திரைவானில் நானோர் தாரகை !

This entry is part 1 of 14 in the series 19 நவம்பர் 2017

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா  +++++++++++++   எப்படித் தோன்ற நீ விரும்புகிறாய் என்றோர் பெண்ணைக் கேட்ட போது, கண்ணா ! உனக்குத் தெரிய வில்லையா ? திரைவானில் நானோர் தாரகை யாய் மின்னிட விழைகிறேன். அதற்குள் நீ எனக்கு இதைச் செய்யலாம்; என் காரை நீ ஓட்டு ! திரைவானில் தாரகையாய் நானாகப் போகிறேன் !     கண்ணா ! நீ என் காரை ஓட்டு ! காதலிக் […]

” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “

This entry is part 2 of 14 in the series 19 நவம்பர் 2017

  அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்விப்பணியில் முன்னுதாரணமாகத்திகழும் அயராத செயற்பாட்டாளர்                                                 முருகபூபதி –  அவுஸ்திரேலியா   ஒவ்வொருவருக்கும் கனவுகள் வருவது இயல்பானது.   மனதில் தங்கிவிடும் அல்லது நீண்டகாலம் நினைவிலிருந்து மறைந்துவிடும் கனவுகளையும் கடந்து வந்திருப்போம். இளைய தலைமுறையினரைப்பார்த்து பாரத ரத்னா அப்துல்காலம், ” கனவு காணுங்கள்” எனச்சொன்னார். அதன் அர்த்தம் தொடர்ந்து உறங்கவும் என்பதல்ல. சிறுபராயத்தில் பாடசாலைகளில் குடும்பத்தில் எதிர்காலத்தின் என்னவாக வரப்போகிறாய்…? என்ற பொதுவான ஒரு கேள்வியைக்கேட்பார்கள். ஒவ்வொருவரும் தமது […]

குடும்பவிளக்கு

This entry is part 3 of 14 in the series 19 நவம்பர் 2017

  என் தொலைபேசி துடித்தது. ஊரிலிருந்து தம்பிதான் பேசுகிறான். வாழ்க்கையின் முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கும் அக்காவைப் பற்றித்தான் பேசுவான். தெரியும். கிடத்தப்பட்ட மெல்லிய முங்கில் கழிபோல் இருக்கிறது அக்கா. சீரணமும் சுவாசமும் மட்டும் வேலை செய்கிறது. மற்றபடி உடம்பே உறைந்துவிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்தான் பார்த்துவிட்டு வந்தேன். அக்கா முடிவுரைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு போகலாம் என்றிருந்தேன். சே! எவ்வளவு குரூரமான மனிதன் நான். ஒவ்வொரு தடவை தம்பி அழைக்கும் போதும் இரவுக்குப் பின் பகல் என்பதுபோல […]

மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு

This entry is part 14 of 14 in the series 19 நவம்பர் 2017

(France – Culture என்ற பிரெஞ்சு வானொலி  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் கு நாட்கள் ஒரு நாளைக்கு 50 நிமிடம் என்ற கணக்கில் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டினை முன்னிட்டு சிறப்பு ஒலிபரப்பை ஏற்பாடு செய்திருந்த து, அதைக் கேட்டதின் எதிரொலி)   ரஷ்யப்புரட்சிக்கு  வயது   நூறு ஆண்டுகள்.  புரட்சி என்ற சொல்லுக்கும் தள்ளாடும் வயது. இன்றைக்கு 1917ஆம் ஆண்டு புரட்சியையும், அதனை முன்னின்று   நடத்திய ஹீரோக்களையும் இன்றைய ரஷ்யாவில் பொதுவுடமைஅபிமானிகளைத் தவிர பிறர் நினைவு […]

ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்

This entry is part 4 of 14 in the series 19 நவம்பர் 2017

  சங்க நூல்களான எட்டுத்தொகை நூல்களில் ‘ஐங்குறு நூறு’ தனிச் சிறப்பு பெற்றதாகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐவகை நிலங்களைப் பற்றி ஒவ்வொரு நிலத்திற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் கொண்ட நூல் இதுவாகும். இதில் நெய்தல் பற்றிய நூறு பாடல்களை எழுதியவர் அம்மூவனார் என்பவர் ஆவர். நெய்தல் பற்றிய பாடல்கள் பத்துப் பத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ’ஞாழப்பத்து’ என்பதில் அக்கால மக்களின் திருமண நிகழ்வுகள் சிலவற்றை அறிய முடிகிறது. ஞாழல் […]

மருத்துவக் கட்டுரை – சிறுநீர் கிருமித் தொற்று

This entry is part 5 of 14 in the series 19 நவம்பர் 2017

            சிறுநீர் கிருமித் தொற்று ( Urinary Tract Infection ) பரவலாகக் காணப்படும் தொற்றாகும். இது குறிப்பாக பெண்களிடம் அதிகமாக உண்டாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இது அதிகமாகவே ஏற்படலாம். இதை சாதாரண சிறுநீர் பரிசோதனை வழியாக அறியலாம்.           இதை முதன்முதலாகக் கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை மூலமாக குணமாக்கலாம்.  ஆனால் சிலருக்கு இப் பிரச்னை அடிக்கடி ஏற்படலாம். அதை முறையாக பரிசோதனைகள் செய்து, அதற்கேற்ப முறையான சிகிச்சைப் பெறவேண்டும்.திரும்பத் திரும்ப இவ்வாறு கிருமித் தோற்று உண்டானால் அதனால் வேறு […]

நமக்கு மட்டுமான ரகசியங்கள்…..

This entry is part 6 of 14 in the series 19 நவம்பர் 2017

    குழந்தையின் ஒரு காதுக்குள் கிசுகிசுக்கப்பட்ட ரகசியத்தை அது குடுகுடுவென்று கையிலெடுத்துக்கொண்டு ஒரு குட்டிப்பந்தாக்கி தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டே போனது. ரகசியத்தின் வார்த்தைகளை புரிந்தும் புரியாமலுமாய் உரக்கப் பாட்டுப்பாடிக்கொண்டே ஓடியது. கேட்டவர்கள் கண்ணடித்துச் சிரித்தார்கள்; தலையிலடித்துக்கொண்டார்கள். நமக்கெதற்கு வம்பு என்று அலுத்துக்கொண்டபடியே அடுத்த வீட்டுக்குச் சென்று விலாவரியாகச் சொல்லிவைக்க(எதற்கும் இருக்கட்டுமே) ஆயத்தமானார்கள்…..   ஒரு காதுக்குள் மட்டும் கிசுகிசுக்கப்பட்டாலும் குறுஞ்செய்தியாய் ஓராயிரம் பேருக்குத் தெரியப்படுத்தினாலும் சரிசமமாகவே சாகடிக்கப்படுகிறது ரகசியம்.   தெருவில் வீசியெறியப்பட்டுவிடும் அதன் புனிதம் தலையிலிருந்து […]

கடிதம்

This entry is part 7 of 14 in the series 19 நவம்பர் 2017

ஐயா, ’கிழக்கிலைங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி செங்கதிரோன்’ என்ற கட்டுரை ஏற்கனவே பல ஊடகங்களில் வெளிவந்துள்ளது என்பதை அறியத் தருகின்றேன். அக்கினிக்குஞ்சு http://akkinikkunchu.com/?p=44870 மற்றும் தமிழ்முரசு http://www.tamilmurasuaustralia.com/2017/11/blog-post_49.html செல்லமுத்து

பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறான சுயத்தோற்றமா ?

This entry is part 8 of 14 in the series 19 நவம்பர் 2017

Posted on November 17, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ஓர் அப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஓர் பிரபஞ்சம் உண்டாக்கப் படவேண்டும். அகிலவியல் விஞ்ஞானி கார்ல் சேகன். பிரபஞ்சத்தை மாபெரும் மகத்தான ஒரு நூலகமாக உருவகித்துப் பார்த்து கருத்துரை கூறியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  அந்த நூலகத்தின் கோடான கோடி நூல்களை எழுதியது யார் ?  எப்படி அது எழுதி வைத்துள்ளது ? ஏன் எழுதி இருக்கிறது ?  எப்போது எழுதியவை அந்த நூல்கள் என்றெல்லாம் […]

மீண்டும் நான்

This entry is part 9 of 14 in the series 19 நவம்பர் 2017

சிவசக்தி வாழ்வில் ஏதோ தேடி கிணற்றை எட்டிபார்த்தேன் தண்ணீர் கூட்டம் அசைவால்  அதிர்ந்தது சிறுகல்லை வீசினேன் சிற்றலை சிரித்தது அமைதியானது.. என் மௌனம் நிலையில்லாமல் நின்றது கடலின் மடியில் அமர்ந்தேன் அலையின் வேகம் குறையவில்லை என்னைபோல் கரையில் கூட்டம் எதை தேடுகிறது சற்று துணிந்தேன் நீந்தக் கற்றுகொள்ள கடலில் குதித்தேன் அலை கரைஒதுக்கியது மீண்டும் குதித்தேன் சற்றுதூரம் கடந்தேன் சிலரால் கரையில் தள்ளப்பட்டேன் இம்முறை படகை வாடகை எடுத்தேன் என் பயண அனுபவங்கள் எவ்வளவு பெரிது? கற்றுகொண்டேன் […]