நிலவில் இருட்டு

This entry is part 2 of 10 in the series 27-மார்ச்-2016

என். துளசி அண்ணாமலை “அண்ணி, இவர்தான் நான் சொன்ன என் உறவினர், திருச்செல்வம்.என் அண்ணா திருமணம் செய்த வகையில் சொந்தம்.” ரமாவின் அறிமுகத்தைத் தொடர்ந்து, வீட்டில் உள்ள மற்றவர்களின் இன்முக வரவேற்பும், தேநீர் உபசரிப்பும் தொடர்ந்தது. அண்ணி கலா புன்முறுவலுடன் ரமாவைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டாள்.விழிகள் திருச்செல்வத்தை ஆராய்ந்தன. ‘சாந்தமாகத் தெரிந்தான். நல்ல வசீகரமான முகம்.உயரமான தேகம்.கல்வியாளன், நல்லிதயம் கொண்டவன்.அவன் நல்லவன், தீர்க்கமானவன், ஆரோக்கியமான சிந்தனைகளைக் கொண்டவன் என்று பரந்த நெற்றியும், நீண்ட நாசியும், மாறாத புன்னகையும் […]

திருப்பூர் இலக்கிய விருது 2016

This entry is part 3 of 10 in the series 27-மார்ச்-2016

திருப்பூர் இலக்கிய விருது 2016 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு). 2014-15 ஆண்டில் வெளிவந்த நூல்களில் ஒரு பிரதியை மட்டும் அனுப்புங்கள் : முகவரி 94, எம் ஜி புதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம்,பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, திருப்பூர் 641 604 ( 221 221 0 ) கடைசி தேதி : 1/5/2016 Srisuganthi2014@gmail.com திருப்பூர் இலக்கிய விருது 2015: ( கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் […]

கவிஞனாகிறேன்

This entry is part 4 of 10 in the series 27-மார்ச்-2016

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) இதை இதை எழுதவேண்டுமென்று எண்ணியதில்லை எண்ணுவதுமில்லை அது அது வந்து நச்சரிப்பதால்தான் எனது எழுதுகோல் உச்சரிக்கிறது அதுவரை தெரியாதது அடுத்தடுத்து தெரிகிறது இருட்டுக்குள் வெளிச்சம் வழிகாட்டுகிறது சூத்திரம் இல்லாமல் சூட்சுமம் அவிழ்கிறது திறவுகோல் இல்லாமல் பூட்டுகள் திறக்கின்றன பார்ப்பதால் உடன் பாதிக்கப்படுகிறேன் எண்ணுவதால் என்னை இழந்துவிடுகிறேன் கவனம் கூடி கரைந்துவிடுகிறேன் பறவையாகி பறந்துவிடுகிறேன் விதவிதமாக பொருள்புரிகிறேன் புரிந்ததைப் புதிதாய்ப் புரியவைக்கிறேன் அதிசயம்கண்டு அசந்துவிடுகிறேன் வியப்புற்று என்னையே வியக்கிறேன் ஆனந்தமாய் ஒரு கவிதையடைகிறேன் கவிதையைக்கண்டு கர்வமடைகிறேன் […]

’மவுஸ்’

This entry is part 5 of 10 in the series 27-மார்ச்-2016

கே.எஸ்.சுதாகர் காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது. செய்தி இதுதான். |காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.| ● எத்தகைய […]

நிறை

This entry is part 6 of 10 in the series 27-மார்ச்-2016

மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர நினைவில் எதுவுமில் லை காந்தமாக ஒரு தேவை நினைவூட்டலாக ஒரு அதிகார உரசல் மனவெளியைத் தோண்டித் தோண்டி ஊற்று நீர் தேடும் என் குறைகளை நீக்க ஒண்ணாது உள்ளே என்ன குறை என்றே அவரோகணம் பொம்மலாட்டக் கயிறு மட்டுமல்ல பொம்மைகளும் மாற்றிக் கொள்ளும் மேடையில் தன்வயமாயில்லாமல் இருப்பை வடிவை கைகளை நிறைவு தந்த புனைவுக் கவிதையின் கதையின் மூலமாய் ஒரு நிறைவின்மை

பிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீண்ட கடலடிக் கணவாய் 

This entry is part 7 of 10 in the series 27-மார்ச்-2016

  [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா  https://youtu.be/L7GFFntXi8I முன்னுரை:   13,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் தீவு இயற்கையாகவே இருந்த குறுகிய நிலச்சந்தி மூலம் ஈரோப்புடன் இணைந்திருந்ததாகத் தளவியல் ரீதியாக அனுமானிக்கப் படுகிறது! கி.பி.1750 ஆம் ஆண்டிலே இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் கடலடிக் குகை அமைக்க வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் இருந்தது வரலாற்றில் அறியப் படுகிறது! பிரென்ச் அதிபதி நெப்போலியன் ஆணையின் […]

தொடுவானம்-       113.கற்றாருள் கற்றார்

This entry is part 1 of 10 in the series 27-மார்ச்-2016

113.கற்றாருள் கற்றார் அண்ணாவின் ஆங்கில உரையைக் கேட்டு நாங்கள் தேனுண்ட வண்டானோம். அரங்கம் ஆச்சரியத்துடன் அவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்தது! புலைமை மட்டுமல்ல சபைக்கு ஏற்றவகையில் அவர் பேசியது மேலும் வியப்பையூட்டியது. ” கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். ” என்னும் குறளுக்கேற்ப அண்ணாவின் உரை அமைத்திருந்தது. அண்ணா கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மதங்கள் மீது பற்றுதல் இல்லாதவர். அவர் தமிழக முதல்வர். அனைத்து தமிழக மக்களையும் அணைத்துச் செல்லும் பொறுப்பு […]

தாட்சண்யம்

This entry is part 8 of 10 in the series 27-மார்ச்-2016

-எஸ்ஸார்சி பட்டுக்கோட்டையிலிருந்து என் ஆருயிர் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார். ‘பட்னாகர் கவிதைகள் கொஞ்சம் மொழிபெயர்த்துக்கொடுங்க இலக்கியச்சிறகு இதழ்ல வெளியிடலாம்னு இருக்கேன் ‘ . நண்பர் ராமலிங்கம் பட்டுக்கோட்டையிலே இருந்துகொண்டு சிற்றிதழ்கள் ஆங்கிலத்தில் ஒன்றும் தமிழில் ஒன்றும் நிறைவோடு கொண்டு வருகின்றார். தமிழ் இலக்கிய இதழ் ‘இலக்கியச்சிறகு’..ஆங்கிலம் ‘ஷைன்’. பட்னாகரின் ஆங்கிலக்கவிதைகள் சில ஷைன் இதழில் வெளிவரவே அந்த ப்பிரதியோடு இலக்கியச்சிறகு ஒன்றும் அவருக்கு அனுப்பி விட்டார்கள். தவறுதலாகத்தான் இது நிகழ்ந்துவிட்டிருக்கிறது. அனேகம் பேருக்கு இப்படி இரண்டு […]

புகழ் – திரை விமர்சனம்

This entry is part 9 of 10 in the series 27-மார்ச்-2016

சிறகு இரவி 0 ஆங்கிலேயர்கள் விளையாடிய மைதானம். அதை அபகரிக்க எண்ணும் அரசியல் கூட்டம். இன்னொரு வண்ணத்தில் ‘மெட்ராஸ் ‘ கதை! 0 நியாயத்துக்காக போராடும் புகழும் அவனது நண்பர்களும், பஞ்சாயத்து தலைவர் தாஸ் என்கிற அரசியல்வாதியால் பகடைக்காய்களாக உருட்டப்படுகிறார்கள். பல தலைமுறைகளாக அவர்கள் விளையாடும் மைதானம், மந்திரி ஒருவரால், தாஸின் உதவியோடு அபகரிக்கப்படும்போது புகழ் வெகுண்டு எழுந்து, அவர்களை வீழ்த்துகிறான். தன் காதலி புவனாவை கைப்பிடிக்கிறான். புகழாக, லோ பட்ஜெட் மாஸ் ஹீரோவாக புதிய பரிமாணம் […]

விடாயுதம் – திரை விமர்சனம்

This entry is part 10 of 10 in the series 27-மார்ச்-2016

சிறகு இரவி 0 அவசரக் கோலமாக ஒரு ஆவி யுத்தம்! கொட்டாவியை வரவழைக்கும் அலங்கோலம்! 0 முன்னாள் மந்திரி சித்திரவேலும் அவனது கூட்டாளிகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்ட நெல்லி எனும் பெண்ணின் ஆவி, அவனது மகள் தேவதையின் உடலில் புகுந்து அவர்களை பழிவாங்கும் கதை! ஆஸ்கர் விருது வாங்கிய ‘ஸ்லம் டாக் மில்லியனர் ‘ பட நாயகி டன்வி லோன்கர் ( Tanvi Lonkar ) தேவதை வேடத்தில் அதிகம் பேசாமல் வெளிறிப் போகிறார். ஜே.கே.ஆதித்யா மந்திரி […]