முகலாயர்களும், கிறிஸ்தவமும் – 3

This entry is part 9 of 9 in the series 23 செப்டம்பர் 2018

தனக்குப் போட்டியாக இருந்தவர்களை மும்தாஜின் தகப்பனின் உதவியுடன் விரட்டியடித்த குர்ரம், ஷா-ஜஹான் (உலகத்து அதிபதி) என்கிற பெயருடன் ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் பதவியேற்றார். ஆரம்பத்தில் இருந்தே மும்தாஜ் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது, கிறிஸ்தவர்களின் மீது மிக வெறுப்பு கொண்டவளாகவே இருந்தாள். அதற்கான காரணம் தெரியவில்லை. அனேகமாக ஷாஜஹான் பாதுஷாவாவதற்குத் தடையாக இருந்ததால் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது அவள் கோபம் கொண்டவளாக இருந்திருக்கலாம். இது வெறும் யூகம் மட்டுமே. கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஷாஜஹானை மும்தாஜ் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தாள். முகலாய […]

அழகின் மறுபெயர்……

This entry is part 3 of 9 in the series 23 செப்டம்பர் 2018

  (11.9.2018)   ஆகாயத்தின் அருகில் நட்சத்திரங்களை அள்ளிக்குவிக்கும் ஊற்று….   ஒளிமலர்களைப் பருகிப்பார்த்து துடிப்பின் லயம் தட்ப வெப்ப நிலையாய்…   தண்ணீரிலும் வெப்பம் தீண்டுவது; ஆவியாய் முகம்காட்டுவது உச்சரிப்பின் உச்சமாகும்   எதையும் மறைக்காத தருணங்களில் எல்லாம் தானாய்க் கரைகிறது….   வைட்டமின் வாழ்க்கை கைவசமாகிறபோது அரிய தரிசனம் கைகூடிவிடுகிறது     ஒருபாதி  வையத்திற்கு இப்படி இறந்து பிறப்பது இயல்பாகிவிடுகிறது   இன்னொரு பாதி அறியப்படாத கோள்களாய் சுற்றிவருகிறது   பகலின் மறுபக்கத்தை […]

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

This entry is part 5 of 9 in the series 23 செப்டம்பர் 2018

சுதந்திரக் கவி பாரதி சி. ஜெயபாரதன், கனடா இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி சுப்ரமணிய பாரதி எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்ப துறுதியாச்சு. அச்சம் இல்லை ! அச்சம் இல்லை ! அச்சம் என்ப தில்லையே !   தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற,   தாயென்று கும்பிடடி பாப்பா ! சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்.  […]

மீண்டும் வேண்டாம் !

This entry is part 6 of 9 in the series 23 செப்டம்பர் 2018

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நீ அன்றென்னை அழ வைத்தாய் ! நினைவி ருக்கும் உனக்கு ! ஏனென்று சிந்திப்பதில் பயனில்லை ! நான் அழுதது உனக்காக ! இப்போது நீ மனம் மாறினாய். என் மனம் மாறுவதில் பயனில்லை ! நான் அழுது முடித்தேன் . பழைய பாடல் வரியே நீ சொல்கிறாய். ஏனென அறியேன் நான். முன்பென்னைக் காயப் படுத்தினாய். மீண்டும் காயப் படுத்து கிறாய் ! வேண்டாம் !  வேண்டாம் […]

தொடுவானம் 241.தாழ்ந்தவர் உயர்ந்தனர்

This entry is part 7 of 9 in the series 23 செப்டம்பர் 2018

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய ஆலோசனைச் சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. இது திருச்சபையின் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் என்பதே உண்மை. இதுவரை திருச்சபையை ஒரு சாராரே ஆட்சி செய்து வந்தனர். பேராயர் சுவீடன் தேசத்தவராக இருந்தார்கள். ஆனால் ஆலோசனைச் சங்கமும் அதன் செயலாளரும் படித்த மேல் சாதிக்கார்களாகத்தான் இருந்துள்ளனர். மேல் சாதி என்னும்போது அவர்கள் பிராமணர்கள் இல்லை. வேளாளர்கள்தான். அவர்களை படித்தவர்களாகவும் பட்டணங்களில் வாழ்பவர்களாகவும் இருந்தனர்.அவர்கள் அங்கு வேலை செய்து மாதச் சம்பளம் வாங்கினர் .அதனால் […]

ஜெயபாரதன் படைப்புகளைத் தொடா்ந்து படிக்கும் ஆா்வலா்களுக்கோர் அரிய போட்டி!

This entry is part 8 of 9 in the series 23 செப்டம்பர் 2018

1. ஜெயபாரதன் வாழ்க்கையும் அறிவியலும் 2. ஜெயபாரதனின் இலக்கிய உலகம் மேற்கண்ட தலைப்புகளில் வரப்பெறும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு சிறந்த, பெரிய பரிசுகள் காத்திருக்கின்றன!! கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும். போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேறு ஏதும் சிறப்பு விதிகள் இல்லை. தொடா்புக்கு: வையவன், ஏ4. ரம்யா பிளாட்ஸ், 32/79 , காந்தி நகர், 4வது பிரதான சாலை, அடையாறு, சென்னை 600020. மின் அஞ்சல் vaiyavan.mspm@gmail.com தொலை பேசி எண் 99401 20341 வைகைச் செல்வி, பிளாட் […]

மருத்துவக் கட்டுரை குருதி நச்சூட்டு ( SEPTICAEMIA )

This entry is part 4 of 9 in the series 23 செப்டம்பர் 2018

நோய்க் கிருமிகள் உடலில் புகுந்து பல உறுப்புகளைத் தாக்கி நோயை உண்டுபண்ணுகின்றன என்பதை அறிவோம். ஆனால் சில கிருமிகள் இரத்தத்தில் கலந்து அங்கேயே பெருகி நச்சுத் தனமையையை உண்டாக்கி ஆபத்தான விளைவை உண்டுபண்ணுகின்றன. இதை ” செப்டிசீமியா ” அல்லது குருதி நச்சூட்டு என்று அழைக்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.உடனடியாக சிகிச்சை வழங்காவிடில் மரணம் உண்டாகும். உடலின் ஒரு பகுதியில் உண்டாகும் கிருமித் தொற்றோ அல்லது ஆழமான காயமோ இதை ஏற்படுத்தலாம். கிருமிகள் இரத்தத்தில் கலப்பதால் அதை […]

பூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.

This entry is part 2 of 9 in the series 23 செப்டம்பர் 2018

FEATURED Posted on September 23, 2018 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++++ பூமியைத் தாக்க வரும் முரண்கோளைத் திசை மாற்ற நாசாவின் புதிய திட்டங்கள்: 2018 ஜூன் 20 ஆம் தேதி, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகைச் சேர்ந்த விஞ்ஞானப் பொறிநுணுக்கத் திட்ட அலுவலுகம், பூமியை நெருங்கும் அண்டக்கோள் தடுப்பு பற்றி புதிய ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  18 பக்கங்கள் உள்ள அந்த வெளியீட்டில் நாசா முன்னதாகச் செய்ய வேண்டிய தடுப்பு வினைகளையும், அவசர […]

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நூல் அறிமுகம் – 30-9-2018

This entry is part 1 of 9 in the series 23 செப்டம்பர் 2018

இறைவன் திருக்கருணையுடனும் பல நண்பர்கள் ஒத்துழைப்புடனும் அடையாறு காந்தி நகர் க்ளப் கிரிக்கெட் மைதானம் அருகில் உள்ள அரசினர் நூலகத்தில் ஒரு வாசகர் வட்டம் நிகழ்ந்து வருகிறது. தாங்கள் இம்முறை வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்வது காந்திநகர் வாசிகளுக்கு புத்தூக்கம் தரும் கடந்த சில மாதங்களாக அடையாறு காந்தி நகர் நூலக வாசகர் வட்ட மாதாந்திரக் கூட்டம் சில தவிர்க்க இயலாத காரணங்களால் நிகழாது இருந்தது. இம்மாதம் கல்கி வைத்தியநாதன் அவர்களின் சகோதரரும் மாபெரும் நிர்வாகியுமான […]