அழித்தது யார் ?

This entry is part 13 of 26 in the series 27 அக்டோபர் 2013

24.10..2013 வே.ம.அருச்சுணன் – மலேசியா “மணி…..! நீ என்னடா சொல்ற…?” “ஜீவா அண்ணே……நான் சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதிங்க…..! நீங்க மெத்த படிச்சவங்க……யூனிவசிட்டியிலப் படிச்சுப் பெரியப் பெரிய பட்டங்கள வாங்கினவங்க…..நான் போய் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல முடியுமா?” இருவரும் பேசிக் கொள்வதைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழரசு பால்ய நண்பன் மணியைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கின்றான். பிரளயம் வெடிக்கும் சூழல்.ஏற்கனவே ஒருமுறை இது போன்று அவர்கள் இருவரும் பேசியது அவன் நினைவுக்கு வருகிறது. ம்……இன்று சிறிது வேடிக்கைப் பார்க்கலாம்.களுக்கென்று […]

கரிகாலன் விருது தேவையில்லை

This entry is part 4 of 26 in the series 17 மார்ச் 2013

கடந்த 10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில் ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது.இந்நிகழ்வில்,மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசு,திருமதி.ந.மகேஸ்வரி மற்றும் சிங்கை எழுத்தாளர் திரு.மா.இளங்கண்ணன்,திருமதி.கமலா அரவிந்தன் ஆகிய நால்வருக்கும் பல சான்றோர்களின் முன்னிலையில் வழங்கிய இந்நிகழ்வு சங்கத்தின் மற்றுமொரு பாராட்டுக்குரிய நிகழ்வு என்பதை சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்நிகழ்வைப் பாராட்டுவது என் கடமை என்பதுடன்,விருது பெற்ற நான்கு எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மற்ற எழுத்தாளர்கள் […]

மாமன் மச்சான் விளையாட்டு

This entry is part 22 of 33 in the series 3 மார்ச் 2013

                   வே.ம.அருச்சுணன் – மலேசியா  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘சிவாஜி போஸ்’ இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்…..! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல்,வீரவேல் என்றே கொடிபிடித்து […]

“தாயைக்காக்க தனயன்களே புறப்படுங்கள் ,தமிழைக்காக்க தமிழர்களே புறப்படுங்கள்………!”

This entry is part 21 of 34 in the series 6 ஜனவரி 2013

                                                               தலைவர்.வே.ம.அருச்சுணன்         இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் சரிவை கண்டுள்ளதைக் கண்டு தமிழ்மொழி வளர்ச்சி மீது அக்கறையும் மொழிமீது உயிரையே வைத்துள்ள உண்மையான தமிழர்களுக்கு அதர்ச்சியும் வேதனையும் தந்துள்ளன. இந்நிலை இனியும் தொடருமானால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளே இந்நாட்டில் இல்லாமல் அழிந்து போய், தமிழ்ப்பள்ளிகள் தேசிய பள்ளிகளாக மாற்றம் கண்டு தமிழ் மாணவர்கள் அனைவரும் மலாய் மொழியிலேயே கல்வி பயில வேண்டிய கட்டாய  நிலை […]

தவம்

This entry is part 20 of 34 in the series 6 ஜனவரி 2013

.                வே.ம.அருச்சுணன் – மலேசியா      இரவெல்லாம் காத்துக் கொண்டுடிருந்த காமாட்சி, சோபாவிலேயே கண்ணயர்ந்துவிடுகிறார். கதவுத் திறக்கப்படும் அரவம் கேட்டுக் கண் விழித்துக்கொள்கிறார். “ஏன்பா….அழகு….இப்ப என்னப்பா மணி…?” “வீட்டுக்கு வந்தா ஏம்மா  உயிரை வாங்கிறீங்க ?” “காலம் கெட்டுக் கிடக்குதப்பா! நேரத்துல வீட்டுக்கு வரக் கூடாதா? அம்மா தனியாத் தானே இருக்கேன்…?” “என்னைப் போன்ற இளம் பிள்ளைகள்…..சனிக்கிழமையிலே சந்தோசமா நண்பர்களோடு இருக்கிறதுலே என்னம்மா தப்பு…..? ஏம்மா என்னைப் புரிஞ்சிக்க மாட்டுறீங்க….!”  அழகன் கோபப்படுகிறான். “உன் நண்பர்களோடப் […]

சிறுவர் சிறுகதை: “ ஊனமே ஓடிடு ”

This entry is part 6 of 27 in the series 23 டிசம்பர் 2012

வே.ம.அருச்சுணன் – மலேசியா மிகுந்த உற்சாகத்துடன் புனிதா, தனது புத்தகப்பையைத் தோலில் மாட்டிக் கொண்டு துள்ளல் நடைபயின்று பள்ளிக்குப் புறப்பட்டுவிட்டாள்! பள்ளிக்கு எங்கே தாமதமாகப் போய்விடுவோமோ என்ற அச்சத்தினால், முதல் நாளே இரவே பெற்றோர் வாங்கித்தந்த புதிய புத்தகப்பையில் அனைத்துப் புத்தகங்களையும் சீராக அடுக்கி வைத்துவிட்டாள்! நேரத்திலேயே படுக்கைக்குச் செல்கிறள். அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் படுக்கையை விட்டு தானே எழுந்துவிட்ட புனிதா, காலைக்கடன்களைத் தவறாமல் சமத்துடன் செய்திருந்தாள். அம்மா கோகிலா இறைவழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளில் மும்முரமாகப் போயிருந்ததைப் புனிதா தன் […]

வீதி

This entry is part 18 of 33 in the series 11 நவம்பர் 2012

                 வே.ம.அருச்சுணன் மலேசியா            காலை மணி எட்டாவதற்கு முன்பே கவுன்சிலர் மணிவண்ணன் பூக்கடைக்கு வருகிறரர்.           “நான் இருபது வருசமா இங்கு வியாபாரம் செஞ்சிக்கிட்டு வர்றேன்.                        இப்போ……திடீர்னு வந்து  இடத்தைக் காலிப் பண்ணச் சொன்னா நான் எங்கே போவேன்?”            பூக்கடை உரிமையாளர் பூங்கோதை அந்த வட்டாரத்தின் நகராண்மைக் கழக  உறுப்பினர் மணிவண்ணனிடம் தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.            “கேள்விப் பட்டுதான் வந்திருக்கிறேன் தைரியமாக இருங்கள் அம்மா!”            கவின்சிலர் பதவியேற்று மூன்று மாதங்களே […]

சொன்னேனே!

This entry is part 31 of 41 in the series 25 செப்டம்பர் 2011

வே.ம.அருச்சுணன்- மலேசியா. மாத்திகா மும்முரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள்! “ஏம்மா,மாத்திகா கோயில் திருவிழாவில்தானே கலந்து கொள்ளப் போரே!” அம்மா சிவபாக்கியம் அக்கறையோடு கேட்கிறார். “ஆமாம்மா நம்ம குடியிருப்புப் பகுதியில இருக்கிற அம்மன் கோயில் திருவிழாவுக்குத்தான் போறேன். அதுக்குத்தானே இன்றைக்கு வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்தேன்!” பட படப்புடன் கூறுகிறாள். “கோயில் திருவிழாவுக்கு உன்னைப் போல வயசுப் பொண்ணுங்க அவசியம் போய்க் கலந்து கொண்டு இறைவனை வணங்கனும். அப்பத்தான் நம்ம கலை,கலாசாரம் இந்த நாட்டில நீடித்து வாழும் வளரும். கோயில்னா…நாலு நல்லவங்க […]