ?

    இருக்கட்டும். மிலேச்ச மதங்கள் தாங்கள் காட்டும் வழியே உண்மையென்று சொன்னால், நீங்கள் உங்கள் வழியை உண்மையென்று சொல்லுங்கள்! மதத்தின் கொள்கைகளைச் சொல்லுங்கள்!! எவரிடம் போக விரும்புகிறார்களோ அவர்களிடன் மக்கள் போகட்டும் அவர்தம் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டால்.

    மலர்மன்னன் பிறமதத்துக்குப் போபவர்களைக் தொன்மையக்காட்டி இழுக்கிறார்; அதோடு விடவில்லை அவர் ! கால்டுவெல்லால் மதமாற்றம் செய்யப்பட்ட மக்களை கால்டுவெல்லின் வைப்பாட்டிப்பிள்ளைகள் என்று நகையாடுகிறார் உங்கள் பிரியமான தளத்தில். எனக்கு இவர் எழுதியதைக்காட்டி வேதனையில் சொன்னவர்கள் அம்மதத்துக்குக்கார்ர்களே. நான் கிருத்துவனோ இசுலாமியனோ இல்லை.

    மலர் மன்னர் குரல் கொடுக்கிறார் என்று சொல்லி நான் சொல்வதை நீங்கள் நகட்டப் பார்க்கிறீர்கள். மலர்மன்னன் மட்டுமல்ல, எந்த பக்கா இந்துவையும் எடுத்தாலும் சிந்து சமவெளியைத்தான் காட்டுகிறான்; அதன் தொன்மையை.
    “ என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம் “ 

    What is this ? If you don’t know who is the founder, it ipso facto becomes great? Silly logic no doubt Not only that. It is a clever ploy to enslave people. மக்கள் மிரட்டப்படுகிறார்கள். மிரளுகிறார்கள். If I see a book, and if I don’t know who is the author; and further, if I know it is ancient, to me, it ipso facto becomes great? What nonsense it is! Shouldn’t I read the contents and judge the book?

    வேதங்கள் சிந்துசமவெளையில் எழுதப்பட்டவை என்பதற்காகவும் எவரால் எழுதப்பட்டவை என்று தெரியாததாலும் அவை தெய்வத்தன்மை வாய்ந்தவை; அவை போற்றப்படவேண்டும்? இல்லையா ?
    தொன்மையென்பது ஒரு சமூகத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது; அஃதொரு முதிர்ச்சி பெற்ற நாகரிகம் என்பது எவ்வளவு பெரிய ஜேப்படி வித்தை என்பதைக்காட்ட ஒரு தனிக்கட்டுரையே போடவேண்டும். நினைவிருக்கட்டும். சிந்து சமவெளித் தொன்மை மட்டுமல்ல. தமிழ்நாட்டுத் தொன்மையும் அப்படித்தான்.

    இன்று நான் படித்த தொல்காப்பியம் என்னை அதிர்ச்சிபெறவைத்தது; மனைவிமார்கள் உடன்கட்டையேறியதைப் பெருமையுடன் சொல்கிறது. நான் படித்த சிலப்பதிகாரம், நரபலியை சோழனே நடாத்தினான் எனச்சொல்கிறது.

    முதிர்ச்சியடைந்த நாகரிகமாம் ? ஒய்யாரக் கொண்டையாம் உள்ளேயிருக்குமாம் ஈரும் பேனும் ! என்ற நையாண்டிப் பழமொழிதான் நினைவுக்கு வரும்.

    திராவிடக்கட்சிகள் தொன்மையைக் காட்டிக்காட்டி ஆட்சிக்கு வந்தபோது அதைத் தமிழர்களை ஏமாற்றும் வித்தை என்று ஓயாமல் சொல்லும் நீங்கள், உங்கள் மதத்தை அதே வித்தைகாட்டி ஏமாற்றுவதை ஏற்க மறுக்கிறீர்கள்!!!!!!!
    To me, this Malarmannan, Vedam Gopal, and Karunanithi and all so called Dravidian leaders are of the same club. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் We must beware of them.. Their aim is to fool ppl by showing the spurious glory of the past.

  30. Avatar
    vedamgopal says:

    அம்மா தாயே கரிபால்டி காவ்யா ஆரப்பத்திலேயே தெரியும் நீங்கள் ஒரு விதண்டாவாத பேர்வழி என்று. அதனாலேயே தங்களது பெயரை குறிப்பிடாது வேறு தளத்தில் வந்த மறுமொழியை காப்பி செய்து அனுப்பி தங்களிடம் மாட்டிக்கொண்டுவிட்டேன். எனக்கு இப்பொழுது தெளிவு பிறந்துவிட்டது நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை. நான் தோற்றுவிட்டேன் – போதுமா !!! நன்றி – உங்கள் எழுதும் பணி தொடர வாழ்த்துகள்

  31. Avatar
    GovindGocha says:

    மதம் மாறுபவர்கள் பிறமதத்தலைவரகள் சொன்னதை — “கொடுத்ததை… “என்றும் சொல்லலாம். இவர் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், உண்மை… அதனால் தான் பண்பட்டு இருக்கிறார்கள். விறைப்பாய் , பாயில் படுத்துக் கொண்டு ஜெயிப்பேன் என்று மமதையால் கனவில் வாழாதவர்கல்.

  32. Avatar
    GovindGocha says:

    பாயில் படுத்துக் கொண்டு ஜெயிப்பேன் என்று மமதையால் கனவில் வாழ்ந்தவர்கள் அல்ல….

  33. Avatar
    Kavya says:

    வேதம் கோபால்,

    இந்து மதத்தை விட்டுவிடுவோம்.

    தொன்மை அல்லது பழமை என்றால் ஏன் அது பெருமை ? மதத்தையே எடுத்துக்கொண்டால் அது இசுலாமாகவோ, கிருத்துவமாகவோ இருந்தால் ஒரு தனிதமனிதனின் செயல் 2000 years ago. அதற்காக அவனைப்பெற்ற தாயோ தகப்பனோ அல்லது அவனோடு உடன்பிறந்தோரா பெருமைப்படலாம். Such a child was born from me. Or such a brother with whom I am born. How blessed I am !

    இந்துமதத்தை எடுத்துக்கொண்டால், அது ஆப்கானிஸ்தான் + பாகிஸ்தானில் இருந்த சிந்து சமவெளியில் உள்ள மனிதர்களின் கூட்டுமுயற்சி. பின்னர் வெவ்வேறு விடயங்கள் பலரால் சேர்க்கப்பட்டன.

    இப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த‌ தனிமனிதனின் செயல், அல்லது மனிதர்களின் கூட்டுச்செயல். 2001 அக்டோபரிலும் அல்லது நவம்பரிலும் ஏன் ‘பெருமைப்’ படுகிறார்கள் ?

    என்ன பெருமை? எப்படிப் பெருமையாகும் ?

    இதற்கு வேதம் கோபால் இல்லாவிட்டால் வேறு எவராகினும் பதில் சொன்னால் நன்றி.

    இது விதண்டவாதம் இல்லை. ரொம்ப சீரியசான விடயம். தொன்மை சிறப்பு; தொன்மை நம் பெருமை என்பதெல்லாம் ஒரு conspiracy against a people, to paralyse an entire population. Conspircy of many Hindus like Malarmannan, Gopal and others, conspiracy of the self-styled dravidian leaders – HAVE PARALYSED AN ENTIRE TAMIL RACE FOR MANY MANY GENERATIONS.

    People were brainwashed to accept the past speechlessly, blindly and fearfully.

    No fresh thinking. No adventurous thinking. No progress on our own. If at all there was any achievement from any person, it is due to his individual efforts; the climate of thinking has only hindered him; or as a matter of act, crippled him. He overcame the inimical and hostile culture and succeeded. Dont take lit as an achievement coz u cam make lit out of slavery too. The slaves can write poems about their agonised lives. The black have done. The Tamil dalits are doing nowadays.

    Please explain. Vedam Gopal, WHY DO YOU FEEL PROUD ABOUT THE RISHIS WHO WERE AFGANS AND PAKISTANIS AND WHO WROTE THAT WHICH YOU SPORT AS A PREFIX TO YOUR NAME, THE VEDAS !

    If not Gopal, anybody ?

  34. Avatar
    தங்கமணி says:

    தொன்மை என்பதே பெரிய பெருமை இல்லை.

    இஸ்லாமின் படியும், கிறிஸ்துவத்தின் படியும், அவையே உலகத்தின் ஆதி மதங்கள். நடுவில் வந்தவர்கள் திரித்து தவறாக சொல்லி மனிதர்களை வழி கெடுத்துவிட்டார்கள்.

    பிறந்த ஒவ்வொரு மனிதனும் முஸ்லிமாகவே பிறக்கிறான் என்பது இஸ்லாமின் நிலைப்பாடு. ஒவ்வொரு மனிதனும் பாவியாகவே பிறந்தான் என்பது கிறிஸ்துவத்தின் நிலைப்பாடு. இன்றல்ல நேற்றல்ல. தொன்மை காலம் தொட்டே அப்படித்தான் என்பது இவைகளின் நிலைப்பாடு. முதல் மனிதன் ஆதாம் ஒரு முஸ்லீம் என்பது இஸ்லாமின் நிலைப்பாடு. ஆகவே அவைகளே இந்து மதட்தை விட தொன்மை வாய்ந்தவை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

    என்ன பிரச்னை என்றால், கிறிஸ்துவம் இஸ்லாமின் படி முதல் மனிதன் 6000 வருடங்களுக்கு முன்னால் யாஹ்வே என்ற தெய்வத்தால் (அல்லது அல்லாஹ் என்ற தெய்வத்தால் ) படைக்கபப்ட்டான் என்று அம்மதங்களின் நிலைப்பாடு

    பல லட்சம் வருடங்களாக மனிதர்கள் பூமியில் இருக்கிறார்கள். பல யுகங்களாக இந்த பூமி இருக்கிறது, பல கோடி சந்திர சூரியர்கள் இருக்கிறார்கள். இந்த பிரபஞ்சம் ஒரு சுழற்சியாக பிறக்கிறது அழிகிறது பிறக்கிறது அழிகிறது என்று இந்து மத புத்தகங்கள் கூறுகின்றன.

    ஆனால், தொன்மை ரீதியில் இந்து மதம் நடுவில் வந்து மனிதர்களை கெடுத்துவிட்டது என்பது கிறிஸ்துவம் இஸ்லாமின் நிலைப்பாடு

    தொன்மை என்பதை வைத்துத்தான் இஸ்லாமும் கிறிஸ்துவமும் கூட மக்களை இழுக்கின்றன. அதனை வைத்துத்தான் அம்மதங்களும் பல லட்சக்கணக்கான தமிழர்கள் நம்புகிறார்கள்.

    1. Avatar
      Kavya says:

      தங்கமணியின் தொன்மையும் நான் குறிப்பிடும் தொன்மையும் வெவ்வேறானவை.

      தங்கமணியின் தொன்மை, மதக்கோட்பாடுகளை – இசுலாமின், கிருத்துவத்தின், இந்துமதத்தின் கூறப்படும் கோட்பாடுகளை வைத்தே.

      நான் சொல்லும் தொன்மை மலர்மன்னனின் சொற்களில் உறைந்து கிடைக்கும் தொன்மை. அச்சொற்கள் வருமாறு:

      “ என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம்… “

      அதாவது காலத்தைக் குறிப்பிடுகிறார். இந்த தொன்மையில் என்ன பெருமை இருக்கிறது என்றுதான் கேட்கிறேனே ஒழிய, இசுலாம் கிருத்துவம் என்ன சொல்கிறது என்றல்ல !! ஏன் இதைமட்டுமே கேட்கிறேன் என்றால், இதை வைத்துத்தான் மலர்மன்னன் மெல்ல மெல்ல காயை நகட்டுகிறார். He is referring to time.

      Every pukka Hindu exploits the time sense of his religion. They may be saying about the contents of Vedas also; but never fail to exploit like saying:

      “How old our Vedas are ! என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத !!!!!!!”

      இப்போது தங்கமணி விளக்கலாம்.

  35. Avatar
    தங்கமணி says:

    நான் ஏன் அவரை நியாயப்படுத்துகிறேன்? நான் விளக்கவும் இல்லை. ஆனால் தொன்மை என்பது கிறிஸ்துவ இஸ்லாம் ஆகிய மதங்களுக்கும் உண்டு என்பதுதான் நான் சொல்வது. ஒவ்வொரு மதத்தினரும் தங்களது மதமே தொனமையானது என்றே கூறிக்கொள்கின்றனர், உலகம் தோன்றியதை பக்கத்திலிருந்து பார்த்து விவிலியத்தில் எழுதி வைத்திருக்கும்போது அதனை விட தொன்மையானதை யார் என்ன கண்டுபிடிக்கமுடியும்? :-))

    நமது மலர்மன்னனாவது எப்போது தோன்றியது என்றே தெரியவில்லை என்று சொல்கிறார். ஆனால் கிறிஸ்துவமும் இஸ்லாமும் எப்போது உலகம் தோற்றுவிக்கப்பட்டதோ அப்போதே தங்களது மதமும் தோன்றிவிட்டது என்று அறுதியாக சொல்கிறார்கள். ஆகவே கிறிஸ்துவமும் இஸ்லாமும்தானே இந்துமதத்தை விட தொன்மையானதாக இருக்கமுடியும்?

    இப்போது காவ்யாவும் துலக்கலாம்.

    1. Avatar
      காவ்யா says:

      “துலக்குவார் என்றால் என்ன பொருள் ? பல் துலக்குவது! பாத்திரங்கள் துலக்குவது என்பதுதானே தமிழ்?! யாரை, எதை நான் துலக்கவேண்டும் ?

      போகட்டும். தங்கமணியின் கருத்துக்கு வருவோம்

      மூன்று மதங்களுமே விஞ்ஞானக்கொளகைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவைகளுக்கிடையே என்ன ஒப்பீடு இருக்க முடியும்? இந்து மதத்தின் தொன்மை எப்போதிலிருந்து என்று சொல்ல முடியவில்லை. ஆனால், பிறவிரு மதங்களின் தொன்மை – கிருத்துவம் இயேசுவிடமிருந்து, இசுலாம் அவர்களின் மறைத்தூதரிடமிருந்தே – உலகுக்குத் தெரியவந்தது. அவர்கள் இல்லாதிருந்தால், தங்கமணி அம்மதங்களின் கோட்ப்பாடைப்பற்றிப்பேசவே முடியாது. ஆகவே அவர்களில் தொன்மை 2011 ஆண்டுகளுக்கு முன்பேதான்! இந்துத்தொன்மை அதற்கும் அப்பால். எப்போது என்று தெரியாது
      .
      தங்கமணி “இம்மதம் இப்படிச் சொல்கிறது! அம்மதம் அப்படி!!” என்பதைவிட, நான் சுட்டிக்காட்டும் “காலத்தால் முந்தியது எது? என்பதையோ நோக்க வேண்டும். அப்படி நோக்கித்தான் பந்தா காட்டுகிறார் மலர்மன்னன் என்பது என் குற்றச்சாட்டு வருகிறது. இப்பந்தா தவறா சரியா இல்லையா என்பது ஆராய்ச்சியில்லையிங்கே. ஏன் இந்தப்பந்தா என்பதே கேள்வி? மத்த்தின் சிறப்பு காலத்தால் வரும் தொன்மையிலா? அதை வைத்தா இந்து மத்த்தில் சேருங்கள் எனச்சொல்வது? காலத்தால் வரும் சிறப்பில் என்ன பெருமை ? அந்தப் பெருமையை தங்கமணி விளக்கட்டும்.

  36. Avatar
    தங்கமணி says:

    காவ்யா அவர்களே,

    நான் எழுதியது இது.
    //தொன்மை என்பதே பெரிய பெருமை இல்லை. //

    பிறகு நான் என்னத்தை விளக்கவேண்டும்?

    கிறிஸ்துவம் 2000 வருட பழையதுதான் என்பது தவறு.
    கிறிஸ்துவம் காலத்தால் மிக மிக முந்திய பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாகவே வருகிறது.

    அந்த பழைய ஏற்பாடு (அல்லது torah) எப்போது எழுதப்பட்டது என்பது தெரியாது. அந்த பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாகவோ, அல்லது அதனை திருத்த்தவோதான் இஸ்லாமும் வருகிறது. அதனைத்தான் அந்த மதத்தினரும் சொல்கிறார்கள்.

    நீங்கள் பக்க சார்பாக இந்து மதம் மட்டுமே தொன்மையானது என்று சொல்வது ஆதாரமற்றது.

    உலகம் தோன்றியபோதே torah எழுதப்பட்டுவிட்டது. ஆகவே அதற்கு பின்னர்தான் வேதங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆகவே வேதங்கள் 10000 வருடங்களுக்கு முந்தியவை என்று சொல்வது தவறு. ஏனெனில் உலகம் தோன்றியே 6000 வருடங்கள்தான் ஆகின்றன. அதனைத்தான் விவிலியமும் சொல்கிறது.

    1. Avatar
      காவ்யா says:

      ..//தொன்மை என்பதே பெரிய பெருமை இல்லை.
      பிறகு நான் என்னத்தை விளக்கவேண்டும்?….//

      தொன்மை என்பது பெரிய பெருமை இல்லை என்று சொல்வதை விட தொன்மை என்பது பெருமையோ சிறுமையோ இல்லை. அது ஒரு மேட்டர் ஆஃப் ஃபாக்ட். The unknown antiquity of the Hindu religion does neither credit nor debit to her. வெறும் கற்பனை மட்டுமே as no one can prove it when she was born. அப்படியிருக்க அதை விட்டுத் தொலைக்க வேண்டும். அல்லது வெறுமனவே சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உள்ளோக்கத்தோடு அதை வைத்து மதத்தைப் பிரச்சாரம் செய்யக்கூடாது பிற மதங்களை இழிவுபடுத்தக்கூடாது என்பதே என் வாதம். U r not trying to face this point. Instead, trying to divert it to issue of theologies of other two religions.

      Don’t say, as Vedam Gopal has said, a Hindu can be proud of such an unknown antiquity. My questions to you continue to remain unanswered: They r:

      Why do u feel proud? Where from do you derive such a pride over that? What do you mean by being proud?

      A group of ancient men drew the codes of your religion, like Vedas in Sindhu valley. What is there to be proud of their activity? Have you done that? It is they who had done that. If the codes are good, well and good. Let’s appreciate and make use of them. If bad, condemn and cast away.

      நீங்கள் மதங்களின் அடிப்படைக்கோட்பாடுகளுக்குப் போகிறீர்கள். மலர்மன்னன் போன்றோரின் பந்தாக்கள், இந்துமதத்தை பிற மதங்களைக்காட்டிலும் தொன்மையானது என்று சொல்கின்றன. இல்லையா ? அதைப்பற்றிக் கேட்டால் அவர் சொன்னது சரியென்றுதான் வாதம் பண்ணுகிறீர்களேயொழிய அவரின் உள்ளோக்கம் தன் மதம் இசுலாம், கிருத்துவத்தை விட உயர்வானதென்பதே எனபதைச்சொல்லவே. அப்படி அவர் நினைக்கலாம். தவறில்லையெனச்சொல்லும் அவரின் அல்லக்கைகள், அதையே மற்றவர்கள் நினைக்கும்போது. சொல்லிப்பிரச்சாரம் பண்ணும்போது, “ஏமாற்றுகிறார்கள் மக்களை!” எனக் குதிப்பதேன்? திராவிட இயக்கத்தலைவர்கள், தமிழ் மொழியின் தொனமையை, தமிழ் மக்களின் தொன்மையைப்பற்றிப் பேசும்போது இவர்களால் தாங்க முடியவில்லையேன்? அவர்கள் சொன்னால் பித்தலாட்டம். இவர்கள் சொன்னால் நல்ல ஆட்டமா ? Can you account for this double standards ? Why are you making fun of Tamil scholars of a particular school who derive pleasure and impart it to Tamil masses by pointing out the ancientness of Tamil language, Tamil culture etc. ? I am pointing this out because the vaideega lobby to which Malarmannan, Vedam Gopal, Kalimigu Kanapati all belong, which gloat over the glory of their vaideega sect, are indulging in the brick batting of Tamil scholars. EVR is the only person who has the moral right to condemn these Tamil fanatics calling them stupid and Tamil language a language of barbarians. He has a point, which I shall explain when occasions falls. You cant.

      இவர் இந்துமதத்தின் தொன்மை என்று பூச்சாண்டி காட்டி, “உம்மதத்தைக்காட்டிலும் என்றைக்கு தோன்றியதென அனுமானிக்கவே முடியாத தொன்மை எங்கள் மதத்துக்கு ! எனவே எம்மதத்தில் மக்கள் சேர்கிறார்கள் !! ” என்று நைசாகப் பேச, நான் அதெல்லாம் சுத்த கப்சா எனச்சொல்லிப் போட்டக் கட்டுரையே இது.

      கிருத்துவர்கள், இசுலாமியர்கள், இந்துக்கள் நம்பிக்கைகள் எப்படியாகவும் போகட்டும். அது நமக்குத் தேவையில்லை. இங்கே. தொன்மை வைத்து மக்களை ஏமாற்றும் பேர்வழிகளை மட்டும் நாம் அடையாளம் கண்டு சொல்ல வேண்டும்.

      Argument closed.

  37. Avatar
    தங்கமணி says:

    அது பார்வையில் இருக்கிறது. ஒருவர் தொன்மை என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். ஒரு சிலரோ தொன்மை என்பதை கேவலமாக சொல்லிக்கொள்ளலாம்.

    லேட்டஸ்ட்டாக எங்க தலைவர்கிட்டதான் கடவுள் சொன்னார் என்றுதான் இஸ்லாமும் கிறிஸ்துவமும் சொல்லிக்கொள்கின்றன. ஆகையால் இதற்கு முன்னால் சொன்னதெல்லாம் அழிச்சாச்சி என்பதுதான் நிலைப்பாடு.

    ஆனால், களிமிகு கணபதி போன்றவர்கள் தமிழின் தொன்மையை கேலி செய்யவோ அல்லது இழிவு படுத்தவோ இல்லை. ஆனால் தொன்மை என்பதற்காக மாறாமல் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டைத்தான் எதிர்க்கிறார்கள் என்று கருதுகிறேன். உதாரணமாக தனித்தமிழ்வாதிகள் தொன்மை என்பதற்காக சங்கத்தமிழிலேயே எழுத வேண்டும் என்று சொல்வதை இவர்கள் எதிர்க்கலாம். ஆனால் இந்துக்களில் பலரே தனித்மிழ்வாதிகளாகவும் இருக்கிறார்கள். ஆகையால் இந்துக்கள் என்றால் இதுதான் என்று வரையறுப்பதும் கடினமானது.

    தமிழின் தொன்மையோ அல்லது இந்துமதத்தின் தொன்மையோ அதன் நீட்சிக்கு காரணம் அல்ல. அந்தநீட்சியை சாதித்திருப்பது அதன் வளைந்துகொடுக்கும் தன்மை. (அதையும் கேலி செய்ய நீங்கள் தயார் என்றாலும்)

    தமிழ் இந்து தளத்தில் பரிணாமவியலை ஆதரித்து கட்டுரைகள் இருக்கின்றன. இந்துக்கள் யாருமே பரிணாமவியலை எதிர்ப்பதும் இல்லை. ஆனால், இந்துக்கள் எதிர்க்க வேண்டும் ஏனென்றால் அவர்களது புராதனமான புத்தகங்களில் பரிணமாவியலை பற்றி இல்லை என்று வாதிடுவது இந்துமதத்தையும் மற்ற ஆபிரஹாமிய மதங்களையும் ஒரே தரப்பட்டவையாக கருதி பேசும் அறியாமையிலிருந்து வருகிறது.

    எனிவே my argument is also closed.

  38. Avatar
    Kavya says:

    Argument s not closed when it s perverted.

    So, it continues.

    என்ன பெருமை ? என்ன சிறுமை ? என்பதுதான் கேள்வி. எவனோ ஒருவன் எங்கேயோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் எழுதியதைப் பற்றி நீங்கள் ஏன் பெருமையடைய வேண்டும்? அல்லது சிறுமையடைய வேண்டும்? இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல ஏன் முடியவில்லை தங்கமணி ? கிருத்துவத்துக்கும் இசுலாமியத்துக்கும் ஏன் போகவேண்டும் ? அவர்கள் இங்கு இல்லை. நாந்தான், எனக்குப் பதில் சொல்லுங்கள்.

    பெருமை அடையலாம். ஓகே அஃது என்ன பெருமை ?

    சிந்து சமவெளி நாகரிகத்தில் வரையப்பட்ட மதத்தை எடுத்துக்கொள்வதை நான் தப்பென்பதில்லை. ஆனால் பாலஸ்தீனத்தில் அரேபியாவில் வரையப்பட்ட மதத்தை தப்பென்று பக்கம் பக்கமாக கூச்சலிடும் நீங்கள் ஆப்கானியர்கள் கற்பனையில் உதித்த மதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதைச்சரியென்கிறீர்கள். போகட்டும். அதில் ஏன் பெருமை என்பதுதான் கேள்வி. சிறுமை என்றால் அதிலென்னச் சிறுமை? அதைச்சொல்லுங்கள்.

    மதத்தில் அடிப்படையே தெரியா அப்பாவித்தனமிது. மதத்தால் பெருமையோ சிறுமையோ அடைந்தால், அது மெட்டீரியலிசம். ஆன்மிகமன்று. பெருமை சிறுமை இது போன்ற பலவுணர்வுகளைக் கடக்க வைப்பதே மதமாகும். மலர்மன்னர் பெருமையடைகிறார் தொன்மையைச் சொல்லி என்றால் அஃது அவருக்குச் சரி. ஏனெனில் மதத்தை அரசியலாக்கி இன்புறுவோருக்கு எல்லாமே மெட்டீரியலிசம்தான்.

    விட்டால் கோயிலுக்குள்ளேயே பிரியாணிக்கடை போட்டுவிடும் ஆட்கள் எத்தனை பேர்! மதம் அரசியலாகும் போது அண்ணன் என்னடா? தம்பி என்னடா? கிடைத்ததைப் பொறுக்கு. எடு. கொண்டாடு.

    களிமிகு கணபதி செய்தாரா என்பதை விடுங்கள். 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தமிழா சமசுகிருதமா? என்ற போராட்டம் யாருக்கும் யாருக்கும்? தனித்தமிழ் இயக்கத்தைத் தோன்றி அதைப்போற்றியவர்களை எதிர்த்துப் பகடி பண்ணியவர்கள் யார் ? ‘ஹி’ என்ற எழுத்து தமிழா? என்றவரை எப்படி கிண்டல் செய்கிறார்கள் தமிழ் ஹிந்து . காமில் இருநாட்களுக்கு முன் ஒருவர் எழுதியதைப் பாருங்கள். முட்டாள், அறிவிலி என்றெல்லாம் அர்ச்சனைகள் கேட்டவரின் மேல். தமிழில் அர்ச்சனையை எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போனவன் எவன்? பார்ப்பனரல்லாத அர்ச்சகர் தவறு என்று கோர்ட்டுக்குப் போனவன் எவன்? இவர்கள் ஏன் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் ? ஆப்கானிஸ்தானத்துக்கும், பாகிஸ்தானுக்கும், உ.பிக்கும் (கங்கைச்சமவெளி) போக வேண்டியதானே ? தமிழ் நாட்டில் தமிழ்தானே பேசுவார்கள். பிடிக்கவில்லையெனறால் ஓடிவிடலாமே ? சேட்டு தமிழ் பேசுறான். சேட்டுப்பெண்ணைத் தமிழிலேயே பேசி லவ் பண்ணுகிறார்கள் நம்ம பசங்க. சேட்டுவும் சேட்டுப்பெண்ணும் பெட்டர். இந்தக் கோர்ட்டுக்கு போனவர்களைக் காட்டிலும் !

    முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க வேண்டாம். தமிழகத்தில் களிமிகு கணபதி சார்ந்த கூட்டத்திற்கும் மற்றவர்களுக்கும் என்றுமே சண்டையுண்டு. இன்று நாம் வாழ்வதால், இன்றைய சிதம்பரம் சண்டைகள் நமக்குத் தெரிகின்றன. 60 ஆண்டுத் தமிழக வரலாற்றில் நடக்கும் போராட்டம் திராவிட தலைவர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமட்டுமன்றி. தமிழறிஞர்களுக்கும் தூய தமிழைக் கிண்டல் செய்வோருக்குமே!

    சங்கத்தமிழ் எவருமே எழுத வேண்டாம். ஆனால் தமிழின் அடிப்படை உருவத்தைச் சிதைக்க வேண்டாம் பிறமொழிச் சொற்களை ஒரேயடியாகக் கலந்து என்றுதான் சொல்கிறார்கள். கால்டுவெல், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில்’, தமிழ் மக்கள் தொன்றுதொட்டு பேச்சு மொழியையும் எழுத்து மொழியையும் வெவ்வேறாகத் தனிப்படுத்தியே பயன்படுத்தி வந்தார்கள் என்கிறார்

  39. Avatar
    GovindGocha says:

    அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்பது தாண்டி, எல்லாரும் நிறுத்தினாலும் நான் நிறுத்தமாட்டேன் என்று காவ்யா முடிவு கட்டி விட்டார். :)

    1. Avatar
      Kavya says:

      //ஒருவர் தொன்மை என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.// என்கிறார் தங்கமணி.

      கோவிந்தாவிடம் கேட்கிறேன். அந்த பெருமை என்றால் என்ன ? ஏன் பெருமை ? எனக்கு அது மட்டும் தெரிந்தால் போதும்.

      நினைவிருக்கட்டும். நாம் இங்கு மதத்தைப் பற்றிப் பேசுகிறேன்.

  40. Avatar
    களிமிகு கணபதி says:

    //இஸ்லாமியர்களிடம் உள்ள குறையே அவர்கள் குர்ஆனை தெளிவாக விளங்காததுதான்.//

    படிக்கும் இஸ்லாமியர்களுக்கே விளங்காத வகையில் குர் ஆன் இருந்தால், அது இஸ்லாமியர்களின் குறையல்ல யுவர் ஆனர். :)

    .

  41. Avatar
    suvanappiriyan says:

    @களிமிகு கணபதி!

    //படிக்கும் இஸ்லாமியர்களுக்கே விளங்காத வகையில் குர் ஆன் இருந்தால், அது இஸ்லாமியர்களின் குறையல்ல யுவர் ஆனர். :)//

    மற்ற இந்து கிறித்தவ வேதங்களை விட குர்ஆன் படிக்கவும் புரிந்து கொள்ளவும் மிகவும் இலகுவானது. தமிழில் குர்ஆனை மொழி பெயர்த்ததே 60 ஆண்டுகளுக்கு முன்புதான். தனது வேதம் தன்னிடம் என்ன பேசுகிறது என்பதை தெரியாமலேயே அரபியில் ஒரு சடங்காகவே இத்தனை காலமும் ஓதி வந்திருக்கிறார்கள் முஸ்லிம்கள். இப்போதோ பல மொழி பெயர்ப்புகள் வந்து விட்டன. இனி நிலைமை மாறும்.

    @காவ்யா!
    //மூன்று மதங்களுமே விஞ்ஞானக்கொளகைகளை ஏற்றுக்கொள்ளவில்லை//

    தவறு. மற்ற இரண்டு வேதங்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவிலலை. ஆனால் குர்ஆன் நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு எந்த வகையிலும் எதிராக இல்லை. அப்படி ஒரு வசனத்தையும் உங்களால் காட்ட இயலாது. சூரியனும் நகர்கிறது, கோள்கள் அனைத்தும் வான வெளியில் நீந்துகின்றன, பின்னோக்கிச் செல்லும் இரவு, திருப்பித் தரும் வானம், விண்வெளிப்பயணத்தின் சாத்தியம், மனிதர்கள் பூமியில் மட்டுமே வாழ முடியும்,ஓரங்களில் குறைந்து வரும் பூமி, மலைகள் பூமிக்கு முளைகள், பெருவெடிப்புக் கொள்கையை பற்றி சொன்னது, இரு கடல்களுக்கிடையே தடுப்பு, புவிஈர்ப்பு சக்தியை பறை சாற்றியது, என்று எண்ணற்ற வசனங்களை மேலோட்டமாக சர்வ சாதாரணமாக குர்ஆன் சொல்லி செல்கிறது. இதற்கு முன்னால் வந்த வேதங்களான பைபிள், தோரா, ருக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்களையும் உண்மைப்படுத்துகிறது.

    ‘அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.’
    -குர்ஆன் 4:82

    ‘இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு, மற்றும் அவரது வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோசேவுக்கும் ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்.அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். இறைவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்’ என்று கூறுவர்.
    -குர்ஆன் 2:136

    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’
    -குர்ஆன் 14:4

    1. Avatar
      Kavya says:

      ////மூன்று மதங்களுமே விஞ்ஞானக்கொளகைகளை ஏற்றுக்கொள்ளவில்லை// தவறு.//

      பொத்தாம் பொதுவாக சொன்னதாக நினைக்கவேண்டாம்.

      நான் சொல்வது:

      இசுலாமும் கிருத்துவமும் ஒரே மனுசன் ஒரே மனுசியிடமிருந்தே மனித வர்க்கம் தோன்றியது. அம்மனுசனையும் மனுசியையும் இறைவன் தன்னுருவில் நேரடியாகப் படைத்தார்.

      இந்துமதம் பெருமாள் கூர்ம அவதாரம் எடுத்து பூமியைத் தாங்கினார். உலகை மூன்றடிகளால் அளந்தார்; இதுபோன்ற நிறைய.

      இவற்றை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆங்காங்கே மதங்கள் சொல்வது விஞ்ஞானத்தோடு ஒத்துப்போகலாம். அது போக முக்கிய விடயங்கள் like creationism ஒத்துப்போகா

  42. Avatar
    vedamgopal says:

    (Please explain. Vedam Gopal, WHY DO YOU FEEL PROUD ABOUT THE RISHIS WHO WERE AFGANS AND PAKISTANIS AND WHO WROTE THAT WHICH YOU SPORT AS A PREFIX TO YOUR NAME, THE VEDAS )

    தாயே காவ்யா என் தந்தையின் பெயர் வேதபூரீஸ்வரன் ஆனால் வேதம் ஐயர் என்றுதான் அழைப்பார்கள் எனவே வேதம் என்ற பிரிபிக்ஸ் இது இயற்கை. உங்களுடைய பிரிபிக்ஸ் என்ன என்று தெரியவில்லை. தம் முன்னோர்களை பற்றி ஒருவன் அவமான படுவானேயானால் அவனுக்கு அழிவு காலம் வந்துவிட்டது என்று அர்த்தம் என்று பெரியவரிகள் சொல்லுவார்கள். நாங்கள் சொல்லுவதெல்லாம் பிரிபிக்ஸை யாரும் மாற்றமுடியாது மறைக்க முடியாது. அப்படித்தான் காவ்யா என்ற அழகான சமிஸ்கிரத பெயரை வைத்துக்கொண்டிருக்கீறிர்கள். மதம்மாறுவது உதாரணத்திற்கு காந்திபோன்ற பெயரை தன் பெயருடன் சேர்பது போன்ற அபிக்ஸ் தான் நாட்டின் பிரச்சனையே. இப்படிதான் அன்யர் ஒருவர் காந்தி என்ற பெயருடன் இன்று நாட்டை சூரையாடிக்கொண்டிருக்கிறார்.

    1. Avatar
      Kavya says:

      கோபால்ஜி!

      நான் எழுதியது மெட்டஃபாரிக்கலி. எழுதிய வண்ணம் எடுத்துப் பதில் சொல்லக்கூடாது.

      உங்கள் தகப்பனார் பெயரிலிருந்து பிரிஃபிக்ஸ் வருகிறது என்று எல்லாத் தமிழர்களுக்கும் தெரியும். ஏனா, இந்திக்கார்கள் தகப்பனாரில் பெயரிலிருந்து இனிசியலையோ பிரிஃபிக்ஸையோ எடுக்க மாட்டார்கள். குலத்துவழிவரும் சஃபிக்ஸ்தான்.

      நான் கேட்டதற்கு நீங்கள் எழுதிய பதில் பொருந்தாது. இந்துமதத்தை வரைந்தோர் எனக்கருதப்படுபவர்கள் இருடிகள் (ரிஷிகள்) அவர்களை மதிப்பது வேறு. பெருமைப்படுவது வேறு. மேலும், அவர்கள் உங்கள் முன்னோர்கள் அல்ல. அவர்கள் ஆப்கானியர்கள், பாகிஸ்தானியர்கள், பின்னர் வடக்கில் கங்கைச்சமவெளியர்கள்.

      மதம் என்பது எவராலும் எழுதப்பட்டு, சொல்லப்பட்டு, எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழப்படலாம். அஃது இங்கு விவாதத்தில் இல்லை. தொன்மையில் எழுதப்பட்டது. அல்லது அண்மையில் எழுதபபட்டது என்றெல்லாமிருப்பதில் என்ன பெருமை ? என்ன சிறுமை ? மதம் என்ன வீட்டுச்சரக்கா அல்லது கடைச்சரக்கா அல்லது பரீட்சையிலெடுத்த நூற்றுக்கு நூறு மார்க்கா காட்டிக் கொண்டலைய ?

      உங்களைக் கோபால், கோபால் என்று கூப்பிட்டால் விவேக் மொம்பிளை வேசம்போட்டு இன்னொரு காமெடி நடிகரை ஏமாற்றுவது போல அசிங்கமா ஃபீலிங் வரது. எனவே கோபால்ஜி

      கோபால்ஜி. உங்கள் பயோ டாட்டேவை விட்டுவிட்டு மதத்தை வைத்துப் பெருமைப்படலாமா ? என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

  43. Avatar
    vedamgopal says:

    நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. தங்களது பிரிபிக்ஸ் என்ன? காவ்யா என்ற பேர் சமிஸ்கிரத பெயரா இல்லையா ? பிரச்சனைகளே அபிக்ஸால் வருவதுதானே ? எனது முழுபெயர் வேதம் கோபால் வெறும் உங்களைப்போல் காவ்யா அல்ல. இந்த அவிக்ஸான ஐயர் எனக்கு தேவை இல்லை. நான் என்னை ஒரு தலித் என அறிவிக்கிறேன்? எனக்கு தலீத்துகளுக்கு அளிக்கும் சலுகைகளை நமது அரசாங்கம் அளிக்குமா ?

    மேலும் யாரைகேட்டு எனது பெயருடன் ஜி என்று சேர்தீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை ?

    மேலும் இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல அது ஒரு மணித நேயம் – தர்மம்-தர்மம்-தர்மம் உண்மை- உண்மை- உண்மை என்ற ஒரு ஆராய்ச்சி செய்யும் இனம். நான் யார்? நான் யார் ? கடவுள் இருக்கிறாரா? இல்லையா? நாம் ஏன் பிறக்கிறோம் ? ஏன் சாகிறோம் ? இப்படி இயற்கை மட்டும் யாரையும் பொருட்படுத்தாது தன் செயலை பல்லாயிரம் கோடி வருடங்களாக ஒரு ஒழுங்கு வரிசையில் செய்து கொண்டிருப்பது ஏன் ? என்று விடையை தேடி அலையும் ஒரு கூட்டம் தான் இன்று உலகத்தாரால் இந்துகள் என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தான் இன்றுவரையில் மெய்ஞானமே விஞ்ஞானம் என்பதை உலகத்தார்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார்கள்

    1. Avatar
      Kavya says:

      Irrelevant response.

      No personal exchanges nor bio data here pl.

      The moot qn is: How can the past be a thing of pride in a religion ?

      Ur religion may say a 1000 things as u hav explained here. They r not relevant to the issue under hot debate here.

      U may tell why should the ancient and unknown past of your religion is held up by many Hindus as an important matter of pride ? Why and what? Why your friend MM is so proud of the past ?

      Pl attempt an answer.

  44. Avatar
    vedamgopal says:

    தாயே காவ்வியா அந்தரு சைக்கிள்ளே பெல்லை முந்தக பெட்டுவாடு அதுவே சௌகர்யங்க உண்டதி. அதே புத்திவாடு சேஸ்ததி. அதிகாது நேனு வினகாலே பெட்டுகொண்டே மாக்கு சௌகர்யங்க உன்னதி அன்டே நூவு வினகாலேயே பெட்டுகோ !!! ???? தொன்மை என்றும் முதுர்சிபெற்ற நாகரீகம் என்றும் பெருமை கொள்வதில் தவறு என்ன என்றால் அது என்ன பெருமை என்று திரும்ப கேட்கிறீர்கள். அப்படி சொல்லியே ஏமாற்றி வருவதாக கற்பனை செய்து கொண்டு ஒரு பதில் உரை. வேண்டும் என்றால் நீங்கள் மெயின் பாயிண்டை விடுத்து சமணம் பௌதம் சமிஸ்கிரதம் கிருஸ்து முஸ்லீம் என்று டீவியேட் பண்ணி பல கேள்விகளை எழுப்பலாம் அதற்கு பதில் சொன்னால் அதை ஒட்டி பல கேள்விகளை கேட்டால் பதில் தெரியாமல் எனது மெயின் பாயிண்ட் பதில் என்ன என்று மறுபடியும் முதல் கேள்வி. உங்களுக்கு மட்டும்தான் மற்றவரின் பர்சனல் பயோ டேடா பற்றி கேள்வி கேட்க உரிமை உண்டா ?

    1. Avatar
      Kavya says:

      திரு கோபால்

      ஆப் கைசே ஜனாப் ?

      வைதிக இந்துமதம் இருடிகளிலிருந்து வருகிறது. அவர்கள் சிந்துசமவெளியில்தான் தோன்றினார். பின்னர் அம்மதம் கங்கைச்சமவெளிக்குப்பரவியபோது, அங்குள்ள இருடிகள் சேர்ந்து அம்மதத்தை இன்னும்பல கோட்பாடுகளை எழுதினார். ஆனால் என்று தோன்றியது என்று சொல்லமுடியாத் தொன்மை என்று குறிப்ப்ட்டது சிந்து சமவெளி இருடிகளைப்பற்றியே. தமிழ்நாட்டில் நிலவும் கலவை மதம் (வைதீக + தொல் தமிழர் வழிபாடு) என்று தோன்றியதென்று சொல்லமுடியாத் தொன்மையன்று. மேலும், அது சிந்து சமவெளி வைதீக மதத்தைவிட இளையது. எனவே மலர்மன்னர் இக்கலவை மதத்தின் தொன்மையைப்பற்றிப் பேசவில்லை. வைதீக மதத்தின் தொன்மையைப்பற்றித்தான் இப்படிப்பேசி, அத்தொன்மை சிறப்பு வாய்ந்தது; அது எப்போது உதித்தது என்றது என்று தெரியாதனாலே.

      மேலே உள்ளதை ஒத்துக்கொள்கிறீர்களா ? உங்கள் தகப்பனார் பெயரில் உள்ள வேதம் என்பது சிந்து சமவெளியத்தான் காட்டுகிறது. வேதபுரீஸ்வரர் என்று சிவபெருமானைச்சொல்லும்போது, அவர் சிந்துசமவெளிக்கடவுள் என்றுதான் குறியீடாகிறது.

      இப்போது ‘பெருமை’க்கு வருவோம். உங்கள் வரிகளைப்பாருங்கள்: “தொன்மை என்றும் முதுர்சிபெற்ற நாகரீகம் என்றும் பெருமை கொள்வதில் தவறு என்ன என்றால் அது என்ன பெருமை என்று திரும்ப கேட்கிறீர்கள்.”

      முதிர்ச்சி பெற்ற நாகரிகம் என்று நீங்கள் குறிப்பிடுவது சிந்து சமவெளி நாகரிகமே. அதுதான் மலர்மன்னனின் இலக்கு. உங்களின் இலக்கு இங்கே. மறுக்க முடியுமா கோபால் ?

      நிற்க. அந்த நாகரிகம் முதிர்ச்சி பெற்றது இருடிகளால் மட்டுமா ? 24 / 7 சிந்து சமவெளி மக்கள் இருடிகளிடம் கதா கலாச்சேபம் கேட்டனரா ? கேட்டால் எப்படி வாழ்வது ? எனவே வீடுகள், மாளிகைகள், சேமிப்புக் கிடங்குகள், படகுகள், வெளி நாகரிகத்தோடு வணிகம், குழந்தை விளையாட்டு, மகளிர் அலங்காரம், கேளிக்கை, ஊர் நடுவில் பெரும் பொதுக்கிணறு (இவையெல்லாம் ஆங்கு தோண்டி கண்டுபிடிக்கப்பட்டன). இவையெல்லாம் சேர்ந்தபடியாலே அதை முதிர்ச்சி பெற்ற நாகரிகம். இருடிகள் மட்டுமல்ல. மக்களின் அறிவும் சேர்ந்த படைப்பது.

      மலர்மன்னன் ஆகா ஓகோ என்பது இருடிகளின் படைப்பை மட்டுமே குறிக்கிறது. முதிர்ச்சிபெற்ற நாகரிகம் என்று சொல்வது சரி. பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னர் ஒரு மக்கள் இப்படிப்பட்ட நாகரிகத்தைக் கொண்டிருந்தனர் என்று தெரியும் போது நமக்குத் தோன்றும் உணர்வென்ன? வியப்பு. கட்டுக்கடங்காத ஆச்சரியம். இது மட்டுமே.

      எப்படி இங்கே பெருமை வந்து சேர்ந்தது கோபால். சிந்து சமவெளி மக்களின் நாகரிகத்தைப்பற்றி உங்களுக்கு என்ன பெருமை கோபால். மக்களைவிட்டு இருடிகளைமட்டும் எடுத்தால், அவர்களைப்பற்றி உங்களுக்கு ஏன் பெருமை கோபால் ?

      அவர்கள் உங்களுக்கு ஒரு மதத்தைத்தந்தார்கள் ! அம்மதம் சிறந்தது. எமக்கு அதுவே நன்று. அது சொல்லபடி வாழ்வோம். இம்மண்ணுலக வாழ்வை நீத்த பின் அது காட்டிய தெய்வங்கள் வாழும் மேலுலகத்துக்குச் செல்வோம் என்றால் மட்டுமே சரி.

      இதில் என்ன பெருமை ? உங்களுக்கு காட்டப்பட்ட, உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதம் ‘என்றைக்குத் தோன்றியது என்று சொல்லவேயியுலாத் தொன்மை’ உடையது என்றால் சரி? ஆனால் அதனால் என்ன பெருமை ? ஏன்?

      ஒரே ஒரு பதில்தான் சாத்தியம். அதுதான் மலர்மன்னனின் பந்தாவில் பதுங்கிக்கிடக்கிறது. அது இதுவே:

      ??எங்கள் மதம் என்றுமே தோன்றியது என்று சொல்லமுடியாத் தொன்மை வாய்ந்தது. இசுலாம், கிருத்துவம் அப்படித் தொன்மை வாய்ந்த மதங்களல்ல. எங்கள் கடைக்கு வாருங்கள். எங்கள் சரக்கு தொன்மையால் சிறந்தது. உகந்தது., அவர்கள் சரக்குகள் போலி. உங்களைக்கெடுக்கும் //

      எனவே இஃது ஒரு இந்துமதப்பிரச்சாரம். பிறம்தங்களை இழிவுபடுத்திச் செய்யப்படும் பிரச்சாரம்.

      பெருமை ஒரு நெகட்டிவ் க்வாலிட்டி. அது செருக்குக்குக் கொண்டுபோய் விட்டு பின்னர் வெறியாக மாறும்.

      ஒரு மதம் பெருமை, செருக்கு, வெறி போன்ற தீக்குணங்களை அழித்து மக்களை நல்வழிப்படுத்தவே.

      இந்து மதம் அதைச்செய்யக்கூடாது என நினைப்பவரே என்னுடன் பெருமைப்பட்டால் என்ன தவறு என்று வாதிப்பார்.

      தங்கமணி, மலர்மன்னன், களிமிகு கணபது, இப்போது வேதம் கோபால், இந்து மதத்திற்கு எதிராகக் கிளம்பியிருக்கிறார்கள் என்று அவர்கள் வாதம், அல்லது பிடிவாதம் நமக்குக் காட்டுகிறது.

  45. Avatar
    Kavya says:

    Vedam Gopal took lessons to us on his religion to us. Let’s take some lesson to him on the same religion with an object to attempt to dispel some of the ignorance.

    Ur religion is primarily there to prepare people for the other world and for that, they need to do good deeds in their present lives. The Rishis of Sindhu valley, followed by their counterparts in Gangetic valley, then followed by their counterparts in ancient Tamilnadu – all insisted that we must annihilate our egos to qualify ourselves in our pursuit of reaching the other world which is our ultimate goal: விண்ணுலகம் புகுவது மண்ணவர் விதியே (நம்மாழ்வார்)

    With even a tiniest iota of ego, we cant go to our God and his Abode, the விண்ணுலகம்.

    The pride in the past is a manifestation of the obstacle called ego, although not as strong as many other kinds of manifestation, if it remains just an innocent pride. Yet, there lurks a risk in the quality of pride: it may lead to vanity, attachment of possession, evil passion like religious bigotry and hatred of other people.

    Therefore, be careful with the quality of pride. If one wanst to be a Hindu in the tradition of ancient Rishis, one should never allow the quality to come near one. There are innumerable stories in the puranas, ithikasas, and host of other scriptures, to endorse the above view.

  46. Avatar
    vedamgopal says:

    Present day Indians are the rigid fools who fail to acknowledge their own great past and keep bashing at their own and find satisfaction in this self bashing act. Hindus are confused bunch of people. They dont know what they want. Others are very clear about what they want (C&P)

  47. Avatar
    vedamgopal says:

    தொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்
    மனிதனாக பிறந்த ஒவ்வொருவறுக்கும் பல அடையாளங்கள் வாழ்கையில் தேவைப்படுகிறது இந்த அடையாளங்களே அவனது வாழ்கையின் பல பரிமாணங்களையும் நிர்மாணிக்கிறது. பல அடையாளங்கள் காலப்போக்கில் ஒருவரது வெற்றி தோல்விகளை வைத்து மாறும் தன்மை கொண்டது. ஆனால் சில அடையாளங்கள் என்றுமே மாறாது நிலைத்துதிருப்பவை. (அவை பரம்பரை பரம்பரையாக தொன்றுதொட்டு வரும் பண்பாடுகளான மொழி இனம் மதம் தாய்நாடு கலாசாரம் ஆண்மிகம் பாரம்பரியங்கள் ஆகும். மேலும் இவை ஒரு தாய்மையின் அடையாளங்களாகவே போற்றப்பட்டு வந்தன. எனவே இப்படிப்பட்ட அடையாளங்களை ஒருவன் மாற்றினால் அவனை சமுதாயம் மதிப்பதில்லை. இப்படிமாற்றமுடியாத மாற்றக்கூடாத அடையாளங்களை மாற்றி மாற்றி கூறிக்கொண்டு வீண் பேச்சு பேசி ஊரையும் தன்னையும் ஏமாற்றிக்கொண்டு திரிகின்றனர் பெரும்பாலான பகுத்தறிவு தமிழர்கள்.

  48. Avatar
    vedamgopal says:

    பாரத்ததில் பிறந்த ஒவ்வொருவனும் நான் ஒரு இந்தியன் என்ற அடையாளம் எல்லாவற்றிலும் முதன்மையானது. இந்த அடையாளம் தேவையில்லை என்றுகூறிகொண்டு இங்கேயே ஜிவனம் செய்பவர்கள் தேசதுரோகிகளே. இந்த குறை பெரும்பாலான சிறுபான்மையயிரிடமும் போலிமதசார்பின்மை பேசுபவரிடமும் பகுத்தறிவு வியாதிகளிடமும் கண்கூடாக காணமுடிகிறது. இவர்கள் நம்நாட்டை கூறுபோட்டு அன்னியர்க்கு விற்ககூட தயங்காத கேவலமான மிருக ஜென்மங்கள்.

  49. Avatar
    vedamgopal says:

    இரண்டாவது அடையாளம் ஒருவறது தாய்மதம். தாய் மதத்தை மாற்றுபவன் தன் தாயையே விலைபேச துணிந்தவன் ஆவான். இவ்வாறுமாறுபவன் தன்மானம் இழுந்து அடைகலம் புகுந்த மதத்தில் சிறுமைபடுகிறான். பல்லாயிரம் வருடங்களாக பாரதத்தில் வேதமரபை ஒட்டிய வாழ்கை நெறிமுறைகளையே மக்கள் பின்பற்றி வந்தார்கள். உலக நாகரிகங்களிலேயே வேதகால நாகரிகம்தான் மிகபழைமையானதும் முதன்மையானதும் ஆகும். உலகின் மற்ற நாகரிகவளர்சியின் முன்னோடி வேத நாகரிகமே. இதன் தாக்கத்தை எல்லா நாகரிகத்திலும் கண்கூட காணலாம். இடையே இங்கேயே வேதமதத்ததை ஒட்டி சில சில மாற்றங்களுடன் தோன்றிய புத்த ஜைன மதங்களால் வேதமதத்தை வெற்றிகொள்ளமுடியவில்லை. பின் நாட்களில் படைஎடுத்து வந்த மிலேச மதங்களாலும் வெற்றி கொள்ள முடியவில்லை. காரணம் வேதமத்தின் உன்னதமான மனிதநேய கொள்கைகளும் சுதந்திரமான இறைகொள்கையுமே ஆகும்.

  50. Avatar
    vedamgopal says:

    எல்லாம்வல்ல இறைவன் என்பவன் ஒருவனே அவன் உயிர் உள்ள ஆறறிவு படைத்தமனிதன் ஐந்தறிவு படைத்த விலங்கு உயிர் இல்லாத ஜட திரவ வாயு போன்ற எல்லா உலகபடைப்புகளிலும் வாசம் செய்கின்றான். அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. கடவுளின் படைப்பை உருமாற்றம் செய்யலாம் அன்றி ஒருவராலும் அழிக்கவும் ஆக்கவும் முடியாது. எந்த நல்ல கெட்ட செய்கையின் எதிர்வினை பலனை இப்பிறவியிலேயே அனுபவிப்பான். எஞ்சியவை அவன் சந்ததியையும் அவனது மறுபிறவியிலும் அவனை தொடர்ந்து தாக்கவோ பலன் அளிக்கவோ செய்யும்.
    நான் கடவுளை நம்புகிறேன் ! கடவுள் என்னும் ஆண்மா என்னிடம் வாசம் செய்கிறார் !! நான்தான் கடவுள் !!! இப்படி நம்முள் வாசம் செய்யும் கடவுள் என்ற ஆண்மாவை உணர்வதே இந்து ஆன்மிகம். இந்த உணர்வை பெற இந்துமதம் பல வழிகளை சுட்டிகாட்டியுள்ளது. இந்த உணர்வை பெற்று முக்தி அடைந்தவர்கள் மிகமிக குறைவு. எப்படி காற்றை நாம் உணரலாமே அன்றி கண்ணால் கானமுடியாதோ கடவுளையும் ஒருவன் உணரலாமே அன்றி காணமுடியாது. அப்படி ஆண்மாவை உணர்ந்தவர்களின் சக்தி அபரிமிதமானது.

  51. Avatar
    vedamgopal says:

    கடவுள் இருப்பிடத்தை விஞ்ஞானம் மென்ஞானம் ழூலம் நீருப்பிக்கலாம் என்றால் அவர் சக்திவாய்ந்த கடவுளாக இருக்கமுடியாது. மாதா பிதா குரு தெய்வம் என்று கடவுளை நான்காம் இடத்தில் வைக்கிறதது இந்து மதம். அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு தூண்களை அஸ்திவாரமாக கொண்டள்ளது இந்து மதம். ஆய கலைகள் 64 கையும் அலசி ஆராய்ந்து ஒரு வழிமுறை வகுத்துள்ளது இந்து மதம். மென்ஞாகமே விஞ்ஞானம் என்று இன்று வரை நிரூபித்துவருவது இந்து மதம்.
    தொல்காப்பியர் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்த எந்த புலவர்களும் இந்துமதம்வேறு தமிழர்மதம்வேறு என்று கூறவில்லை. பெரியாரின்வழிவந்த பிதற்றல் கூட்டத்தின் வழிநடப்பவர் என்றால் உண்மையை நம்ப மறுக்கும் உங்களை தெளியவைக்க யாராலும்முடியாது ?

  52. Avatar
    vedamgopal says:

    ஆனால் மிலேச மதங்கள் இருப்பதோ ஒரு பிறவிதான் எனவே உலக சன்லாபங்களை இப்பொழுதே அனுபவிக்கவேண்டும். அதற்கான எல்லா அத்துமீறல்களையும் அடுத்தவர் நலத்தை கெடுக்கும் வகையில் செய்ய புனித நூலில் வழி செய்யப்பட்டுள்ளது. அப்படி செய்தால்தான் மேலும் சொர்கத்தில் சன்லாபத்துடன் சயன வாழ்கை அனுபவிக்கலாம். இவை இறைதூதுவர்களால் போதிக்கப்பட்டது என எழுதிவைத்து அதன்படி நடக்கிறார்கள். இதை நிறைவேற்றுவது எப்படி என்று இந்த துற்போதனைகள்தான் முக்கால் பங்கு புனித நூலில் கூறப்பட்டுள்ளது. எஞ்சி சில நல்ல போதனைகள் எல்லாம் இந்திய மதங்களின் போதனைகளை காப்பியடித்தும் சரியாக புரிந்து கொள்ளாமலும் சில மாற்றங்களுடன் எழுதிவைத்துள்ளார்கள் என்பதே எதார்த உண்மை. இந்த குழம்பிய குட்டையில் குளிக்க பணம் பதவி பட்டம் என்ற ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பல அப்பாவி இந்துக்கள் மதம் மாறி சுய அடையாளங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள். இந்து பெண்களின் அடையாளங்களான கழுத்தில் தாலி சக்திவாய்ந்த குங்குமம் பொட்டு தலைநிறைய பூ காலில் மெட்டி இவற்றுடன் சுமங்கலிகளை எதிர்கொண்டு சென்றால் காரியசித்தி நிச்சயம் என்பது இந்துகளின் நம்பிக்கை. ஆனால் மதமாறிய இந்து பெண்களை கூட்டமாக ஞாயிறுகிழமைகளில் இந்த அடையாளங்கள் எதுவும் இல்லாமல் பார்கையில் வேதனையாக உள்ளது. இவற்றை துறந்தவர்கள் ஏன் புடவையை மாற்றி கவுன் மிடி போன்ற அன்னிய மத ஆடைகளை அணியவில்லை ? ஏதாவது துரத்தும் அல்லது எதையாவது எரிவார்கள் என்ற பயமா ? பிறந்தநாளின் பொழுது பெரியவர்களை வணங்கி கோவிலுக்கு சென்று அவர்கள் நட்சத்திரத்தின் பேரில் அர்சனை செய்வது இந்து வழக்கம். ஆனால் இன்று தன் பெயரையே கேக்கில் எழுதி அதை கத்தியால் வெட்டி ஏற்றிய மெழுகுவத்தியை ஊதி அணைப்பது எவ்வளவு அபசகுனமானது என்பதை உணராமலே விழா கொண்டாடுகிறார்கள். அம்மா அப்பாவை மம்மி தாடி என்று பெருமையாக அழைக்கிறார்கள். மம்மி என்றால் செத்த பிணத்தை போட்டுமுடும் ஒரு வழக்கம். டாடி என்றால் பல அர்தங்களை அகராதி சொல்கிறது. மறைமுகமாக இது ஒரு மாமாபயல் என்றே அர்தம் கொள்ளவேண்டியுள்ளது.

  53. Avatar
    விருட்சம் says:

    @வேதம் கோபால்
    காய்வாவின் காவ்ய படைப்புக்கு ‘ஜோ’ரா ஒரு தபா கை தட்டலாம். அதை விட்டுட்டு இப்படி கருத்து மேல கருத்து சொல்லி உங்கள் பொன்னான நேரத்தை ஏன் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் ஒரு கட்டுரையே எழுதி இருக்கலாம்.

    1. Avatar
      Kavya says:

      பொறுத்தமாகச் சொன்னீர்கள். நன்றி விருச்சம். வேதம் கோபால் ஒரு கட்டுரை வழியாக இந்துத்வ வாதிகளின் கொள்கைகளைத் திண்ணை வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம். அவர் எழுதியது அந்த ஐடியாலஜியின் அடிப்படைக் கொள்கைகளாகும். அதாவது மத அரசியல். மதத்தை வைத்து ஒரு நாட்டைத் தங்களதாக பிடிக்கவேண்டும். “அவர்கள் உண்மையில்லை; நாங்களே உண்மை!” யென்பதெல்லாம் அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சு. அல்லது அறிக்கைப் போர்.

      நான் எழுதிக்கொண்டிருப்பதே இந்து மதத்தைப் பற்றியது. தனியாக ஒரு கட்டுரை வரைந்து திண்ணைக்கு அனுப்பலாமென இருக்கிறேன். அதன் தலைப்பு இவ்வாறாக இருக்கும்: //இந்துத்த்வாவினரால் கொல்லப்படும் இந்துமதம்.// அதை திண்ணைப் போடவில்லையென்றால், பின்னூட்டமாக போடுகிறேன்.

      கோபால் சார், நீண்ட விளக்கங்களுக்கு நன்றி. என்றாவது ஒருநாள் அரசியலை விட்டுவிட்டு ஆன்மிகத்தை நல்கும் இந்துமதத்துக்குத் திரும்புவீர்கள் என நம்பி இப்போது முடிக்கிறேன்.

      Life is short. But better late than never.

  54. Avatar
    Soundar Thambi says:

    Yenna kodumai ! Aarambathil ulla ‘Manidha neyam& Aanma neyam’ nirkaamal iruthil irundha ‘Thonmai’ adiga neramum ulaipum petru vittadhu!! Solliyavar yaarayinum ; sonnadhil nalladhai yeduthuk kondu selvomae…!!!

Leave a Reply to shylapathy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *