முடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.

This entry is part 1 of 16 in the series 22 நவம்பர் 2015

மின்ஹாஸ் மர்ச்சண்ட் தீவிரவாத இஸ்லாமை நிரந்தரமாக தோற்கடிக்க ராணுவரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் இரண்டு முனைகளிலும் போரை நடத்தவேண்டும் இஸ்லாமிய காலிபேட் (ISIS) பாரீஸில் நடத்திய தாக்குதல்களும், G20 உச்ச மாநாடு நடைபெறும் துருக்கியில் தடுக்கப்பட்ட தற்கொலைகுண்டு தாக்குதலும் இறுதியான தாக்குதல்கள் அல்ல. மேற்கத்திய நாடுகளின் தலைநகரங்களில் இது போல தாக்குதல்கள் நடைபெறும் என்று பிரிட்டனின் உளவுத்துறை தடயங்களை பெற்றுள்ளது. பிரிட்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் உச்சகட்ட தீவிரத்தை எட்டியதாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பிரிட்டனின் சிறப்பு காவல்துறை லண்டனின் […]

உலகெங்கும் மசூதிகளில் இமாம்கள், “காபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்

This entry is part 5 of 16 in the series 22 நவம்பர் 2015

தாரிக் ஃபடா (September 25, 2015) நான் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது: ஜும்மா என்று அழைக்கப்படும் வெள்ளிக்கிழமை கூட்டுத்  தொழுகையின் முன்பு, மசூதி இமாம்கள் ஒரு குறிப்பிட்ட  பிரார்த்தனையை செய்கிறார்கள். இந்த பிரார்த்தனையில்  இமாம்கள் அல்லாவிடம் “காபிர்கள் மீது முஸ்லீம்கள் வெற்றிபெற” வேண்டுகிறார்கள். ”கௌம்  அல் ஃகாபிரூன் ” (காஃ பிர்களின் தேசம்) என்ற அரபிய வார்த்தை யூதர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், நாத்திகர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் போன்ற எல்லா முஸ்லீமல்லாதவர்களையும் […]

நித்ய சைதன்யா கவிதை

This entry is part 6 of 16 in the series 22 நவம்பர் 2015

 நித்ய சைதன்யா பார்வைக்கோணம் தரைக்குமேல் விரியும் வானம் இருள்மொக்கு அவிழும் போது ஒளிப்புள்ளிகளாய் மினுங்கும் நிலா வெறிக்கும் சமயம் வந்துகவியும் பாட்டியின் தனிமைத்துயர்   இரவின் குரல்கொண்ட தொடுகை இட்டுச்செல்கிறது விண்ணிற்கு   வெளிச்சத்துண்டுகளாய் சிதறிக்கிடக்கிறது விளையாட்டுப் பொருள்போல் நகரம்    

வெளி ரங்கராஜன் – இரு நூல்கள்

This entry is part 2 of 16 in the series 22 நவம்பர் 2015

 (`வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்` தொகுப்புக்கு(அடையாளம் வெளியீடு) பீமா இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ பாளையத்தில் இயங்கும் பீமராஜா ஜானகிஅம்மாள் அறக்கட்டளை சார்பாக இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ.10000/- மதிப்புள்ள இந்த விருது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள நிகழ்கலைக் கலைஞர்களுக்கு முக்கியமாக அகாலத்தில் மறைந்த ஒப்பனைக் கலைஞர் வேலாயுதம் அவர்களுக்கு வெளி ரங்கராஜன் அர்ப்பணித்திருக்கிறார்.) வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள். ஆசிரியர்; வெளி ரங்கராஜன். நம்மோடு வாழ்ந்து, பல நிகழ்கலைப் படைப்பாளிகள், […]

துல்லிய ஒப்பற்ற நவீனப் போலிப் பூதக் கணினி வடிவமைப்பு முறையில் பிரபஞ்சப் படிப்படித் தோற்ற வளர்ச்சி ஆய்வுகள்

This entry is part 7 of 16 in the series 22 நவம்பர் 2015

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++ பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறித் துகளாகித் துண்டமாகிப் பிண்டமாகித் துணுக்காகிப் பிண்டத்தில் பின்னமாகி அணுவாகி, அணுவுக்குள் அணுவான பரமாணு வாகித் திரண்டு பல்வேறு மூலகமாய்ப் பின்னி மூலக்கூறாகி தொடர்ப் பிளவில் பேரளவுச் சக்தி வெளியேற்றி நுண்துகள்கள் பிணைந்து பேரொளி வீசிப் பிரமாண்டப் பிழம்பாகி, விண்மீன்களாகி பால்மய வீதியாகி, அதனுள் நீந்தும் பரிதி மண்டலமாகிக் கோள்கள் பம்பரமாய்ச் சுழலும் பந்துகளான, பிரபஞ்சத் தோற்ற […]

செந்தி கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 8 of 16 in the series 22 நவம்பர் 2015

    திருமங்கலம் அருகில் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் செந்தி [ 1968 ] ‘ நினைவுகளுக்குப் பின் — ஹைக்கூ ‘ , ‘ பிறிதொன்றான மண் ‘ போன்ற கவிதைத் தொகுதிகளுக்குப் பின் இந்த ‘ தனித்தலையும் செம்போத்து ‘ தொகுப்பைத் தந்துள்ளார். இவர் ‘ குல சாமி கதை ‘ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். இந்நூல் முதல் பதிப்பு வெளிவந்த அடுத்த ஆண்டே இரண்டாம் பதிப்பு வந்துள்ளது. இவர் கவிதைகள் […]

தொடுவானம் 95. இதமான பொழுது

This entry is part 9 of 16 in the series 22 நவம்பர் 2015

நீண்ட விடுமுறையை நிதானமாகக் கழிக்க முடிவு செய்தேன். தேர்வுக்காக இரவு பகலாக பாடநூல்களுடன் கழித்துவிட்டேன். இனி மன மகிழ்ச்சிக்காக நல்ல துணையுடன் கழிப்பது உகந்தது. ஒரு சூட் கேஸ் நிறைய துணிமணிகளை அடுக்கிக்கொண்டேன், வட மாநிலங்களுக்குச் செல்பவர்கள் சென்னை சென்று ” சென்ட்ரல் ஸ்டேஷனில் ” இரயில் ஏற வேண்டும். நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு சென்னை புறப்பட்டுவிட்டேன். இந்த முறை காட்பாடியிலிருந்து புகைவண்டி மூலம் சென்றோம். அது பாதை வழி. அரக்கோணம் வழியாக சென்னை சென்றது. அந்த […]

அவன் அவள் அது – 11

This entry is part 10 of 16 in the series 22 நவம்பர் 2015

        இந்த அளவுக்கு உன் சித்தப்பனை மதிச்சு நடந்த விஷயம் முழுவதையும் நீ எங்கிட்டே சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம்… நிதானமாகச் சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தார் சேதுராமன். தலை குனிந்தவாறே நின்றிருந்தான் கண்ணன். நேற்று நீ ஆபீஸ் போயிருந்தப்போ உனக்குத் தெரியாமே பத்திரிகைகளிலே வந்த உன்னுடைய கதைகளையெல்லாம் எடுத்துப் படிச்சேன். நீ தப்பா நினைக்க மாட்டேன்னு நினைக்கிறேன். இந்தத் துறையிலே முன்னேறணும்ங்கிற வெறி உன்னை கொஞ்சம் ஆபாசமா எழுதத் தூண்டியிருக்கு. இதை நீ ஒத்துப்பேன்னு நினைக்கிறேன். […]