கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2)

This entry is part 33 of 38 in the series 10 ஜூலை 2011


ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

ஒவ்வொரு வினாடியும்
கண்ணாடி
முன் நின்று
தன்னை வணங்கும் மனிதன்
ஆடியின் ஒரு மூலக்கூறைக்
கண நேர மாவது
கனவு மயக்கத்தில்
காண முடிந்தால் அவனது
ஊன உடல் வெடிக்கும் !
கற்பனையும்
‘நான்’ எண்ணும் சுய உணர்வும்
மாயமாய் மறையும் !
பயின்ற கல்வி அறிவெல்லாம்
போயவன்
புதுப் பிறவி ஆவான் !
பூரணத் தெளிவுத் தோற்றம்
கூறும் அசரீரி:
“நான்தான் கடவுள்” என்று

++++++++++++

அதே குரல் அறிவிக்கும்
தேவதை களுக்கு :
“ஆதாமை வணங்குவீர் என்று !
ஏனெனில்
தேவதை அனைத்தும்
ஆதாமை ஒத்திருப் பதால் !”
முதற் குரலாய் அது
முழக்கியது :
“கடவுள் ஒன்றே
இறை மையைத் தவிர்த் தில்லை
எந்த மெய்ப் பாடும் ”

++++++++++

இப்போது எனது
காதைப் பிடித் திழுத்து வந்து
செப்பு வாள் குசம்:
“உன் வாயை முதலில் கழுவு !
இப்படி யெல்லாம்
இறைவனைப் பற்றிக் கூறி
ஏதோ மறைக்க முயல்கிறாய் !
புதை யலைத் தேடிப் போகும்
ஏழை இனத்தர் கதையைச்
சொல்லி முடி !
உன் சொல்லை நம்புவோர்
சிரமத்தை நேசிப்பார்
ஒற்றுமை வேண்டார் !
உலகத் துயர்களை எடுத்துரை !
ஊற்றி லிருந்து நீரை
ஊருக்கு அனுப்பாதே !
விரும்ப மாட்டார் மாந்தர்
அந்த தூய நீரை !
அழுக்கு மண்டிய மாந்தர்
அழுக்கால் அடைப்பார்
நீர் ஊற்றை நிரந்தரமாய்
நிறுத்து வதற்கு !”

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 5, 2011)

 

Series Navigationஅழையா விருந்தாளிகள்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *