சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது

This entry is part 5 of 8 in the series 29 செப்டம்பர் 2019

. Posted on September 29, 2019 ஓய்வெடுக்கும் விக்ரம் தளவுளவிசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் தென் துருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும்  !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது இந்தியா !இரண்டாம் சந்திரயான் விண்சிமிழ்2019  செப்டம்பரில்முதன்முதல்  இறக்கும்  தளவுளவிதகவல் இணைப்பு இழந்து,சரிந்துபோய் விழுந்தது !இரண்டாம் சந்தரயான் விண்சிமிழ்நிலவைச் […]

பரிணாமம்

This entry is part 6 of 8 in the series 29 செப்டம்பர் 2019

நிலாரவி மழைத் தாகம் கொண்டுவறண்டிருந்த நிலத்தில்அமிலமழை பொழியும்வானம் கருகிய பயிர்களின்இடுகாடுகளாய்நேற்றைய நிலங்கள் பூமியின் நுரையீரலில்புகைநிரப்பும்புகைப் போக்கிகள் நிலத்தின் வயிற்றில்ஆழமாய் தோண்டப்படும்சவக்குழிகள் சவக்குழிகளில் முளைத்து நிற்கும்கான்கிரீட் கூடுகள் கூடுகளில் குஞ்சு பொரிக்கும்பறவைகள் மரங்களைத் தின்றுவளரும்கான்கிரீட் கல்வனங்கள் தானியங்களைசேகரிக்கும்அருங்காட்சியகங்கள் தானியங்கிகளின்வெள்ளாமையில்விளையும்நெகிழித் தீவனங்கள் சாம்பல் பூக்களின்நிலத்தில்ராஜாளிகளாகும்குருவிகள். நிலாரவி.

`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்` 60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

This entry is part 7 of 8 in the series 29 செப்டம்பர் 2019

சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றத்தின்  `பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்`  60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்  ஏற்பாடு செய்துள்ளோம்.    இக்கருத்தரங்கைச் சற்று மாறுபட்ட வகையில் “சிங்கப்பூரின் 200ம் ஆண்டில் மக்கள் கவிஞரின் சிந்தனைகள்” என்ற தலைப்பில் நிகழ்த்த இருக்கிறோம் .  மக்கள் கவிஞரின் சிந்தனைகள்,  கண்ட கனவுகள் சிங்கப்பூரின் வளர்ச்சியோடு எப்படி ஒத்துப் போகிறது என்று பொருத்திப் பார்க்கும் அழகிய முயற்சிதான் இக்கருத்தரங்கம். இக்கருத்தரங்கின் முத்தாய்ப்பான நிகழ்வு   என்னவெனில் சிங்கப்பூர் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களே இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேச, பாட இருக்கிறார்கள் […]

3. விரவுப் பத்து

This entry is part 8 of 8 in the series 29 செப்டம்பர் 2019

                     இப்பகுதியில்முல்லைத் திணைக்குரிய பல ஒழுக்கங்கள் விரவி வருவதால் இப்பெயர் பெற்றது. பிரிந்து வாடலும், அப்படி வாடுபவரைத் தேற்றலும், அவன் மீண்டு வரும்போது கொள்ளும் உணர்வுகளும் அதுபற்றிய   பிறரின் பேச்சுகளும் இப்பகுதிப் பாடல்களில் அமைந்துள்ளன. ===================================================================================== 1.மாலை வெண்காழ் காவலர் வீச நறும்பூம் புறவின் ஒடுங்கு முயல்இரியும் புன்புல நாடன் மடமகள் நலங்கிளர் பணைத்தோள் விலங்கின, செலவே.       [வெண்காழ்=வயிரம் பாய்ந்த மரம்; நறும்பூம் புறவு=மணம் மிக்க பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதி; விலங்கின=தடுத்தன; இரியும்=அஞ்சி ஓடும்; […]

வெளிச்சம்

This entry is part 4 of 8 in the series 29 செப்டம்பர் 2019

மஞ்சுளா அலைக்கழிவாய் தொடங்கும் நகர வாழ்வில்  பயணம் தொடங்க முடியாமல்  சாத்தப்பட்டிருக்கும் கதவுகளின் வழியே  இடுக்கிக் கொண்டு பார்க்கிறது  அமைதியின் கண்கள்  பனி பொழியும் இரவொன்றில்  இருள் கவ்வும் பாதையில்  நகரின் மயான அமைதி ஒன்றை  வெளிச்சமிட்டு காட்டுகிறது நிலா           ——-மஞ்சுளா manjulagopi04@gmail.com

நீக்கமற….

This entry is part 3 of 8 in the series 29 செப்டம்பர் 2019

கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வீடுவந்து சேர்ந்த பிறகும் நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் நானின் மண்டையில் உச்சிவெயில் சுரீரெனத் தைக்க கிழிந்த நாளொன்றிலிருந்து சில நூலிழைகள் நைந்து தொங்க உட்கார்ந்த நிலையில் என் பாதங்கள் இருமாடிப்படிகளிலேறிச் செல்லும்நேரம் வலியெடுக்கும் முழங்கால்கள் முதுகுமாக மாறிக்கொள்ள வழங்க வழியில்லாத உணவின் அளிப்புக்காக அந்தத் தெருமூலையில் சுருண்டுகிடக்குமொரு உருவம் அழகென்பதன் அர்த்தமாக இருந்திருக்கும் அக்காலம் திரும்பிக்கொண்டிருக்கலாகும் இச்சமயம் அதனுள் புள்ளுக்கும் புல்லுக்கும் இடையான […]

மொழிவது சுகம் அக்டோபர் 2019 – தக்கார் எச்சம் : காந்தி

This entry is part 2 of 8 in the series 29 செப்டம்பர் 2019

ஒரு சிலரே   உலகம் எங்கும் அறியப்பட்டவர்கள். அமெரிக்கா – அபிரகாம் லிங்கன், இங்கிலாந்து – சர்ச்சில், சீனா – மாசேதுங், வியட்நாம் – ஹோசிமின், ரஷ்யா – லெனின், பிரான்சு – தெகோல் , கியூபா – காஸ்ட்ரோ, இஸ்ரேல் – கோல்டா மேயர், எகிப்து – நாஸர், இந்தியா – காந்தி எனப் பட்டியலை விரித்துக்கொண்டு போகலாம்.  ஒரு தலைவர் உலகம் எங்கும் அறியப்படுவது என்பது வேறு கொண்டாடப்படுவது என்பது வேறு. ஒரு தலைவரின் பெருமையும் […]

கனவின் மெய்ப்பாடு

This entry is part 1 of 8 in the series 29 செப்டம்பர் 2019

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒளிக்கீற்றுகள் சில…. அவை சூரியனுடையதா சந்திரனுடையதா தெரியவில்லை. சில நீர்க்குமிழிகள்…. அவற்றுள் கோட்டுருவாய் தெரியும் பிரபஞ்சங்கள் அங்கங்கே கொஞ்சம் அழிந்தும் கிழிந்தும்…. தெரியும் முகங்கள் எனக்குப் பரிச்சயமானவைபோலும் நெருக்கமானவை போலும் – அதேசமயம் நான் அறியாதனவாகவும்…. அமர்ந்துகொண்டோ நின்றுகொண்டோ அல்லது நீந்திக் கொண்டோ உருவந்தாங்கியோ அருவமாகவோ நான் அந்தச் சட்டகத்திற்குள் கண்டிப்பாக எங்காவது இருப்பேன்…. கண்டுபிடிக்க முடியவில்லை. இடைவழி காற்றாலான பாறாங்கல்லால் அடைபட்டிருக் கிறது. இந்த கணத்தை இப்படியே உறையச்செய்ய வழியில்லை. கீற்றுகளை […]