வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 8

This entry is part 2 of 11 in the series 16 ஏப்ரல் 2017

    (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   8.           பின்புறமாக முதுகை வளைத்து இடுப்பைப் பிடித்துக்கொண்டு பெரிதாய்ச் சிரித்து முடித்த பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் கிஷன் தாஸ், “உங்களைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டதல்லவா எனது இந்தச் சிரிப்பு? என்னைக் கிறுக்கன் என்று கூட நினைத்திருப்பீர்கள்தானே!  … இல்லை. இல்லவே இல்லை!  என் வருங்கால மருமகளுக்கு நான் வைத்த பரீட்சை அது!  மிகப் பிரமாதமாக அதில் நீ தேறிவிட்டாய் என் வருங்கால மருமகளே!” என்று கூறிப் புன்னகை […]

சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை

This entry is part 3 of 11 in the series 16 ஏப்ரல் 2017

சினிமா விமர்சனம் செய்வது தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை தமிழ் ஸ்டுடியோ நடத்தவிருக்கிறது. தமிழ் சினிமாவின் நூற்றாண்டில் இங்கே விமர்சனம் என்பதே கேலிக்கூத்தாக மாறிக்கிடக்கிறது. தமிழ் ஸ்டுடியோவின் தமிழ் சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சினிமா விமர்சனம் செய்வது தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறோம். யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளாம். கட்டணமில்லை. இரண்டு நாட்களும் தாங்கும் செலவு மற்றும் மதிய உணவு ஏற்பாடும் செய்து தரப்படும். ஒரே நிபந்தனை பயிற்சி முடிந்தபின்னர் விமர்சனம் எழுத வேண்டும். […]

புலவி விராய பத்து

This entry is part 4 of 11 in the series 16 ஏப்ரல் 2017

  “புலவி” என்னும் சொல்லுக்கு ஊடல், வெறுப்பு, பிணக்கு என்று அகராதி பொருள் கூறுகிறது. படித்துச் சுவைப்போர் எப்பொருளை மேற்கொண்டாலும் சரியாகவே உள்ளது. முதலில் பார்த்தப் புலவிப் பத்து என்பதில் தலைவியும் அவள் கருத்து உணர்ந்த தோழியுமே புலந்து கூறினர். ஆனால் இதில் அத்துணை சிறப்பில்லாத காதற்பரத்தையர் புலவியும் விரவி வருதலால் இதனைப் புலவி விராய பத்து எனக்கூறினர். புலவி விராய பத்து—1   குருகுடைத் துண்ட வெள்ளக ட்டியாமை அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும் மலரணி […]

பால்வீதி ஒளிமந்தையின் கருந்துளை, கரும்பிண்டம் வடிவெடுக்கும் நுணுக்கத் திறன் முதன்முதல் வெளியாகி உள்ளது

This entry is part 5 of 11 in the series 16 ஏப்ரல் 2017

Posted on April 15, 2017 கருந்துளை வடிவு சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ காலக் குயவன் ஆழியைச் சுற்றி ஞாலத்தை வார்க்க களி மண்ணை வேண்டி கரும்பிண்டம் படைத்தான் உருவினைக் கண்டான் மனிதன்  ! சேமிக்கப் பூதக் கருந்துளை தாமாய், மறைவாய்த் தோன்றும். கதிர் வீசும் கரும்பிண்டம் கண்ணுக்குத் தெரியா. கருவிக்குப் புலப்படும், அதன் கவர்ச்சி விசை குவிந்த ஆடி போல் ஒளிக்கதிரை வளைக்கும் ! கரும்பிண்டம் இல்லையேல் ஒளிமந்தை எதுவும் […]

தொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளி

This entry is part 6 of 11 in the series 16 ஏப்ரல் 2017

          பிரசவ அறையில் பயிற்சி மனோகரமாக மாறியது. பட்டு மேனியும் பருவ பரவசமும் மலர்ந்த புன்னகையும் கொண்ட மேரியின் துணையுடன் பிஞ்சு குழந்தைகளை வெளியில் கொண்டுவந்து உலகைக் காட்டும் பணி இன்பமாக மாறியது. இனி பிரசவம் எப்படியெல்லாம் பாப்போம் என்பதை விவரிப்பேன்.           பிரசவ வலி வந்ததும்தான் பெண்களை வார்டிலிருந்து பிரசவக் கூடத்துக்குக்  கொண்டு வருவோம். வலி வந்ததுமே பெரும்பாலும் பிரசவம் ஆகிவிடும். கட்டிலில் படுத்துள்ள பெண்களின் பிறப்பு உறுப்பில் விரலை விட்டு கருப்பையின் வாய் எவ்வளவு […]

உமர் கயாம் ஈரடிப்பாக்கள்

This entry is part 7 of 11 in the series 16 ஏப்ரல் 2017

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. [49] விந்தை இல்லையா ?  ஆயிரக் கணக்கான பேரில் நம்கண்முன் இருட்கதவைக் கடந்தோர் இதுவரை நமக்குப் பாதை காட்ட ஒருவர் கூட மீண்டிலர்; நாமே பயணம் செய்து தான் காண வேண்டும். [49] Strange, is it not? that of the myriads who Before us pass’d the door of […]

(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம்) (10) அதிகாரம் 118: கண் விதுப்பு அழிதல் -“கண்களுக்கு அவசரமேன்? ”

This entry is part 9 of 11 in the series 16 ஏப்ரல் 2017

      கண்கள்தாம் கண்டன அவரை கண்களால்(தான்) நானும் கண்டேன் அவரை அதனால்தான் எனக்கு இத்தீராநோய்   தீராகாமநோய் தீயில் இருப்பது நான் தீர்வின்றித் தவிப்பது நான் துடிப்பது நான் துவள்வது நான்   கண்கள் ஏன் அழுகின்றன? எதற்கு அழுகின்றன?   காரணமின்றிக் கண்ணீர் சிந்துவதேன்?   ஆய்ந்து அறியாமல் அவரைப்பார்க்க அவசரப்பட்ட கண்கள்; பார்த்தலால் காதல்தீ பற்றிக்கொண்ட கண்கள்; நல்லவரெனப் பார்வையில் பரிவை அன்பை பகிர்ந்த கண்கள்; காரணமறிந்தும் காரணமின்றி வருந்துவதேன்?   […]

ஒரு மாநாடும் ஆறு அமர்வுகளும்

This entry is part 10 of 11 in the series 16 ஏப்ரல் 2017

        மலேசியா ஏ.தேவராஜன்   கடவுளே கூடி கடவுளே ஏற்பாடு செய்த மாநாடு என்கிறபோது அந்த விழாக்கோலத்தைச் சாமான்யக் கண்களால் உருவகப்படுத்த முடியுமா? அப்பேர்ப்பட்ட மா மாநாடு அது. ஏகப்பட்ட கடவுளர்கள் திசையறியா வெளிகளிலிருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள்.  எல்லோரும் மனிதர்களைப் போலவேதான் தெரிந்தார்கள். மனிதர்கள் உருவாக்கிய படைப்பு மனிதர்களைப் போல்தானே இருக்கும்? ஒரு சிலருக்கு அமானுட தோற்றம் இருந்தாலும்,பெரும்பான்மை கடவுளர்கள் சாந்த சொரூபிகளாகத் தென்பட்டனர். சிலரை மட்டும் ஏனோ பார்க்கவே சகிக்கவில்லை. தோற்றந்தான் அப்படியென்றால் அவர்களது […]