சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54

Spread the love

 
  

samaskritam kaRRukkoLvOm 54

இந்த வாரம் कीदृश (kīdṛśa) , ईदृश (īdṛśa), तादृश (tādṛśa) அதாவது எதுபோன்ற, இதுபோன்ற மற்றும் அதுபோன்ற ஆகிய சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கீழே பொம்மைக் கடைக்காரருக்கும் ரமா என்ற சிறுமிக்கும் நடக்கும் உரையாடல் உள்ளது. உரையாடலை உரத்துப் படிக்கவும்.

आपणिकः – भवती किम् इच्छति |

āpaṇikaḥ – bhavatī kim icchati |

கடைக்காரர் – உங்களுக்கு என்ன வேண்டும் ?

रमा – अहं पाञ्चालिकाम् इच्छामि।

ramā – ahaṁ pāñcālikām icchāmi |

ரமா – எனக்கு பொம்மை வேண்டும்.

आपणिकः – कीदृशपाञ्चालिकाम् इच्छति|

āpaṇikaḥ – kīdṛśapāñcālikām icchati |

கடைக்காரர் – எதுபோன்ற பொம்மையை விரும்புகிறீர் ?

रमा – पश्यतु, ईदृशपाञ्चालिकाम् इच्छामि। अस्ति वा |

ramā – paśyatu, īdṛśapāñcālikām icchāmi, asti vā |

ரமா – பாருங்கள், இதுபோன்ற பொம்மையை விரும்புறேன். இருக்கிறதா?

आपणिकः – अस्ति, परन्तु तादृशपाञ्चालिकायाः मूल्यं २० रूपुकाणि |

āpaṇikaḥ – asti, parantu tādṛśapāñcālikāyāḥ mūlyaṁ 20 rūpuakāṇi |

கடைக்காரர் – இருக்கிறது. ஆனால் அதுபோன்ற பொம்மையின் விலை ரூ. 20.

रमा – दर्शयतु भोः| (आपणिकः दर्शयति) किं भोः। मम सखी अपि ह्यः ईदृशपाञ्चालिकाम् एव क्रीतवती। तस्याः मूल्यं तु १० रूप्यकाणि एव |

ramā – darśayatu bhoḥ | (āpaṇikaḥ darśayati) kiṁ bhoḥ| mama sakhī api hyaḥ

īdṛśapāñcālikām eva krītavatī | tasyāḥ mūlyaṁ tu 10 rūpyakāṇi eva |

ரமா – பொம்மையைக் காட்டுங்கள் சார். (கடைக்காரர் காட்டுகிறார்) என்னுடைய தோழி கூட நேற்று இதுபோன்ற பொம்மையைத்தான் வாங்கினாள். அதனுடைய விலை ரூ. 10 தான்.

आपणिकः – प्रायः सा पाञ्चालिका ईदृशपाञ्चालिका न स्यात्|

āpaṇikaḥ – prāyaḥ sā pāñcālikā īdṛśapāñcālikā na syāt |

கடைக்காரர் – அந்த பொம்மை இதுபோன்ற பொம்மையாக இருக்காது என்று நினைக்கிறேன்.

रमा – ईदृशपाञ्चालिका एव भोः। अहं सम्यक् जानामि |

ramā – īdṛśapāñcālikā eva bhoḥ | ahaṁ samyak jānāmi |

ரமா – இதுபோன்ற பொம்மைதான். எனக்கு நன்றாகத் தெரியும்.

आपणिकः – तर्हि पञ्चदश रूप्यकाणि ददातु। नयतु |

āpaṇikaḥ – tarhi pañcadaśa rūpyakāṇi dadātu | nayatu |

கடைக்காரர் – அப்படியானால் பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்.

रमा – न … न। पञ्चदश रूप्यकाणि अधिकानि। अह्ं तु दश रूप्यकाणि ददामि |

ramā – na na | pañcadaśa rūpyakāṇi adhikāni | ahṁ tu daśa rūpyakāṇi dadāmi |

ரமா – இல்லை, இல்லை. பதினைந்து ரூபாய் அதிகம். நான் பத்து ரூபாய் தருகிறேன்.
आपणिकः – भवतु |पाञ्चालिकां स्वीकरोतु।

āpaṇikaḥ – bhavatu | svīkarotu |

கடைக்காரர் – சரி, பொம்மையை வாங்கிக்கொள்.
विशेषसूचना (viśeṣasūcanā ) முக்கியக்குறிப்பு :

ईदृशः स्यूतः / ईदृशस्यूतः (īdṛśaḥ syūtaḥ / īdṛśasyūtḥ )

ईदृशी घटी / ईदृशघटी (īdṛśī ghaṭī / īdṛśaghaṭī )

ईदृशं पुस्तकम् / ईदृशपुस्तकम् (īdṛśaṁ pustakam / īdṛśapustakam )

மேலே உள்ள வார்த்தைகளை கவனிக்கவும்.

स्यूतः என்பது अकारान्तः पुंल्लिङ्गः (akārāntaḥ puṁlliṅgaḥ) அதாவது ‘அ’ என்ற எழுத்தில் முடிகின்ற ஆண்பால் சொல். அதனால் ईदृशः स्यूतः என்று தனி வார்த்தைகளாகக் கூறலாம் அல்லது ईदृशस्यूतः என்று சேர்த்து (Compound) கூறலாம். இரண்டும் சரியே.

घटी என்ற சொல் ईकारान्तः स्त्रीलिङ्गपदम् (īkārāntaḥ strīliṅgapadam) அதனால் ईदृशी घटी என்றோ ईदृशघटी என்று சேர்த்தோ எழுதலாம்.

पुस्तकम् என்ற சொல் अकारान्तः नपुंसकलिङ्गशब्दः (akārāntaḥ napuṁsakaliṅgaśabdaḥ) அதனால் ईदृशं पुस्तकम् என்று தனியாகவோ அல்லது ईदृशपुस्तकम् என்று ஒரே வார்த்தையாகவோ எழுதலாம்.

अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி :

पूर्वतनसम्भाषने ’पाञ्चालिका’ शब्दस्य स्थाने ’लेखनी’ इति शब्दं योजयित्वा सम्भाषनं पुनः लिखतु।

pūrvatanasambhāṣane pāñcālikā śabdasya sthāne lekhanī iti śabdaṁ yojayitvā sanbhāṣanaṁ punaḥ likhatu |

மேலேயுள்ள உரையாடலில் ‘பொம்மை’ என்ற சொல்லுக்கு பதிலாக பேனா என்ற சொல்லைச் சேர்த்து உரையாடலை மீண்டும் எழுதவும்.

यथा (yathā )-

आपणिकः – भवती किम् इच्छति।

āpaṇikaḥ – bhavatī kim icchati |

கடைக்காரர் – உங்களுக்கு என்ன வேண்டும் ?

रमा – अहं लेखनीम् इच्छामि।

ramā – ahaṁ lekhanīm icchāmi |

ரமா – எனக்கு பேனா வேண்டும்.

आपणिकः –

रमा –

आपणिकः –

रमा –

आपणिकः –

रमा –

அன்றாட வாழ்வில் कीदृश (kīdṛśa) , ईदृश (īdṛśa), तादृश (tādṛśa) போன்ற சொற்களை உபயோகித்து உரையாடவும்.

Series Navigationதமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்