நித்ய சைதன்யா கவிதைகள்

This entry is part 4 of 13 in the series 18 டிசம்பர் 2016

நித்ய சைதன்யா   1. வெறுமை குறித்த கதையாடலின் முதற்சொல் உன் பெயர் நாளெல்லாம் ரீங்கரித்து இசையாகிய பொழுதுகள் பொற்காலம் தேடித்தேடி சலித்தபின் வந்தமர்ந்த நாட்களில் வெளுக்கத் தொடங்கியது உனதும் எனதுமான இச்சைகள் கூடியிருந்தும் இசைய மறுத்தன நடுநிசியின் ராகங்கள் பிரிந்து செல்ல வேண்டி பறிக்கிறேன் உன் பெயர் சூடிய என் பெயரை       2. வழிந்து சென்றன புத்தக அலமாரியில் நிரம்பிய சொற்கள் மலர் என்ற சொல் அழைத்து வந்தது பூத்துக் குலுங்கிய […]

பறவையாகவும் குஞ்சாகவும் கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’

This entry is part 3 of 13 in the series 18 டிசம்பர் 2016

பாவண்ணன் மலையாள மொழியின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கமலாதாஸ். பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். கமலாதாஸின் சிறுகதைகளை ஏற்கனவே ‘சந்தன மரங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ள நிர்மால்யா அவருடைய தன்வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து கடந்த 2009-ல் மறைந்துவிட்டவர். தன் கவிதைகளாலும் கதைகளாலும் பெரிய அளவில் வாசக கவனத்தைப் பெற்ற கமலாதாஸ் தன் நாற்பதுகளையொட்டிய வயதில் தன்னுடைய தன்வரலாற்றை ஒரு தொடராக எழுதினார். அந்தத் தொடர் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுபதுகளில் வெளிவந்து அவருடைய புகழ்வெளிச்சத்தை […]

திரும்பிப்பார்க்கின்றேன் – எழுத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த மு. கனகராசன்

This entry is part 8 of 13 in the series 18 டிசம்பர் 2016

  முருகபூபதி – அவுஸ்திரேலியா   “உங்களுடைய       கையெழுத்து      அழகாக        இருக்கிறது” என்றேன். “தலை    எழுத்து       அப்படி      அல்ல” – என்றார்       கனகராசன்.     சொல்லும் போது       மந்தகாசமான      புன்னகை.       பல      எழுத்தாளர்களின்     தலை எழுத்து      அவர் சொன்னது        போன்று      அழகாக    அமையவில்லை   என்பது        என்னவோ       உண்மைதான். வேறு       எந்தத்      தொழிலும்    தெரியாமல்     எழுத்தை    மட்டுமே நம்பிவாழ்வைத்        தொடங்கியவர்களின்       வரிசையில்     இடம்    பெற்றவர்  மு.கனகராசன். இவர்       பணியாற்றிய        பத்திரிகைகள்       பல.       இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும்      நெருங்கிய        தொடர்பு      கொண்டிருந்தார்.      […]

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 13

This entry is part 6 of 13 in the series 18 டிசம்பர் 2016

பி.ஆர்.ஹரன்   சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் விலங்குகள் நல அமைப்புகளும் விலங்குகள் நல ஆர்வலர்களும் கோவில் யானைகளைப் பொறுத்தவரையில், ஹிந்து மதத்தின் எந்த நூலிலும் யானைகள் கோவில்களுக்கு அவசியம் என்று கூறவில்லை என்கிற வாதத்தையும் முன்வைக்கிறார்கள். இவர்கள் எந்த அடிப்படையில் இவ்வாதத்தை முன்வைக்கிறார்கள் என்பது தெளிவாகவில்லை. இவர்கள் ஹிந்து மதத்தின் நூல்கள் என்று எவற்றைச் சொல்கிறார்கள் என்பதையும் சரியாக விளக்கவில்லை. ஹிந்து மதம் என்னும் மகாசமுத்திரத்தைப் பல்வேறு நூல்கள் விளக்கிக்கூறுகின்றன. […]

‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா

This entry is part 7 of 13 in the series 18 டிசம்பர் 2016

வரும்24-12-2016 அன்று என்னுடைய கவிதை நூல்,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா சென்னை இக்ஸா மையத்தில் நடைபெறுகிறது. தங்களின் வருகை என்னைப் பெருமைப் படுத்தும்.  

தொடுவானம் 149. கோர விபத்து

This entry is part 5 of 13 in the series 18 டிசம்பர் 2016

                    தெம்மூரிலிருந்து நிறைவான மனதுடன் தரங்கம்பாடி புறப்பட்டேன்.           சீர்காழி, திருநகரி, பூம்புகார் வழியாக குறுக்குப்பாதையில் பேருந்து கடற்கரை ஓரமாகச் சென்று தரங்கம்பாடி அடைந்தது. வழக்கம்போல் அந்த ஊர் பரபரப்பு இன்றி அமைதியாக காட்சி தந்தது. கடற்கரையில் பெரும் இரைச்சலுடன் அலைகள் ஓய்வில்லாமல் தொடர்ந்து கரையை நோக்கி பாய்ந்து உடைந்து மறைந்து போயின. அலை அலையாய் அப்படி வந்தாலும் அவற்றின் முடிவு  அப்படிதான்.          நேராக அண்ணி வேலைசெய்யும் புளுச்சாவ் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றேன். அவர் […]

100,000 ஆண்டுக்கு ஓர்முறை நேரும் மர்மமான பனியுகச் சுழற்சி எப்படி நிகழ்கிறது ?

This entry is part 9 of 13 in the series 18 டிசம்பர் 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++++++ நூறாயிரம் ஆண்டுக் கோர்முறை நேரும் பனியுகச் சுழற்சி  ! கடல் நீர் சுண்டி, தமிழகத் தென்கரை நீண்டு குமரிக் கண்டம் கூந்தலை விரித்தது! சூட்டுயுகப் புரட்சிக் கணப்பில் படிப்படியாய், பனிப் பாறைகள் உருகி நீர் மட்டம், உஷ்ணம் கடலில் உயர நிலத்தின் நீட்சி மூழ்கும்! கடல் மடி நிரம்பி முடிவில் புதைப் பூமியாய் சமாதி யானது, குமரிக் கண்டம் ! ++++++++++++++ வடதுருவப் பனியுகம் பரவிய சில […]

நல்லார் ஒருவர் உளரேல்

This entry is part 10 of 13 in the series 18 டிசம்பர் 2016

  அங்குலம் அங்குலமாக நகர்ந்து கழிவறை சென்ற அந்த கடைசி அசைவுகளும் நின்று அம்மா இப்போது படுக்கையோடு சங்கமமாகிவிட்டார். ஆயிரம் பேர் அன்னாந்து பார்க்க வானத்திற்கு பொட்டு வைத்ததுபோல் பறந்த அழகான பட்டம் சிதைந்து அந்தப் படுக்கையில் கிடப்பதுபோல் உணர்கிறேன். காலை நேரங்களில் அம்மா வழக்கமாக நடக்கும் அந்த ஃபேரர்பார்க் திடலின் ஒவ்வொரு புல்லும் அம்மாவைத் தேடுவதாகவே உணர்கிறேன். ஒரு பார்வையிலேயே நெஞ்சுக்குள் பம்பரம் சுழற்றும் என் அம்மாவின் பார்வையை நேருக்குநேர் சந்தித்தால் நொறுங்கிப் போவோமோ என்ற […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -4, 5, 6

This entry is part 11 of 13 in the series 18 டிசம்பர் 2016

கி.பி. [1044  – 1123]   பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;  கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார்.  அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு [1809 – 1883] ஆக்கிய […]

மார்கழியும் அம்மாவும்!

This entry is part 12 of 13 in the series 18 டிசம்பர் 2016

நிஷா அதிகாலை அரைத்தூக்கத்தில், எங்கோ ஒலிக்கும் திருப்பாவை கேட்டு, ஜிலீர் பனிக்காற்றில் மேலும் சிறிது விழித்து, கோலமிட கிளம்பும் அம்மாவின் முந்தானைப்பிடித்து வாசல் வர- சரட் சரட்டென இசையாய் வாசல் பெருக்கி, மழை தூறலாய் அதில் நீர் தெளித்து, முத்துச்சரமாய் புள்ளி வைத்து, பட்டு நூலாய் கோடுகள் வரைந்து. வானவில்லாய் வண்ணங்கள் நிரப்பி, விசாலமாய் வாசல் நிரப்பும் கோலம்! பால்யத்தில், இயல்பாய், எளிதாய், அழகாய், ரசனையை சொல்லாமல் சொல்லித்தந்த தேவதை – அம்மா!