திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்

This entry is part 26 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜுலை 2, 2000 இதழ்: கட்டுரை: அதிபார்வை: வெங்கட ரமணன்: கிட்டப் பார்வை, தூரப் பார்வை என இரண்டு விதமான பார்வைக் குறைகளை நீக்கும் கண்ணாடிகளையே நாம் அறிகிறோம் – அணிகிறோம். அதிபார்வை என்பது புதிய கண்டுபிடிப்பு. லேசர் ஒளிக்கதிர்கள் மூலம் விழிகளின் தற்போதைய திறனை ஆராய்ந்து, தொலை நோக்கிகளில் பயன்படுத்தப் படும் “லென்ஸ்” களுக்குக் கிட்டத்தட்ட இணையான லென்ஸ்களை உருவாக்கி ஒருவரை வெகு தூரத்தில் இருக்கும் கட்டிடத்தைக் கூடத் துல்லியமாகப் பார்க்க வைக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை […]

சீதாயணம் முழு நாடகம் [4] (இரண்டாம் காட்சி)

This entry is part 25 of 26 in the series 27 அக்டோபர் 2013

  அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது  நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக  இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப நிகழ்ச்சி […]

டௌரி தராத கௌரி கல்யாணம் – 23

This entry is part 24 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை ம்ம்ம்ம்ம்….நல்ல தூக்கமா ஆன்ட்டி…குழந்தைகள் இன்னும் தூங்கறா போல…!.இதோ… நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறினான் பிரசாத்.. இதோ….இங்க தான் பக்கத்துல கங்கை ஒடறா…முடிஞ்சாப் போய்ப் பாரேன்னு புரோஹிதர் சொன்னார் . அதான் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். அங்கே போனால் இவரும் அங்க இருந்தாரா…அப்படியே பேசிண்டே திரும்பி வந்துட்டோம். ஓஹோ……கங்கைல ஜலம் நிறைய இருக்கோ…? அவ்வளவு கவலையா உனக்கு…? ம்ம்ம்ம்….நானும் கங்கை தான்னு தெரியற அளவுக்கு இருக்கு. அமைதியா எந்த […]

கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்

This entry is part 23 of 26 in the series 27 அக்டோபர் 2013

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சென்னை கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும் இணைப்பு Invitation

ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி

This entry is part 22 of 26 in the series 27 அக்டோபர் 2013

மலைக் காடொன்றின் மத்தியில் தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில் ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி நீ காதலைச் சொன்ன தருணம் மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக இருந்தது சின்ன மேசையருகே முழந்தாளிட்டு நாமருந்திய தேன்பானம் நீ தயாரித்தது சூடுமற்ற குளிருமற்ற இதமான காலநிலையில் நாம் நடந்துவரச் சென்ற அன்று நீ மழை வருமா […]

தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !

This entry is part 21 of 26 in the series 27 அக்டோபர் 2013

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ஓயாமல் அடிக்கும் இந்தச் சூறாவளிக் காற்றின் திசை வழியே பூச்செடி மொட்டுக்கள் யாவும் துண்டிக்கப் பட்டன ! அவற்றை எல்லாம் சேகரித்துச் சமர்ப்பித்தேன், உன் திருப் பாதங்களில் ! மென்மை யான உள்ளங் கைகளில் அள்ளிக் கொள் அவற்றை ! ஆமாம் நீ அள்ளிக் கொள் ! நான் சென்ற பிறகு, அவை யாவும் மலர்ந்து விரியும் உனது மடியிலே ! இனிய சோகத்துடன் […]

மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1

This entry is part 20 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜோதிர்லதா கிரிஜா 1. “என்ன, சாரதா! நம்ம மருமகளைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்றவாறு வழிபாட்டு அறைக்குள் நுழைந்த சோமசேகரன் சாரதா கண் மூடியவாறு கடவுள் படங்களுக்கு முன்னால் கை கூப்பி நின்றிருந்ததைக் கண்டதும் தன் வாயை மூடிக்கொண்டார். கண்மூடிக் கைகூப்பிப் பிரார்த்தித்து நிற்கும் போது சாரதாவின் செவிகளில் எதுவும் விழாது – அப்படியே விழுந்தாலும் அவள் பதில் சொல்ல மாட்டாள் – என்பது அவர் அறிந்திருந்த ஒன்றாதலால், அவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் தாமும் […]

தூக்கமின்மை

This entry is part 19 of 26 in the series 27 அக்டோபர் 2013

                                                டாக்டர் ஜி. ஜான்சன்           குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல் தூங்குகிறோம்.            இதில் ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லாமல் போனால் கெடுதி இல்லை.           ஆனால் தொடர்ந்து சரியான தூக்கம் இல்லையேல் அது மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும்.            மூவரில் ஒருவருக்கு இதுபோன்ற […]

தீபாவளி நினைவு

This entry is part 18 of 26 in the series 27 அக்டோபர் 2013

                                                           டாக்டர் ஜி.ஜான்சன்              என்னுடைய ” உடல் உயிர் ஆத்மா ” நாவலை சிங்கப்பூரில் வெளியீடு செய்ய சிங்கப்பூர் தமிழவேள் நாடக மன்றத்தின் தலைவர் திரு. மு. தங்கராசனைத் தொடர்பு கொண்டேன். அவரும் கவிஞர் முருகதாசனும் ஏற்பாடு செய்து தமிழ் முரசில் செய்தியும் வெளியிட்டனர். நூல் ஆய்வை என்னுடைய பள்ளித் தோழரும் பால்ய நண்பரும் எழுத்தாளரும் விமர்சகருமான இராம. கண்ணப்‌பிரான் செய்ய ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட நாளில் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்து மண்டபத்தில் விழா […]

குழியில் விழுந்த யானை

This entry is part 17 of 26 in the series 27 அக்டோபர் 2013

……… ருத்ரா ============= அந்தக்குழியில் விழுந்த யானை தவிக்கிறது. உருள்கிறது..புரள்கிறது. தும்பிக்கையை வானம் நீட்டுக்கிறது. பார்த்துக்கொண்டே இருந்து மயங்கி இந்தக் குழியில் விழக் காரணமான அந்த நிலவை நோக்கி நீட்டுகிறது. அருகில் உள்ள திராட்சைக்கொடியின் கருங்கண் கொத்துகள் போன்ற‌ கனிக்கொத்துகளையும் அந்த நிலவின் கண்களாக‌ எண்ணிக்கனவுகளோடு தும்பிக்கை நீட்டுகிறது. பிளிறுகிறது. அருகே அடர்ந்த காடே கிடு கிடுக்கிறது. இருப்பினும் குழியில் விழுந்தது விழுந்தது தான். விண்மீன்கள் ஒளிக்கொசுகள் போல் சீண்டுகின்றன..சிமிட்டுகின்றன. வண்டுகள் ரீங்கரிக்கின்றன. அருகில் சிங்கம் புலிகள் […]