இயற்கையுடன் வாழ்வு

This entry is part 11 of 14 in the series 18 அக்டோபர் 2020

குணா வலையை அமைக்க கட்டுண்டது ஈ வலைதளம் அமைக்க கட்டுண்டது நாம் நம்மை ஒதுக்கி வாழ்ந்தது விலங்கினம் நாம் அடங்க வெளி வந்தது விலங்கினம் இயற்கைச் சூழலை நாடுவது நாம் இயற்கை பொங்கிட அடங்குவது நாம் இயற்கையை ஒன்றியதே வாழ்க்கை இயற்கையை குறைப்பதா வாழ்க்கை கனவு காண்பது நாம் நனவாய் நிற்பது இயற்கை இயற்கையாய் இருந்ததில் இழப்பில்லை செயற்கையை உயர்த்திட இழப்பு செயற்கையும் இயற்கையின் பிறப்பெனில் இழப்பில்லை இயற்கை வளர்வதில் அடங்கிடில் இழப்பில்லை செயற்கையின் மீறல் இயற்கையின் […]

ஒற்றைப் பனைமரம்

This entry is part 10 of 14 in the series 18 அக்டோபர் 2020

உள்ளே போவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எல்லாக் கதவுகளும் திறந்துகொண்டு வருபவரை விழுங்கிவிடக் காத்திருக்கின்றன சிலர் ஏதேனும் ஒருவழி அறிந்து உட்புகுகிறார்கள் அவர்கள் நுழைந்தவுடன் கதவுகள் தாமாக மூடிக்கொள்கின்றன தட்டினாலும் திட்டினாலும் திறக்காதவை அவை அதன் உரிமையாளன் ஆசைக்கயிறு வீசி அலைக்கழிக்கிறான் அதன் காவல்காரனின் கண்களில் உங்களின் வரவு ஆசைக்கங்குகளை ஏற்றுகிறது எருமையும் கூகையும் எங்கும் அலைய நீங்களோ ஒற்றைப் பனைமரம் நிலைக்குமென நம்புகிறீர்கள்

கூகை

This entry is part 9 of 14 in the series 18 அக்டோபர் 2020

                  வலிக்காமலே அடிக்கலாம் என வார்த்தையாடினர் அடித்தல் என்பதும் கடுமையான அன்பின் வழி அப்பா அம்மாவிடமும் அண்ணனிடமும் என்னிடமும் அடையாளம் காட்டியது வசவுகள் அடியைவிட வாழ்வில் மிகவும் ஆபத்தானவை வழியெல்லாம் அடைத்துவிடும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வழிகளை மூடக்கூடாது வானத்து இடியினால் வழிகின்ற வசவும் வலிக்காமல் அடிக்கின்ற மின்னலின் வீச்சும் அடையாளம் காட்டுவது ஆலமரப் பொந்திலிருக்கும் அழகான கூகையைத்தான் ===================================

2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்

This entry is part 8 of 14 in the series 18 அக்டோபர் 2020

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2019 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது. கவிஞர் கலாப்ரியா    கவிதை, நாவல், வாழ்க்கை வரலாற்றுப் புனைவுகள்,                             கவிதை விமர்சனம், தமிழ்த் திரையுலகம் பற்றியும்                        தமிழர் வாழ்வில் திரையுலகின் தாக்கங்கள் பற்றியும்   […]

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7

This entry is part 7 of 14 in the series 18 அக்டோபர் 2020

என் செல்வராஜ்       சிறுகதை இலக்கியத்தில் ஈழத்தமிழர்களின் பங்கு மிக முக்கியம். தமிழகம் போலவே அங்கும் பல தொகுப்பு நூல்கள் வெளியாகியுள்ளன.       ஈழத்து சிறுகதைகள் என்ற தொகுப்பை 1958ல் சிற்பி தொகுத்து பாரி நிலையம் வெளியிட்டுள்ளது. இதில் 12  கதைகள் உள்ளன.முற்போக்கு  காலகட்டத்துச் சிறுகதைகள் என்ற தொகுப்பை செங்கை ஆழியான் தொகுத்துள்ளார்.   இதில் 38 சிறுகதைகள் உள்ளன.தமிழர் தகவல் பத்திரிக்கை பொங்கல்-ஈழத்து சிறுகதைகள் சிறப்பு மலர் ஒன்றை 2005 ல் வெளியிட்டுள்ளது. இதில் 43 கதைகள் […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்

This entry is part 6 of 14 in the series 18 அக்டோபர் 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ், இன்று (11 அக்டோபர் 2020) அன்று வெளியிடப்பட்டது. அதன் உள்ளடக்கம் பின் வருமாறு. கட்டுரைகள்: தீநுண்மி பேராபத்தும், தாயும், மகவும்  -பானுமதி ந. ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை – லதா குப்பா எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல் – ப.சகதேவன் விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல் – ரவி நடராஜன் மனித இனம்:ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு – ரட்கர் பிரெக்மான் – தமிழில் கோரா செங்கோட்டை நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர் – முனைவர் ரமேஷ் தங்கமணி இடிபாடுகளைக் களைதல்- லெபனானின் எதிர்காலம் – உத்ரா செவ்வாய் கோளில் குடியேறலுக்கான கட்டுமானப் பொருட்கள் – கோரா கதைகள்: அனாதை  – ராம்பிரசாத் – அறிபுனைவு போர்வை -மாலதி சிவராமகிருஷ்ணன் தொடுதிரை – ராமராஜன் மாணிக்கவேல் ஆல மரத்தமர்ந்தவர் – கா. சிவா மரப்படிகள்  – முனைவர் ப. சரவணன் மூன்று நாய்கள் – ஆதவன் கந்தையா கவிதைகள்: சிசு, அப்போது, நெடும் பயணி – வ. […]

நுரை

This entry is part 12 of 14 in the series 18 அக்டோபர் 2020

அதுவரை அசுவாரஸ்யமாக இருந்த அந்த ரயில்பெட்டி சட்டென்று சுறுசுறுப்புக்கு வந்தது. ரயில் அந்த நிலையத்தில் நின்றதும் ஒரு கல்யாண பார்ட்டி அந்தப் பெட்டியில் வந்து ஏறியது. ரயில் ஏற்றிவிட நிறையப் பேர் வந்திருந்தார்கள். நிறைய இளம் பெண்கள். கல்யாணப் பெண்ணின் தோழிகளாக இருக்கலாம். கல்யாணப் பெண்ணைவிட அமர்க்களமாய் அவர்கள் அலங்காரம். ஒருவேளை பார்க்கும் வழியில், ஒருவேளை ரயில் நிலையத்தில் கூட யாராவது அவளைப் பார்த்து காதல் கொள்ளலாம் என்கிற எதிர்பார்ப்பும் மயக்கமுமான பெண்கள். சின்ன ஸ்டேஷன் துணிகள் […]

மாலையின் கதை

This entry is part 5 of 14 in the series 18 அக்டோபர் 2020

மாலை ஒன்று வாங்கினேன் வரிசை வரிசையாய் மல்லிகை ‘வணக்கம் வணக்கம்’ என்றது ரோஜாக்கள் சுற்றி வந்து ‘ஆரத்தி’ என்றது நாணில் கொத்துப் பூக்கள் ‘நலமா..நலமா..’ என்றது அதன் மோகனப் புன்னகையில் நான் மேகமென மிதந்தேன் மாலையில் ஒரு விழா… தலைவரின் கழுத்தில் மாலையைத் தவழவிட்டு ‘வாழ்க தலைவர்’ என்றேன் விழா முடிந்தது வீடு திரும்பினேன் யாரது கூப்பிட்டது? திரும்பிப் பார்த்தேன். கோணிச் சாக்கில் பிதுங்கி கழுத்து நீட்டி கண்ணீர் விட்டது என் மாலை அமீதாம்மாள்

கவிதையும் ரசனையும் – 3

This entry is part 4 of 14 in the series 18 அக்டோபர் 2020

அழகியசிங்கர்             கல்யாண்ஜி என்ற பெயரில் ஏராளமான கவிதைகளும், வண்ணதாசன் என்ற பெயரில் கதைகளும் எழுதிக் குவித்துக்கொண்டிருப்பவர் கல்யாணி.சி.           இவர் சிறுகதைகளுக்கு எப்படி ஒரு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்ததோ அதேபோல் இவர் கவிதைகளுக்கும் சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்க வேண்டும்.           அந்த அளவிற்குத் திறமையாக கவிதைகளிலிருந்து விலகி கதைகளும், கதைகளிலிருந்து விலகி கவிதைகளையும் எழுதியிருக்கிறார் கல்யாணி.           இதைப் போன்ற திறமை ஒரு சிலருக்குத்தான் வரும்.  குறிப்பாகத் தமிழில் நகுலன், காசியபன், சுந்தர ராமசாமி.  அதேபோல் கல்யாணி சி என்கிற வண்ணதாசனுக்கு, கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும்போது அவர் வேறு ஒரு […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரே

This entry is part 3 of 14 in the series 18 அக்டோபர் 2020

    ஜானகிராமன் எந்த ஊரில் , தேசத்தில் இருந்தாலும் அவர் உடம்பு மட்டுமே அங்கே நிலை கொண்டிருக்கும் ; மனது என்னமோ தஞ்சாவூரில்தான் என்று பல பேர் பல முறை பேசியும் எழுதியும் காண்பித்திருக்கிறார்கள். அவர் சென்னையில், தில்லியில் இருந்த போதும் செங்கமலமும் பூவுவும் ஆறுகட்டியிலும், செல்லப்பா தாழங்குடியிலும், காமேச்வரனும் ரங்கமணியும் நல்லூரிலும் , சட்டநாதனும், புவனாவும் செம்பானூரிலும்  அம்மணியும் கோபாலியும் அன்னவாசலிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள்.  தஞ்சையையும் காவிரியையும் மனதுக்குள் வைத்துப் பூஜித்து ஒரு ரிஷி போலத் தபஸ் பண்ணிக் கொண்டிருந்தார் […]