மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது வழங்கும் விழா

This entry is part 1 of 14 in the series 26 பெப்ருவரி 2017

மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாணராமனுக்கு விளக்கு விருது   அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பாகிய விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது – 2015’, எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான என்.கல்யாணராமனுக்கு வழங்கப்பட்டது. விருதுத் தொகை ரூ.75 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்யாணராமன், அசோகமித்திரன், பெருமாள் முருகன் உள்ளிட்ட பல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததன் மூலம் உலக அரங்கிற்கு தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பங்களிப்பை அறியச் செய்தவர். சென்னை இக்சா மையத்தில் நடைபெற்ற இந்த […]

பிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II கலையும் இலக்கியமும்

This entry is part 2 of 14 in the series 26 பெப்ருவரி 2017

  கலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு சார்ந்த விடயம். இன்பத்தை உடல்சார்ந்த உயிர்சார்ந்தெனப் பிரித்து வகைப்படுத்த முடியுமெனில் கலையும் இலக்கியமும்  உயிர்சார்ந்தவை. மனித உயிர்களுக்கென்று வாய்த்த பிற உயிர்களுக்கு அமையாத அனுபவம். மனிதன் மட்டுமே தான் என்னவாக பிறந்தானோ, அல்லது என்னவாக இருக்கிறேனோ  அப்படி இருக்கமுடியாதென மறுக்கக்கூடிய உயிரி.  அம்மறுப்பை கலை இலக்கிய வழிமுறைகளால் வெளிப்படுத்துவதென்பது ஒர் உபாயம் அல்லது உத்தி. வாழ்வின் நோக்கம் உண்பதும் உறங்குவதும், இனவிருத்தியோடு திருப்தியடைவதும் என முடித்துக்கொள்கிற […]

நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”

This entry is part 3 of 14 in the series 26 பெப்ருவரி 2017

சிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் கவிதை நூல். கையிலெடுத்துக் கொஞ்சம் புரட்டினேன். அது மலாய்மொழிக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு. நூல் கனமாக இல்லையென்றாலும் என் கவனத்தைக் கவர்ந்துவிட்ட்து. படிப்பதா? இல்லை அங்கேயே விட்டுவிடுவதா என யோசித்துப் பின் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து படிக்கத்தொடங்கினேன். நூலாசிரியரின் முன்னுரை என்னைப்படிக்கத்தூண்டியது. அடக்கமும் எழுத்தின்மீது அக்கறையும் கவனமும் தொனித்த நடை அவர்மீதான மரியாதையைக்கூட்டியது. அதனாலயே தொடர்ந்து இருக்கையிலும் […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!

This entry is part 4 of 14 in the series 26 பெப்ருவரி 2017

  (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 1. அந்த இரண்டு படுக்கையறைகளும் இடையே ஒரு தாழ்வாரத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. பரந்த அவ்விரு அறைகளின் தரை விரிப்புகளும் ஜன்னல் திரைச்சீலைகளின் வண்ணக்கலவையோடு ஒத்துப்போகும் வண்ணம் அதே பாணியில் அமைந்துள்ளன.  அவற்றுள் ஓர் அறையின் பெரிய கட்டிலின் மீது விரிக்கப்பட்டுள்ள கனத்த மெத்தை விரிப்பும் தரைவிரிப்பு, ஜன்னல் திரை ஆகியவற்றுக்குப் பொருத்தமான வண்ணச் சேர்க்கையோடு காணப்படுகின்றன. அந்த மெத்தையில் கனத்த உடம்புடன் அகலமும் நீளமுமாய் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதர் மல்லாந்து […]

தொடுவானம் 159. இனி நான் மருத்துவன்!

This entry is part 5 of 14 in the series 26 பெப்ருவரி 2017

இந்த விடுமுறையை தெம்மூரில் மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்தேன். காரணம் தாம்பரத்திலிருந்து அத்தையும் நேசமணியும், தரங்கம்பாடியிலிருந்து அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள். தங்கைகள் கலைமகளும், கலைசுந்தரியும் தஞ்சாவூர் போர்டிங்கிலிருந்து வந்திருந்தனர். இருவரும் தாவணி போட்ட பெரிய பிள்ளைகளாகிவிட்டனர்.  வீடு கலகலப்பாக இருந்தது. அம்மா தடபுடலாக விருந்து செய்தார். அவருக்கு உதவியாக பெரிய தெருவிலிருந்து அஞ்சலை சின்னம்மாவின் மகள் மஞ்சளழகி வந்திருந்தாள். எடுபிடி வேலைகள் அனைத்தையும் அவள் பார்த்துக்கொண்டாள்.           இந்த விடுமுறை இன்னொரு வகையிலும் சிறப்பு பெற்றிருந்தது. பெரியப்பா குடும்பத்தினர் […]

இன்றும் வாழும் இன்குலாப்

This entry is part 6 of 14 in the series 26 பெப்ருவரி 2017

  ”இன்குலாப்” என்றாலே புரட்சி என்று பொருள்; அப்படியே தான் புகுந்த எல்லாத்துறைகளிலும் புரட்சி செய்து வாழ்ந்து மறைந்தவர்தாம் கவிஞர் இன்குலாப். இலக்கியத்துறையில் புகும் எவரும் முதலில் எழுதுவது கவிதைகள்தாம்; அதுவும் காதல் கவிதைகள்தாம்; இதற்கும் இன்குலாப் ஒரு விதிவிலக்கு. அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் நெருப்புத் துண்டங்கள், சமுகத்தீமைகளை அழிக்க வந்த சூட்டுக்கோல்கள் என்று துணிந்து சொல்லலாம். அவருக்கு அரசின் எந்தவித ஒரு தனிப்பட்ட அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அதைப்பற்றி அவர் கவலைப்படவும் இல்லை. காற்று எதையேனும் […]

பாப விமோசனம்

This entry is part 7 of 14 in the series 26 பெப்ருவரி 2017

——————————————- வையவன் ——————————— “சாபத்திற்கு விமோசனம் உண்டு. பாபத்திற்கு விமோசனம் உண்டா பகவானே ?” மணிநாதம் போல் கேட்ட அந்தக் குரல் தங்கள் தலைவனுடையதோ என்று பிரம்ம லோகத்திற்கு கீழே தாழ்வாக நகர்ந்து சென்ற மேகங்களுக்கு கேட்டன .ஒரு மேகத்திற்குத் துணிச்சல் வந்தது. கூட்டத்தை விட்டு உயர்ந்து ஏறத்தொடங்கியது. “ஏய், அத்து மீறிப்போய் சாபத்திற்கு ஆளாகி விடாதே” என்று கீழேயிருந்து ஒரு மேகம் எச்சரித்தது.  ஆம்! மேகநாதனான இந்திரன் தான். அவன் பார்வையில் படும் முன் மேலேறிப்போன மேகம் வேகமாகக் […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 8 of 14 in the series 26 பெப்ருவரி 2017

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++ [34]  உருளும் மேலகம் நோக்கிக் கேட்டேன், ‘ஊழ்விதிக்கு வழிகாட்டுவ தெந்த விளக்கு ? இருட்டில் தடுமாறு கிறார் அதன் மதலையர்‘ ‘குருட்டுப் புரிதலது !’ எனப்பதில் தரும் மேலகம்.   [34] Then to the rolling Heav’n itself I cried, Asking, ‘What Lamp had Destiny to guide Her little Children stumbling in the Dark? ‘ And – ‘A blind […]

சட்டமா? நியாயமா?

This entry is part 9 of 14 in the series 26 பெப்ருவரி 2017

  கோ. மன்றவாணன்   சட்டம் மேலானதா? நியாயம் மேலானதா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுப்பி விடைகாணப் பாருங்கள். கிட்டத்தட்ட எல்லாருடைய பதிலும் நியாயம்தான் மேலானது என்பதாக இருக்கும். கொலை செய்வோர் கூட, அவர்கள் தரப்பிலிருந்து சில நியாயங்களை அடுக்கக் கூடும். கொலைசெய்யப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும் நியாயங்கள் அணிவகுக்கும். திருடர்கள் கூட, வறுமையின் காரணமாகத் திருடினேன் என்று சொல்லக்கூடும். திருடு கொடுத்தவனின் வேதனையைப் பொருப்படுத்த வேண்டியதில்லை என்றும் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்றும் புத்திமதி புகலக்கூடும். யாரிடம் திருடினான்? பணக்காரன்கிட்டேதானே […]

வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் ​ வையவன்.

This entry is part 10 of 14 in the series 26 பெப்ருவரி 2017

வைரமணிக் கதைகள் மதிப்புரை   —————————–—————-   வைரமணிக் கதைகள் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் அவரது 497  பக்க சிறுகதைத்தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது . தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு, இது சரி-இது தவறு என்பது குறித்த தெளிவான நிலைப்பாடு , சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான இலக்கியப் புரிதல் , சிறந்த சொல்லாடல் என வையவனின் எழுத்துச் சிறப்பைச் சொல்லி க் […]