சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58

This entry is part 41 of 43 in the series 24 ஜூன் 2012

Samaksritam kaRRukkoLvOm 58

 

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58

இந்த வாரம் यत्र – तत्र (yatra – tatra) அதாவது ’எங்கு – அங்கு’ என்ற உருமாற்றம் பெறாத சொற்களைப் பற்றிப் பார்ப்போம். ஒரு வாக்கியத்தில் यत्र என்ற சொல்லை உபயோகித்தால் அதே வாக்கியத்தில் तत्र என்ற சொல்லையும் உபயோகிக்கவேண்டும்.
यत्र इति शब्दः यत्र प्रयुज्यते तत्र तत्र इत्यस्य अपि प्रयोगः भवेत् एव।(yatra iti śabdaḥ yatra prayujyate tatra tatra ityasya api prayogaḥ bhavet eva |)

கீழேயுள்ள வாக்கியங்களை உரத்துப்படிக்கவும்.

  1. यत्र पुष्पाणि सन्ति तत्र भ्रमराः आगच्छन्ति। (yatra puṣpāṇi santi tatra bhramarāḥ āgacchanti |)

எங்கு பூக்கள் இருக்கிறதோ அங்கு தேனீக்கள் வருகின்றன.

 

  1. यत्र रामनामसङ्कीर्तनं भवति तत्र आञ्चनेयः भवति।(yatra rāmanāmasaṅkīrtanaṁ bhavati tatra āñcaneyaḥ bhavati |)

எங்கு ராமநாம சங்கீர்த்தனம் நடக்கிறதோ அங்கு ஆஞ்சநேயர் இருக்கிறார்.

 

  1. यत्र उत्सवः भवति तत्र अहं गच्छामि। (yatra utsavaḥ bhavati tatra ahaṁ gacchāmi |)

எங்கே விழா நடக்கிறதோ அங்கே நான் செல்கிறேன்.

 

  4.  भवान् यत्र स्थापितवान् तत्र एव अस्ति, पश्यतु।(bhavān yatra sthāpitavān tatra eva asti, paśyatu |)

நீ(ங்கள்) எங்கே வைத்தாயோ அங்கேயே இருக்கிறது பார்.

 

  1. यत्र जलं नास्ति तत्र एव वार्तापत्रिका स्थापयतु।(yatra jalaṁ nāsti tatra eva vārtāpatrikā sthāpayatu |)

எங்கு தண்ணீர் இல்லையோ அங்கு மட்டுமே செய்தித்தாளை வை.

 

  1. यत्र जनसञ्चारः अधिकः तत्र करपत्राणि वितरणीयानि।(yatra janasañcāraḥ adhikaḥ tatra karapatrāṇi vitaraṇīyāni |)

எங்கே மக்கள்கூட்டம் அதிகம் உள்ளதோ அங்கே துண்டுபிரசுரங்களை விநியோகிக்கவேண்டும்.

’यत्र – तत्र’ अव्ययोः योजनेन एतेषां शब्दानां साहाय्येन वाक्यानि रचयन्तु (’yatra-tatra’ avyayoḥ yojanena eteṣāṁ śabdānāṁ sāhāyyena vākyāni racayantu)
’எங்கே-அங்கே’/(எங்கு –அங்கு) என்ற என்றும் மாற்றத்திற்கு உட்படாத சொற்களைச் சேர்த்து கீழேயுள்ள சொற்களின் உதவியுடன் வாக்கியங்களை அமைக்கவும்.
उदा – शर्करा – पिपीलिकाः ( śarkarā – pipīlikāḥ)

சர்க்கரை – எறும்புகள்

यत्र शर्करा तत्र पिपीलिकाः भवन्ति। (yatra śarkarā tatra pipīlikāḥ bhavanti |)

எங்கே சர்க்கரை இருக்கிறதோ அங்கே எறும்புகள் உள்ளன.

இதேபோல மற்ற வாக்கியங்களை அமைக்கவும்.

अभ्यासः १ (பயிற்சி 1)
१. दीपः – प्रकाशः (dīpaḥ – prakāśaḥ)

 விளக்கு – வெளிச்சம்

२.  क्रीडा – बालकाः (krīḍā – bālakāḥ)
விளையாட்டு – சிறுவர்கள்

३. विदूषकः – विनोदः (vidūṣakaḥ – vinodaḥ)
நகைச்சுவையாளர் – மகிழ்ச்சி

४. आपणः – ग्राहक्ः (āpaṇaḥ – grāhakḥ)
கடை – வாடிக்கையாளர்

५. माता – शिशुः (mātā – śiśuḥ)
தாய் – குழந்தை

६. धूमः – अग्निः (dhūmaḥ – agniḥ)
புகை – நெருப்பு

७. पुष्पाणि – सुगन्धः (puṣpāṇi – sugandhaḥ)
பூக்கள் – நறுமணம்

८. भूकम्पः – समाजसेवकाः (bhūkampaḥ – samājasevakāḥ)
நிலநடுக்கம் – சமூகசேவகர்கள்

९. भक्तिः – देवानुग्रहः (bhaktiḥ – devānugrahaḥ)
பக்தி – தெய்வ அனுக்ரஹம்

१०. कृष्णः – विजयः (kṛṣṇaḥ – vijayaḥ)
க்ருஷ்ணர் – வெற்றி

விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சரிபார்த்துக்கொள்ளவும்.

अभ्यासः २ (பயிற்சி 2)
द्वितीयं वाक्यं पठित्वा तत्सम्बद्धं प्रथमवाक्यं लिखतु |(dvitīyaṁ vākyaṁ paṭhitvā tatsambaddhaṁ prathamavākyaṁ likhatu |) இரண்டாவது வாக்கியத்தைப் படித்துப் பின் முதல் வாக்கியத்தைத் தொடர்புபடுத்தி எழுதவும்.

यथा – यत्र भवान् गच्छति तत्र अहमपि आगच्छामि।
yathā – yatra bhavān gacchati tatra ahamapi āgacchāmi |

१ ————————— भवान् अपि क्रीडतु।(————————— bhavān api krīḍatu |)
————————– நீயும்(ஆண்பால்) கூட விளையாடு.

२  —————————- भवती मा गच्छतु।(—————————- bhavatī mā gacchatu |)
—————————- நீ (பெண்பால்) செல்லாதே.

३  —————————- सर्वे अपि गच्छन्ति।(  —————————- sarve api gacchanti |)
—————————- எல்லோரும் செல்கிறார்கள்.

४  —————————— वासं मा करोतु।(  —————————— vāsaṁ mā karotu |)
————————————- அங்கு இருக்காதே .
விடைகள் (இதேபோல் இருக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை)
பயிற்சி 1
१. यत्र दीपः अस्ति तत्र प्रकाशः भवति।
२. यत्र क्रीडा भवति तत्र बालकाः भवन्ति।
३. यत्र विदूषकः तत्र विनोदः भवति एव।
४. यत्र आपणः अस्ति तत्र ग्राहकः भवति।
५. यत्र माता तत्र शिशुः भवति।
६. यत्र धूमः अस्ति तत्र अग्निः अस्ति।
७. यत्र पुष्पाणि सन्ति तत्र सुगन्धः भवति एव।
८. यत्र भूक्म्पः भवति अत्र समाजसेवकाः आगच्छन्ति।
९. यत्र भक्तिः अस्ति तत्र देवानुग्रह्ः भवति।
१०. यत्र कृष्णः अस्ति तत्र विजयः एव भविष्यति।

பயிற்சி 2
१. यत्र अहं क्रीडामि तत्र भवान् अपि क्रीडतु।
२. यत्र सः गच्छति तत्र भवती मा गच्छतु।
३. यत्र कार्यक्रमः भवति तत्र सर्वे अपि गच्छन्ति।
४. यत्र कोलाहलः अस्ति तत्र वासं मा करोतु।

பகவத்கீதையில் உள்ள மிகவும் பிரசித்தமான ஸ்லோகம்

यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः।
तत्र श्रीर्विजयो भूतिः ध्रृवा नीतिर्मतिर्मम॥
இதில் यत्र- तत्र என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதை கவனிக்கவும்.

————

Series Navigationஎனது வலைத்தளம்கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )
author

ரேவதி மணியன்

Similar Posts

15 Comments

  1. Avatar
    punai peyaril says:

    தமிழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய மொழிபுரித் தொடர்…

  2. Avatar
    Ramalingam.k says:

    வணக்கம். சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் தொடர் 58 உடன் முடிவு பெற்றதா இன்னும் தொடருமா என்று அறிய அவா.

  3. Avatar
    IIM Ganapathi Raman says:

    Thinnai may start classes for Tamil also. Because, reading the comments of some of its readers, Tamil classes are urgent.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      Dear IIM Ganapathi Raman,

      Some omniscient Tamil commentators need English coach up as well in Thinnai.com. It is a shame that some Tamil commentators in Thinnai, cannot write four or five sentences properly without any spelling or grammar mistakes and they continue doing so knowingly.

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        தமிழ் இணைய தளத்தில், தமிழில் உள்ளிட்டு (கூகுள் ட்ரான்ஸ்லிட்ரேஷேன் உதவியுடன்), தமிழிலேயே உரையாட ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டிய தேவை இல்லையே, தமிழ் தெரிந்திருந்தாலே போதுமே !

    2. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      மன்னிக்கவும், இதை தமிழில் சொல்ல உங்களுக்கு என்ன தயக்கம் என்று அறியலாமா ? கூகுள் ட்ரான்ஸ்லிட்ரேஷேன் இருக்கையில் வேறு தனி மென்பொருள் எதுவும் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

  4. Avatar
    புனைபெயரில் says:

    அய்யா ஐ ஐ எம் அவர்கள் எப்படி எழுதினாலும் கருத்து பரிமாற்றம் நடக்கிறது. முதலில் இந்த் திண்ணை ஆசிரியர் இது தமிழ் தளமா இல்லையா என தெளிவுபடுத்தல் வேண்டும். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் தமிழ் தளமென இங்கு வருகிறேன். ஆசிரியரும் இந்தியா மாதிரி கூடாது கூடாது என்று சொல்லி விட்டு இம்ப்ளிமெண்ட் (!) செய்வதில்லை

  5. Avatar
    paandiyan says:

    some transalator needs to know, speak, write good english hence they are asking. nothing wrong on that too. how many people are read articles in english especially technology oriented. if somebody do copy/paste job, all are read here and enjoying!!

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //some transalator needs to know, speak, write good english hence they are asking. nothing wrong on that too. how many people are read articles in english especially technology oriented. if somebody do copy/paste job, all are read here and enjoying!!//

      Earlier after his Tamil messages, I pleaded for conducting Tamil classes. Now, after reading the above, I plead before Thinnai board of directors to conduct English classes also please.

  6. Avatar
    paandiyan says:

    அதுவும் சரிதான். சொந்த கருத்தகளை போடாமல் “according to , according to him, what he says ” என்று போடுவதுர்க்கு எந்த பாஷையும் தேவையில்லைய..

  7. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    நான் அறிய விரும்புவது இதுதான் :

    திண்ணை ஒரு தமிழ் இணைய தளம். இதில் பின்னூட்டம் இடுவதற்கோ உரையாடுவதற்கோ தமிழையே பயன்படுத்துவதில் என்ன தயக்கம் ? ஏன் பிடிவாதமாக ஆங்கிலத்திலேயே உரையாடவேண்டும் ? தனது ஆங்கில மொழி புலமையை பறை சாற்றிக்கொள்வதற்கா ?

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    இப்படி ஒரு அருமையான வ்யாசத் தொடர் திண்ணை தளத்தில் வருவதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    சம்பந்தமே இல்லாது கூச்சல் குழப்பம் அசுசியான ஒன்று.

    ஆயினும் அப்படி ஒரு கூச்சல் குழப்பம் கூட இப்படி ஒரு வ்யாசத்தை அறிமுகம் செய்துள்ளது என்பதில் மகிழ்ச்சியே.

    முதலிரண்டு உத்தரங்கள் மட்டிலும் வ்யாசத்துடன் சம்பந்தப்பட்டவை.

    சம்ஸ்க்ருதம் கற்றுத்தர ப்ரயாசை எடுத்துத் தொடர்களாக திண்ணை தளத்தில் அவற்றைப் பகிர்ந்து வரும் ஸ்ரீமதி ரேவதி மணியன் அவர்களுக்கு வாசகர்களான நாம் செய்யத்தகுந்த வெகுமானம், அவரது தொடர் சம்பந்தமாக இந்த வ்யாசத்தின் கீழ் நமது கருத்துக்களைப் பகிர்வது.

    வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்க விரும்புவோர் தயவு செய்து அது சம்பந்தமாய் தனி வ்யாசம் எழுதி அதில் தாங்கள் விரும்பும் விஷயங்களை விவாதிக்க விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    முறையாக சம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ளாத என் போன்ற பலருக்கு இந்த வ்யாசத்தொடர் மிகவும் உபயோகமாய் இருக்கும்.

    யத்ர தத்ர ப்ரயோகம் பற்றி வ்யாசம் பேசுகையில் மிகவும் ப்ரபலமான மாருதி சம்பந்தமான மற்றும் இந்த ப்ரயோகம் அடங்கிய ச்லோகம் நினைவில் வருகிறது.

    यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिम् ।
    बाष्पवारिपरिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् ॥

    yatra yatra raghunāthakīrtanaṃ tatra tatra kṛta mastakāñjalim ।
    bāṣpavāriparipūrṇalocanaṃ mārutiṃ namata rākṣasāntakam ॥

    யத்ர யத்ர ரகுநாதகீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலிம் ।
    பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

    எந்த மாருதி அசுரர்களை அழித்தவனோ எவன் எங்கெங்கெல்லாம் ராம நாமம் கீர்த்தனம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் கண்ணீர் கண்களை நிறைத்திருக்கத் தன் சிரம் தாழ்த்தி இருகரங்களையும் கூப்பி வணக்கத்துடன் இருப்பானோ அந்த மாருதிக்கு நமஸ்காரம்.

    யத்ர தத்ர ப்ரயோகத்தின் வாயிலாக இப்படி பாவுகமான ஒரு ச்லோகத்தை யத்ருச்சையாக நினைவுக்குக் கொணர வைத்த ஸ்ரீமதி ரேவதி மணியன் அவர்களுக்கும் அவரது சம்ஸ்க்ருதம் கற்பிக்கும் ப்ரயாசைக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    இந்த வ்யாசத்தொடரை தொடர்ந்து வாசிப்பேன்.

    தன்யவாத:
    க்ருஷ்ணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *