ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

This entry is part 4 of 4 in the series 13 அக்டோபர் 2019

இருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப் பார்த்துப் புலமுவதைவிட அதைப் போக்க நம்மாலானதைச் செய்வது, ஒரு சிறு அகல்விளக்கையேனும் ஏற்றிவைப்பது மேல். சமூகத்தின் இருள் என்பது அறியாமை, ஏற்றத்தாழ்வுகள் போன்ற அதன் சீர்கேடுகள். இவை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பரவியிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்தச் சமுதாயம் அடர் இருளில் மூழ்கியிருக்கும். சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவர்கள், சக மனிதர்களை நேசிப்பவர்கள் தனிமனிதர்களாகவோ, ஒத்த கருத்துள்ள மனிதர்களின் ஒரு குழுமமாகவோ இந்த இருளைக் களையும் செயலில் இறங்குகிறார்கள். சமூகத்தைப் பீடித்திருக்கும் பல்வேறு இருள்களில் அறியாமை, […]

4. புறவணிப் பத்து

This entry is part 3 of 4 in the series 13 அக்டோபர் 2019

புறவு என்பது முல்லை நிலக் காட்டைக் குறிக்கும். கார்காலத்தில் அந்நிலம் அழகாக விளங்கும். அவன் அரசர் பொருட்டு வினை மேற்கொண்டு அவளைப் பிரிந்தான். அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் அவள் வருந்துகிறாள். அவன் செல்லக்கூடிய வழி கொடுமையானதாயிற்றே என அவள் அஞ்சுகின்றாள். அப்பொழுது, “இல்லை காடு அழகாக விளங்குகிறது” என்று புறவின் அழகு நலங்களைச் சொல்வதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. =========== 1.நன்றே, காதலர் சென்ற ஆறே அணிநிறை இரும்பொறை மீமிசை மணிநிற உருவின தோகையும் உடைத்தே.       […]

தில்லிகை வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு அழைப்பிதழ்

This entry is part 2 of 4 in the series 13 அக்டோபர் 2019

தில்லிகை  வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு  அழைப்பிதழ் இணைப்பில்… தலைப்பு :  காந்தியம் இன்றைய தேவை உரையாளர் : ர. சதீஷ் முதுகலை மாணவர் தில்லி பல்கலைக்கழகம், புதுதில்லி தலைப்பு : நவீன இந்தியாவிற்கு காந்தியடிகள் உரையாளர் : அ. அண்ணாமலை இயக்குநர் தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுதில்லி மறைந்த தெட்சிணாமூர்த்தி அவர்கட்கு அஞ்சலி முன்னதாக நிகழும்.   12 அக்டோபர் 2019,  சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, திருவள்ளுவர் அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம்,  இராமகிருஷ்ணபுரம் – புதுதில்லி. வருக! வருக !! dhilligai@gmail.com  www.facebook.com/dhilligai  www.dhilligai.blogspot.in