நீங்காத நினைவுகள்  –   51 முரசொலி அடியார்

This entry is part 23 of 23 in the series 22 ஜூன் 2014

  ஜோதிர்லதா கிரிஜா        10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும் அது தற்செயலாக என் கைக்குக் கிடைத்தது.  நான் தேடிப் போகாமலே, சில அரிய விஷயங்கள் இது போன்று தற்செயலாக எனக்குக் கிடைப்பதுண்டு. அதன் மூன்றாம் பக்கத்தில் வெளியாகியிருந்த அவரது கட்டுரை அடக்கியிருந்த பிரமிக்கத்தக்க செய்தியை […]

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 9

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 9 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 33, 34, 35, 36​ ​இணைக்கப்பட்டுள்ளன. ​+++++++++++++++​

ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2 சிவக்குமார் அசோகன் மேனேஜர் அறையில் வசந்தி சீரியஸான முகத்துடன் பேசிக் கொண்டிருப்பதையும், மேனேஜர் ரெங்கராஜன் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்த போது குருவுக்கு சற்று கோபம் வந்தது. ‘இவள் என்ன லூஸா? ஸ்கூல் பிள்ளை மாதிரி புகார் சொல்லிக் கொண்டிருக்கிறாள்? சரி அல்லது வேண்டாம் அவ்வளவு தான். விஷயம் முடிந்தது. இதைப் போய் மேனேஜரிடம் சொல்ல வேண்டுமா? பைத்தியம் தான் இவள். இருந்தால் என்ன? இவள் எனக்குத் தான். என் […]

வாழ்க்கை ஒரு வானவில் 8.

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ஜோதிர்லதா கிரிஜா 8. ரமணியின் வீட்டை யடைந்த ராமரத்தினம் கூப்பிடு மணியை அழுத்திய போது அந்த வீட்டுச் சுவர்க் கெடியாரம் `டங்’ என்றது. மணி சரியாக ஆறரை என்று அவன் நினைத்துக்கொண்டான். ரமணியின் அப்பாவே கதவைத் திறந்தார். “வாப்பா!” என்று வழக்கம் போல் சொல்லாமல், அதன் பொருளில் தலையை மட்டும் இலேசாக அசைத்தார். உள்ளே நடக்கத் தொடங்கிய அவரை அவன் பின்பற்றிச் சென்றான். அவரது முகத்தில் புன்னகையே இல்லை என்பதையும் அது இறுகி யிருந்ததையும் கண்டு அவனுக்கு […]

தொடுவானம் 21. உயிருக்கு தப்பி ஓட்டம்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

21. உயிருக்கு தப்பி ஓட்டம் பள்ளியிலிருந்து சற்று தொலைவில் இருந்தது அந்த புது வீடு. அதை வீடு என்று சொல்ல முடியாது. கடை வீடு எனலாம். அப்பகுதியில் வரிசையாக இருந்த கடைகளில் ஒன்றின் பின்பறம் அது இருந்தது..அந்தக் கடையில் ஒரு தமிழர் சிகை அலங்கரிக்கும் கடை வைத்திருந்தார். அப்போது அதை கண்ணாடிக் கடை என்போம். ஆம். முடி வெட்டும் கடைதான். அதன் பின்புறம் அவரின் குடும்பம் இருந்தது. அங்கு எங்களுக்கு ஒரு அறை வாடகைக்கு தரப்பட்டிருந்தது! முன் […]

உலக அமைதிக்கு ஒரு வணக்கம்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

புவியெங்கும் நிறைந்திருப்பது அச்சமும் வெறுப்புமாம் செப்புகின்றனர் ஆடவர், கனிந்த வாழ்வின் அறுவடைக் களத்தில் காத்திருப்பதோ இடைவிடாத விதியின் அமைதியில்லாத அரிவாள். ஆயினும், இனிய ஆன்மாவாயிற்றே நான், ஆனந்தமே என் பிறப்பு, சோளக்கதிரேறும் மேற்கூரையிலிருந்து நான் காண்பதோ உன் விடிவெள்ளியின் பொன் மாங்குயில் காட்சியன்றோ! எங்கனம் காப்பேன் யான் புவியின் விருப்பையும், செருக்கையும் எவர் அறிவார் ஒளிர்ந்து சறுக்குமந்த வெள்ளிச் சிறகுகளையும் , மாலைநேரம் கூட்டில் அடையும் அந்த மாடப்புறாக்களையும்? எங்கனம் காப்பேன் உரத்தக் களைப்பிலிருந்து உலகை யான், […]

பேச்சுத்துணையின் வரலாறு…!!!

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

– சு.மு.அகமது மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கமாய் ஒதுங்காத எண்பத்தைந்து வயது புஷ்பம்மாவை அடித்த கனமழைக்கு நான் ஒதுங்கின சாலையோர தென்னவோலை குடிசைக்கடையில் தான் சந்தித்தேன்.ஏற்கனவே பத்து பேர் நின்றிருந்த இடத்தில் இடம் தேடி எதேச்சையாக புஷ்பம்மா நின்றிருந்த இடத்தில் இடம் பிடித்து நின்றுகொண்டேன். ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு ‘ஏன் கண்ணு நெனஞ்சிட்டியா?’. ஆதுர்யமான விசாரிப்போடு பேச்சை துவக்கினார் புஷ்பம்மா.அவரை ஏறிட்டு பார்த்தேன்.சிவப்பு நிற காடா சேலை. கழுத்தில் மஞ்சள்கயிறு.நெற்றியில் குங்குமப்பொட்டு. வகிடெடுத்து வாரின தலை.’சீவி […]

சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் அறங்கள்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலக்கியங்கள் மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பன. மனிதர்களின் வாழ்க்கை இலக்கியங்களில் பதிவுசெய்யப் பெறுகின்றது. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆன இக்கொண்டும் கொடுக்கும் உறவானது படைப்பாளிகளால் மேம்பாடடைகின்றது. படிக்கும் வாசகரால் பயன் கொள்ளத்தாகின்றது. சிலப்பதிகாரம் முதன் முதலாக எழுந்தக் காப்பியம். இக்காப்பிய இலக்கியத்தில் வாழ்க்கையைப் பற்றியும், வாழ்க்கை அறங்கள் பற்றியும் சுவைபட காட்சி அடிப்படையில் படைக்கப்பெற்றுள்ளன. கண்ணகி, கோவலன் போன்ற தலைமைப் பாத்திரங்களின் வழியாகவும், ஐயை, மாதரி […]

துவாரகா சாமிநாதன் கவிதைகள்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

துவாரகா சாமிநாதன் என் வீட்டு கண்ணாடி என் வீட்டின் பின்புறம் 108 வாகனத்தின் ஓயாத அழுகை தெருவின் திருமண மண்டபத்தில் மகிழ்வும் எதிர் வீட்டின் துக்க அனுசரிப்பும் வாழ்வின் சித்திரங்களாக வரைந்து காட்டியது என் வீட்டு கண்ணாடி வாழ்வின் உள்ளீடுகளில் வரைகோடுகளின் வரிகளில் எனது எல்லா பிம்பங்களும் தெளிவாய்த் தெரிகின்றன. என்னை அப்படியே காட்டுகிறது மறைக்காமல் என் பிம்பங்களின் பிரதிபலிப்பில் இயற்கையும் அதனோடு கூடிய வாழ்வும் என்னுள் பனி படலமாய் கண்ணாடி விளிம்புகளில் புகையாய் நானே இயற்கையுமாய்…. […]

உறக்கம்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

நிஷாந்தன் தூங்காமல் அடம் பிடித்து அழுத குழந்தையிடம் கொடுத்தேன் பொம்மை ஒன்றை. சமாதானமடைந்த குழந்தை உறங்கத் தொடங்கியது. பொம்மை மட்டும் விழித்திருந்தது தனியாக.