தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51

ரேவதி மணியன்

Spread the love

  
இந்த வாரம் बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) அதாவது சொந்தபந்தங்களை சமஸ்கிருதத்தில் எப்படிக் கூறவேண்டும் என்று பார்ப்போம். கீழே உள்ள வரைபடத்தை கவனிக்கவும்.

 

 

 

 

 

 

 

 

 

नारायणः गोविन्दस्य गौतम्याः च पुत्रः।

nārāyaṇaḥ govindasya gautamyāḥ ca putraḥ |

நாராயணன் கோவிந்தன் மற்றும் கௌதமியின் மகன்.

 

लता नरसिंहस्य गिरिजाम्बायाः च पुत्री।

latā narasiṁhasya girijāmbāyāḥ ca putrī|

லதா  நரசிம்மன் மற்றும் கிரிஜாம்பாளுடைய மகள்.

 

नारायणः केशवस्य सुमायाः च पिता।

nārāyaṇaḥ keśavasya sumāyāḥ ca pitā|

நாராயணன் கேசவன் மற்றும் சுமாவினுடைய அப்பா.

 

केशवः गोविन्दस्य गौतम्याः च पौत्रः।

keśavaḥ govindasya gautamyāḥ ca pautraḥ |

கேசவன் கோவிந்தன் மற்றும் கௌதமியின் பௌத்திரன் (மகனுடைய மகன்).

 

सुमा गोविन्दस्य गौतम्याः च पौत्री।

sumā govindasya gautamyāḥ ca pautrī |

சுமா கோவிந்தன் மற்றும் கௌதமியின் பௌத்ரீ (மகனுடைய மகள்).

 

केशवः नरसिंहस्य गिरिजाम्बायाः च दौहित्रः।

keśavaḥ narasiṁhasya girijāmbāyāḥ ca dauhitraḥ |

கேசவன் நரசிம்மன் மற்றும் கிரிஜாம்பாளுடைய தௌஹித்ரன் ( மகளுடைய மகன்).

 

सुमा नरसिंहस्य गिरिजाम्बायाः च दौहित्री।

sumā narasiṁhasya girijāmbāyāḥ ca dauhitrī |

சுமா நரசிம்மன் மற்றும் கிரிஜாம்பாளுடைய தௌஹித்ரீ(மகளுடைய மகள்)

 

गोविन्दः केशवस्य सुमायाः च पितामह्ः।

govindaḥ keśavasya sumāyāḥ ca pitāmahḥ |

கோவிந்தன் கேசவன் மற்றும் சுமாவின் தாத்தா.( அப்பாவின் அப்பா).

 

गौतमी केशवस्य सुमायाः च पितामही।

gautamī keśavasya sumāyāḥ ca pitāmahī |

கௌதமி கேசவன் மற்றும் சுமாவின் பாட்டி (அப்பாவின் அம்மா).

 

नरसिंहः केशवस्य सुमायाः च मातामहः।

narasiṁhaḥ keśavasya sumāyāḥ ca mātāmahaḥ |

நரசிம்மன் கேசவன் மற்றும் சுமாவினுடைய தாத்தா (அம்மாவின் அப்பா).

 

गिरिजाम्बा केशवस्य सुमायाः च मातामही।

girijāmbā keśavasya sumāyāḥ ca mātāmahī |

கிரிஜாம்பாள் கேசவன் மற்றும் சுமாவினுடைய பாட்டி (அம்மாவின் அம்மா)

 

नारायणः नरसिंहस्य गिरिजाम्बायाः च जामाता।

nārāyaṇaḥ narasiṁhasya girijāmbāyāḥ ca jāmātā |

நாராயணன் நரசிம்மன் மற்றும் கிரிஜாம்பாளுடைய மருமகன்.

 

लता गोविन्दस्य गौतम्याः च स्नुषा ( पुत्रस्य पत्नी)।

latā govindasya gautamyāḥ ca snuṣā  (putrasya patnī)|

லதா கோவிந்தன் மற்றும் கௌதமியுடைய மருமகள்.

 

गोविन्दः लतायाः श्वशुरः। गौतमी लतायाः श्वश्रूः।

govindaḥ latāyāḥ śvaśuraḥ | gautamī latāyāḥ śvaśrūḥ |

கோவிந்தன் லதாவினுடைய மாமனார். கௌதமி லதாவினுடைய மாமியார்.

 

नरसिंहः नारायणस्य श्वशुरः। गिरिजाम्बा नारायणस्य श्वश्रूः।

narasiṁhaḥ nārāyaṇasya śvaśuraḥ | girijāmbā nārāyaṇasya śvaśrūḥ |

நரசிம்மன் நாராயணனின் மாமனார். கிரிஜாம்பாள் நாராயணனின் மாமியார்.

एतानि वाक्यानि पठतु –(etāni vākyāni paṭhatu )

கீழேயுள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும்.

उमानाथः वित्तकोषे अधिकारी। तस्य पिता वीरभद्रः माता इन्दिरा। उमानाथः शालिनीं परिणीतवान्। शालिन्याः पिता जगदीशः माता पुष्पा। उमानाथस्य पुत्री सुधा पुत्रः प्रभाकरः।

umānāthaḥ vittakoṣe adhikārī| tasya pitā vīrabhadraḥ mātā indirā| umānāthaḥ śālinīṁ pariṇītavān| śālinyāḥ pitā jagadīśaḥ mātā puṣpā| umānāthasya putrī sudhā putraḥ prabhākaraḥ |

உமாநாத் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். அவருடைய அப்பா வீரபத்திரன், அம்மா இந்திரா. உமாநாத் ஷாலினியை திருமணம் செய்துகொண்டார். ஷாலினியின் தந்தை ஜகதீசன், அம்மா புஷ்பா. உமாநாத்தின்  மகள் சுதா, மகன் பிரபாகரன்.

 

रिक्तस्थलानि उचितैः शब्दैः पूरयतु।(riktasthalāni ucitaiḥ śabdaiḥ pūrayatu|)

கோடிட்ட இடங்களை சரியான வார்த்தைகளால் நிரப்பவும்.

 

१. उमानाथः वीरभद्रस्य —————–। (umānāthaḥ vīrabhadrasya —————– |)

உமாநாத் வீரபத்திரருடைய  ——————- !

 

२. उमानाथः प्रभाकरस्य —————। ( umānāthaḥ prabhākarasya ————— | )

உமாநாத் பிரபாகரனுடைய ————————- !

 

३. प्रभाकरः वीरभद्रस्य ——————-।( prabhākaraḥ vīrabhadrasya ——————- )

பிரபாகரன் வீரபத்திரருடைய ———————— !

 

४.  ————–  —————- ———— पितामहः! ( ———-  ———–  —————- pitāmahaḥ)

————–  ——————  —————- தாத்தா. (அப்பாவின் அப்பா)

 

५.  ———–  ————– —————–  दौहित्रः! ( ————–  ——-  ———-  dauhitraḥ!)

——–   ——- ——   —————- தௌஹித்ரன். (மகளுடைய மகன்)

 

६. ————- ————–  ———–  मातामहः! (———–  ——— ———–  mātāmahaḥ !)

—————-   ———-  ———– தாத்தா. (அம்மாவின் அப்பா)

 

அடுத்த வாரம் மேலும் சில बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) பற்றித் தெரிந்துகொள்வோம்.

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51 pdf file

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்மாதிரிகள்

Leave a Comment

Archives