யாதுமாகியவள்

This entry is part 1 of 21 in the series 27 ஜூன் 2016

  சேயோன் யாழ்வேந்தன் காவல்காரியாய் சில நேரம் எங்கள் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் புலனாய்வு அதிகாரியாய் சில நேரம் எங்களுக்காக அப்பாவிடம் வாதாடும் வழக்கறிஞராய் சில நேரம் எங்கள் பிணக்குகளை விசாரித்து தீர்ப்பு சொல்லும் நீதிபதியாய் சில நேரம் பல வேடம் போடும் அம்மா எப்போதும் வீட்டுச் சிறையில் கைதியாய்! seyonyazhvaendhan@gmail.com

பிளிறல்

This entry is part 2 of 21 in the series 27 ஜூன் 2016

  மான் வேட்டை என்றதும் பூரித்துப் போய்விட்டேன்.அதுவும் முதுமலைக் காட்டில். சவுந்தர் சொன்னதும் மனது முதுமலைக்காட்டிற்குப் போய்விட்டது.250 கி.மீ உள்ள முதுமலைக்குப் போக   முதுமையில்தான் வாய்த்தது என்பது பூரிப்பிற்கான காரணம். 58 வயதில் இப்போதுதான் முதுமலைக்குப் போக வாய்த்திருக்கிறது. அதுவும்  நேரடியாக மான் வேட்டையும் கூட . மான் கறி சாப்பட முடியுமா என்று கேட்டு வைத்தேன். அதற்கு பதிலாகத் தான் சவுந்தர் “ வேட்டையாடி கறி சாப்புடலாம்… அதுவும் மான் வேட்டை “ என்றார். “ […]

சேதுபதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ வனந்தேடி அலையும் சிறுமி ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 3 of 21 in the series 27 ஜூன் 2016

    புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கல்லூரியில் பணியாற்றும் சேதுபதி கவிஞர் மட்டுமல்ல , பட்டிமன்றப்பேச்சாளரும் ஆவார். இது அவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு . ” திரும்பத் திரும்ப எழுதச் சொல்லி, தொல்லை பண்ணுகிறது கவிதை. முல்லைக் கொடி பிணைத்து தேர் விட்டுப் போனவனை ,குன்றேறித் தொடர்ந்த கபிலனின் ஆவி நடுச்சாமத்தில் என்னை உலுக்கி எடுக்கிறது . ” என்று தன் கவிமனம் பற்றிக் குறிப்பிடுகிறார் சேதுபதி . இத்தொகுப்பில் 44 கவிதைகள் உள்ளன. கவிதைகள் […]

யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 3

This entry is part 4 of 21 in the series 27 ஜூன் 2016

 பி.ஆர்.ஹரன்   சிறைப்படுத்தப்பட்ட (Captive) யானைகள் இறந்துபோகும் கொடுமை ஒரு பக்கம் நடந்தேறுகிறது என்றால், அவ்வாறு இறந்துபோவதற்கு முன்பு அவை அனுபவிக்கும் சித்திரவதைகள் எண்ணிலடங்கா. தனிமையும் வேதனையும் துன்பமும் மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட அந்த யானைகள் சிலவற்றின் சித்திரவதைகள் மிகுந்த வாழ்க்கையைப் பார்ப்போம்.   சமயபுரம் கோவில் யானை மாரியப்பன் அனுபவித்த வேதனை   2002-ஆம் ஆண்டிலிருந்து மாரியப்பனை எப்போதும் மூன்று கால்களிலும் இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். அந்த இரும்புச்சங்கிலியானது ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டதாகும் (Oxidised Chain). […]

சொல்லவேண்டிய சில

This entry is part 5 of 21 in the series 27 ஜூன் 2016

  இப்படிச் சொன்னால் ‘தலைக்கனம்’ என்று பகுக்கப்படலாம். ஆனால் இந்த உணர்வு உண்மையானது. ஒரு அற்புதமான எழுத்தாளரை மொழிபெயர்த்த பிறகு, அல்லது ஒரு நல்ல படைப்பை எழுதி முடித்த பிறகு அதற்கென பரிசு பெறுவது என்பது எனக்கும் எனக்கும் அல்லது எனக்கும் நான் மொழிபெயர்த்த மேதைக்கும் இடையேயான தேவையற்ற குறுக்கீடாகவே தோன்றுகிறது. தாஸ்தாவ்ஸ்கியை மொழிபெயர்க்கக் கிடைத்ததே ஆன பெறும் பேறு என்கையில் அதற்கு ஒரு பரிசை தாஸ்தாவ்ஸ்கியை அறிந்த அறியாத, அறைகுறையாக அறிந்த அல்லது அவர் பெயரை […]

விண்வெளிச் சுனாமிக் கதிர்வீச்சு மூன்றாம் பூகாந்த வளையம் தோன்றி மறையக் காரணமாகும்.

This entry is part 6 of 21 in the series 27 ஜூன் 2016

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_embedded&v=c9qKIVlhXpQ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sF_Gbs1yj6w http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CMwdhEKoBdw ++++++++++++ சிறப்பாகப் பேரளவில் ஒளிப்பிழம்பு அலைகளை [Plasma Waves] நாங்கள் நோக்கினோம்.  அண்டவெளிச் சுனாமிபோல் [Space Tsunami] அடித்து அவை பூகாந்தக் கதிர்வீச்சு வளையங்களைச் சுற்றித் தெறித்து, வெளி வளையப் பகுதியை அழித்துச் சென்றன.  அப்போது புரிய முடியாதபடி மூன்றாம் காந்த வளையத்தின் வடிவாக்கம் விளங்கியது. பேராசிரியர் இயான் மாண் [அல்பெர்டா பல்கலைக் கழகம், கனடா] மூன்றாம் பூகாந்த வளைய எழுச்சி இயக்கத்துக்கு […]

நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காண வந்த பிரெஞ்ச் போர்த் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 10

This entry is part 7 of 21 in the series 27 ஜூன் 2016

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   https://youtu.be/Zj4O560cHaU https://youtu.be/MJ85Fkz-VaE பிரமிடுகள் காலத்தில் தோன்றிய கால்வாய் பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய் கிரேக்கர், ரோமர் கைவிட்ட கால்வாய் நெப்போலியன் திட்டம் துவங்கிய கால்வாய் பிரெஞ்ச் நிபுணர் இறுதியில் பூர்த்தி செய்த பெருநீளக் கடல்மட்ட சூயஸ் கால்வாய். ++++++++ ‘மகா பிரமிட் கூம்பகம் நான்கு திசை முனைகளுக்கு [Four Cardinal Points: North, South, East & West] ஒப்பி நேராகக் கட்டப் பட்டிருந்தது! கூம்பு […]

மீனாட்சி கோபாலகிருஷ்ணனின் மின்னும் கைவண்ணங்கள்!

This entry is part 8 of 21 in the series 27 ஜூன் 2016

இளம் வயதிலேயே வேலைக்குச் செல்ல ஆரம்பித்து 40 வருடங்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஸ்டெனோகிராஃபராக, செக்ரடரியாகப் பணிபுரிந்துவந்தவர் திருமதி மீனாட்சி கோபாலகிருஷ்ணன். எந்த வேலையைச் செய்தாலும் அதில் 100% அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் ஈடுபடுவது அவர் இயல்பு. இரண்டு வருட்னக்களுக்கு முன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு என்றால் இளைப்பாறுவதும், உறங்குவதும் இல்லை. மனதுக்குப் பிடித்த வேறு வேலைகளில் ஈடுபடுவது என்கிறார் மீனாட்சி. பெங்களூரிலுள்ள தன் தங்கை லட்சுமி ஆர்வத்தோடு ஈடுபடும் கைவேலைகளைப் பார்த்து அவற்றில் ஆர்வம் கொண்டார். […]

ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்

This entry is part 9 of 21 in the series 27 ஜூன் 2016

  செ. கிருத்திகா   சுப்ரபாரதிமணியன் சுமார் அய்ம்பது  நூல்கள் எழுதியிருப்பவர். அதில் 13 நாவல்கள் அடங்கும். பயணக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். ” மண்புதிது  “என்று ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. மற்றும் நூற்றுக்கணக்கான பயணக்கட்டுரைகள் பிரசுரமாகியிருகின்றன.   அவையெல்லாம் புத்தக வடிவம் கொண்டிருக்கிறதா  என்று தெரியவில்லை. இப்போது  என்சிபிஎச் வெளியீடாக “ எட்டுத் திக்கும்” என்ற பயணக்கட்டுரை நூல் வெளிவந்திருக்கிறது. அதில் இங்கிலாந்து , ஜெர்மனி,பிரான்ஸ், வங்காள தேசம், மலேசியா, சிங்கப்பூர்  போன்ற நாடுகளில் கண்டது, இந்தியாவின் பல முக்கிய […]

குறிப்பறிதல்

This entry is part 10 of 21 in the series 27 ஜூன் 2016

  சேயோன் யாழ்வேந்தன் பண்பலை பாடும் பிற்பகல் வேளையில் காடு கழனியைச் சுற்றிப்பார்க்க பேரப்பிள்ளைகளோடு புறப்படுவிட்டார் அப்பா. தொழுவத்து மாடுகளைக் குளிப்பாட்ட குளக்கரைப் பக்கம் ஓட்டிக்கொண்டு போகிறாள் அம்மா. பக்கத்து தோட்ட வீட்டுக்கு பழமை பேசப் போகிறாள் அத்தை. அடுக்களையை ஒழித்துக்கொண்டிருக்கிறாள் அவள் முதுகில் இந்தக்காட்சிகளை அவதானித்தபடி… seyonyazhvaendhan@gmail.com