மகாகவியின் மந்திரம் – பொய் அகல்

This entry is part 1 of 9 in the series 16 செப்டம்பர் 2018

முருகானந்தம், நியூ ஜெர்சி மகாகவி பாரதி (1882-1921) ஓர் தேச பக்தர், தெய்வ பக்தர், ஒப்பற்ற கவிஞர். எல்லாவற்றிற்கும் மேலாகத் தீர்க்க சிந்தனையாளர். கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று காலத்தையும் தனது ஞானப் பார்வையால் நோக்கியவர். இப்பார்வையைத் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், இந்திய மேம்பாட்டிற்கும், மனித மேம்பாட்டிற்கும் பயன்படுத்தியவர். தேசத்தை அந்நியனிடமிருந்து மீட்பதெப்படி என்பதை அறிவு பூர்வமாக சிந்தித்தார். இச்சிந்தனைகள், எழுச்சிமிக்க கவிதைகளாய் உருவெடுத்தன. தமிழ் மொழியைப் பண்டிதர்களிடமிருந்து மீட்பதெப்படி என்பதையும் […]

முகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2

This entry is part 3 of 9 in the series 16 செப்டம்பர் 2018

பி எஸ் நரேந்திரன் அக்பரின் மகனான சலீம் என்கிற ஜஹாங்கிரின் அன்னை ஒரு ராஜபுத்திர ஹிந்துப் பெண்மணி எனினும் ஜஹாங்கிர் முற்றிலும் ஒரு இஸ்லாமிய பாதுஷாவாக மட்டுமே நடந்து கொண்டவர். அக்பரையும் மிஞ்சுமளவிற்கும் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கமும், அபின் போன்ற போதை வஸ்துக்களை உபயோகிப்பதிலும், அடுத்தவன் மனைவியைக் கவரத் தயங்காத (நூர்ஜஹான்) பெண் பித்தராகவும் வாழ்ந்தவர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களைக் கொல்வதிலும், ஹிந்துக் கோவில்களை இடிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டத் தயங்கியதில்லை. ஏற்கனவே சொன்னபடி, போர்த்துக்கீசிய […]

தொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்

This entry is part 4 of 9 in the series 16 செப்டம்பர் 2018

            மருத்துவப் பணியில் முழு கவனம் செலுத்தினேன். மாலையிலும் இரவிலும் ஆலயப் பணியில் ஈடுபட்டேன். அதோடு மனமகிழ் மன்றத்தையும் கவனித்தேன்.           மனமகிழ் மன்றத்துக்கு தனியாக ஒரு கொட்டகை உள்ளது.அது தங்ககராஜ் வாகன ஓட்டுனரின் வீட்டின் எதிரே இருந்தது. அதை சுத்தம் செய்து கேரம் விளையாட்டுக்கும், டேபிள் டென்னிஸ் விளையாட்டு மேசையும் வைத்தேன்.அதில் ஆர்வம் உள்ளவர்கள் மலையில் விளையாடுவார்கள்.         […]

நீ என்னைப் புறக்கணித்தால் !

This entry is part 5 of 9 in the series 16 செப்டம்பர் 2018

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என்றாவது நீ என்னை விலக்கிச் சென்றால், துயரில் கிடப்பேன் பரிதவித்து ! என்னை விட்டுப் போகாதே என்றென்றும் ! உன் மீது காதல் எனக்கு அறிந்திடு. நீ பிரிவதை அறிந்தால், புள்ளினம் வாடும் என்னைப் போல் தனித்து ! ஒரே ஒருத்தி யான, உன்னை நான் இழந்து விட்டேன்  என்று அறிந்தால், துயர்க் கடலுள் மாயும்  ! மரத்து இலைகள் கேட்பின் சலசலத்து முணுமுணுக்கும் ! என்னை அழவைத்து […]

வால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்

This entry is part 6 of 9 in the series 16 செப்டம்பர் 2018

  Posted on September 16, 2018 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ பூமியை  நெருங்கும் வால்மீன் சுழற்சி தளர்ச்சி அடையும். ++++++++++++   கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை பூர்வீக வால்மீன்கள் ! பூதக்கோள் வியாழன் ஈர்ப்பு  வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக் காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் […]

தர்மம் தடம் புரண்டது

This entry is part 7 of 9 in the series 16 செப்டம்பர் 2018

திருமதி சாவித்திரியின் உதடுகள் அந்தக் கார் டயரில் பதிந்திருந்தது. வாடி உதிர்ந்த செம்பருத்திப் பூவாய் காருக்கடியில் கிடந்தார் சாவித்திரி. அந்தக் கார்ப்பேட்டையைக் கழுவவந்த ‘பையா’ மேடம், மேடம் என்று அடிவயிற்றிலிருந்து கத்திவிட்டு மூன்றாவது கதறலை தன் கண்ணீரில் கரைத்தான். சாவித்திரியின் பணிப்பெண் சரீனா வீட்டை அப்படியே போட்டுவிட்டு ஒலிம்பிக் வேகத்தில் ஓடுகிறாள். மேடம் மேடம் என்று குலுக்குகிறாள். பருக்கையைக் கண்ட புறாக்களைப்போல் அதற்குள் சேர்ந்துவிட்டது கூட்டம். எல்லாம் சரீனாவை இழுக்கிறார்கள். சுவற்றில் சாய்ந்தபடி அவள் கதறுவது பரிதாபமாக […]

அம்ம வாழிப் பத்து—1

This entry is part 8 of 9 in the series 16 செப்டம்பர் 2018

அம்ம வாழிப் பத்து இப்பகுதியின் பத்துப் பாடல்களும் ‘அம்ம வாழி’ எனத் தொடங்குவதால் இப்பகுதி “அம்ம வாழிப் பத்து” என்று பெயர் பெற்றது. ===================================================================================== அம்ம வாழி, தோழி! காதலர் பாவை அன்னஎன் ஆய்கவின் தொலைய, நன்மாமேனி பசப்பச் செல்லல் என்பதம் மலைகெழு நாட்டே! [பாவை=தெய்வப் பாவை; ஆய்கவின்=ஆய்ந்த அழகு; தொலைய=நீங்க; மாமேனி=மாந்தலிர் போன்ற உடல்] ”கொஞ்ச நாள் பொறுத்துகிட்டு இரு; கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டு வரேன்”னு சொல்லிட்டு அவன் போறான்; அப்ப அவனும் கேக்கற […]

மருத்துவக் கட்டுரை காரணம் தெரியாத காய்ச்சல்

This entry is part 9 of 9 in the series 16 செப்டம்பர் 2018

( Pyrexia of unknown origin ) பொதுவாக காய்ச்சல் என்பது என்னவென்பதை நாம் அறிவோம். உடலில் கிருமி அல்லது அல்லது வைரஸ் தொற்று உண்டானால் காய்ச்சல் உண்டாகும் என்பதும் நமக்குத் தெரியும். காய்ச்சலின்போது உடலின் வெப்பம் உயரும்.அதாவது 38 டிகிரி செண்டிகிரேட் வெப்பம் இருந்தால் அது காய்ச்சல். கிருமித் தொற்றை உடல் எதிர்த்து போராடும்போது உடல் வெப்பம் அதிகமாகிறது.இதையே காய்ச்சல் என்கிறோம். ஆகவே காய்ச்சல் உண்டாக உடலில் கிருமித் தொற்று உண்டாகவேண்டும். அது எந்த வகையான […]