மன தைரியம்!

This entry is part 23 of 23 in the series 14 அக்டோபர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி நேற்று காலையில் கண் விழித்த போது, அப்படி ஒரு விசித்திர அனுபவம் ஏற்படும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அன்று முழுவதும் அதைப் பற்றிய நினைப்பே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் நேற்று நடந்தது அப்படியே என் கண் முன்னால் நிற்கிறது. எங்கள் வீட்டில் எப்போதும் சைவ உணவுதான் என்பதால், ஞாயிற்றுக்கிழமை என்றால் மதிய உணவுக்கு காளான் பிரியாணியோ அல்லது பன்னீர் பிரியாணியோ, அதுவும் இல்லாவிட்டால் காளான் குழம்போ […]

உத்தமம் INFITT – உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் மாநாடு…

This entry is part 21 of 23 in the series 14 அக்டோபர் 2012

கோவிந்த் கருப் ( Govind Karup ) ” கூடுவோம், கொண்டாடுவோம்.. நமது இனம் தலைநிமிர அறிவுத் தமிழ் நிலை உயர்த்துவோம்… “ ( கோவிந்த் கருப் ) மொழி நமது முக அடையாளம்… அதன் கருத்தாற்றல் நமது அக அடையாளம்… தமிழ் நமக்கு நெஞ்சம் நிமிர்த்தும் வலிமையை தந்திருக்கிறது…. கூடிப் பழகும் உலக வாழ்வில் நாம் கூனிக் குருகாமல் இருக்க தமிழ் நமக்கு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது… பொருளாதார காரணங்களுக்காக நாம் இடம் பெயர்ந்து போனாலும் […]

அக்னிப்பிரவேசம்- 5

This entry is part 20 of 23 in the series 14 அக்டோபர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   பாவனா இன்டர் மூன்றாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். ஏற்கனவே எல்லோரும் எதிர்பார்த்த விஷயம் என்பதால் யாருக்கும் வருத்தம் ஏற்படவில்லை. தொடர்ந்து மேல்படிப்புப் படிக்கும் ஆர்வம் கொஞ்சம் இல்லாமல் போய்விட்டது. வீட்டுப் பொறுப்பு முழுவதும் அவள் தலையில் விழுந்தது. விஸ்வம் வரன் தேடவேண்டும் என்று முடிவு செய்தான். பாவனாவின் அழகிற்கு வரன் கிடைப்பது கஷ்டம் இல்லை என்று நினைத்துவிட்டான். ஆனால் பள்ளிக்கூடம், வீடு, இருக்கும் […]

கிழவனும் கடலும் ஒரு வாசகனின் புரிதலில்

This entry is part 14 of 23 in the series 14 அக்டோபர் 2012

தென்னாளி.   கிழவனும் கடலும் என்னும் ஹெமிங்வேவின்  படைப்பு ஒரு குறியீட்டு புதினமாகும். சாண்டியாகு என்னும் மீன் பிடிக்கும் கிழவரே புதினத்தின் கதைத் தலைவர். ஒரு மனிதன்  வெற்று அதிஷ்ட்டத்தின் மூலமோ  பிறரது உதவி அல்லது தயவின் மூலமோ ஒருபோதும்வெற்றிக் கனியைப் பரிக்கமுடியாது என்னும் அழுத்தமான செய்தியயே   படைப்பு துள்ளியமாக வலியுறுத்துகிறது.  லட்சிய வாழ்க்கையில் தடைகள் பல வரினும் இடையூருகளும் குறுக்கீடுகளும் ஏற்படினும்  ஒரு மனிதன் ஒருபோதும் தான் அடையத் துடிக்கும்  மேலான குறிக்கோளை  கை விடலாகாது என்பதும்,நாம் […]

எதிர் வினை!

This entry is part 19 of 23 in the series 14 அக்டோபர் 2012

காத்தமுத்துப் பேத்திக்குக் காதுவரை வாய் காட்டுக் கூச்சல் போடும் காது கிழியப் பேசும் கட்டிக்கப் போகிறவனுக்குக் கஷ்டம்தான் என்பர் சொந்தங்களுக்கு இடையேயான உரையாடல்களிலும் கூட சந்தம் வைத்துக் கத்தும் சந்தைக்கடை தோற்கும் ஒன்றுமில்லா விடயத்திலும் கத்திப் பேச அதற்குக் காரணங்கள் இருக்கும்! பழநியப்பன் பேரனோ பரம சாது சொற்ப டெஸிபலுக்கே சுருங்கிப் போகும் முகம் கண்களைப் பொத்திக்கொண்டு காது மடல்களைக் கைகளால் மடிப்பான் ஒலி கலந்த வார்த்தைகளைப் பல சமயங்களில் புன்னகையோ தலையசைப்போ கொண்டு எதிர்கொள்வான் நான்கு […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32

This entry is part 18 of 23 in the series 14 அக்டோபர் 2012

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்.     மனம் விட்டுப் பேசுகின்றேன் இது உளவியல் பகுதி. இனிய இல்லறத்திற்கு வழிகாட்டும் பகுதி. அந்தரங்கம் புனிதமானது. அது அர்த்தமற்றதாகிவிடாமல் பாதுகாக்க மனம் திறந்த பேச்சு தவறில்லை. நமது இலக்கியங்களில் அகப்பாடல்கள் என்று தனித்து வந்தாலும் போர்ப்பரணி பாடும் பொழுது கூட ஓர் கடை திறப்பு முன்னிறுத்துகின்றோம். வாழ்வியல் வரலாற்றில் அகம்பற்றிய அலசல் இன்றியமையாதது. நம்மை ஆட்டிப் படைக்கும் சில பிரச்சனைகளையாவது ரண சிகிச்சை செய்து […]

கைப்பீயத்து என்றால் என்ன?

This entry is part 17 of 23 in the series 14 அக்டோபர் 2012

கர்னல் காலின் மெக்கன்ஸி (17541821) ஒரு வித்தியாசமான மனிதர். கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றச் சென்னைக்கு வந்து முதன்மைத் தலைமை நில அளவையாளராகப் பதவி உயர்வு பெற்று, விரைவிலேயே இந்தியா முழுமைக்குமான முதன்மைப் பிரதம ஆய்வாளராகவும் உயர் பதவி வகித்தவர். தாம் பணியாற்றிய கீழ்த்திசை நாடுகளின் சமூகக் கட்டமைப்பு, கலாசாரம், கலைகள், கைவினைத் திறமைகள், சமய நம்பிக்கைகள் ஆகியவற்றை ஆர்வத்துடன் கேட்டறிந்து பதிவு செய்வதில் ஈடுபாடு கொண்டவர் இவர். இதற்காகவே, விவரம் அறிந்த உள்ளூர் நபர்களை உதவியாளர்களாக வைத்துக்கொண்டு […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : மூலக்கூறு முகிலில் புவிக் கடல்கள் போல் 2000 மடங்கு நீர் ஆவி கண்டுபிடிப்பு

This entry is part 16 of 23 in the series 14 அக்டோபர் 2012

(Water in Molecular Cloud Found 2000 Times Earth’s Oceans) (கட்டுரை : 85)  சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நீரின்றேல் ஒரு முரண்கோள் போல் கோரமாய்த் தோன்றும் பூமி ! பொரி உருண்டை யானது நீர்ப் பொழிவால், ஈர்ப்பு விசையால்  ! பூமிக்குள் அதன் ஆழ்கட லுக்குள் கோளுக்குள் கோளின் குடலுக்குள், பாறைக்குள், உறங்கும் படு பாதாள ஊற்றுக்குள் நெளிந்தோடும் ஆற்றுக்குள், நிலையான ஏரிக்குள் நிரம்பியது எப்படி நீர் வெள்ளம் ? […]

தாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்

This entry is part 15 of 23 in the series 14 அக்டோபர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மனத்தில் வைத்துக் கொள் இதனை  ! உனது புன்சிரிப் பூடேயும் உன் களி ஆட்டம்  வழியேயும் கானம் பாடினேன் நான் காய்ந்த இலை உதிர் காலத்தில் ! தீய்ந்த புல்வெளிக் களத்தி டையே மொட்டை மரக்காட் டிடையே நீ தன்னை மறந்தாய் என்னிசையில் ! என் பாட்டைப் புறக்கணித் தாலும் அல்லது நீ இகழ்ந்து பேசினும் கானம் பாடினேன் நான் காய்ந்த இலை உதிர் […]

கவிதை

This entry is part 13 of 23 in the series 14 அக்டோபர் 2012

துர் சொப்பனம் நிஜத்தில் நிகழாதிருக்க கிணற்றுக்குள் கல்லைப்போடு.   புதிதாய் முளைக்க விழுந்த பல்லை கூரையில் விட்டெறி.   திடுக்கிட்ட நெஞ்சு திடமாய் மாற மூன்று முறை எச்சில் உமிழு.   கண்ணேறு மறைய காலனா சூடத்தை முற்றத்தில் கொழுத்து.   பாதை இருட்டு கடக்க மூச்சு விடாமல் இறை நாமம் சொல்லு.   தலைமுறை தோறும் உயிர்த்திருந்த உபதேசங்கள்…….   உதிர்ந்து சருகானது அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தபின்!   மு.கோபி சரபோஜி சிங்கப்பூர்.