எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

This entry is part 26 of 45 in the series 26 பிப்ரவரி 2012

 

எஸ்ராமகிருஷ்ணனுக்கு விருது கிடைத்ததற்காக பாராட்டு விழாவில் தமிழகக்த்தின் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டார். பெருமைக்குரிய விஷயம் தான் இது. எழுத்தாளனுக்கு இப்படி ஒரு கௌரவம் தமிழ் நாட்டில் என்ன தவம் செய்தனை என்று பாடலாம்.

ஆனால் அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஞானசம்பந்தம் இன்ன பிற பிரபலங்கள் எஸ் ராமகிருஷ்ணன் படைப்பை ஆழப் படித்து ஆய்வு செய்து பெருமை கொண்டாட வந்தார்களா அல்லது சூப்பர் ஸ்டாரின் அருகாமையில் நானும் இருக்கிஏன் என்று ஆஜர் கொடுக்க வந்தார்களா?

ஏனென்றால் இவர்களில் பலரும் ரஜனியின் திறமைகளைப் பாராட்டிப் பேசினார்களே தவிர எஸ் ராமகிருஷ்ணனைப் போனால் போகிறது என்று தொட்டுக்கொண்டார்களே அது ஏன்?

ஆக பாராட்டு விழா எஸ் ராமகிருஷ்ணனுக்கா அல்லது ரஜனிக்கா?

**

நாற்பது வருஷமாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் வெங்கட் சாமிநாதனின் எழுத்துலகப் பங்களிப்பை பாராடி எடுத்த விழாவிற்கு சரி ரஜனி தான் வரவில்லை, ஒரு நாற்பது பேர் கூட வரவில்லையே அது ஏன்?

*****

Series Navigationவரலாற்றை இழந்துவரும் சென்னைஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள்
author

சொதப்பப்பா

Similar Posts

7 Comments

  1. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    நகைச்சுவை என்ற தலைப்பின் கீழ் அடக்கப்பட வேண்டிய கட்டுரை அன்று இது. He has raised a serious issue. மேலும் ஆசிரியர் சில கேள்விகளை எழுப்பமட்டும் செய்யாமல் தன் கருத்துக்களையும் சேர்த்து சிறிது நீளமாக எழுதியிருக்கலாம்.

    வெ.சாவைப்பற்றி நான் எழுதியாயிற்று. அங்கே நான் இப்படி சொல்லியிருக்கிறேன்: சூப்பர் ஸ்டார் ஒருவரை தலைமை தாங்கச் சொல்லியிருந்தால், வெ சா குறுக்கு வழியில் இலக்கிய சிம்மாசனங்களில் ஒன்றையோடிப்பிடித்திருக்கலாமென்று.

    எஸ்.ராமகிருஸ்ணனுக்கு இது தேவையா?

    வந்த நடிகர் தமிழே தெரியாதவர். அவர் பிழைப்புக்காக தமிழகம் வந்து 40 ஆண்டுகளாகியும் அவருக்கு தமிழ் உச்சரிப்பு வரவில்லை. தமிழைப்படிக்கவியலாதவர் எப்படி தமிழ் மொழி மீது ஒரு அக்கறையும் காதலும் உடையவராயிருப்பார்? கொஞ்சம் மிகையாகச்சொன்னால், இப்படிப்பட்ட ‘அந்நியர்கள்’ தமிழையும் தமிழர் கலாச்சாரத்தையும் உள்ளூர வெறுப்பர். அஃது அப்பப்போ வெளிப்படும். இதை நான் பலரிடம் பார்த்ததுண்டு. அதே வேளையில் ‘அந்நியர்கள்’ தமிழைப்படித்து தமிழ் இலக்கியப்படைப்பாளிகள் ஆனதுமுண்டு. ஹம்சா தனகோபால் ஒரு எ.கா. மராட்டியத்தில் பிறந்து வளர்ந்து தமிழ்நாட்டு பூர்வ மராட்டியர் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டவர். அவர் கணவர் தமிழ்நாடு மின்சார வாரியத்து பொறியாளர். பலவூர்களில் வேலை. இவரும் தமிழைப்படித்து கரைபோனது மட்டுமல்லாமல் நாவல்களும் எழுதினார். திருமதி புஷபவனம் குப்புசாமியும் ஒரு எ.கா. ஆனால் இவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    நம் நடிகர் தமிழைப்படிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இலக்கியம் படைக்கவேண்டாம். இலக்கியத்தைப் படிக்கக்கூட இவரால் முடியாது. இவருக்குக் கம்பனும் வள்ளுவரும் என்ன எழுதினார்கள் என்று தெரியாது. ஆனால் இவர்தான் ராமகிருஸ்ணனுக்கு வேண்டும். இவரால் புகழப்பட்டாலே தனக்கு விளம்பரம் என்ற அற்பச்செயலில் இறங்கி இருக்கிறார் எஸ். ரா.

    போகட்டும். இதன் விளைவு என்ன? இலக்கியவாதிகள் தங்கள் படைப்புக்கள் தங்களைப்பிரபலப்படுத்தும் என்ற நம்பிக்கை இழந்து சூப்பர் ஸ்டாரே துணையென்பதைப்பிடித்துக்கொள்ளுவார்கள். சின்னப்பயலுகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடிருக்காது.

  2. Avatar
    sathyanandhan says:

    Sir, The blame for making a celebrity (who is otherwise not even a novice in the world of literature) to chair a meeting in honor of a contemporary great writer has to be shared by two people Mr.Manushyaputran and Mr.Ramakrishnan. My view is 50-50. Fellow readers can give their snap judgements on this ratio. Regards Sathynandhan

  3. Avatar
    balaiyer says:

    If Rajnikanth has attended the function, it is out of respect shown to Yesra. Why one has to find fault in it? Is it that in a function like that one, only literary figures alone should attend? If some had praised Rajni, it is not Rajni’s mistake. Everyone reveals what they are in a public function like that one.

    For Venkat Swaminathan’s it is indeed proved that great writers are not recognised when they are with us. What other explanation could be given?

  4. Avatar
    punai peyaril says:

    தப்பு ரஜினி மேல் இல்லை. வைரமுத்து எப்போதோ ஜால்ரா முத்து ஆகி விட்டார். கருணாநிதி, ரஜினி போன்ற வெற்றி பெற்றவர்களை குளிர்விக்க அவர் இடம் பொருள் பார்ப்பதில்லை. ஞானசம்பந்தம் அவரின் வழிதோன்றலாக சமீபகாலமாக தெரிகிறார். பிழைப்பு நடக்கனும்ல…. என்ன பிழைப்போ…

  5. Avatar
    Dr.G.Johnson says:

    This is a function to felicitate a poular writer, namely S.Ramakrishnan.It is a good precedence that celebrites are attending such functions. Though they are not literary stalwarts, the very fact they take the trouble to attend shows their care for the writer. Prominent writers should be honoured by all for their literary contributions. What happened to Venkat Swaminathathan is a matter of regret. It is true that we do not honour true literary figures when they are with us. At this juncture I am pained to recollect that only a handful of people were present at the funeral of MAHAKAVI BHARATHI>

  6. Avatar
    Kavya says:

    Bharatiyaar’s funeral can’t be compared here. He was in the bad books of police when he died and ppl feared to attend his funeral for fear of being spotted. At the time of his death, he had already earned his name and fame and was widely known though.

    Ve Sa and Sraa can’t be compared too. A writer today should be clever in marketing his products. Our writers are doing it now, with huge cutouts in Book fairs and orgainsing tete a tete with their readers. Recently Sraa organised one or get it organised, in Delhi Tamil Sangam and next day his fans wrote about it in their blogs. The fans are so infatuted with him that one went panygeric over Sraa’s wisdom expressed in the meet as under:

    If one visits a house of a friend, one should take with him something like fruits or sweets or gifts of sorts to the house.

    Sraa travelled to Delhi to make this wisdom and his fans are waiting such gems to fall from his mouth.

    Some writers use notoriety gained through arousing public outcry by making outrageous statements in public, to be in the limelight. Jeakanantan set this trend first to be followed by many and we see Charu doing it with great success. One gets attracted to their negative thinking, which is often mistaken for progressive thinking. One person named Sirai ravichandran wrote about JK’s outrageous public statement or behaviour glowingly in this forum itself.

    Some like SRAA, Jeyamohan and Charu are exploiting the potential of internet blogging with the help of software engineer fans to advertise themselves as a charismatic figures larger than life, so cleverly that the younger generations here and abroad are easily hooked. Each one has his style: Sraa uses the trick of humility and Charu his style of arrogance.

    Among such writers, the writers belonging to old school of conservatism become unknown and unread. I am now reading a Ve Sa book on which soon I will make a post. Even if Rajani attends a felicitation ceremony to Ve Sa, still he cant arouse curiosity as his style of Tamil is boring never mind what he says. Young ppl wont go near him.

Leave a Reply to balaiyer Cancel reply

Your email address will not be published. Required fields are marked *